Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 29, 2012

லால்பேட்டையில்  அரசு பணிமனை அமைக்க இடம் தேர்வு?

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார் கோவிலிருந்து திருச்சி, சென்னை, சிதம்பரம், சேத்தியாதோப்பு, கும்பகோணம், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய பகுதிகளுக்கும் பல்வேறு கிராமங்களுக்கும் அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. காட்டுமன்னார் கோவிலிருந்து பல பகுதிகளுக்கு பேருந்துகள் செல்லும்போது இடையில் பழுதாகி நின்றால் தனியார் கடைகளில் சரிசெய்ய வேண்டிய அவலநிலை உள்ளது. மேலும் சில கிராமங்களுக்கு ஒரே பேருந்து மட்டுமே செல்கிறது.

பள்ளிகள் செயல்படும் காலம் அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் பணிக்கு செல்லும்போது இந்த பேருந்துகளையே நம்பி செல்கின்றனர். திடீரென்று பேருந்துகள் ரிப்பேரானால் பயணிகள் பல மைல் தூரம் நடந்து பேருந்து நிலையத்திற்கோ, கிராமத்திற்கோ செல்ல வேண்டிய நிலை உள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு அரசு பணிமனை அமைக்க வேண்டுமென்று தொடர்ந்த பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.சட்டமன்ற உறுப்பினர்களும் இதுசம்பந்தமாக தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதன் பேரில் லால்பேட்டை, கொளக்குடி ஆகிய இடங்களை தேர்வு செய்து
வருவாய்த்துறையினர் மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ளனர்.
thanks:Dinakaran

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...