Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மார்ச் 07, 2011

SMS மூலம் உள்ளூர் ரயில் டிக்கெட் அறிமுகம்!

மும்பையில் உள்ளூர் மின்சார ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் தங்களது மொபைல் போனில் பட்டனை தட்டினால் போதும்; ரயில் டிக்கெட் மொபைலுக்கு வந்து விடும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது


மும்பையில் வேலைக்கு செல்பவர்களில் பெரும்பாலானோர், உள்ளூர் மின்சார ரயில்களையே நம்பியுள்ளனர். இவர்கள் இனி, தினமும் வரிசையில் நின்று, டிக்கெட்' எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது எந்த ரயில் நிலையத்தில் இருந்து எந்த ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டும் என்பதை, மொபைல் போனில் எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்பினால் போதும். டிக்கெட் தொடர்பான தகவல்கள், மொபைல் போனில் உடனடியாக கிடைத்து விடும்.

அதை அவைத்துக்கொண்டு ரயிலில் பயணம் செய்யலாம். இதற்கான கட்டணம், மொபைல் போன், "சிம்'மின், "போஸ்ட் பெய்டு' அல்லது "பிரீ பெய்டு' கட்டணத்தில் கழிக்கப்படும். ஆனாலும் சில சிக்கல்கள் இருப்பதாக ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர். ஒன்று, டிக்கெட் புக் செய்ய, சிறப்பு அம்சங்கள் கொண்ட மொபைல் போன், பயணிகளுக்கு தேவைப்படும். இரண்டு, எவ்வாறு கட்டண பரிவர்த்தனையை மேற்கொள்வது என்பதில் குழப்பம் ஏற்படும்.

அசத்தியது இந்தியா:ஏவுகணையை இடைமறித்து தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி

 எதிரி ஏவுகணையை இடைமறித்து அழிக்கும் திறன் வாய்ந்த அதிநவீன ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிகரமாக பரிசோதித்தது.

ஒரிசாவின் வீலர் தீவில் ஒருங்கிணைந்த பரிசோதனை மையத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

இந்த பரிசோதனை வெற்றிகரமாக இருந்ததாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. துல்லியமான, விருப்பமான முடிவை எட்டும் நோக்கில் இந்த சோதனை நடைபெற்றது.

முதலில் மேம்படுத்தப்பட்ட பிருத்வி ஏவுகணை சண்டிப்பூர் கடற்கரைப் பகுதியில் இருந்து காலை 9.33 மணிக்கு நடமாடும் ஏவுவாகனம் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

மார்ச் 06, 2011

லிபியாவில் தீவிரமடையும் கலவரம்!

லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிரான பொதுமக்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

வெள்ளிக்கிழமையான நேற்று காலை திரிபோலி மாவட்டத்தில் தஜோரா என்ற இடத்தில் உள்ள மசூதியில் தொழுகை நடந்தது. தொழுகை முடிந்ததும் சுமார் 1500 பொதுமக்கள் தலைநகர் திரிபோலியை நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.

எகிப்து கொடிகளையும், அதிபர் கடாபிக்கு எதிரான பேனர்களையும் ஏந்தியபடி வந்தனர். அதிபர் கடாபி ஆட்சியை விட்டு விலகு என்ற கோஷங்களை எழுப்பினர்.

அவர்களது பேரணி போராட்டம் நடைபெறும் சதுக்கத்தை நெருங்கியது. அப்போது, “கடாபி ஒழிக” தஜோரா உங்களுக்கு சவக்குழி தோண்டும் என்று சுவர்களில் எழுதினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது ராணுவத்தினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குல் நடத்தினர்.

எங்கே செல்கிறது இந்தியா?

புதுடில்லி : காங். எம்.பி. கன்வர் மகன் லலித் தன்வர் மற்றும் டில்லியை சேர்ந்த முன்னாள் எம்.பி.யின் மகளான யோகிதாவிற்கும், டில்லியில் உள்ள ராஜஸ்தான் பேலஸ்சில் 14மில்லியன் பவுண்டு செலவில் நடந்த இந்த திருமணம் மிகவும் சாதாரணமாக நடந்ததாக சொல்லப்படுகிறது.

திருமண பரிசாக 429 ஹெலிகாப்டர்கள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. திருமண நிச்சயதார்த்தில் கலந்து கொண்டவர்களுக்கு, சில்வர் பிஸ்கட், சபாரி ஆடைகள் மற்றும் ஐயாயிரம் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்ய 100 டிஷ்கள் மற்றும் 12 டிஜிட்டல் ஸ்கிரீன்கள் பயன்படுத்தப்பட்டன. மணமகன் அலங்காரம் செய்தவருக்கு ஐயாயிரத்து ஐந்நூறு டாலர் பணம் தரப்பட்டது.

ஒருவார காலம் நடந்த திருமண நிகழ்ச்சியில் அரசியல் முக்கிய தலைவர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் உள்பட 18 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் உணவு தயாரித்தனர். மொத்த திருமண செலவு 55 மில்லியன் டாலர்களை தாண்டும் எனவும், இதுவரை எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது என கணக்கீட முடியவில்லை என மணமகனின் மேலாளர் தெரிவித்துள்ளார். வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் இன்று கலந்து கொள்கிறார்.

இந்நிலையில், இந்தியா ஏழைநாடு என்ற முறையில், இங்கிலாந்தில் இருந்து தரப்படும் 280 மில்லியன் பவுண்டு வழங்கி வரும் வேலையில், ஒரு திருமண நிகழ்ச்சிக்காக 14 மில்லியன் இங்கிலாந்து பவுண்டு செலவழிக்கப்பட்டது உலகளவில் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. இதுபோன்று செல்வ செழிப்போடு திருமணங்கள் நடைபெறும் இந்தியாவிற்கு ஆண்டு தோறும் அளிக்கப்படும் நிதிஉதவி தேவைதானா என அந்தாட்டு எம்.பி.க்கள் கூறுவதாக பத்திரிகைகள் கருத்து தெரிவிக்கின்றன.

மார்ச் 05, 2011

துவேஷம் விதைக்கும் வரலாற்றுப் பாடங்கள்…!

வரலாறு அபாயகரமானது. பிசாசாக உருமாறி மக்களை ஆட்கொண்டு ஆட்டிப்படைப்பது. நம் நாட்டின் வரலாறு என்னும் பெயரில் எழுதப்பட்டிருப்பது, பரப்பப்படுவது பெரும்பாலும்கடந்த காலத்தின் உண்மையான சித்தரிப்பு அல்ல. எழுதுபவர்களின் கண்ணோட்டத்திற்கு ஏற்ப, அவர்களது குறுகிய சாதி, சமய, அரசியல் தேவைகளுக்கு ஏற்றவண்ணம் திரித்து, மறைத்து, கூட்டிக்கழித்து எழுதப்பட்டிருப்பது. சமுதாயப் பொறுப்புணர்வு இல்லாமல், தங்கள் துவேஷங்களையே வண்ணக் கலவையாக்கி வரலாற்றைத் தீட்டியிருக்கிறார்கள் பல மேதாவிகள்.

‘நம் நாட்டில் இந்துக்களும் முஸ்லிம்களும் இருவேறுபட்ட இனங்கள், வேறுபட்ட கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்கள்… அவர்களிடையே பாலமிட முடியாத பிளவுகள் காலங்காலமாக இருந்திருக்கின்றன…’ என்பவை போன்ற மதவாதக் கருத்துகள் இத்தகைய வக்கரித்த வரலாற்றின் வார்ப்புகள் தாம்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நம் நாட்டின் வரலாறு சொல்லொணாச் சிதைவுக்கு உள்ளாயிற்று. தங்கள் ஆதிக்கத்துக்கு உட்பட்ட மக்களைப் பிரித்தாளும் ராஜதந்திரத்தின் அற்புதக் கருவியாக வரலாற்றை ஆங்கிலேயர் பயன்படுத்தினர். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மகோன்னதத்தை வலியுறுத்த, அதற்கு முன்னர் முஸ்லிம்கள் ஆண்ட காலத்தை இருண்டகாலமாகச் சித்தரித்தனர். முஸ்லிம் மன்னர்களைக் கொடுங்கோலர்கள் என்றும் கொள்ளைக்காரர்கள் என்றும் மதவெறியர்கள் என்றும் இந்தியக் கலாச்சாரத்தைச் சீரழித்தவர்களென்றும் காட்டி, அவர்களது கொடிய ஆதிக்கத்திலிருந்து இந்துக்களை மீட்கவந்த ரட்சகர்களாகவும் கருணா மூர்த்திகளாகவும் தங்களைச் சித்தரித்துத் தங்கள் ஆதிக்கத்தை நியாயப் படுத்தினர். திட்டமிட்டு, நாசூக்காக வரலாற்றில் விஷத்தைக் கலந்தனர்.

கேன்சரை எதிர்க்கும் கேரட்

காரட் சாப்பிடுவதால் நம்முடைய உடலில் புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றல் உருவாகிறது என்பது தெரிந்த செய்திதான். ஆனால் காரட்டில் உள்ள எந்த பகுதி புற்றுநோய் கட்டிகளை அழிக்கிறது என்பது இப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இங்கிலாந்திலும், டென்மார்க்கிலும் உள்ள நியூகாஸில் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதுபற்றிய ஆராய்ச்சிகளை எலிகளைக் கொண்டு செய்துவருகிறார்கள். எலிகளில் காணப்படும் புற்றுநோய்க்கட்டிகள் மூன்றில் ஒருபங்காக குறைவது எதனால் என்பதற்கான விடை இப்போது கிடைத்திருக்கிறது.

காரட்களை சேமிக்கும்போது வேர்ப்பகுதிகளில் கறுப்பு நிற புள்ளிகள் தோன்றி அழுகல் தொடங்கி விடுகிறது. இந்த நோய்க்கு liquorice rot என்று பெயர். இந்த நோயை ஒழிக்க Falcarinol எனப்படும் இயற்கையான பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பூச்சிக்கொல்லிக்கு புற்றுநோய்க்கட்டிகள் வளர்ச்சியடைவதை கட்டுப்படுத்தும் ஆற்றல் இருப்பதாக இப்போது கண்டறியப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடிகள்

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 1,165 வாக்குச் சாவடிகள் பதற்றம் நிறைந்தவைகளாக அறியப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் புதன்கிழமை தெரிவித்தார்.

கடலூர் மாவட்டத்தில்
திட்டக்குடி (தனி) தொகுதியில் 90,
விருத்தாசலம் தொகுதியில் 139,
நெய்வேலி தொகுதியில் 109,
பண்ருட்டி தொகுதியில் 160,
கடலூர் தொகுதியில் 73,
குறிஞ்சிப்பாடி தொகுதியில் 167,
புவனகிரி தொகுதியில் 188,
சிதம்பரம் தொகுதியில் 101,
காட்டுமன்னார்கோயில் (தனி) தொகுதியில் 144
ஆக மொத்தம் 1,165 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவைகளாகக் கருதப்படுகின்றன.

மார்ச் 02, 2011

அறுவடை பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை : விவசாயிகள் கடும் பாதிப்பு

சேத்தியாத்தோப்பு : நெல் அறுவடை மற்றும் கரும்பு வெட்ட தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக விவசாய பணிகள் கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. நாட்டின் முதுகெலும்பான விவசாயம் முழுக்க, முழுக்க தொழிலாளர்களை மட்டுமே நம்பியுள்ளது. என்னதான் நவீன ரக இயந்திரங்கள், தொழில் நுட்பங்கள் வேளாண் துறையில் பயன்படுத்தப்பட்டாலும் தொழிலாளர்கள் இல்லாமல் விவசாயம் இல்லை என்பது தான் உண்மை.

இந்நிலையில் இந்த ஆண்டு சம்பா பருவ அறுவடை, கரும்பு வெட்டும் பணி ஆகியவற்றிற்கு தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக அறுவடை பணிகள் பாதிப்பிற்குள்ளானது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை சம்பளம் பெற்று வந்த விவசாய தொழிலாளர்களை தற்போது வேலைக்கு அழைத்தால் அவர்கள் விதிக்கும் நிபந்தனைகள் விவசாயிகளை திக்கு முக்காட வைக்கிறது. நாள் ஒன்றுக்கு 150 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை சம்பளம், காலை 11 மணிக்கு 2 பன்னுடன் டீ, மதியம் 3 மணிக்கு 2 வடை, 2 பஜ்ஜி, 2 போன்டா இவற்றில் ஏதாவது ஒன்றும் டீயும் அவசியம் வாங்கித் தர வேண்டும். இதைவிட முக்கியமாக சம்பளத்தை வேண்டுமானாலும் மறுதினம் கொடுக்கலாம். அவசியமாக 70 ரூபாய் மதிப்புள்ள குவாட்டர் பாட்டில் கண்டிப்பாக வாங்கித்தர வேண்டும்.

யுஏஇ-யில் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை!

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை வழங்குவதற்கு அவர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் பணி துவங்கி உள்ளது. இதன் ஒரு கட்டமாக அமீரகத்தில் வாழும் இந்திய மக்கள் அங்குள்ள தூதரக இணையதளத்தில் விண்ணபித்து கொள்ள வேண்டும். அதில் அவர்களது விசா எண், முடிவடையும் காலம், பாஸ்போர்ட் எண் மற்றும் முடிவடையும் தேதி, முகவரி, செல்பேசி எண், இந்திய முகவரி போன்ற சில தகவல்கள் கொடுக்க வேண்டும். பின்னர் மின்னஞ்சலுக்கு மற்ற விவரங்கள் வரும். அடையாள அட்டை இந்திய முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். இதுவரை இதில் பதிவு செய்யாதவர்கள் உடனே இதை பயன்படுத்தி கொள்ளவும்.


http://uaeindians.org/registration.aspx
- பாலைவனத் தூது

IAS, IPS படிக்க Civil Services தேர்வு கனவை நினைவாக்க களம் இறங்குங்கள் மாணவர்களே!

இந்தியாவை நிர்வகிக்கும் முக்கிய பதிவிகளுக்குக்கான நுழைவு தேர்வை
மத்திய அரசின் UPSC வருட வருடம் நடத்தி வருகின்றது. மாவட்ட ஆட்சியர் (கலெக்டர்) காவல் துறை ஆணையர் (கமிஷ்னர்), சுங்கத்துறை, வெளியுறவு துறை உட்பட 24 அரசு உயர் பதவிகளுக்கான (IAS, IPS, IFS etc...) முதல் கட்ட நுழைவு தேர்வு Civil Services Preliminary Examination 2011 விண்ணப்பம் தற்போது வினியோகிக்கப்பட்டு வருகின்றன. தேர்வை பற்றிய முழு விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவையே நிர்வகிக்கும் முக்கிய அரசு பதவிகளுக்கான தேர்வு என்றும் இதை சொல்லலாம். முஸ்லீம்கள் ஒடுக்கப்படுவதற்க்கும், உரிமைகள் நசுக்கப்படுவதர்க்கும் இது போன்ற மாவட்ட ஆட்சியர், காவல் துறை ஆணையர், கண்கானிப்பாளர் போன்ற பணிகளில் முஸ்லீம்கள் இல்லாததே (அல்லது மிக குறைவாக இருப்பதே) காரணம். இந்த
தேர்வை எழுதி வெற்றி பெறுவதன் மூலம் நாமும் மாவட்ட ஆட்சியராகவும், காவல் துறை ஆணையராகவும், உள்துறை, உளவுத்துறை என இந்தியாவின் முக்கிய அதிகார பொருப்புகளில் அமர முடியும். இந்த தேர்விற்க்கான கட்டணம் வெரும் ரூ.70 தான். இப்படி அதி முக்கியதுவம் வாய்ந்த இந்த தேர்வை எழுதும் முஸ்லீம்களின் எண்ணிக்கை மிக குறைவு.

முஸ்லீம் சமூகத்தை பாதுகாக்க களம் இறங்குங்கள் மாணவர்களே!

இது வெறும் தேர்வு அல்லது வேலை மட்டும் அல்ல, இந்த பணிகளில் நாம் சேர்ந்தால்தான் நமது சமுதாயத்திற்க்கு பாதுகாப்பு அளிக்க முடியும்,
குஜராத்திலும், கோவையிலும் இன்னும் இந்தியாவின் பல்வேறு பகுதியிலும் முஸ்லீம்களுக்கு எதிரான கோர தாக்குதலுக்கு இந்த துறைகளில் நாம் இல்லாததே (அல்லது மிக குறைவாக இருப்பதே) காரணம். சமுதாய முன்னேற்றத்திற்க்கும், பாதுகாப்பிற்க்கும் இது போன்ற தேர்வுகளில் நமது சமுதாயத்தை சேர்ந்த மாணவர்கள் தேர்சி பெற வேண்டும், தேர்சி பெற்று இது போன்ற பதவிகளில் அமருவதின் மூலமே நமது பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். இன்னும் எத்தனை காலம் தான் நாம் ஆர்பட்டம் போராட்டம் என்று வாழ்வது, நமது உரிமையை மீட்க,
சமுதாயாத்திற்க்கு பாதுகாப்பு வழங்க நாமும் மாவட்ட ஆட்சியர் (கலெக்டர்), காவல் துறை ஆணையர் (கமிஷ்னர்) ஆகுவோம் வாருங்கள்.

மார்ச் 01, 2011

ஏப்ரல் 13ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல்! இன்று முதல் தேர்தல் நடைமுறை அமல்!

புதுடில்லி: வரும் ஏப்ரல் 13ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என டில்லியில் தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் சட்டசபை தேர்தலை சந்திக்கிறது. இத்தேர்தலுக்கான தேதி விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தமிழகத்திற்கான சட்டசபை காலம் மே 16 ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இங்கு தேர்தல் நடத்துவதற்கான வாக்காளர் பட்டியல், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் மின்னனு இயந்திரங்கள் உள்ளிட்ட அனைத்து முன்ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. தேர்தல் பணி தொடர்பாக தேர்தல் கமிஷன் பல முறை ஆய்வு கூட்டங்களை நடத்தி ஏற்பாடுகள் முடிந்து ஓட்டுப்பதிவுக்கு தயாராக இருப்பதாக தமிழக தேர்தல் கமிஷன் அறிவித்தது.

இந்நிலையில் டில்லியில் தலைமை தேர்தல் கமிஷன் குரேஷி தலைமையில் இன்று தேர்தல் நடத்தும் நாள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பின்னர் தேர்தல் கமிஷனர் குரேஷி தேர்தல் நடக்கும் நாள் விவரத்தை அறிவித்தார். இதன்படி தமிழகத்தில் வரும் ஏப்ரல் 13ம்தேதி தேர்தல் நடக்கிறது.

Source:dinamalar