Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 18, 2012

சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டங்களில் வாய்க்கால்கள் தூர்வார ரூ4 கோடி நிதி ஒதுக்கீடு

சிதம்பரம் பொதுப்பணி துறை அலுவலகத்தில் குறுவை, சம்பா சாகுபடிக்கான நீர் பங்கீடு திட்டமிடுதல் குறித்து விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. பொதுப்பணித் துறை கொள்ளிடம், வடநில கோட்ட செயற்பொறியாளர் அண்ணா மலை தலைமை தாங்கினார். கடலூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அசோகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கீழணை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் விநாயகமூர்த்தி பேசுகையில், ஆண்டுதோறும் வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்தால் பாதிப்படைவது திருநாரையூர், எடையார் கிராமங்கள்தான். எனவே தண்ணீர் திறப்பதற்கு முன்பு அனைத்து வாய்க்கால்களையும் தூர்வார வேண்டும். ஆண்டுதோறும் காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் வட்டங்களில் வாய்க்கால்கள் தூர்வார ரூ.4 கோடி தனியே நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், என்றார்.தமிழக உழவர் முன்னணி மாவட்டத் தலைவர் சிவராமன் பேசுகையில், வாய்க்கால்கள் மராமத்து சம்பந்தமாக ஜனவரி மாதத்தில் விவசாயிகள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை கேட்க வேண்டும்.

 ஜூன் மாதம் தண்ணீர் திறந்து விடுவதற்கு முன்பு மே 30ம்தேதிக்குள் போர்க்கால அடிப்படையில் மராமத்து பணிகளை முடிக்க வேண்டும், என்றார். கடலூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அசோகன் பதிலளித்து பேசுகையில், வாலாஜா ஏரி தூர்வார ஒரு போக சாகுபடியை நிறுத்தினால் தான் செய்ய முடியும் என்ற நிலை யிருந்தது. சாகுபடி செய்யப்பட்டதால் தூர்வார முடியவில்லை. அதன் பின்னர் தானே புயலால் பணி செய்ய முடியவில்லை. இந்தாண்டு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ. 13.50 கோடி செலவில்
முன்கூட்டியே விவசாயிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு செயல்படுத்தவும், திட்டங்களை அரசின் பரிந்துரைக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் அனுப்பியுள்ளார்.

கொள்ளிடம், கெடிலம், தென்பெண்ணையாறு, மணிமுத்தாறு ஆகியவற்றில் தடுப்பணைகள் அமைக்க ஆட்சியர் முயற்சி எடுத்து வருகிறார் என்றார். கூட்டத்தில் உழவர் கூட்டமைப்பு தலைவர் ரவீந்திரன், சேத்தியாதோப்பு அணைக்கட்டு பாசன விவசாயிகள் சங்கத்தலைவர் விஜயகுமார், நாரைக்கால் ஏரி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் இளங்கீரன், பாசிமுத்தான் ஓடை நீர் பாசன விவசாயிகள் சங்கத்தலைவர் கணேசன், பொதுப்பணித்துறை உதவிசெயற்பொறியாளர் ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

source:Dinakaran

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...