Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜனவரி 10, 2014

சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில் ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான திருத்திய வாக்காளர் பட்டியல்!

சிதம்பரம் உதவி ஆட்சியர் அலுவலகத்தில் மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான திருத்திய வாக்காளர் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில் ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் 2014-ம் ஆண்டிற்கான திருத்திய வாக்காளர் பட்டியலை உதவிஆட்சியர் எம்.அரவிந்த் வெளியிட்டார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடையே தெரிவித்தது: வாக்காளர் விழிப்புணர்வு குறித்து பள்ளி மாணவர்கள் பங்கேற்ற சைக்கிள் பேரணி, மனிதசங்கில் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு குறித்து பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டிகள் வைக்கப்பட்டு வருகிற ஜன.25-ம் தேதி பரிசுகள் வழங்கப்படுகிறது. கல்லூரிகளில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன என எம்.அரவிந்த் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் எம்.விஜயா, உதவிஆட்சியரின் நேர்முக உதவியாளர் தில்லைகோவிந்தன், துணை வட்டாட்சியர் (தேர்தல்) எம்.பன்னீர்செல்வம், வருவாய் ஆய்வாளர் எஸ்.அசோகன், கிராம நிர்வாக அலுவலர் திருமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வாக்காளர்கள் விபரம் வருமாறு:- 
காட்டுமன்னார்கோயில்: மொத்த வாக்காளர்கள்- 1,96,879, ஆண்கள்- 1,01,257, பெண்கள்- 95,619, இதர-1, புதிய வாக்காளர்கள்- 7683, வாக்குச்சாவடிகள் -236.

சிதம்பரம்: மொத்த வாக்காளர்கள்
- 2,12,138, ஆண்கள்- 106044, பெண்கள்-106093, இதர-1), புதிய வாக்காளர்கள்-9942 பேர், வாக்குச்சாவடிகள்- 238;

புவனகிரி: மொத்த வாக்காளர்கள்- 2,23,779, ஆண்கள்- 113529, பெண்கள்-110250), புதிய வாக்காளர்கள்- 9840 பேர், வாக்குச்சாவடிகள்-274; 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...