Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அக்டோபர் 26, 2013

புரூனேயில் இனி ஷரீஆ சட்டம்!

பந்தர் செரி பகவன்: புருனை அரசு, நாட்டில் அதிகரிக்கும் குற்றங்களை தடுக்க வேண்டி தண்டனைகளை கடுமையாக்க முடிவு செய்துள்ளது. எண்ணெய் வளம் மிகுந்த புருனை 1984ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசிடமிருந்து சுதந்திரம் பெற்றது.

ஹசனல் போல்கையா சுல்தானால் ஆட்சி செய்யப்படும் புருனேயின் மக்கள் தொகையில் 70% முஸ்லிம்களாகும். முஸ்லிம்கள் அதிகமாக வாழ்ந்தாலும், இந்நாட்டில் இஸ்லாமிய சட்டங்கள் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை இந்நிலையில்தென்கிழக்கு ஆசியாவில் தீவு தேசமான புரூனேயில் இஸ்லாமிய ஷரீஆ சட்டம் அமல் படுத்தப்படும் என்று ஆட்சியாளர் சுல்தான் ஹஸனுல் புல்கியா அறிவித்துள்ளார். இதன் அடிப்படையில் திருட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட குற்றவாளியின் கரம் வெட்டப்படும், விபச்சாரம் செய்தவர்கள் கல்லெறிந்து கொல்லப்படுவார்கள் என்று சுல்தான் புல்கியா தெரிவித்துள்ளார்.

ஷரீஆ சட்டம் முஸ்லிம்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்று தெரிவித்த சுல்தான் புல்கியா, புரூனேயில் இனி முதல் போதைப் பொருட்கள் உபயோகம் மற்றும் கருக்கொலை தடை செய்யப்பட்டதாக உத்தரவிட்டுள்ளார். ஆறு மாதத்திற்குள் ஷரீஆ சட்டம் பூரணமாக அமல்படுத்தப்படும் என்று உத்தரவிட்டுள்ள சுல்தான், புரூனேயின் மகத்தான வரலாற்றின் ஒரு பகுதியாக ஷரீஆவை அமல்படுத்துவதாக தெரிவித்தார். புருனேயில் பிரிட்டீஷ் மாதிரி நீதிமன்றம் உள்ளது. இது குடும்ப தகராறு

அக்டோபர் 11, 2013

ஓர் வபாத் செய்தி!

நமதூர் காயிதே மில்லத் தெருவில் வசிக்கும் மர்ஹூம் ஹாமித் அவர்களின் மகனும், (முஹம்மது அன்சாரி மற்றும் பலுலுல்லாஹ் அவர்களின்  தம்பியுமான) முஹம்மது பாருக் அவர்கள் இன்று  காலை (வெள்ளிக்கிழமை) தாருல் பணாவை விட்டும் தாருல் பகாவை சென்றடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்....

எல்லாம் வல்ல அல்லாஹ் அண்ணாரின் குற்றங்களை மண்ணித்து "ஜன்னத்துல் பிர்தௌஸ்" என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று து ஆ செய்வதுடன் அவர்களின் பிரிவால் வாடும் அண்ணாரின் குடும்பத்தார் அனைவருக்கும் மற்றும் உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் "ஷப்ரன் ஜமிலா" எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக என்று கொள்ளுமேடு Xpress பிரார்த்தனை செய்கிறது.

அக்டோபர் 10, 2013

கனடாவைச் சேர்ந்த 82 வயது பெண் எழுத்தாளர் ஆலிஸ் மன்ரோவுக்கு இலக்கியத்துக்கான நோபல்

ஸ்டாக்ஹோம்: 

கனடாவைச் சேர்ந்த சிறுகதை எழுத்தாளர் ஆலிஸ் மன்ரோவுக்கு 2013ம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது. மருத்துவம், இயற்பியல், வேதியியல் துறைகளைத் தொடர்ந்து இன்று இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இலக்கியத்துக்கான நோபல் பரிசு கனடாவைச் சேர்ந்த சிறுகதை எழுத்தாளர் ஆலிஸ் மன்ரோவுக்கு(82) கிடைத்துள்ளது. சிறுகதைகள் எழுதுவதில் வல்லவரான ஆலிஸ் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெறும் 13வது பெண் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெறும் 110வது எழுத்தாளர் ஆலிஸ் தான். கடந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசை சீனாவைச் சேர்ந்த நாவலாசிரியர் மோ யான் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொள்ளுமேடு தவ்ஹீத் கிளையின் சார்பில் தீ விபத்து ஏற்பட்ட கடை மற்றும் வீடுகளுக்கு நிவாரண உதவி..

நமதூர் கொள்ளுமேட்டில் கடந்த வாரம் ரோட்டோரம் உள்ள கடை மற்றும் வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டு இருந்தது. அவர்களுக்கு நமதூர் தவ்ஹீத் கிளையின் சார்பில் நிவாரண உதவி  செய்யப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கொள்ளுமேடு தவ்ஹீத் கிளை நிர்வாகிகள் தீ விபத்து ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர் அதன் அடிப்படையில்,

வசூல் ஆண தொகையிலிருந்து அதிக இழப்பு ஏற்பட்ட திரு.சாத்தான் அவர்களுக்கு 9,000 (ஒன்பது ஆயிரம் ) ரூபாயும், திரு சிதம்பரம் அவர்களுக்கு 7,500 (ஏழாயிரத்து  ஐநூறு) ரூபாயும், குறைந்த இழப்பு ஏற்பட்ட சைக்கிள் கடை வைத்து இருக்கும் செல்வம் அவர்களின்  தம்பி மூர்த்தி அவர்களுக்கு 2,000 (இரண்டு ஆயிரம்) ரூபாயும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் நமக்கு காட்டி தந்த அழகிய  வழியில்  நிவாரண உதவி செய்யப்பட்டது. 
 












செய்தி: அபூ தப்ஹீம்.

அக்டோபர் 04, 2013

ஏற்காடு இடை தேர்தல் தேதி அறிவிப்பு: களமிறங்க தி.மு.க.,வினர் ஆர்வம்

ஏற்காடு சட்டசபைத் தொகுதிக்கான இடைத் தேர்தல், டிசம்பர் 4ம் தேதி நடக்கிறது. இதற்கான அறிவிப்பை, தலைமை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டதும், தமிழகத்தில், இடைத் தேர்தல் பற்றிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இத்தேர்தலில் முக்கிய எதிர்க்கட்சியான தி.மு.க., போட்டியிடுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள இந்த தொகுதியில், 2011 தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட பெருமாள், 37,592 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க.,வின் தமிழ்செல்வன், 66,639 ஓட்டுக்கள் பெற்று தோல்வி அடைந்தார். இந்நிலையில், ஜூலை, 18ம் தேதி, திடீர் மாரடைப்பு காரணமாக, பெருமாள் மரணம் அடைந்தார். காலியான ஏற்காடு தொகுதிக்கு, இப்போது இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க., இருந்தது. இப்போது, இரு கட்சிகளும் எதிரும் புதிருமாக திசை மாறியுள்ளன. அதனால், ஏற்காடு இடைத் தேர்தலில், அ.தி.மு.க.,வை எதிர்த்து களம் இறங்க, தே.மு.தி.க., தயாராக உள்ளது.

அக்.7 முதல் பயணிகள் ரயில் கட்டணம் உயர்கிறது: 3% அதிகரிக்க வாய்ப்பு

டெல்லி: அக்டோபர் 7ம் தேதி முதல் பயணிகள் ரயில் கட்டணத்தை உயர்த்த ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எரிபொருள் விலை உயர்வு, பிற செலவின நிலவரத்துக்கு ஏற்ப 6 மாதத்துக்கு ஒரு முறை பயணிகள் ரயில் கட்டணமும், சரக்கு கட்டணமும் உயர்த்த திட்டம் வெளியிடப்பட்டது.
அதைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் சரக்கு கட்டணம் உயர்த்தப்பட்டது. இப்போது மீண்டும் கடந்த 1 ஆம் தேதி முதல் 15 சதவீத சரக்கு கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. இதனிடையே, டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே, ''பட்ஜெட்டில் எரிபொருள் விலை நிலவரத்துக்கு ஏற்ப ரயில் கட்டணத்தை மாற்றி அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி பயணிகள் கட்டணத்தை கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி மாற்றி அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இது தொடர்பான கோப்பு என்னிடம் வந்துள்ளது. நான் அதை பரிசீலித்துக்கொண்டிருக்கிறேன். இதுதொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும்'' என்றார். இந்நிலையில் பயணிகள் ரயில் கட்டணத்தை 2 முதல் 3 சதவீதம் வரை உயர்த்த ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக இன்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்த கட்டண உயர்வு வருகிற 7 ஆம் தேதி முதல் அமலுக்கு வரலாம் என்றும் ரயில்வே அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சரக்கு கட்டண உயர்வு டீசல் விலை உயர்வால், பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவதாக தெரிவித்துள்ள ரயில்வே துறை ரயில்களின் சரக்கு கட்டணத்தை மேலும் கூடுதலாக 15 சதவிகிதம் வரை அக்டோபர் 1ம் தேதி முதல் உயர்த்தியுள்ளது. இந்த நிலையில் அக்டோபர் 7ம் தேதி முதல் பயணிகள் கட்டணம் உயரும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், டெல்லி, சட்டீஸ்கர் சட்டசபை தேர்தல் தேதிகள் அறிவிப்பு

டெல்லி: ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், டெல்லி, சட்டீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத், தேர்தல் ஆணையர்கள் பிரம்மா, நசீம் சைதி ஆகியோர் இன்று காலை டெல்லியில் கூடி தேர்தல் தேதிகளை முடிவு செய்தனர். பின்னர் மாலையில் தேர்தல் தேதிகளை சம்பத் அறிவித்தார். 90 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட சட்டீஸ்கரில் நவம்பர் 11, 19 ஆகிய இரு தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது

ஓர் வபாத் செய்தி!

நமதூர் காயிதே மில்லத் தெருவில் வசிக்கும் கணக்கு பிள்ளை அப்துர்ரஹ்மான் அவர்கள் (முஹிபுல்லாஹ் அவர்களின் தந்தை) இன்று  காலை (வெள்ளிக்கிழமை) தாருல் பணாவை விட்டும் தாருல் பகாவை சென்றடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்....


எல்லாம் வல்ல அல்லாஹ் அண்ணாரின் குற்றங்களை மண்ணித்து "ஜன்னத்துல் பிர்தௌஸ்" என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று து ஆ செய்வதுடன் அவர்களின் பிரிவால் வாடும் அண்ணாரின் குடும்பத்தார் அனைவருக்கும் மற்றும் தவ்ஹீத் சகோதரர்கள், உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் "ஷப்ரன் ஜமிலா" எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக என்று கொள்ளுமேடு Xpress பிரார்த்தனை செய்கிறது.

அண்ணாரின்  நல்லடக்கம் நாளைக் காலை (சனிக்கிழமை) நடைபெறும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்..

கொள்ளுமேடு தீ விபத்து! 50 ஆயிரம் ரொக்க பணம் எறிந்த பரிதாபம்!!

நமதூர் கொள்ளுமேட்டில் நேற்று நள்ளிரவில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் சாத்தான் அவர்களின் வீடு மற்றும் டீக் கடை முழுவதும் எரிந்து நாசமாகியது மேலும் அவர்கள் வீடு கட்ட கடனாக வாங்கி வைத்திருந்த 50 ஆயிரம் ரொக்க பணம் முழுவது எரிந்தது நாசமாகியது. அவரிடம் நாம் கண்ட பேட்டி  இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

 தாசில்தாரிடம் எரிந்துபோன பணத்தி காட்டும் காட்சி 




செய்தி: அபூ தப்ஹீம்


அக்டோபர் 03, 2013

கொள்ளுமேடு தீ விபத்து தாசில்தார் ஆய்வு!

நமதூர் கொள்ளுமேட்டில் நேற்று இரவு ஏற்பட்ட பெரும் தீவிபத்தில்  பெரிய அளவில் பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை வருகை தந்த வட்டாச்சியர் (தாசில்தார்) திரு வெங்கடாச்சலம் அவர்கள் தீ ஏற்பட்ட இடத்தை ஆய்வு செய்தார், ஆய்வுக்கு பின்னர் நம்மிடம் குறிப்பிட்ட அவர் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு தலா ரூ 5000/ வழங்கப்படும் என்று தெரிவித்தார். இச்சிறிய தொகை பாதிக்கப்பட்டவர்களின் தேவையை பூர்த்தி செய்யும்  வகையில் இல்லை என்று நாம் குறிப்பிட்டபோது... இது அரசாங்கத்தின் பொதுவான இழப்பீடு தான் இதைவிட

கொள்ளுமேடு தீ விபத்து! வீடு கடைகள் எரிந்து சாம்பல் !!



நமதூர் கொள்ளுமேடு இறக்கத்தில் அமைந்துள்ள ரோட்டோர கடைகள் மற்றும் வீடுகள் எரிந்து நாசமாயின. நேற்று (02/09/2013)நள்ளிரவு 12 மணியளவில் ஏற்பட்ட பெரும் தீயானது வானக்கார் இஸ்மாயில் அவர்களின் கடை, சிதம்பரம் அவர்களின் கீற்று கடை, பொட்டிக்கடை மற்றும் அவரின் வீடு அனைத்தும் நெருப்பில் எரிந்து நாசமாகியது.. டீக் கடை சாத்தனின் வீடு மற்றும் டீக்கடைகளும்  முற்றிலும் எரிந்து நாசமாகியது...தீப்பொறி பற்றியவுடன் தவ்ஹீத் மர்கசில் விடப்பட்ட அழைப்பை கேட்டு மக்கள் பதறி அடித்து ஓடி வந்தனர், பின்னர் தீ அணைப்பு வண்டி வழக்கம் போல் எல்லாம் முடிந்த உடன் வந்து மிச்சம் மீதியை அணைத்தனர்.இக்கோர சம்பவதிர்காகான காரணம் இதுவரை அறியப்படவில்லை.இப்பெரும் தீ விபத்தில் எந்த ஒரு உயிர் சேதமோ அல்லது காயமோ இல்லாதது சற்று ஆறுதலாக இருந்தது.

செய்தி: அபூ தப்ஹீம்