Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 15, 2013

ஓட்டை உடைசலான அரசு பேருந்துகள்! காட்டுமன்னார்குடி பகுதி மக்கள் வேதனை!

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவிலில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் இரண்டு பஸ்களும் ஓட்டை உடைசலாக இருப்பதாக பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர். நீண்ட தூர பயணத்திற்கு ஏற்ப தரமான பஸ் விட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தின் கடைகோடி பகுதியாக விளங்கி வரும் நகரம் காட்டுமன்னார்கோவில். நூற்றுக்கணக்கான கிராமங்களை உள்ளடக்கியது. காட்டுமன்னார்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வியாபாரம் மற்றும் பல்வேறு பணிகளுக்காக தினமும் சென்னை செல்பவர்கள் அதிக அளவில் உள்ளனர். வாரா வாரம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்கு பின் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகளும் அதிகம். காட்டுமன்னார்கோவில் பஸ் நிலையத்தில் இருந்து தினமும் இரவு 11.00 மணிக்கு (தடம் எண்-149,) 11.30 மணிக்கு (தடம் எண் 149-பி) ஆகிய இரு அரசு பஸ்கள் சென்னைக்கு இயக்கப்படுகின்றன. தினமும் இந்த பஸ்சில் முழு அளவு பயணிகள் செல்வது குறிப் பிடத்தக்கது.

நீண்ட தூரம் செல்வற்கு ஏற்ற தகுதியில் இந்த இரு பஸ்களும் இல்லை என்பது வேதனையான

புத்த கயா குண்டுவெடிப்பு வழக்கு: ஹிந்து சாமியார் 'பிரம்மச்சாரி கைது!

பாட்னா: பீகார் மாநிலம் புத்த கயா மகாபோதி வழிபாட்டுத் தலத்தில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடையதாக கருதப்படும் அரூப் பிரம்மச்சாரி என்ற ஹிந்து சாமியாரை தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர்.

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் அரூப் பிரம்மச்சாரி, புத்தகயாவில் தங்கியிருந்துள்ளார். கடந்த ஜூலை 7-ந் தேதி புத்தகயாவில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இச்சம்பவத்திற்குப் பின்னர் அவர் தலைமறைவாகி விட்டார். குண்டுவெடிப்பு தொடர்பாக தேசிய புலனாய்வு ஏஜென்சி புத்த கயா கோயில் நிர்வாகிகள் உட்பட பலரிடமும் விசாரணை நடத்தியது.மேலும் வினோத் மிஸ்திரி என்பவர் உட்பட 6 சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணை நடத்தி வருகிறது. அவரிடம் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 3 முறை விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் புத்த கயாவில் தங்கியிருந்து குண்டுவெடிப்புக்குப் பின்னர் தலைமறைவாக இருந்த அரூப் பிரம்மச்சாரியை தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் இன்று கைது செய்தனர்.

அவர் தற்போது ராம்பூர் காவல்

வறுமையை அகற்றுவதற்கு உயர் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்-ஜனாதிபதி சுதந்திர தின உரை

இந்தியாவின் 67–வது சுதந்திர தின விழா இன்று (வியாழக்கிழமை) சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்.அப்போது அவர் கூறியதாவது:–

ஊழல் பிரச்சினை நமது ஜனநாயக அமைப்புகள் தேசத்தின் குணாதிசயங்களை பிரதிபலிக்கும் கண்ணாடிகளாக விளங்குகின்றன. நமது பாராளுமன்றமும், சட்டசபைகளும் சட்டம் இயற்றுதல், விவாதம் நடத்துதல் ஆகியவற்றை விட சண்டை நடக்கும் அரங்கங்கள் போல் காணப்படுகின்றன. அரசாங்கத்தில் உள்ள ஒவ்வொரு அமைப்புகளுக்கும் நமது அரசியல் சட்டம் தனித்தனி அதிகாரங்களை வழங்கி இருக்கிறது. அந்த அதிகார வரம்புகளுக்குள் அவை செயல்பட வேண்டும். விவாதங்கள் நடைபெற்று முடிவு காணப்பட நமக்கு பாராளுமன்றம் தேவை.

தாமதம் இன்றி நீதி வழங்க நமக்கு நீதிமன்றங்கள் தேவை. ஊழல் நமக்கு பெரும் சவாலாக உள்ளது. நம்மை எதிர்நோக்கியுள்ள சவால்களை முறியடித்து மக்களின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.அடுத்த சுதந்திர தினவிழாவை சந்திப்பதற்கு முன்னால் நமது நாடு பொதுத்தேர்தலை சந்திக்க உள்ளது. நமது குடியாட்சியின் மிகச்சிறந்த இந்த பெரிய விழாவில் நாம் அனைவரும் பங்கேற்று நிலையான அரசை தேர்ந்து எடுக்கும் வாய்ப்பு நம்முன்னே உள்ளது. நிலையான அரசு ஏற்படுவதன் மூலம் நாட்டின் பாதுகாப்பும், பொருளாதார வளர்ச்சியும் உறுதி செய்யப்படும். சமூக நல்லிணக்கம், அமைதி, நல்லிணக்கம், முன்னேற்றம் ஆகியவற்றை நோக்கிய நமது பயணத்தில் தேர்தல் ஒரு முக்கிய மைல் கல் ஆகும்.

கல்வி முறையின் மூலம் சமுதாயத்தில் மாற்றம் கொண்டு வரமுடியும். உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகம் ஒன்று இல்லாமல் உலக சக்தியாக மாறுவதை கனவு காணமுடியாது. உலகின் விரைவான வளர்ச்சியை கொண்ட நாடாக கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா உருவெடுத்து உள்ளது. நாட்டின் பாதுகாப்பு நாம் இன்று உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவை பெற்றுள்ளோம். வறுமையை அகற்றுவதற்கு உயர் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு,

சுதந்திர தின செய்தி!

இந்தியனாய் இருப்பதில் பெருமிதம்கொள்வோம்! மனிதநேயத்துடன் அன்போடு பழகுவோம்! நாட்டு மக்கள் அனைவரும் சம உரிமையோடு வாழ பாடுபடுவோம்!!

 "சாரே ஜஹான்சே அச்சாஹ் ஹிந்துஸ்தான் ஹமாரா.. ஹமாரா..!"

என்றும் உங்கள் 
-கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ் 


ஆகஸ்ட் 14, 2013

இந்திய சுதந்திர வரலாறு -ஆங்கிலேயர் ஆட்சி!

வாஸ்கோ ட காமா 1498 ல் கடல் வழியே இந்தியாவுக்கு வழி கண்டு பிடித்தார்.இதனால் இந்திய ஐரோப்பிய வாணிகம் வளர்ச்சியடைந்தது.

போர்ச்சுகல் மக்கள் கோவா, டையூ, டாமன் மற்றும் மும்பையில் தங்களது வாணிக முகாம்களை அமைத்தனர்.இவர்களையடுத்து டச் நாட்டவர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் வாணிக முகாம்களை சூரத்தின் வடக்கு கரையோரத்தில் நிறுவினர்.1619 ல் பிரெஞ்சு காரர்களும் அவர்களை பின் தொடர்ந்தனர்.உள்ளுக்குளே நடந்த போர்களும், குழப்பங்களும் ஐரோப்பியர் தேடிக்கொண்டிருந்த நுழைவு வாயிலாக அமைந்தன. இதன் மூலம் அவர்கள் அரசியல் ஆதிக்கத்தையும் செலுத்த ஆரம்பித்தனர்.

ஆங்கிலேயர் அரசாட்சி:
மற்ற எல்லா ஐரோப்பியா நாடுகளும் தங்களது வசம் இருந்த பகுதிகளை ஆங்கிலேயரிடம் நாளடைவில், அதாவது இந்த ஒரே நூற்றாண்டில் இழந்தனர். இதற்கு விதிவிலக்காக பிரெஞ்சு நாட்டவர்களின் பாண்டிசேரி, சந்தேர்நாகூர் மற்றும் டச்சின் ட்ராவனகொர் துறைமுகமும், மற்றும் போர்ச்சுகல் நாட்டினரின் கோவா, டையூ,டாமன்  இருந்தன. ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனம் முகலாய பேரரசர் ஜெஹாங்கிரின் அனுமதிப் பெற்ற பிறகு இந்தியாவுடன் 1617 ல், வணிகம் கொள்ள ஆரம்பித்தது நாளடைவில் அவர்களது ஆதிக்கத்தினால் சட்டப்படி இருந்த முகலாய பேரரசர் பருக் சியார் அவர்ர்களுக்கு தஸ்டக்குகள் அல்லது வரியில்லாமல் வங்காளத்தில், 1717 ல், வாணிகம் செய்ய அனுமதி வழங்கினார்.

ஆங்கிலேயருக்கு எதிராய் போரிட்ட முதல் மன்னர் நவாப் சிராஜுத்  தவ்லா:
வங்காள மாகாணத்தை தனது வம்சாவளியின் மூலம் ஆண்ட, வங்காளத்தின் நவாப் சிராஜ் உட துலாத் ஆங்கிலேயரரின் இந்த முயற்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இது 1757 ல் பிளாசே போருக்கு வழி வகுத்தது.
இதில் ராபெர்ட் கிளைவின் தலைமையில் சென்ற கிழக்கிந்திய நிறுவனத்தின் படை நவாபை வீழ்த்தியது.நிலங்களை அரசியல் நோக்குடன் ஆங்கிலேயர்கள் ஆக்கிரமித்ததில் இதுவே முதல் தரமாகும்.இந்த நிறுவனம் ராபர்ட் கிளைவை முதல் வங்காள ஆளுநராக 1757 ல் நியமித்தது.1764 ல் பக்சார் போருக்கு பின்னர் வங்காளத்தை ஆட்சி செய்ய முகலாய பேரரசர் ஷா அலாம் II இடமிருந்து அனுமதிப்பெற்றது. இதுவே இந்தியா முழுதும் ஆங்கிலேயரின் ஆட்சிக்குள் வர முதல் படியாக இருந்தது.

வங்காளத்தின் வணிகத்தை தான் மட்டுமே கையாண்டது கிழக்கிந்திய நிறுவனம்.அவர்கள் ஒரு புது நில வரியை அறிமுகப்படுத்தினர். பெர்மனென்ட் செட்டில்மென்ட் என்ற இதன் வழியாக நிலங்கள் பியூடல் முறையில் கையாளப்பட்டன.1850 முடிவகளில் கிழக்கிந்திய நிறுவனம் இந்திய துணைகண்டத்தின் பெரும்பாலான பகுதிகளை (இன்றைய பாகிஸ்தான் மற்றும் வங்காள தேசம்) தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.அவர்கள் பிரித்து ஆள் என்ற கொள்கையை தீவிரமாகப் பயன்படுத்தினர். அரசர்களால் கட்டுபடுத்தப்பட்ட மாநிலங்களுக்கும், சமுக மற்றும் மத சார்ந்த குழுக்களுக்கும் இருந்த பகைமையை இவர்கள் மிகவும் அறிவு பூர்வமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.

ஆங்கிலேயரின் அரசாட்சியின் பொழுது, அரசாங்கத்தின் சொல்லப்படாத கொள்கைகளால் இந்தியாவில் பஞ்சங்கள் உருவாகின. மிக கொடுமையான பயங்கர பஞ்சம் (கிரேட் பாமின் ஆப் 1876–78), 6.1 மில்லியனிலிருந்து 10.3 மில்லியன் மக்கள் வரை கொன்றது.

அதனை தொடர்ந்த இந்தியன் பாமின் ஆப் 1899–1900, 1.25 இலிருந்து 10 மில்லியன் மக்கள் வரை சரித்து. மூன்றாம் பிளக் பாண்டமிக் தனது ஆதீனத்தை சீனாவில் கொண்டிருந்தது. மத்திய 19 ஆம் நூற்றாண்டில் துவங்கிய அது கண்டங்கள் முழுதும் அல்லது இந்தியாவில் மட்டும் 10 மில்லியன் மக்களை கொன்றது.இந்த பஞ்சங்களும் வியாதிகளும் அதிகரித்த போதிலும் இந்திய துணைகண்டத்தின் மக்கள் தொகை 1750 ல் 125 மில்லியனாக இருந்து,1941 ல் 389 மில்லியனாக மாறியது .

முகாலாய பேரரசர் பகதூர் ஷா சபர் தலைமையில் முதல் போர்: 
கிழக்கிந்திய நிறுவனத்தை எதிர்த்து நடந்த முதல் இயக்கம் 1857

கீழணையில் ஷட்டர் பழுதால் கடலுக்கு வீணாக செல்லும் தண்ணீர்!!

காட்டுமன்னார்கோவில்: கீழணையில் ஷட்டர் பழுதானதால் தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கர்நாடகாவில் பலத்த மழை பெய்ததால் உபரி நீர் மேட்டூர் அணைக்கு திறக்கப்பட்டது. இதனால் மேட்டூர், கல்லணைகள் நிரம் பின. இந்த அணைகளிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் உபரிநீர் முழுவதும் திறக்கப்பட்டது. கீழணையின் முழு கொள்ளளவான 9 அடியும் தேக்கப்பட்டது. மேலும் நீர் வரத்து தொடர்ந்ததால் கொள்ளிடம் ஆற்றில் விநாடிக்கு ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 781 கன அடி வீதம் உபரி நீர் திறக்கப்பட்டு கடலுக்கு சென்றது.கல்லணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றுக்கு வந்த அதிக அளவு உபரி நீரை கடலுக்கு அனுப்புவதற்கு ஏதுவாக வடக்கு, தெற்கு கொள்ளிட பிரிவில் உள்ள சுமார் 72 மதகுகள் திறக்கப்பட்டன. இதில் 4 மதகுகளை திரும்ப மூட இயலவில்லை.நீர்வரத்து குறைந்ததை அடுத்து கல்லணையிலிருந்து கீழணைக்கு தண்ணீர் அனுப்பும் பணி நிறுத்தப்பட்டது.இந்நிலையில் ஷட்டர் செயல்படாததால் கீழணையில் தேக்கப்பட்ட தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது.

9 அடி தேக்கி வைத்திருந்த

ஆகஸ்ட் 13, 2013

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மீதான சொத்துகுவிப்பு வழக்கு: 5–ந் தேதிக்கு தள்ளிவைப்பு!

கடலூர்: சொத்து குவிப்பு வழக்கில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடலூர் கோர்ட்டில் ஆஜர் ஆனார். வழக்கு விசாரணையை அடுத்தமாதம்(செப்டம்பர்) 5–ந் தேதிக்கு தள்ளி வைத்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

சொத்து குவிப்பு வழக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்ததாக தி.மு.க. முன்னாள் அமைச்சரும், கடலூர் மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அவரது மனைவி தமிழ்செல்வி, மகன் கதிரவன் ஆகியோர் மீது கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த 2011–ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு கடலூர் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு மாஜிஸ்திரேட்டு கிங்ஸ்லிராபர்ட் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேரில் ஆஜர் ஆனார். அவரது சார்பில் வக்கீல் கிருஷ்ணமூர்த்தி ரெட்டியார் வாதாடினார்.

பின்னர் இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம்(செப்டம்பர்) 5–ந் தேதிக்கு தள்ளி வைத்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். முன்னதாக எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கோர்ட்டுக்கு வரும் தகவலை அறிந்து மாவட்ட அவைத்தலைவர் து.தங்கராசு,

ஆன்லைனில் வேலைவாய்ப்பை பதிவு செய்வது எப்படி?

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும் கணினி மயமாக்கப்பட்டு ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளன. முதுகலை பட்டப்படிப்புகள், பொறியியல், மருத்துவம், உயர் தொழில்நுட்ப கல்வித்தகுதிகளை பதிவு செய்ய ஆன்லைன் பதிவு முறை 2001-ல் முதல் கொண்டுவரப்பட்டாலும், தற்போதுதான் முழுமையான நடைமுறைக்கு வந்துள்ளது எனலாம்.

மாநிலம் முழுவதும் பதிவு செய்துள்ள அனைத்து கல்வித்தகுதிகளையும் கொண்ட பதிவுதாரர்களை இணைக்கும் புதிய ஆன்லைன் சாப்ட்வேர் "சுசி லினக்ஸ்” என்ற பெயரைக்கொண்ட இப்புதிய சாப்ட்வேரை எல்காட் நிறுவனம் உருவாக்கி கொடுத்துள்ளது. தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித் தகுதியைப் பதிவு செய்ய முடியும் என்ற நிலை மாறி, தற்போது அனைத்துப் பணிகளையும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் பதிவு செய்து கொள்ள முடியும். ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள், இந்த இணைய தளத்தில் தங்களது பதிவு எண்ணை உள்ளிட்டு தங்களது கல்வி விவரங்களை சரிபார்த்துக் கொள்ளவும் முடியும்.

புதியதாக ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி? புதியதாக ஆன்லைனில் பதிவு செய்ய குடும்ப அட்டை, சாதி சான்றிதழ், பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை கண்டிப்பாக கையில் வைத்திருத்தல் வேண்டும். முதலில் www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று click here for new user ID registration என்று இருக்கும் அதை கிளிக் செய்தால் ஒரு விண்டோ ஓபன் ஆகும். அதில் I agree என்று கிளிக் செய்தால் அடுத்து வரும் பக்கத்தில் பதிவு செய்யும் விண்ணப்பதாரரின் பெயர், ஈமெயில் முகவரி, user id என்ற இடத்தில் புதியதாக ஒரு ID கொடுக்கவும், பின்பு அப்பா பெயர், பிறந்த தேதி, குடும்ப அட்டை எண்ணையும் Image Code என்ற இடத்தில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் codeஐ கொடுத்து Save செய்தால் உங்களுகென்று ஒரு ID Create ஆகி விடும்.

அடுத்து வரும் பக்கத்தில உங்களது Personal detail, Contact detail, Qualification detail, Technical detail ஆகியவற்றை பூர்த்தி செய்து Save செய்தால் உங்களது Register Number Createஆகிவிடும். கவணிக்க

1: Qualification detail பூர்த்தி செய்தவுடன் add என்று பட்டன் இருக்கும் அதை கிளிக் செய்தால் ஒரு சின்ன விண்டோ ஓபன் ஆகும் அதில் கிளிக் செய்து Save கொடுக்கவும். இதே போன்று Technical Detail-ம் செய்ய வேண்டும்.

 2: மேலே சொன்ன அனைத்தும் முடிவடைந்தவுடன் Home பகுதிக்கு சென்று பார்த்தால் Print ID Card என்று இருக்கும் அதை கிளிக் செய்து பிரிண்ட் எடுத்து கொள்ளலாம்.

3: ஏதேனும் தவறாக செய்திருந்தால் Home பகுதியில் Modify Contact பகுதிக்கு சென்று மாற்றி கொள்ளலாம்.

4: Update Profile-ல் சென்று Renewal செய்து கொள்ளலாம். Renewal செய்வதற்கான விவரம்: உதாரணத்திற்கு Register Number இப்படித்தான் இருக்கும்.

 Register Number : ARD2012M00007502 வேலைவாய்ப்பு அலுலகத்தின் குறியீட்டு எண்: CUD - என்பது (வேலைவாய்ப்பு அலுவலகம், கடலூர்)
பதிவு செய்த ஆண்டு: 2010 ஆண் / பெண் : M/F பதிவு எண்: 7802 பதிவு எண் என்பது 8 இலக்க எண்ணாக இருத்தல் வேண்டும், அப்படி இல்லாமல் 4 இலக்க எண்ணாக இருந்தால் முன்னதாக 4 பூஜ்ஜியங்களை சேர்த்துக்கொள்ளவும்

User ID: ARD2012M00007502 Password: dd / mm / yyyy கடவு சொல்லில் உங்களது பிறந்த தேதியை கொடுக்கவும். உங்களது ID CARD இப்படிதான்

ஆகஸ்ட் 12, 2013

ஒரு நபர் தவறு செய்தால் ஒரு சமூகத்தையே தேசவிரோதிகளாக சித்தரிக்க முடியுமா? பவார் கேள்வி

நிரபராதிகளான முஸ்லிம்களை பொய் வழக்கில் சிக்கவைத்து தீவிரவாதிகளாக சித்தரிப்பதால் அவர்கள் சமூகத்தில் இருந்து தனிமைப் படுத்தப்படுகின்றனர் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.

புனேயில் கட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு உரையாற்றினார் சரத் பவார்.அப்பொழுது அவர் கூறியது: என்னவானாலும் ஒரு முஸ்லிமால் பள்ளிவாசலில் குண்டுவைக்க முடியாது என்று நான் 3 அல்லது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மஹராஷ்ட்ரா உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீலிடம் தெரிவித்திருந்தேன்.இதனைத் தொடர்ந்து பாட்டீல் மறைந்த ஹேமந்த் கர்கரேயை என்னிடம் அனுப்பினார்.அப்பொழுது நான் அவரிடம், குண்டுவெடிப்பு வழக்குகளில் முஸ்லிம்களை சிக்கவைப்பது குறித்த எனது சந்தேகங்களை தெரிவித்தேன்.

15 தினங்களுக்கு பிறகு கர்கரே மீண்டும் என்னை சந்திக்க வந்தார்.இந்தூரில் ஒரு சன்னியாசினி(ப்ரக்யாசிங்) தான் இச்சம்பவத்தின் பின்னணியில் இருப்பதாகவும், ஒரு ராணுவ அதிகாரியின்(புரோகித்) ஆதரவு அவருக்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.செய்யாத குற்றத்திற்காக 19 முஸ்லிம்கள் 3 வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு எவ்வாறு இந்த தேசத்தை சொந்த நாடாக கருதமுடியும்?இந்த வகையில் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட ஒரு நபர் ஏதேனும் ஒரு தவறைச் செய்தால் ஒரு சமூகத்தை முழுவதும் தேசவிரோதிகளாக சித்தரிக்க முடியுமா? பவார் கேள்வி எழுப்பினார்.

நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை

நமதூர் முஸ்லிம் உயர் நிலைப்பள்ளியில் வாக்காளர் பட்டியல் சரிப்பார்க்கும் பனி நடந்துவருகின்றது!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தல், மற்றும் முகவரி உள்ளிட்ட திருத்தம் செய்ய இந்திய ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன் படி தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது.

நமதூர் முஸ்லிம் உயர் நிலைப்பள்ளியில் வாக்காளர் பட்டியல் சரிப்பார்க்கும் பனி நடந்துவருகின்றது, நமது சமுதாய சகோதர, சகோதரிகள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தல், நீக்குதல், பெயர் மாற்றம், முகவரி மாற்றம் போன்றவைகள் இருந்தால் ஆகஸ்ட் 31ஆம் தேதிவரை நடைபெறும் இம்முகாம்களில் சென்று மாற்றும் செய்து கொள்ளுமாறு கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ் இணையத்தளம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.


சென்னையில் பார்க்க வேண்டிய சுற்றுலாத்தலங்கள்!

மெரீனா கடற்கரை : மெரீனா கடற்கரை உலகின் நீளமான கடற்கரைகளில் ஒன்றாகும். இதன் நீளம் 13 கி. மீ. ஆகும். இந்தியாவின் கிழக்குக் கடற்பகுதியில் அமைந்துள்ள மெரீனா, இந்திய மாநகரங்களில் ஒன்றான சென்னையின் கடல் எல்லையை வரைவு செய்வதாயும் அதன் அடையாளங்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. இக்கடற்கரையை ஒட்டி புகழ்பெற்றோரின் உருவச்சிலைகள், நினைவிடங்கள், சமாதிகள் அமைந்துள்ளதால் இது சென்னை நகரின் சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.


மாமல்லபுரம் : மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். 7ஆம் நூற்றாண்டில் பல்லவ நாட்டின் முக்கிய துறைமுகமாக விளங்கிய நகரமாகும். இந்நகரம் மகாபலிபுரம் என்றும் அழைக்கபடுகிறது. இந்நகரில் உள்ள கடற்கரைக் கோயில் உலகப்புகழ் பெற்றது. சென்னையில் இருந்து சுமார் 60கி.மீ தொலைவிலும், பாண்டிச்சேரியில் இருந்து 130 கி.மீ தொலைவிலும், திருச்சியில் இருந்து 250 கி.மீ தொலைவிலும் மாமல்லபுரம் அமைந்துள்ளது. ரயிலில் வருவோர் செங்கல்பட்டில் இறங்கி விட்டால் அங்கிருந்து 30கி.மீ தூர பயணம்தான். சென்னை, திருச்சியில் சர்வதேச விமானநிலையம் உள்ளது. டிசம்பர்- ஜனவரி மாதத்தில் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பில் நாட்டியவிழா ஒன்றும் மாமல்லபுரத்தில் நடத்தப்படுகிறது.

அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா (வண்டலூர் பூங்கா) : அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா சென்னையின் தெற்கு பகுதியில் 30 கீ.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இப்பூங்கா வண்டலூர் பூங்கா என்றும் அழைக்கப்படுகிறது. இப்பூங்கா 1855ல் தோற்றுவிக்கப்பட்ட இந்தியாவின் முதல் விலங்கியல் பூங்காவாகும். இங்கு 170க்கும் மேற்ப்பட்ட பாலுட்டிகள், பறவைகள் மற்றும் ஊர்வன உள்ளது. கிண்டி தேசியப் பூங்கா : சென்னை மாநகராட்சியில் அமைந்துள்ள ஒரு தேசியப் பூங்கா. இது, இந்தியாவில் எட்டாவது சிறிய தேசியப் பூங்காவாகும். அரிய வகை தேசியப் பூங்காக்களில் இப்பூங்காவும் ஒன்று. இப்பகுதி பரங்கியர் காலத்தில் மில்பர்ட்டு ரோடிரிக்கிசு (Gilbert Rodericks) என்பவரின் சொந்த வேட்டையாடும் பகுதியாக இருந்தது, பின்னர் 1958ல் தமிழ் நாடு வனத்துறையின் கண்காணிப்பிற்கு மாற்றப்பட்டது.

வேடந்தாங்கல் : வேடந்தாங்கல் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர். இவ்வூரில் உள்ள பறவைகள் சரணாலயம் மிகவும் புகழ்பெற்றது (மொத்தப் பரப்பு 30 ஹெக்டேர்). இங்கு ஆண்டுதோறும் உலகின் பல பகுதிகளில் இருந்தும் பறவைகள் வருகின்றன. இவ்விடத்திற்கு கனடா, சைபீரியா, பங்களாதேசம், பர்மா, ஆஸ்திரேலியா முதலிய நாடுகளில் இருந்து பறவைகள் வருகின்றன. அக்டோபர் முதல் மார்ச் வரையிலான பருவத்தில் ஆயிரக்கணக்கான பறவைகள் இங்கு தங்கி முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்கும். இங்கு வரும் பறவைகளில் நீர்க்காகங்கள், பலவித கொக்குகள், நாரைகள், கூழைக்கடா, நீர்க்கோழி போன்றவை குறிப்பிடத்தக்கவை.

வள்ளுவர் கோட்டம் : உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவரின் நினைவாக 1976 ஆம் ஆண்டு கட்டப்பட்டது வள்ளுவர் கோட்டம். முன்னால் அமைக்கப்பட்டிருக்கிற பிரம்மாண்டமான தேர், திருவாரூர் கோயில் தேரை மாதிரியாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. தேரின் பீடம் 25 அடி. சதுரப் பளிங்கால் ஆனது. ஏழு அடி உயரமுள்ள இரு யானைகள் தேரை இழுப்பது போன்று