Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 17, 2011

ஹிந்துத்துவா பயங்கரவாத விசாரணையை முடக்க சங்க்பரிவாரின் சதி

    மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை குற்றவாளி கூண்டில் நிறுத்தி பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டுவரும் பா.ஜ.கவின் பின்னணியில் சங்க்பரிவார் செயல்படுவதாக கருதப்படுகிறது.

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் உள்பட இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான ஹிந்துத்துவா பயங்கரவாதத்தின் தொடர்பு ப.சிதம்பரம் மத்திய அமைச்சர் ஆன பிறகே முழுமையாக வெளியானது. இந்நிலையில் ப.சிதம்பரத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி பாராளுமன்றத்தின் இரு அவைகளையும் ஸ்தம்பிக்கச் செய்வதன் மூலம் ஹிந்துத்துவா பயங்கரவாதத்தின் மீதான விசாரணையை முடக்க திட்டமிட்டுள்ளன பா.ஜ.க உள்ளிட்ட சங்க்பரிவாரங்கள்.

ப.சிதம்பரத்தின் மீது முன்பு ஒருபோதும் இல்லாத கோபத்தையும், காழ்ப்புணர்வையும் கடந்த சில நாட்களாக பா.ஜ.க வெளிப்படுத்தி வருகிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ப.சிதம்பரத்தின் மீது குற்றம் சுமத்தி பா.ஜ.க இரு அவைகளிலும் ப.சிதம்பரத்தை புறக்கணித்து வருகின்றது.

உள்துறை அமைச்சகம் தொடர்பான கேள்விகளுக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் பதில் அளித்துவருகிறார். டெல்லியில் ஒரு வழக்கில் எஃப்.ஐ.ஆரை ரத்துச்செய்ய ப.சிதம்பரம் உத்தரவிட்டார் என்ற குற்றச்சாட்டை அண்மையில் எழுப்பியுள்ளது பா.ஜ.க. சிதம்பரம் ராஜினாமாச் செய்யக்கோரி பா.ஜ.க இரு நாட்களாக இரு அவைகளின் நடவடிக்கைகளுக்கு குந்தகம் ஏற்படுத்தி வருகிறது.

ப.சிதம்பரத்தின் சொந்த மாநிலமான தமிழகத்தில் அவருக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பாசிச சிந்தனை கொண்ட அரசியல் கோமாளி சுப்ரமணிய சுவாமியை சங்க்பரிவாரங்கள் பயன்படுத்துகின்றன. 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆ.ராசாவுடன் சிதம்பரத்தையும் குற்றவாளியாக சேர்க்க கோரி உச்சநீதிமன்றத்தை அணுகியவர் சுப்ரமணிய சுவாமி ஆவார்.

பா.ஜ.கவுடனும், குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடியுடன் நட்புறவு வைத்துள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் சிதம்பரத்தை குறிவைத்துள்ளார்.

செட்டியார் சமுதாயத்தைச் சார்ந்த ப.சிதம்பரத்திற்கு எதிராக ஜெயலலிதாவும், சுப்ரமணிய சுவாமியும் நடத்தி வரும் எதிர்ப்பு நடவடிக்கைகளின் பின்னணியில் தமிழகத்தின் பார்ப்பண லாபியின் விருப்பங்கள் அடங்கியுள்ளன. தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அரசியல் ஆசானாக செயல்பட்டு
வருபவர் பாசிச சிந்தனையில் ஊறிய குள்ளநரி துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் சோ ஆவார்.

சிதம்பரத்தின் மீதான தாக்குதல்களை எதிர்கொள்ள அவரது சொந்த கட்சியான காங்கிரசுக்கும் திராணி இல்லை. எவ்வித தயக்கமும் இன்றி தனக்கு உரிய பார்வையுடன் செயல்படும் ப.சிதம்பரத்திற்கு நேரு குடும்பத்துடன் இருக்கும் நெருக்கம்தான் இதுவரை பதவியில் தொடர காரணமாகியுள்ளது.

நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கும் ப.சிதம்பரத்திற்கும் இடையே பனிப்போர் நிகழ்ந்து வருகிறது. பிரணாப் முகர்ஜியின் அலுவலகத்தில் உளவு, 2 ஜி வழக்கில் ப.சிதம்பரத்தின் மீது குற்றம் சாட்டும் பிரணாபின் கடிதம் உள்ளிட்ட பிரச்சனைகளில் சோனியா காந்தியின் தலையிட்டதன் வாயிலாக பிரச்சனை ஓரளவு முடிவுக்கு வந்தது.

காங்கிரஸ் கட்சியில் மிதவாத ஹிந்துத்துவா ஆதரவாளர்களுக்கு ப.சிதம்பரத்தை பிடிக்காது. தனக்கு எதிரான தாக்குதல்களை சங்க்பரிவாரின் பின்னணியில் இயங்கும் பா.ஜ.க வலுப்படுத்தியதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக சிதம்பரத்தின் பணிகள் மந்தகதியில் உள்ளன.

ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்புகளின் மீதான விசாரணையும் முடங்கியுள்ளது. தேசிய புலனாய்வு ஏஜன்சியான என்.ஐ.ஏவின் விசாரணையில் ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசிய செயற்குழு உறுப்பினர் இந்திரேஷ்குமாரின் பங்கிற்கு வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஆனால், இவரை விசாரிக்க கூட என்.ஐ.ஏவால் இயலவில்லை. அரசியல் ரீதியாக அனுமதியில்லாமல் இந்திரேஷ்குமாரை விசாரிக்க இயலாது என என்.ஐ.ஏ வட்டாரங்களே தெரிவிக்கின்றன.

மும்பை தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தால் உருவாக்கப்பட்டதுதான் என்.ஐ.ஏ. சம்ஜோதா எக்ஸ்பிரஸ், மலேகான், மக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்கா ஆகிய குண்டுவெடிப்புகளில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் பங்கு என்.ஐ.ஏவின் விசாரணையில் வெட்டவெளிச்சமானது.

இந்திரேஷ் குமாரின் விவகாரம் மட்டுமல்ல, சன்னியாசினி பிரக்யாசிங், லெஃப்.கர்னல்.ஸ்ரீகாந்து புரோகித் ஆகியோரின் பங்கு, பா.ஜ.க தலைவராக இருந்த சுனில் ஜோஷியின் கொலையின் பின்னணியில் இருக்கும் மர்மம், அஸிமானந்தாவின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம், அபினவ் பாரத், சனாதன் சன்ஸ்தான் போன்ற ஹிந்துத்துவா பயங்கரவாத அமைப்புகளின் ரகசிய செயல்பாடுகள்
ஆகியன குறித்த தொடர் விசாரணைகளிலும் அண்மை காலத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2008 மலேகான் குண்டுவெடிப்பில் முதன் முதலாக ஹிந்துத்துவா பயங்கரவாதத்தை வெளிக்கொணர்ந்த ஹேமந்த் கர்கரே என்ற துணிச்சல் மிக்க ஐ.பி.எஸ் அதிகாரி மர்ம நபர்களால் கொலைச் செய்யப்பட்டார். தற்பொழுது ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை மேற்கொண்ட ப.சிதம்பரத்தின் பதவியை பறிப்பதற்கு சங்க்பரவார சக்திகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுவருவது ஹிந்துத்துவா பயங்கரவாதத்தை மூடி மறைப்பதற்கான சங்க்பரிவாரத்தின் சதித் திட்டமாகும்.
நன்றி : தூது ஆன்லைன் 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...