Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 31, 2012

லால்பேட்டையில் இ.யூ.முஸ்லிம்லீக் சார்பில் ஆம்புலன்ஸ்



thanks:lalpetxpress.com

தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் விபரம்


அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் (64 கல்லூரிகள்)
  1. அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரி
  2. பக்தவட்சலம் பாலிடெக்னிக் கல்லூரி
  3. பாரதியார் நூற்றாண்டு நினைவு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி
  4. சென்டரல் பாலிடெக்னிக் கல்லூரி
  5. சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரி
  6. டாக்டர் .அம்பேத்கார் பாலிடெக்னிக் கல்லூரி
  7. டாக்டர் தர்மாம்பாள் அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி
  8. அரசு சி. பி. சி. பாலிடெக்னிக்
  9. அரசு செராமிக் தொழில்நுட்பக் கல்லூரி
  10. அரசு பாலிடெக்னிக் கல்லூரி,பாலக்காடு
  11. அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி,கோயம்புத்தூர்
  12. அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி, மதுரை
  13. அரசு பாலிடெக்னிக் கல்லூரி, சென்னை
  14. அரசு பாலிடெக்னிக் கல்லூரி, கோயம்புத்தூர்
  15. அரசு பாலிடெக்னிக் கல்லூரி, குடகு
  16. அரசு பாலிடெக்னிக் கல்லூரி,நீலகிரி
  17. அரசு பாலிடெக்னிக் கல்லூரி,எர்ணாகுளம்
  18. அரசு பாலிடெக்னிக் கல்லூரி,கண்ணூர்
  19. அரசு பாலிடெக்னிக் கல்லூரி,கன்னியாகுமரி
  20. அரசு பாலிடெக்னிக் கல்லூரி,கிருஷ்ணகிரி
  21. அரசு பாலிடெக்னிக் கல்லூரி,மதுரை
  22. அரசு பாலிடெக்னிக் கல்லூரி,மலப்புரம்
  23. அரசு பாலிடெக்னிக் கல்லூரி,பதனம்திட்டா
  24. அரசு பாலிடெக்னிக் கல்லூரி, புதுக்கோட்டை
  25. அரசு பாலிடெக்னிக் கல்லூரி,தூத்துக்குடி
  26. அரசு பாலிடெக்னிக் கல்லூரி,திருச்சி
  27. அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி , ஹுப்ளி
  28. அரசு பாலிடெக்னிக் கல்லூரி, ஹசன்
  29. அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி, மங்களூர்
  30. அரசு பாலிடெக்னிக், பாகேபள்ளி
  31. அரசு பாலிடெக்னிக், பெல்கம்
  32. அரசு பாலிடெக்னிக், பெல்லாரி
  33. அரசு பாலிடெக்னிக், பிடார்
  34. அரசு பாலிடெக்னிக், பிஜபூர்
  35. அரசு பாலிடெக்னிக், சமராஜநகர்
  36. அரசு பாலிடெக்னிக், சன்னபாட்னா
  37. அரசு பாலிடெக்னிக், சிந்தாமணி
  38. அரசு பாலிடெக்னிக், குல்பர்கா
  39. அரசு பாலிடெக்னிக், கொப்பல்
  40. அரசு பாலிடெக்னிக் கல்லூரி, குஷ்டகி
  41. அரசு பாலிடெக்னிக் கல்லூரி, மாண்டியா
  42. அரசு பாலிடெக்னிக் காலேஜ், ராய்ச்சூர்
  43. அரசு பாலிடெக்னிக் கல்லூரி, ஷிமோக
  44. அரசு பாலிடெக்னிக் கல்லூரி, தும்கூர்
  45. அரசு பாலிடெக்னிக், உத்தர கன்னடா
  46. அரசு பாலிடெக்னிக் பார் வோமேன், குல்பர்கா
  47. அரசு மகளிர் பாலிடெக்னிக் காலேஜ், புதுச்சேரி
  48. அரசு மகளிர் ரெசிடெண்டில் பாலிடெக்னிக்
  49. அரசு மகளிர் பாலிடெக்னிக், ராமநகரம்
  50. இன்ஸ்டிடியூட்

குழப்பமின்றி மின் கட்டணம் கணக்கிடுவது எப்படி?

புதிய மின் கட்டண முறையில், வீட்டு இணைப்பு நுகர்வோர் குழப்பமின்றி கட்டணம் செலுத்துவதற்கான விவரங்களை, தமிழ்நாடு மின் வாரிய ஜனதா தொழிலாளர் சங்கம் வெளியிட்டுள்ளது. குழப்பம்:புதிய மின் கட்டண முறைகளை, தமிழக அரசு, ஏப்ரல் முதல் அமல்படுத்தியுள்ளது. இதில் வீடுகளுக்கான கட்டணம், பலவித அடுக்கு முறைகளை கொண்டுள்ளதால், எத்தனை யூனிட்டுகளுக்கு, எவ்வளவு கட்டணம் என, நுகர்வோர் குழப்பமடைகின்றனர்.இந்நிலையில், தமிழ்நாடு மின் வாரிய ஜனதா தொழிலாளர் சங்கத்தின் சார்பில், சென்னை மண்டல அமைப்பாளர் சுதர்சனம் மற்றும் காஞ்சி மாவட்டச் செயலர் வரதராஜன் ஆகியோர், புதிய மின் கட்டண விவரங்களை, கையடக்க அட்டைகளாக அச்சடித்து, மின் நுகர்வோருக்கு இலவசமாக வழங்குகின்றனர்.

 கட்டண முறை: வீடுகளுக்கான மின் கட்டண கணக்கீட்டு முறை குறித்து, அதில் கூறியிருப்பதாவது:

நூறு யூனிட்கள் வரை பயன்படுத்துவோர், 20 ரூபாய் நிலைக் கட்டணத்துடன், யூனிட்டுக்கு 1 ரூபாய் வீதம், மின் கட்டணம் செலுத்த வேண்டும்.

101 யூனிட்டுகளுக்கு மேல், 200 யூனிட்டுகள் வரை பயன்படுத்துவோர், 20 ரூபாய் நிலைக் கட்டணத்துடன், யூனிட்டுக்கு 1 ரூபாய் 50 பைசா வீதம், மின் கட்டணம் செலுத்த வேண்டும்.

 இருநூறு யூனிட்டுகளுக்கு மேல், 500 யூனிட்டுகள் வரை பயன்படுத்துவோர், 30 ரூபாய் நிலைக் கட்டணத்துடன், முதல் 200 யூனிட்டுகளுக்கு, யூனிட்டுக்கு 2 ரூபாய் வீதமும், 201வது யூனிட் முதல், ஒரு யூனிட்டுக்கு 3 ரூபாய் வீதமும் கட்டணம் செலுத்த வேண்டும்.

இதேபோல், 500 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துவோர், 40 ரூபாய் நிலைக் கட்டணத்துடன்,

மே 30, 2012

நமதூருக்கு பிரபல மார்க்க அறிஞர் பிஜெ அவர்கள் வருகை!

லால்பேட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்த அறிஞர் பிஜே அவர்கள் நமதூருக்கு  வருகை தந்தார்.பிஜேயின் திடீர் வருகையை அறிந்த மக்கள் அவரைக் காண வருகை தந்தனர்.
 

லால்பேட்டையில்  தவ்ஹீத் பொதுக்கூட்டம் சிறப்பாக நடைப்பெற்றது


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் 29.05.2012 அன்று பல்வேறு தடைகளை தாண்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் லால்பேட்டை கிளை சார்பாக நடத்திய மாபெரும் பொதுக்கூட்டத்தில் (மாநாட்டில்) ஆயிரக்காணக்னேர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!
உலகம் முழுவதும் உள்ள நம் கொள்கைச் சகோதரர்கள் பார்க்கும் வண்ணம் இந்த நிகழ்ச்சி TNTJPNO.COM இணையதளத்தில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. ஆயிரத்திற்கு மேற்ப்பட்டோடர் இணையதளம் இந்த நிகழ்ச்சி பார்த்தணர்.
இந்த நிகழ்ச்சியை எப்படியாது தடை செய்திட வேண்டும் என பல்வேறு அமைப்பினர் சதி வேலைகளில் ஈடுபட்டிருந்தாலும் அவைகளை தகர்க்கும் வண்ணம் ஆயிரக்காணக்னேர் கலந்து கொண்டனர். அல்லாஹ் அக்பர்.

பாதுகாப்பிற்க்காக ஏரளாமான போலீசார் குவிக்கப்பட்டுயிருந்தணர். எந்த ஒரு சலசலப்பும் இல்லாமல் அல்லாஹ்வின் அருளாளல் பொதுக்கூட்டம் சிறப்பாக நடைப்பெற்றது. எல்லாம் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!
source:tntjpno.com

மே 29, 2012

எகிப்து தேர்தல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இஃவானுல் முஸ்லிமீனின் டாக்டர்.முஹம்மது முர்ஸி முதலிடம்!

கெய்ரோ:புரட்சிக்கு பிந்தைய எகிப்தில் நடந்த முதல் அதிபர் தேர்தலின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்நாட்டு தலைமை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. இஃவானுல் முஸ்லிமீனின் அரசியல் பிரிவான எஃப்.ஜே.பியின் வேட்பாளர் டாக்டர்.முஹம்மது முர்ஸி முதலிடத்தையும், முபாரக் ஆட்சியின் இறுதிக் காலக்கட்டத்தில் பிரதமர் பதவி வகித்த அஹ்மத் ஷஃபீக் 2-வது இடத்தையும் பிடித்துள்ளனர். இதன் மூலம் 2-வது கட்ட அதிபர் தேர்தலில் இருவரும் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

 தேர்தல் கமிஷன் தலைவர் ஃபாரூக் சுல்தான் முடிவுகளை அறிவித்தார். மொத்தம் பதிவான 2.3 கோடி வாக்குகளில் முஹம்மது முர்ஸிக்கு 58 லட்சம் வாக்குகள் கிடைத்துள்ளன. அஹ்மத் ஷஃபீக்கிற்கு 55 லட்சம் வாக்குகள் கிடைத்துள்ளன. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அரபு லீக்கின் பொதுச்செயலாளர் அம்ர் மூஸா 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டார். மூன்றாவது இடத்தை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹம்தீன் ஸபாஹி பிடித்துள்ளார். மொத்தம் 13 வேட்பாளர்கள் போட்டியிட்ட எகிப்து அதிபர் தேர்தல் பல்வேறு விவாதங்கள், போராட்டங்களுக்கு மத்தியில்

லால்பேட்டையில்  அரசு பணிமனை அமைக்க இடம் தேர்வு?

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார் கோவிலிருந்து திருச்சி, சென்னை, சிதம்பரம், சேத்தியாதோப்பு, கும்பகோணம், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய பகுதிகளுக்கும் பல்வேறு கிராமங்களுக்கும் அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. காட்டுமன்னார் கோவிலிருந்து பல பகுதிகளுக்கு பேருந்துகள் செல்லும்போது இடையில் பழுதாகி நின்றால் தனியார் கடைகளில் சரிசெய்ய வேண்டிய அவலநிலை உள்ளது. மேலும் சில கிராமங்களுக்கு ஒரே பேருந்து மட்டுமே செல்கிறது.

பள்ளிகள் செயல்படும் காலம் அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் பணிக்கு செல்லும்போது இந்த பேருந்துகளையே நம்பி செல்கின்றனர். திடீரென்று பேருந்துகள் ரிப்பேரானால் பயணிகள் பல மைல் தூரம் நடந்து பேருந்து நிலையத்திற்கோ, கிராமத்திற்கோ செல்ல வேண்டிய நிலை உள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு அரசு பணிமனை அமைக்க வேண்டுமென்று தொடர்ந்த பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.சட்டமன்ற உறுப்பினர்களும் இதுசம்பந்தமாக தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதன் பேரில் லால்பேட்டை, கொளக்குடி ஆகிய இடங்களை தேர்வு செய்து

மே 27, 2012

source:samarasam 

மே 26, 2012

“லால்பேட்டையில் மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்”

எகிப்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான முடிவுகள் ஒத்திவைப்பு

எகிப்து நாட்டில் நடந்த ஜனாதிபதி தேர்தலின் முடிவுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எகிப்து நாட்டை கடந்த 30 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த ஹோஸ்னி முபாரக்கை பதவி விலகக் கோரி, மக்கள் தொடர்ந்து போராடியதால், கடந்தாண்டு அவர் பதவி விலகினார். இதனைத் தொடர்ந்து அங்கு கடந்த 24ஆம் மற்றும் 25ஆம் தேதி ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்தது. ஜனாதிபதி தேர்தலில் 13 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தேர்தல் நியாயமாக நடப்பதை பார்வையிட 350 நீதிபதிகளும், 1,500 பார்வையாளர்களும் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர். இவர்கள் மட்டுமல்லாது 53 மனித உரிமை அமைப்புகள் சார்பில், 9,457 பார்வையாளர்கள் தேர்தலை கண்காணித்தனர். 

தேர்தல் பிரசாரம், வாக்குப் பதிவு, வாக்குகள் எண்ணிக்கை ஆகியவற்றை 14 நாடுகளைச் சேர்ந்த சர்வதேச பார்வையாளர்கள் கண்காணிக்கின்றனர். தேர்தல் முடிந்ததும், வாக்குகள் எண்ணும் பணி துவங்கியது. தங்கள் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளதாக முஸ்லிம் சகோதரத்துவ கட்சி அறிவித்துள்ளது. இந்த கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் கெய்ரோ நகர சாலைகளில் கோஷமிட்டும், கொடிகளை அசைத்த படியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த கட்சியின் சார்பில் முகமது முர்சி என்பவர் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. முகமது முர்சிக்கு 26 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. முன்னாள் பிரதமரான அகமது ஷபிக் 24 சதவீத

பெட்ரோல் விலையை தொடர்ந்து டீசல், சமையல் எரிவாயு விலையும் உயர்கிறது?

     புதுடில்லி : பெட்ரோல் விலையை தொடர்ந்து டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையையும் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. உலக சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே உயர்த்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தததில் இருந்து தொடர்ந்து பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. அதிலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் லிட்டருக்கு ரூ.7.50 வரை உயர்த்தியுள்ளது. நாடு முழுவதும் இந்த விலை உயர்வுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. மேலும் நாடுகள் பல்வேறு கட்சியினர் சார்பிலும், பொதுமக்களும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அதேசமயம் பெட்ரோல் விலை உயர்வை வாபஸ் பெற முடியாது என்று மத்திய அரசு உறுதிபட தெரிவித்துள்ளது.

 இந்நிலையில் பெட்ரோல் விலை உயர்வுக்கு நாடு முழுவதும் மத்திய அரசு எதிர்ப்பு அலைகள் கிளம்பியுள்ள நிலையில் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையையும் உயர்த்தி மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரும், பிரதமரின் பொருளாதார ஆலோசகருமான ரங்கராஜன் கூறுகையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெட்ரோல் விலை உயர்வுக்கு பின்னர் இந்திய பொருளாதாரத்தில் சிறு மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பெட்ரோலை போல டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையையும் உயர்த்தினால் பொருளாதாரத்தில், அந்நிய முதலீட்டிலும் இன்னும் முன்னேற்றம் காணலாம்.

 இதனால் பணவீக்கத்தில் சிறு சுணக்கம் காணப்பட்டாலும், அந்நிய முதலீட்டிற்கு நல்ல வழிவகுக்கும் என்று கூறியுள்ளார். மேலும் இந்த விலை உயர்வு நடுத்தர மக்களுக்கு பாதிப்பை

மே 24, 2012

கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்ச்சி விபரம்

 கடலூர் வருவாய் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் இந்த ஆண்டு 0.39 சதவீதம் குறைந்துள்ளது.
 கடலூர் வருவாய் மாவட்டத்தில் 77 மையங்களில் 26,709 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு எழுதினர். இதில் 21,700 பேர் தேர்ச்சி பெற்றனர். 5009 பேர் தோல்வி அடைந்தனர். தேர்ச்சி சதவீதம் 81.25 ஆகும். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 0.39 சதவீதம் தேர்ச்சி குறைந்துள்ளது.


விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 7,769 பேர் தேர்வு எழுதியதில், 5,975 பேர் தேர்ச்சி பெற்றனர். 1,794 பேர் தோல்வி அடைந்தனர். தேர்ச்சி 76.91 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 2.49 சதவீதம் குறைவு.

மாவட்டத்தில் 18 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சிப்பெற்றுள்ளது:


விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில்
லால்பேட்டை இமாம் கஜலி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
மேலவன்னியூர் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி,
பெண்ணாடம் ஸ்ரீகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி
 பெற்றுள்ளன.

 கடலூர் கல்வி மாவட்டத்தில் 
சிறுகிராமம் அரசு மேல்நிலைப் பள்ளி,
 கடலூர் சி.கே.ப்ராட்டிகல் நாலெட்ஜ், 
புனித அந்தோனி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 
ஏ.ஆர்.எல்.எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 
புனித மேரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 
நெல்லிக்குப்பம் செயின்ட் டொமினிக் சேவியர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 
குறிஞ்சிப்பாடி செயின்ட் பால் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
, நெய்வேலி செயின்ட் ஜோசப் குளூனி மெட்ரிக் பள்ளி,
 தட்டாஞ்சாவடி செயின்ட் ஆன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 
புவனகிரி பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
 பரங்கிப்பேட்டை சேவாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப்
 பள்ளி, மூனா ஆஸ்திரேலியன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
பூதங்குடி எஸ்.டி. சியோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
 சிதம்பரம் காமராஜ்

புனித ஹஜ் பயணத்திற்கு திருச்சியி​லிருந்தும் விமானம் ஹஜ் மாநாட்டில் எம்.அப்துர் ரஹ்மான் எம்.பி கோரிக்கை

மானியம் என்ற பெயரால் புனித ஹஜ் பயணத்திற்கு வழங்கப் படும் விமான கட்டண சலுகை ஆயுளில் ஒரு முறை வழங்கப்பட வேண்டும் என்றும், புனித ஹஜ் பயணத்திற்கு திருச்சியிலிருந்து விமான இயக்கப்பட வேண்டும் என்றும் காயிதே மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய ஹஜ் குழுவின் சார் பில் ஹஜ் தொடர்பான மாநாடு டெல்லி- வித்தியான் பவனில் மே 22 செவ்வாய் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடை பெற்றது.

 மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஹஜ் குழு தலைவர், முஹ்சினா கித்வாய் துணைத்தலைவர் அபூபக்கர், இந்தியாவிற்கான சவூதி அரேபியா தூதர் அலி ஆசிப் ராவ், மும்பை ஹஜ் கமிட்டி-முதன்மை நிர்வாக அலுவலர் ஜாகிர் உசேன், தமிழக ஹஜ் கமிட்டி செயலாளர் அலாவுதீன் ஐ.ஏ.எஸ். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேரள மாநில பொதுச் செயலாளர் இ.டி.முஹம்மது பஷீர் எம்.பி,.காயிதே மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஹஜ் குழு உறுப்பினர் கள், அலுவலர்கள், உலமா பெரு மக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

 இம்மாநாட்டில் எம்.அப்துர் ரஹ்மான் பேசியதாவது: ஹஜ் மானியம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித் ததற்கு பின் இந்த கலந்த ஆலோசனை மாநாடு நடைபெரு கிறது. புனித ஹஜ் பயணத்திற்கு வழங்கப்படுவது மானியம் அல்ல, அது விமான கட்டண சலுகை அது தொடர்ந்து நீடிக்க வேண்டும். இதில் மத்திய அரசு

மே 23, 2012

அல்லாஹ்வினும் பெரியவன் எவனுமில்லை! பழ. கருப்பையா

தினமணியில்  இடம்பெற்ற இந்த கட்டுரையை சகோதரர் பழ. கருப்பையா அவர்கள் அழகான முறையில் இந்த தூய மார்க்கத்தை விளக்கியிருந்தார். உங்களின் பார்வைக்காக அந்த கட்டுரையை வைக்கின்றோம்.


நன்றி பழ. கருப்பையா அவர்களே!
அண்மையில் மிலாதுநபி விழா வந்து சென்றது. உலகத்தின் பாதி மீது தன்னுடைய மார்க்கத்தின் வாயிலாக ஆட்சி செலுத்தும் நபிகள் பெருமானாரின் பிறந்தநாள் விழா அது.
 உலகத்தில் பல நபிகள் தோன்றினார்கள்; மோசசிலிருந்து ஏசுவரை எண்ணற்றோரை நபிகள் என்று ஏற்கிறது திருக்குரான். ஆனால், முகம்மதுநபிதான் இறுதி நபி!
 முகம்மது நபி "ஸ ல்லல்லாஹு  அலைஹி வசல்லம்' என்று போற்றப்படுபவர்; ஸல் என்றால் நபி!
 நபிகள் நாயகம் அரபு மண்ணை மட்டுமன்றி, அனைத்துலகத்தையும் மனத்தினில் கொண்டு, ஒரு புதிய வாழ்வியல் நெறியை உருவாக்கினார். அதைத் "தீன்' என்று இசுலாம் சொல்கிறது.
 அந்தத் "தீனில்' ஈடுபாடு கொண்டோர் ஒரு கூட்டமாக உருவாவது இயற்கை. அந்தக் கூட்டம் தன் மனம் போன போக்கில் உருவாகிவிடாமல், அதை ஒரு சமூகமாக உருவாக்கியதில்தான், ஓர் அமைப்பைக் கட்டியமைப்பதில் நபிகள் நாயகத்துக்கு உள்ள அளப்பரிய திறனும் மேதைமையும் பளிச்சிடுகின்றன. அதை "உம்மா' என்பார் நபிகள் நாயகம்.
 வழிபடு தெய்வத்தை, அதற்குரிய வடிவத்தை வழிபடு மொழியை, வழிபடுவதற்குரிய முறையை, இன்னும் சொன்னால் வழிபடு நேரத்தையும் வழிபடுவோன் முடிவு செய்து கொள்வதில்லை. இவை அத்தனையையும் இசுலாத்தில் நபிகள் பெருமானார்தான் முடிவு செய்திருக்கிறார். இதிலேதான் நபிகளின் அமைப்புக் கட்டும் திறன் ஒளிர்கிறது.நபிகள் பெருமானார் கட்டியமைத்த "உம்மா'தான் இசுலாத்தின் வலிமைக்கு அடிப்படை. உம்மா என்பது சமூகம்தான்.
 இசுலாம் முதலில் இறைமீது நம்பிக்கை கொள்ளுமாறு வலியுறுத்துகிறது. இரண்டாவதாக ஐந்து நேரத் தொழுகையை வலியுறுத்துகிறது.ஐந்து வேளையும் தொழுவதற்கு "பாங்கு' சொல்லி மக்களை அழைக்கும் பாங்கு இசுலாத்துக்கே உரிய தனிச்சிறப்பு. இன்னின்ன நேரங்களில்தான் தொழுவது என்பது வரையறுக்கப்பட்டிருக்கின்ற காரணத்தால், அவர்களைத் தொழுகைக்கு அழைப்பது இயலக் கூடியதாக இருக்கிறது.
 இமாம் தொழுகையை வழிநடத்தும்போது, எப்போது குனிவது, எப்போது நிமிர்வது, எப்போது காது மடல்களைத் தொடுவது, எப்போது மண்டியிட்டு மண்ணில் நெற்றி படுமாறு வணங்குவது இவற்றை எல்லாம் எந்த வரிசையில் செய்வது என்று அனைத்துமே நபிகளால் வரையறை செய்யப்பட்டிருக்கின்றன.
 இசுலாமியர்கள் கடற்கரையில் பெருந்திரளாகக் கூடி நின்று இரமலான் நோன்பில் தொழும்போது, பட்டாள வீரர்களின் அணிவகுப்பைப் பார்ப்பது போன்ற திகைப்பும் கவர்ச்சியும் ஏற்படுவதற்குக் காரணம் நபிகள் நாயகம் தொழும் முறையைக்கூடத் துல்லியமாக வரிசைப்படுத்தி வைத்திருப்பதுதான்! ஆயிரத்தி முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் முகம்மது நபி (ஸல்) எவ்வாறு தொழுதாரோ, அவ்வாறே அதே பாணியில்தான் இன்று நம்முடைய இளையான்குடிபுதூர் அப்துல்லாவும் தொழுகிறார். இசுலாத்தின் அடிப்படை இறைவனுக்கு வடிவமில்லை என்பது. இறைவனுக்கு வடிவம் தேவைப்படுவோர்க்குத்தான் கோயில் தேவைப்படும். வடிவமில்லாத இறைவனை வணங்கப் பள்ளிவாசல் எதற்கு? பள்ளிவாசலில் எங்கும் சுவர்கள்தாமே இருக்கின்றன! மேற்கு நோக்கித் தன்னுடைய வீட்டிலிருந்தும் தொழ முடியுமே! பாங்கு சொல்லி இவர்களை ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு அழைப்பானேன்?
 ஓடுகின்ற தொடர்வண்டியிலும், போர்க்களத்தில் ஒட்டகத்தின் மீதிருந்தும் தொழுவதை இசுலாம் அனுமதிக்கிறது. எனினும், பள்ளிவாசல் தொழுகை இன்றியமையாததாக இருப்பது ஏன்? ஒருவருக்கொருவர் அருகிருந்து தொழும்போதுதான் "உம்மா' என்னும் சமூக அமைப்பைக் கட்டி எழுப்ப முடியும்! பள்ளிவாசல் தொழுகைபோல், "ஹஜ் யாத்திரையும்' ஐம்பெருங் கடமைகளில் ஒன்றாக அமைக்கப்பட்டிருக்கிறது. வசதியும், உடலும் இடங்கொடுக்கும் ஒவ்வொரு இசுலாமியனும் வாழ்வில் ஒருமுறையாவது ஹஜ் யாத்திரை மேற்கொண்டு மெக்கா சென்று தொழுது வரவேண்டும்.
 பக்கத்து வீட்டுக்காரனோடும், தூரத்து வீட்டுக்காரனோடும் ஒரு பள்ளிவாசலில் கூடித் தொழும்போது ஓர் "உம்மா' உருவாவதுபோல, பக்கத்து நாட்டுக்காரனோடும், தூரத்து நாட்டுக்காரனோடும், மெக்காவில் கபாஆவுக்கு முன்னால் கூடித் தொழும்போது ஓர் அகன்று பரந்த உலகளாவிய "உம்மா' உருவாகாதா?
 ஒரே இறை அல்லா; இறுதி நபி முகம்மது நபி: அல்லாவால் அருளப்பட்ட திருக்குரான்! இவையே இசுலாத்தின் இரண்டாங் கடமையான ஐவேளைத் தொழுகையை நிறைவேற்றும் உள்ளூர்ப் பள்ளிவாசலிலும், இசுலாத்தின் ஐந்தாங் கடமையான ஹஜ் யாத்திரையின் முடிவில் நிகழ்த்தும் மெக்கா தொழுகையிலும் அனைவரையும் ஒன்று குவிக்கும் சிந்தனை மையங்கள்.
 கீழக்கரையில் கட்டப்படும் சிறிய அளவினதான "உம்மா' மேலக்கரையில் மெக்காவில் பேருருக் கொள்கிறது!
 நாட்டின் எல்லைக்கோடுகள் தேய்ந்து போகின்றன; மொழிகள் அற்றுப் போகின்றன; இனங்கள் காணாமல் போகின்றன!இராக்கிலுள்ள இசுமாயிலும், சௌதிஅரேபியாவிலுள்ள சௌக்கத் அலியும், ஆப்பிரிக்காவிலுள்ள அகமதுவும் நம்முடைய காயல்பட்டினத்திலுள்ள காதர்பாட்சா ராவுத்தரும் "அல்லாஹுஅக்பர், அல்லாஹுஅக்பர்'விண்ணதிர முழங்குகின்றபோது, உருகிக் கரைந்து ஒருமை நிலை எய்தி விடுகின்றனர்! ஓர் அமைப்பை அதுவும் உலகளாவிய அளவில் கட்டியமைக்கும் திறனில் நபிகள் நாயகத்துக்கு இணையாக யாருமில்லை!
 அமைப்புக் கட்டுமானத்தில் எள்ளளவும் சிதைவு ஏற்பட்டுவிடக் கூடாது என்னும் பெருநோக்கில், தனக்கு நியாயமாக வந்திருக்க வேண்டிய பெரும்புகழைப் புறந்தள்ளினார் பெருமானார்!திருக்குரானின் வாசகங்கள் அல்லாவின் வாசகங்கள்! அவை தன் வழியாக வந்து இறங்கின; அல்லாவின் கைகளில் தான் ஒரு கருவி மட்டுமே என்று நபிகள் நாயகம் திண்ணமாகச் சொன்னார். தன்னை வணங்குவதையோ, தன்னுடைய சமாதியை வணங்குவதையோ நபிகள் கடுமையாக மறுத்தார் என்பது மட்டுமன்று; அது ஒரு "ஹராம்'; குற்றம் என்று மிகக் கண்டிப்போடு விலக்கி வைத்தார். "எல்லாப் புகழும் அல்லாவுக்கே' என்பதுதான் நபிகள் நாயகம் கற்பித்த வாழ்க்கை முறை!
 "தெருவுக்குத் தெரு டிஜிட்டல் பேனர்கள்; சுவர் கொள்ளாத பதினாறு துண்டுச் சுவரொட்டிகள்; நாளிதழ்களில், வார இதழ்களில் திறந்த

ஹஜ்:சவூதி ஏர்லைன்ஸ் மற்றும் ஜெட் ஏர்வேஸிற்கு அனுமதி!

இவ்வாண்டு புனித ஹஜ் பயணத்திற்கான சர்வீஸ்களை நடத்த சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ் மற்றும் ஜெட் ஏர்வேஸ் ஆகிய விமானப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு ஹஜ் பயண சர்வீஸ் நடத்துவதில் இருந்து ஏர் இந்தியா முற்றிலும் வாபஸ் பெற்றுள்ளது. மேலும் கடந்த ஹஜ் சர்வீஸ் நடத்திய நாஸ் ஏர் நிறுவனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

நேற்று நடந்த ஹஜ் கமிட்டி கூட்டத்தில் இதுத்தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது. சவூதி அரேபியாவும், இந்தியாவும் பல ஆண்டுகளாக சமமான அளவில் ஹஜ் சர்வீஸ்களை நடத்தி வருகின்றன. ஏர் இந்தியாவும், சவூதி ஏர்லைன்சும் விமான சேவைகளை கவனித்துக் கொண்டன. ஆனால், இவ்வாண்டு ஏர் இந்தியா பூரணமாக விமான போக்குவரத்து சேவை மற்றும் க்ரவுண்ட் ஹேண்ட்லிங் பணிகள் ஆகியவற்றில் இருந்து விலகிவிட்டது. இதனைத் தொடர்ந்து இந்தியாவின் தனியார் நிறுவனமான ஜெட் ஏர்வேஸிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஹஜ் சர்வீஸிற்கு அனுமதி வழங்கப்பட்ட சவூதி தனியார் விமானப் போக்குவரத்து நிறுவனமான நாஸ் ஏர், இவ்வாண்டிற்கான பயணத்திற்கான விலைப்புள்ளி

மின்தடை எதிரொலி பிளஸ்2 தேர்வு முடிவு தெரியாமல் கிராமப்புற மாணவர்கள் அவதி

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளி லிருந்து பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் கணினி மையங்கள் நிறைந்த காட்டுமன்னார்கோவிலுக்கு வந்தனர். காலை 11 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியானதும் மாணவர்கள் ஆர்வத்துடன் தேர்வு முடிவுகளை கணினி மையங்களில் தனது தேர்வு எண்ணை பதிவு செய்து காத்திருந்தனர். இணைய தளங்களில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதும், இணையதளங்கள் சரிவர செயல்படாததால் மாணவர்கள் திண்டாடினர். பள்ளி ஆசிரியர்களும் கூட தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள இயலவில்லை.

 இந்நிலை 11.30 மணி வரை நீடித்தது. 12 மணியளவில் எப்போதும் போல் மின்தடை ஏற்பட்டது. இத னால் பெரும்பாலான மாணவர்கள் தேர்வு முடிவுகளை பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். மாலை 3 மணிக்கு பிறகே தேர்வு முடிவுகளை அறிந்தனர்.
thanks:Dinakaran

மே 19, 2012

IDB வழங்கும் கல்வி உதவி/கடன்


பொருளாதாரத்தில்
 பின்தங்கியுள்ள நன்றாக படிக்கும் இசுலாமிய மாணவர்களிடமிருந்து கல்வி உதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன எனும் அறிவிப்பை இசுலாமிய வளர்ச்சி வங்கி அறிவித்துள்ளது.
 இந்த கல்வி ஆண்டில் (2012-2013) முதல் வருடம்  சேரும்  கீழ்கண்ட பாடப்பிரிவு மாணவர்கள் இந்த கல்வி உதவிக்காக விண்ணப்பிக்கலாம்

மருத்துவம்,பொறியியல் ( அனைத்து பிரிவுகளும்),ஹோமியோபதியுனானி,ஆயுர்வேதம்விவசாயம்மீன்வளம்,காடு வளர்ப்புஉணவு தொழிநுட்பம்,மைக்ரோ பயோலஜிபையோ டெக்னோலஜி,BBA, BL, LLB

இந்த உதவியை பெறுவதற்கு மாணவர்கள் கீழ்கண்ட விசயங்களை பூர்த்தி செய்ய வேண்டும்
1.ஆங்கிலம்,இயற்பியல்வேதியியல்,உயிரியல்/கணிதம் ஆகிய நான்கு பாடங்களையும் சேர்த்து குறைந்தபட்சம் 70% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்

2.BBA, MBA (4 வருடம்) ,சட்டம் படிக்க உள்ள மாணவர்கள் தங்களுடைய (10 +2)ஆங்கிலம் மற்றும் எலக்டிவ் பாடங்களில் குறைந்த பட்சம் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்

3.24 வயதுக்குள் இருக்க வேண்டும் வேறு எந்த கல்வி உதவியும் பெறக்கூடாது

4.மாணவர்களின் பெற்றோர்கள் வறுமையின் காரணத்தால் கல்வி கட்டணத்தை செலுத்த முடியாதவர்களாக இருக்க வேண்டும்Payment seat எடுக்கும் மாணவர்கள் இந்த கல்வி கடனுக்காக விண்ணப்பிக்க கூடாது

5. இந்த உதவியை பெறும் மாணவர்கள் இந்த நாட்டிற்காகவும் தனத சமுதாயத்திற்காகவும் கல்வி உதவியை பெற்ற வருட எண்ணிக்கைகாகவது குறைந்த பட்சம் சேவை செய்வேன் என்ற உறுதி மொழியை தரவேண்டும்
 
இந்த கல்வி உதவியானது வட்டி இல்லாத கடனாக வழங்கப்படுகிறது , தங்கள் படிப்பை முடித்த பிறகு மாணவர்கள் இந்த கல்வி உதவி பணத்தை தவணை முறையில் தந்து விட வேண்டும்.
 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் IDB யின் இந்திய துணை நிறுவனம் SIT யை 

"மதுபானப் பரிசை மறுக்கிறேன், நான் ஒரு முஸ்லிம்" - பிரபல கால்பந்து விளையாட்டு வீரர்

I don't drink; because, I am a Muslim 
 
இந்தியாவில் கிரிக்கெட் மோகம் பிடித்தாட்ட IPL கிரிக்கெட் ஜுரம் பலரையும் பாதித்திருக்கிறது என்றால் இங்கிலாந்தில் இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் (EPL) எனப்படும் கால்பந்து போட்டி பட்டையைக் கிளப்புகிறது. இப்போட்டிகளில் கடந்த ஞாயிறுக்கிழமை நடந்தேறிய சம்பவம் சுவாரஸ்யமானது.
ஐவரி கோஸ்ட் நாட்டை சேர்ந்த யாயா டோரே (YAYA TOURE) என்னும் வீரர் தற்போது மான்செஸ்டர் சிட்டி அணிக்காக இங்கிலீஷ் ப்ரீமியர் லீக்கில் விளையாடி வருகின்றார். கடந்த 44 வருடங்களாக எந்தவொரு முக்கியப்போட்டியிலும் மான்செஸ்டர் சிட்டி வென்றதில்லை என்றபோதும் தற்போது யாயா டோரே போன்றவர்களின் சிறப்பான ஆட்டத்தால் வெற்றி மகுடம் கிடைக்கலாம் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. இன்னும் ஒரே ஒரு ஆட்டத்தில் வென்று விட்டால் வெற்றிக் கோப்பை இந்த அணிக்குத்தான்.

இந்த அணியின் யாயா டோரே கால்பந்தாட்ட நாயகர்களில் ஒருவராகப் பார்க்கப்படுகின்றார். மிகச் சிறந்த நடுகள ஆட்டக்காரரான இவர் பந்தை தன்  கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும், நீண்ட தூரம் லாவகமாக கடத்தச் செய்வதிலும், போட்டியில் ஆதிக்கம் செலுத்துவதிலும் திறமை வாய்ந்தவர். 2011-ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவின் மிகச்சிறந்த கால்பந்தாட்ட வீரர்  (African Footballer of the year) என்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், தேவைப்பட்டால் முன்னேறிச்சென்று தாக்குவதிலும் வல்லவர்.

கடந்த ஞாயிறுக்கிழமை நியூ காஸில் அணியுடன் நடந்த முக்கிய போட்டியில் தன் அணிக்காக இரண்டு முறை இலக்கெய்தி (கோல்களை போட்டு) வெற்றி தேடித்தந்தார் டோரே.

இந்த ஆட்டத்தில் ஆட்டநாயகனாக தேந்தேடுக்கப்பட்ட அவருக்கு பெரிய ஷாம்பைன் (மதுபானம்) பாட்டில் பரிசாக கொடுக்கப்பட்டது. ஆனால் இதனை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார் டோரே.

இதற்கு அவர் கூறிய காரணம், "நான் குடிப்பதில்லை. ஏனென்றால் நான் ஒரு முஸ்லிம் (I don't drink; because, I am a Muslim).

EPL நிர்வாகத்தாருக்கு யாயா டோரேயின் இந்தச் செய்கை

மே 18, 2012

கடலூர் சில்வர் பீச்சில் மே 23 முதல் கோடை விழா

கடலூர்: கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் வரும் 23-ம் தேதி முதல் ஐந்து நாள்கள் கோடை விழா நடக்கவுள்ளது .கடலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ கூறியது: கடலூர் சில்வர் பீச்சில் வரும் 23-ம் தேதி முதல் 27-ம் தேதி வரையில் கோடை விழா நடக்கவுள்ளது.

23-ம் தேதி மாலை நடக்கவுள்ள தொடக்க விழாவில், ஊரக தொழில் துறை மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர்கள் சிறப்பிக்க உள்ளனர். ஐந்து நாள்கள் நடக்கும் விழாவில் தமிழகத்தின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான ஒயிலாட்டம், மயிலாட்டம், சிலம்பாட்டம், கரகாட்டம், தப்பாட்டம், பம்பை போன்ற கலை நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன. இதேபோல் மேற்கு வங்காளம், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநில கிராம கலைக் குழுவினரின் கலை நிகழ்ச்சிகளும் நடக்கவுள்ளது. பீச்வாலிபால், கபடி, பள்ளி, கல்லூரி மாணவர்களின் அறிவியல் கண்காட்சி மற்றும் பொழுதுப்போக்கு சாதனங்களும் இடம்பெறும். மாலை 4 மணி முதல் 5.30 மணி வரையில் பார்வையாளர்களுக்கான போட்டிகளும், அதற்கான பரிசளிப்பு விழாவும் நடைபெறும். 6 மணி முதல் 10 மணி வரையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.  விழாவுக்கான ஏற்பாடுகளை செய்ய 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஆட்சியர் நேர்முக

சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டங்களில் வாய்க்கால்கள் தூர்வார ரூ4 கோடி நிதி ஒதுக்கீடு

சிதம்பரம் பொதுப்பணி துறை அலுவலகத்தில் குறுவை, சம்பா சாகுபடிக்கான நீர் பங்கீடு திட்டமிடுதல் குறித்து விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. பொதுப்பணித் துறை கொள்ளிடம், வடநில கோட்ட செயற்பொறியாளர் அண்ணா மலை தலைமை தாங்கினார். கடலூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அசோகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கீழணை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் விநாயகமூர்த்தி பேசுகையில், ஆண்டுதோறும் வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்தால் பாதிப்படைவது திருநாரையூர், எடையார் கிராமங்கள்தான். எனவே தண்ணீர் திறப்பதற்கு முன்பு அனைத்து வாய்க்கால்களையும் தூர்வார வேண்டும். ஆண்டுதோறும் காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் வட்டங்களில் வாய்க்கால்கள் தூர்வார ரூ.4 கோடி தனியே நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், என்றார்.தமிழக உழவர் முன்னணி மாவட்டத் தலைவர் சிவராமன் பேசுகையில், வாய்க்கால்கள் மராமத்து சம்பந்தமாக ஜனவரி மாதத்தில் விவசாயிகள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை கேட்க வேண்டும்.

 ஜூன் மாதம் தண்ணீர் திறந்து விடுவதற்கு முன்பு மே 30ம்தேதிக்குள் போர்க்கால அடிப்படையில் மராமத்து பணிகளை முடிக்க வேண்டும், என்றார். கடலூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அசோகன் பதிலளித்து பேசுகையில், வாலாஜா ஏரி தூர்வார ஒரு போக சாகுபடியை நிறுத்தினால் தான் செய்ய முடியும் என்ற நிலை யிருந்தது. சாகுபடி செய்யப்பட்டதால் தூர்வார முடியவில்லை. அதன் பின்னர் தானே புயலால் பணி செய்ய முடியவில்லை. இந்தாண்டு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ. 13.50 கோடி செலவில்

மே 16, 2012

கொள்ளுமேட்டில் கோடைக்கால தர்பியா முகாம்!


கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாத்தின் சார்பாக மாபெரும் கோடைகால தர்பியா முகாம் சிறப்பாக நடைபெற்றது.இமாம் சாபி மன்பஈ அவர்களும் இமாம் ஹனிபா ரஷாதி அவர்களும் சிறப்பான முறையில் சொற்பொழிவை நிகழ்த்தினர்.சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கலந்துகொண்டு பயனடைந்தனர்.இறுதியாக மார்க்கம் சம்மந்தமான கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது.இஷா தொழுகைக்கு பிறகு இரவு சாப்பாட்டிற்கும் ஏற்பாடு செய்யபட்டிருந்தது. அல்ஹம்துலில்லாஹ்.....


செய்தி:முஹம்மது  பைசல் 

மே 12, 2012

ஜூன் 4-ல் பத்தாம் வகுப்பு ரிசல்ட்

சென்னை:ஜூன்  4ம் தேதி பத்தாம் பொதுத் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது..ஜூன் 4ம் தேதி அன்று மதியம் 1.30 மணிக்கு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 11 லட்சம் மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதியுள்ளனர்.ஏப்ரல் 4ந் தேதி துவங்கிய பத்தாம் வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் 23 ல் முடிவடைந்தது.

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வரும் மே 22 ந் தேதி வெளியிடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

10ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளை dinakaran .com மில் இலவசமாகத் தெரிந்துகொள்ளலாம்

அண்ணா பல்கலைகழகத்தில் பொறியியல் சேர்க்கை ஆரம்பம்!


12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வரும் 22ஆம் தேதி வெளியாக இருக்கும் தருணத்தில் இளநிலை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப‌படிப்புகளுக்கான‌ சேர்க்கை அறிவிப்பை அண்ணா பல்கலைகழகம் வெளியிட்டுள்ளது.

இது குறித்து அண்ண பல்கலைகழக துணை வேந்தர்மண்ணர் ஜவகர் அவர்கள் ஒரு அறிவிப்பைவெளியிட்டுள்ளார்

அண்ண பல்கலைகழகத்தில் பொறியியல் சேர விரும்பும்மாணவ மாணவிகளுக்கு கலந்தாய்விற்க்கான விண்ணப்பங்கள் வரும் 11 ஆம் தேதி முதல்31 ஆம் தேதி வரை  விநியோகிக்கபடும் என்று தெரிவித்துள்ளார்.

விண்ணபங்கள் எங்கு கிடைக்கும்?  எப்படி பெறுவது?
தமிழகத்தில் உள்ள அனைத்து அண்ணா பல்கலைகழக கிளைகள் உட்பட மொத்தம் 58இடங்களில் விண்ணப்பங்கள் விநியோகிக்கபடும் என்று அறிவிக்கபட்டுள்ளது.

கீழ் குறிப்பிடபட்டுள்ள கல்வி நிலையங்களில் ரூபாய் 500 பணமாகவோ அல்லது வரைவோலையாகவோ செலுத்தி விண்ணப்ப படிவங்களை மாணவ மாணவிகள் பெற்றுக் கொள்ளலாம்.

மாவட்டம்
விநியோகிக்கபடும் இடங்கள்
அறியலூர்
1.    Anna University of Technology, Tiruchirapalli – Ariyalur Campus, Ariyalur – 621713.
சென்னை
1.    Centre for Entrance Examinations & Admissions,Anna University, Chennai
2.   Madras Institute of Technology, Chrompet, Chennai.
3.   Government Polytechnic, Purasaiwakkam, Chennai.
4.   Bharathi Government Womens College(Autonomous), Broadway.
கோவை
1.    Government College of Technology, Thadagam Road,Coimbatore – 641013
2.   Government Polytechnic for Womens, Gandhipuram,Coimbatore – 641044.
3.   Government Polytechnic for Men, Aerodrome Post,Coimbatore – 641014.
கடலூர்
1.    Padaleswarar Polytechnic, Cuddalore – 607001.
2.   Muthaiya Polytechnic, Chidambaram – 608002.
3.   Anna University of Technology Tiruchirapalli – Panruti – Campus, 607308
தருமபுரி
1.    Government Arts College, Dharmapuri – 636705.
திண்டுகல்
1.    M.V.Muthai Arts College for Women, Dindigul – 624008.
2.   Arulmigu Palani Andavar Polytechnic for Men, Palani.
ஈரோடு
1.    Institute of Road and Transportation Technology, Perundurai.
2.   Chikkaiah Naicker College, Erode.
காஞ்சிபுரம்
1.    Bhaktavachalam Polytechnic,        Kancheepuram.
2.   Rajeswari Vedachalam Govt. Arts College, Chengalpet.
கண்ணியகுமரி
1.    Pioneer Kumarasamy College,              Nagercoil.
2.   Government Polytechnic, Konam.
கரூர்
1.    Government Arts College, Karur
கிருஷ்னகிரி
1.    Government Arts College for Men,               Krishnagiri.
2.   Government College of Engineering,          Bargur.
மதுரை
1.    Thiagarajar College ofEngineering,                   Madurai.
2.   Tamil Nadu Polytechnic, Madurai.
3.   Arulmigu Meenakshi Govt. ArtsCollege(Autonomous), Madurai.
நாகபட்டினம்
1.    ADJ Dharmambal Polytechnic College, Nagapattinam.
நாமக்கல்
1.    N.K.R. Government Arts College for Women,Namakkal.
பெரம்பலூர்
1.    Sri Saradha College for Women,        Perambalur.
புதுக்கோட்டை
1.    Govt. Arts College for Women,        Pudukkottai.
2.   Government Polytechnic,                  Aranthangi.
இராமநாதபுரம்
1.    Government Arts College for Women, Ramanathapuram.
சேலம்
1.    Government College of Engineering,          Salem.
2.   Government Arts College for Women,       Salem.
3.   Arignar Anna Government Arts College,      Athur.
சிவகங்கை
1.    Government Arts College for Women, Sivaganga.
2.   A.C. College of Engineering & Technology,    Karaikudi.
தஞ்சாவூர்
1.    Kuntavai Naacchiyaar Govt. Arts College for Women, Thanjavur.
2.   Government Arts College (Autonomous), Kumbakonam.
நீலகிரி
1.    Government Polytechnic,                              The Nilgiris
தேனி
1.    Thangam Muthu Polytechnic, Periyakulam.
2.   Cardamom Planters Association College, Bodinayakanur
திருவள்ளூர்
1.    Murugappa Polytechnic,Avadi, Chennai.
திருவன்னாமலை
1.    Government Arts College,           Tiruvannamalai
திருவாரூர்
1.    Thiru-vi-ka Government Arts College,    Tiruvarur
தூத்துக்குடி
1.    Government Polytechnic,                   Thoothukudi.
2.   B.C.M. Government Polytechnic for Women, Ettayapuram.
திருநெல்வேலி
1.    Government College of Engineering,           Tirunelveli.
2.   Rani Anna Government College for Women, Tirunelveli.
திருச்சிராபள்ளி
1.    Jamal Mohammed College, Tiruchirappalli.
2.   Government Polytechnic, Thuvakudimalai Post, Tiruchirappalli.
3.   Anna University of Tech. Tiruchirappalli, BITs Campus,  Tiruchirappalli.
வேலூர்
1.    Thanthai Periyar Govt. Inst. of Tech., Bagayam,Vellore.
விழுப்புரம்
1.    Arignar Anna Government Arts College, Villupuram.
2.   University College of Engineering,Villupuram.
3.   Thiru. A. Govindasamy Govt. Arts College, Tindivanam.
விருதுநகர்
1.    VSVN Polytechnic, Virudhunagar.
2.   PAC Ramasamy Raja Polytechnic, Rajapalayam.

தபால் மூலம் விண்ணப்பங்களை பெற The Secretary, Tamilnadu Engineering Admissions (TNEA), Anna University, Chennai  - 600 025 என்ற முகவரிக்கு