Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூன் 02, 2012

100 நாள் வேலை திட்டத்தால் விவசாய வேலைக்கு ஆள் தட்டுப்பாடு

ஏழை எளிய மக்களின் வாழ்க்கை தரம் உயரவும், பொருளாதாரத்தில் தன்னிறைவு அடையவும் பொருட்டு மத்திய அரசு தேசிய வேலை உறுதி திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தியது. இதன் மூலம் கிராமப்புற ஊராட்சிகளில் குளங்கள், ஏரிகள், வாய்க்கால்கள், கிராமப்புற சாலைகள் ஆகியவற்றை சீரமைக்க இயந்திரங்களை பயன்படுத்தாமல் மனித ஆற்றலுக்கு முக்கியத்துவம் கொடுத்து பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, ஆங்காங்கே உள்ள ஊராட்சிகள் தன்னாட்சியுடன் பணிகளை செயல்படுத்தும் நல்லெண்ணத்துடன் பணிகளை செயல்படுத்தும் அரசு தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தை கொண்டு வந்தது.

 ஆரம்ப காலங்களில் விறுவிறுப்பாக நடந்த இந்த பணிகள் தற்போது மந்தமாக நடக்கின்றன. சில லட்சங்களில் இயந்திரம் மூலம் செய்து முடிக்க வேண்டிய மராமத்து பணிகள் பல லட்சங்கள் வரை செலவிட்டு, காலதாமதமாக நடைபெறுகிறது. அதிகாரிகளின் அலட்சியப்போக்கால் பணிகளை செய்யும் பயனாளிகள் மந்தமாக பணியாற்றுகின்றனர். இதன் விளைவாக நாட்டின் முதுகெலும்பான விவசாய தொழில் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. 100 நாள் வேலை திட்டத்துக்கு மக்கள் சென்று விடுவதால் விவசாயம் மற்றும் சார்பு தொழிலான கால்நடை தொழில்களுக்கு கூலி ஆட்கள் தட்டுப்பாடு ஏற்படுகிறது. 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்யாமலே சம்பளம் கிடைப்பதால், விவசாய தொழில்களுக்கு செல்ல மக்கள் சுணக்கம் காட்டுகின்றனர். இதனால் பயிர்கள் நடவு செய்தல், களையெடுத்தல், பராமரிப்பு பணிகள், அறுவடை செய்தல் உள்ளிட்ட பணிகளுக்கு தகுந்த கால கட்டங்களில் கூலி ஆட்கள் கிடைக்காததால் எதிர்பார்த்த மகசூல் கிடைக்காமல் பெருத்த நஷ்டத்திலும்
விவசாயிகள் தள்ளப்படுகின்றனர்.

அவ்வாறு தொடர்ந்து வேளாண் தொழிலில் அவதி அடைந்து வரும் சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்களது விளை நிலங்களை ரியல் எஸ்டேட் நிறுவனங்களிடம் விற்று விட்டு மாற்று தொழிலுக்கு சென்று விடுகின்றனர். எனவே அழிந்து வரும் விவசாய தொழிலை காக்கும் பொருட்டு, 100 நாள் வேலை திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் பயனாளிகளின் பணிக்காலங்களை தவிர மற்ற நேரங்களில் வேளாண்மை தொழில் புரிய பணியில் ஈடுபடுத்த அரசு முன் வர வேண்டும்.
thanks:Dinakaran

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...