Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜனவரி 09, 2014

லஞ்ச அதிகாரிகளை பிடிக்க டெலிபோன் அழைப்பு- உதவி மையத்தை தொடங்கி வைத்தார், அரவிந்த் கெஜ்ரிவால்!

டெல்லி சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ஊழலை ஒடுக்குவதற்கான உதவி மையத்தை (ஹெல்ப் லைன்) முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று தொடங்கிவைத்தார்.

இதன் டெலிபோன் எண் 011–27357169. இந்த மையம், காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும். லஞ்சம், ஊழல் பற்றி தகவல் அறிந்தவர்கள், இந்த உதவி மையத்தை டெலிபோனில் தொடர்பு கொள்ளலாம். அங்கிருக்கும் ஊழல் ஒழிப்பு துறை அதிகாரி, லஞ்சம் கேட்பவரை எப்படி ரகசியமாக படம் (ஸ்டிங் ஆபரேஷன்) பிடித்து சிக்க வைக்கலாம் என்று யோசனை சொல்வார். அதன்படி, ரகசியமாக படம் பிடித்த பிறகு, மீண்டும் அதே ஊழல் ஒழிப்புத்துறை அதிகாரியை அணுக வேண்டும். அதன்பிறகு, லஞ்சம் கேட்பவர் பொறி வைத்து பிடிக்கப்படுவார்.

இத்தகவல்களை அரவிந்த் கெஜ்ரிவால் நிருபர்களிடம் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:– ரகசியமாக படம் பிடித்த 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த உதவி மையம் மூலம், ஒவ்வொரு டெல்லிவாசியும் ஊழல் ஒழிப்பு போராளியாக மாறலாம். ஒரே டெலிபோன் அழைப்பில் ஊழலை அம்பலப்படுத்தி
விடலாம். இந்த நம்பரை பத்திரிகை, எப்.எம். ரேடியோ விளம்பரங்கள் மூலம் பிரபலப்படுத்துவோம். தெருக்களில் விளம்பர பலகைகளும் வைக்கப்படும். ஊழல்வாதிகளுக்கு பயம் ஏற்படுத்துவதே எங்கள் நோக்கம். இவ்வாறு அவர் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...