Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 04, 2012

வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு நீர் வரத்து

காட்டுமன்னார்கோவில்:காட்டுமன்னார்கோவிலில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும். கீழணையிலிருந்து வடவாறு வழியாக ஏரிக்கு தண்ணீர் வருகிறது. ஏரியை சுற்றியுள்ள 34 பாசனம் மதகுகள் மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெறுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாத இறுதியில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்படும். பிப்ரவரி மாத இறுதியில் வீராணம் ஏரிக்கு தண்ணீர் வருவது முற்றிலும் நிறுத்தப்படும்.

 விவசாய பணிகள் முடிவுற்றதால் ஏரியில் சேமிக்கப்படும் தண்ணீர் சென்னைக்கு குடிநீருக்காக அனுப்பப்படும். இந்த ஆண்டு கோடைகாலம் தொடங்கிய உடன் கடும் வெப்பத்தால் ஏரியின் நீர்மட்டம் 42 அடியாக குறைந்தது. 41 அடியாக குறையும் போது சென்னைக்கு குடிநீர் அனுப்ப இயலாது. இதை கருத்தில் கொண்டு வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது. இதன் காரணமாக ஏரியின் நீர்மட்டம் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பத்து தினங்களுக்கு 500 கனஅடி வீதம் அனுப்பினால் மட்டுமே ஏரியின் நீர்மட்டம் உயரும்.

source:Dinakaran

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...