Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 04, 2010

அமெரிக்க-இஸ்ரேல் உறவை வெளிக்கொணர விக்கிலீக்ஸ் தயாராகவேண்டும் - அரபுநாட்டு மக்கள்

:இஸ்ரேலின் நிர்பந்தங்களுக்கு அமெரிக்கா அடிபணிவதைக் குறித்த விபரங்களை வெளியிட்டால் மட்டுமே விக்கிலீக்ஸின் நம்பகத் தன்மையை உறுதிச்செய்ய இயலும் என அரபு நாட்டுமக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அத்தகையதொரு அதிர்ச்சி தகவலுக்காக தாங்கள் காத்திருப்பதாக அரபு நாட்டு மக்கள் தெரிவிப்பதாக பெனின்சூலா செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் தவறான வெளியுறவுக் கொள்கைகளை விக்கிலீக்ஸ் வெளிக்கொணருகிறது என்றால் டெல்அவீவிற்கும் வாஷிங்டன்னிற்கும் இடையே பரிமாறப்பட்ட ஆவணங்களை வெளியிட அவர்கள் தயாராக வேண்டும்.

அமெரிக்க அதிகாரிகள் அல்லது இஸ்ரேலின் மறைமுக உதவி விக்கிலீக்ஸிற்கு கிடைப்பதாக வளைகுடா நாட்டு மக்கள் கருதுகின்றனர்.

காஸ்ஸாவில் இஸ்ரேல் தொடர்ந்து நடத்திவரும் மனிதத் தன்மைக்கு மாற்றமான நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா அளித்துவரும் தார்மீக ஆதரவு தொடர்பான அல்லது வருடந்தோறும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு அளித்துவரும் ராணுவ மற்றும் பொருளாதார உதவித்தொடர்புடையதான ஒரு ஆவணத்தையும் விக்கிலீக்ஸ் இதுவரை வெளியிடவில்லை.

சில வறுமையில் சிக்கி தவிக்கும் ஆப்பிரிக்க நாடுகளில் அமெரிக்கா நடத்திவரும் மனித உரிமை மீறல்களைக் குறித்தும் விக்கிலீக்ஸ் இதுவரை எந்தச் செய்தியையும் வெளியிடவில்லை.

கடைசியாக விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்களில் ஈரானையும், வளைகுடா நாடுகளையும் குறிவைக்கிறது. அந்தநாடுகளுக்கிடையேயான உறவில் வேட்டு வைக்கிறது.

விக்கிலீக்ஸ் வெளியிட்டுவரும் ஆவணங்களைக் குறித்து கருத்துத் தெரிவித்த இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார் என எடுத்துரைக்கின்றனர் அரபு நாட்டு மக்கள்.
செய்தி:தேஜஸ்&பாலைவனத் தூது

டிசம்பர் 03, 2010

விவாகரத்து வழக்குகளில் பெரும்பாலும் பேஸ் புக் காரணமாக உள்ளது:- அமெரிக்கா தகவல்.

அறிமுகம் இல்லாத நபர்களிடமும் பழக்கத்தை ஏற்படுத்த உதவி வருகிறது பேஸ்புக் இணையதளம்.இந்த தளத்தின் மூலம் பல்வேறு நன்மைகள் உண்டு என்றாலும், தீமைகள் அதிகளவில் உள்ளன. தற்போதைய ஆராய்ச்சியின்படி அமெரிக்காவில் விவாகரத்து வழக்குகளில் பெரும்பாலும் பேஸ் புக் காரணமாக உள்ளது என கண்டுபிடித்துள்ளனர்.

அதாவது ஐந்து வழக்குகளில் ஒன்று இந்த பேஸ் புக் மூலம் நடைபெறுகிறது. அமெரிக்காவை சேர்ந்த வக்கீல்களில் 80 சதவீதம் பேர் பேஸ் புக் மூலமாகத்தான் விவாகரத்து வழக்குகள் நடைபெறுகின்றன என்று தெரிவிக்கின்றனர். பேஸ் புக் ஒரு மிகப் பெரிய குற்றவாளி என்றும் 66 சதவீத விவாகரத்து வழக்குகள் பேஸ் புக் மூலமாகவும், மைபேஸ் மூலம் 15 சதவீதம், டிவிட்டர் மூலம் 5 சதவீதம் பேர் விவாகரத்து கோருகின்றனர். அதேசமயம் இங்கிலாந்து நாட்டில் 20 சதவீதம் பேர் பேஸ் புக் மூலம் விவாகரத்து கோருகின்றனர். என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
SOURE:seithi.com

தேச பாதுகாப்பு பணியில் ஒரு “ராணுவ கிராமம்”

தமிழ் நாட்டில் உள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து 7 கி.மீ., தூரத்தில் பஞ்சம்பட்டி உள்ளது. இக்கிராம மக்கள் தொகை 6,530ஆகும். (2001 கணக்கெடுக்கின்படி)இக்கிராமத்தில் வீட்டிற்கு குறைந்தது ஒருவர் ராணுவத்தில் உள்ளனர். 2ம் உலக போரில் இக்கிராமத்தை சேர்ந்த 67 பேர் பங்கேற்றுள்ளனர். நாட்டிற்கு சேவை செய்வது தங்களது லட்சியங்களில் ஒன்று என்கிறார் ஊராட்சி தலைவர் கருப்பையா(இவரும் முன்னாள் ராணுவ அதிகாரி).
இவர் கூறுகையில்,”இந்த ஊரை சேர்ந்த சேவியர் என்பவர் 2ம் உலக போரின் போது ராணுவத்தில் சேர்ந்தார். அதிகாரி அந்தஸ்தில் பணியாற்றினார். இவர் விடுமுறைக்கு வந்தபோது கிராம மக்களிடம் நாட்டுபற்று பற்றி கூறுவார். சிலரை ராணுவத்தில் சேர்க்க அழைத்தும் செல்வார். சுமார் நூறு பேர் இவரால் ராணுவத்தில் சேர்க்கப்பட்டனர். அதன்பின் ராணுவவீரர்கள் விடுமுறைக்கு வரும் போது அவர்களை பார்த்து பிற இளைஞர்களும் ராணுவத்தில் சேர்ந்தனர்.

தற்போது இக்கிராமத்தில் 300 பேர் முன்னாள் ராணுவ வீரராகவும், 300க்கும் அதிகமானோர் ராணுவத்திலும் உள்ளனர். முன்னாள் ராணுவ வீரர் சங்கம் எங்கள் கிராமத்தில் உள்ளது. அவர்களது ஆலோசனைபடி நான் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். ஒளிவுமறைவற்ற நிர்வாகம் இக்கிராமத்தில் நடக்கிறது. நாட்டிற்கு சேவை செய்தது போல் கிராம வளர்ச்சிக்கும் பாடுபடுகிறேன்,’என்றார்
Source:DM

டிசம்பர் 02, 2010

இணையதளம் மூலம் மின்கட்டணம்- விரிவாக்கம்

இணையதளம் மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதி தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. சென்னையில் இன்று நடந்த விழாவில் மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி இந்த வசதியைத் தொடக்கிவைத்தார்.

இணையம் மூலமாக மின்கட்டணம் செலுத்தும் வசதி 2008-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. முதலில் சென்னையில் மட்டும் நடைமுறையில் இருந்த இந்த வசதி கடந்த ஜூன் மாதத்தில் கோயம்புத்தூர் மண்டலத்துக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மின் நுகர்வோரும் இணையத்திலேயே மின் கட்டணம் செலுத்தும் வகையில் இந்த சேவை தற்போது விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி இதைத் தொடங்கி வைத்தார

இந்தியா தாக்கினால் சரியான பதிலடி கொடுப்போம் என அமெரிக்காவை எச்சரித்தார் சர்தாரி-விக்கிலீக்ஸ்

வாஷிங்டன்: இந்தியா எங்களைத் தாக்கினால் நாங்கள் சரியான பதிலடி கொடுப்போம் என அமெரிக்காவை எச்சரித்திருந்தார் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி என விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள பாகிஸ்தான் தொடர்பான ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பைத் தாக்குதல் சம்பவத்திற்குப் பின்னர் ஏற்பட்ட பதட்டமான சூழ்நிலையின்போதுதான் இந்த எச்சரிக்கையை அமெரிக்காவிடம் தெரிவித்தார் சர்தாரி.

மும்பைத் தாக்குதலுக்குப் பின்னர் ஜனவரி 2ம் தேதி தன்னை வந்து சந்தித்த பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதர் ஆன்னி பீட்டர்சனுடன் பேசிய சர்தாரி, இந்தியா எங்களை ராணுவ ரீதியாக தாக்கினால், எங்களுக்கு வேறு வழியில்லை, நாங்களும் சரியான பதிலடி கொடுப்போம். எங்களது நாட்டின் கொள்கையை எங்களைத் தவிர வேறு யாரும் செயல்படுத்தவோ, இயக்கவோ திணிக்கவோ முயன்றால் அதை அனுமதிக்க மாட்டோம்.

பாகிஸ்தானைப் பொறுத்தவரை காஷ்மீரை விட மிகப் அரசியல் பிரச்சினை எதுவுமே இல்லை என்றும் கூறியுள்ளார் சர்தாரி.

பாக்.கில் பதுங்கியிருக்கும் அல் கொய்தா-போட்டுக்கொடுத்த முஷாரப்

இதேபோல அல் கொய்தா அமைப்பின் மிச்சம் மீதித் தலைவர்களும் பாகிஸ்தானில்தான் பதுங்கியிருப்பதாக அமெரிக்காவிடம் கூறியுள்ளார் முஷாரப் என்றும் விக்கிலீக்ஸ் தகவல் தெரிவிக்கிறது.

ஆப்கானிஸ்தானை ஒட்டியுள்ள பாகிஸ்தான் மலைப் பகுதியில்தான் இவர்கள் பதுங்கியிருப்பதாகவும் முஷாரப், அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளார்.

பின் லேடனும், அவனது உதவியாளருமான அய்மான் அல் ஜவாஹிரியும் பாகிஸ்தானில் இல்லை என்று பாகிஸ்தான் அரசு தொடர்ந்து கூறி வந்த நிலையில், அமெரிக்க எம்.பிக்கள் குழுவிடம் இவ்வாறு கூறியுள்ளார்.

பின்லேடன் உள்ளிட்டோர் குறித்து தாங்கள் முஷாரப்பிடம் கேட்டபோது அவர்கள் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள மலைப் பகுதியில், பாகிஸ்தான் பகுதிக்குள்தான் பதுங்கியிருப்பதாக ஒப்புக் கொண்டார் என எம்.பிக்கள் குழு கூறியதாக அந்தத் தகவல் தெரிவிக்கிறது

கடலூர் மாவட்டத்தில் வெள்ளச் சேதம்: நிரந்தரத் தீர்வு எப்போது?

கடலூர் மாவட்டத்தில் குறிப்பாக காவிரி டெல்டா கடைமடைப் பகுதியான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகாக்களில் ஆண்டுதோறும் மழைக்காலத்தில் வெள்ளப் பெருக்கெடுத்து சேதம் விளைவிப்பது, அரசு நிவாரணம் மற்றும் இழப்பீடு வழங்குவது என்பது வாடிக்கையாகிவிட்டது. இதற்கு நிரந்தர தீர்வு காண அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கை

அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பெய்யும் மழைநீர் செங்கால்ஓடை வழியாகவும், மணவாய்க்கால் மூலமாகவும் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வழியாக சென்று கடலை சென்றடைகிறது. இவையல்லாமல் மேட்டூரிலிருந்து காவிரியில் கூடுதலாக திறக்கப்படும் பல லட்சம் கனஅடி உபரிநீர் கீழணை வந்து அங்கிருந்து கொள்ளிடத்தின் வழியாக சிதம்பரம் அருகே கடலில் கலக்கிறது.

மேலும் பொன்னேரியிலிருந்து வரும் உபரிநீர் காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் வழியாக கடலில் சென்று கலக்கிறது. கோமுகி, மணிமுத்தாறு பகுதியிலிருந்து வரும் உபரிநீர் சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு வழியாக வெள்ளாற்றில் கலந்து பரங்கிப்பேட்டை அருகே கடலுக்கு செல்கிறது. சரியான வடிகால் வசதி இல்லாததால் ஆண்டுதோறும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வரும் வெள்ளம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகாக்களில் உள்ள பல்வேறு கிராமங்களுக்குள் புகுந்து ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்களை நாசம் செய்துவிட்டு கடலுக்கு செல்கிறது.

சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டங்களின் தெற்கே கொள்ளிடம் ஆறும், வடக்கே வெள்ளாறும் செல்கின்றன. இதற்கு இடையில் உள்ள இந்த தாலுகாக்களில் உள்ள மக்களும், விவசாயிகளும் வெள்ளச் சேதத்தினால் ஆண்டுதோறும் அவதியுற்று வருகிறார்கள். அரசும் ஆண்டுதோறும் நிவாரணம் வழங்குவது, இழப்பீடு வழங்குவது போன்ற வழக்கமான செயல்களில் மட்டுமே ஈடுபட்டு வருகிறது. ஆனால் இதற்கு நிரந்தரத் தீர்வு காணப்படவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆள்பற்றாக்குறை, வேளாண் இடுபொருள் விலையேற்றம், போதுமான விலை கிடைக்காதது மற்றும் மழை, வெள்ளம், வறட்சி என மாறி, மாறி சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதி விவசாயிகள் ஆண்டுதோறும் பாதிக்கப்பட்டு வருவதால் பலர் விவசாயத் தொழிலை விட்டு வேறு தொழிலுக்கு மாறி வருகின்றனர். இதனால் கடலூர் மாவட்டத்தில் விவசாயத் தொழில் நலிவுறும் நிலை உருவாகியுள்ளது.

தடுப்பணைகள் தேவை

ஆண்டுதோறும் 2 டிஎம்சி தண்ணீர் சிதம்பரம் அருகே கொள்ளிடம், வெள்ளாற்றின் வழியாக கலந்து வீணாகிறது. எனவே இரு ஆறுகளிலும் பல இடங்களில் தடுப்பணைகளை அமைத்து கடலில் வீணாக கலக்கின்ற நீரை சேமிக்க வேண்டும். மழைக்காலங்களில் வீராணம் ஏரியில் அதிகளவு நீரைத் தேக்கி வைக்கக்கூடாது. சென்னைக்கு குடிநீர் அனுப்பி வைக்கும் நோக்கில் கூடுதலாக நீரைத் தேக்கி வைக்கின்றனர். அப்போது கூடுதலாக ஏரிக்கு உபரிநீர் வரும் போது திடீரென அதிகளவு நீர் திறந்துவிடப்படுவதால் வெள்ளியங்கால் ஓடை மற்றும் பழைய கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல்வேறு கிராமங்கள் பாதிப்படைகின்றன.

எனவே மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நிரந்தர தீர்வுக்கான திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்கிறார் தமிழக உழவர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் மா.கோ.தேவராசன்

இடஒதுக்கீடு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் - இமாம்ஸ் கவுன்சில் மாநாடு

புதுடெல்லி,டிச.1:மத்திய அரசின் வேலைவாய்ப்புகளிலும்,கல்வி ஸ்தாபனங்களிலும் முஸ்லிம்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என டெல்லியில் நடந்த ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தேசிய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தியா முழுவதுமிருந்து அறுநூறுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் பின்வருமாறு:
*எல்லா மாநிலங்களிலும் முஸ்லிம்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் வழங்கவேண்டும்.

*இடஒதுக்கீடு என்ற நியாயமான உரிமையை பெறும்வரை ஜனநாயக ரீதியிலான போராட்டம் தொடரும்.

*மிஷ்ரா மற்றும் சச்சார் கமிஷன்களின் சிபாரிசுகளின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறியது,இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. மிஷ்ரா கமிஷன் அறிக்கை கடந்த ஆண்டு டிசம்பரில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொழுதும் எவ்வித தொடர் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

மேலும் அம்மாநாட்டில் பாப்ரி மஸ்ஜித், 1992 முதல் நாட்டில் நடைப்பெற்ற குண்டுவெடிப்புகள், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு, வக்ஃப் சொத்துக்களின் பாதுகாப்பு ஆகியனத் தொடர்பாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இம்மாநாட்டை முஸ்லிம் தனியார் சட்டவாரிய செயலாளர் மவ்லானா செய்யத் முஹம்மது வலி ரஹ்மானி மாநாட்டைத் துவக்கி வைத்தார்.

காங்கிரஸ் தலைவர் ஆஸ்கர் பெர்ணாண்டஸ், இமாம்ஸ் கவுன்சில் தேசிய தலைவர் மவ்லானா உஸ்மான் பேக், மில்லி கவுன்சில் துணைத் தலைவர் மவ்லானா யாஸின் உஸ்மானி, எஸ்.டி.பி.ஐ தேசிய தலைவர் இ.அபூபக்கர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான், மில்லிகெஸ்ஸட் ஆசிரியர் டாக்டர்.ஸஃபருல் இஸ்லாம் கான், இஸ்ஹர் மஸர்ரத் யஸ்தானி, ஹாஃபிஸ் அஸ்ரார் ஃபலாஹி உள்ளிட்ட தலைவர்கள் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.

இமாம்ஸ் கவுன்சிலின் இணையதளத்தை மவ்லானா தவ்ஃஹீர் ரஸாகான் துவக்கி வைத்தார்.

செய்தி:தேஜஸ்&பாலைவனத் தூது

டிசம்பர் 01, 2010

செல்போன் மூலம் விளம்பரம் செய்ய இன்று முதல் தடை-மீறினால் ரூ. 2 லட்சம் அபராதம்

டெல்லி: செல்போன்களில் வரும் விளம்பரங்கள், விளம்பரம் தொடர்பான அழைப்புகளுக்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறினால் ரூ. 2 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

அப்போதுதான் போய் உட்கார்ந்திருப்போம். படபடவென்று செல்போன் ஒலிக்கும். மடமடவென்று ஓடிப் போய் எடுத்தால், உங்களுக்கு எத்தனை லட்சம் வேண்டுமானாலும் லோன் தர்றோம், வாங்கிக்கிறீங்களா என்று கேட்டு டென்ஷன் செய்வார்கள்.

இப்படிப்பட்ட கால்களால் ஏகப்பட்ட தொல்லைகள். சமீபத்தில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி முக்கிய அமைச்சரவைக் கூட்டத்தில் இருந்தபோது அவரை அழைத்த ஒரு வங்கி நிறுவனம், கடன் தேவையா என்று அவரை கத்த விட்டு டென்ஷனாக்கியது.

இந்த தொல்லைகளை தடுக்க வேண்டும் என டெலிபோன் ஒழுங்குமுறை ஆணையமான டிராயிடம் முறையிடப்பட்டது. அதையடுத்து டிராய் சில விதிமுறைகளை வகுத்துள்ளது.

இனிமேல், டெலிபோன்களில் பேசி விளம்பரம் செய்யக்கூடாது. அதை மீறி செய்யப்பட்டால் அந்த நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

விளம்பர நிறுவனங்களுக்கு தனியாகவும், டெலிபோன் நிலையத்துக்கு தனியாகவும் அபராதம் விதிக்கப்படும். விளம்பர நிறுவனம் முதல் தடவை தவறு செய்தால் ரூ.25 ஆயிரம் அபராதமும், 2-வது தடவை செய்தால் ரூ.72 ஆயிரமும் விதிக்கப்படும். 6 தடவை மீறினால் அபராதம் ரூ.2 லட்சமாக உயரும். டெலிபோன் நிறுவனங்களுக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

அதே நேரத்தில் நிறுவனங்கள் டெலிபோனில் விளம்பரம் செய்யும்போது ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளனர். விளம்பர நிறுவனங்களுக்கு 700-ல் தொடங்கும் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணில் இருந்து எந்த எண்ணுக்கும் அவர்கள் டயல் செய்து பேசி விளம்பரம் செய்யலாம்.

700 எண்ணில் தொடங்கும் போன் வந்தாலே இது விளம்பர போன் என்பதை நாம் தெரிந்து கொள்ள முடியும். எனவே அந்த அழைப்பை ஏற்று பேசுவதாக இருந்தால் பேசலாம். தேவை இல்லை என்றால் துண்டித்து விடலாம்.

புதிய விதியமுறைகள் இன்று முதல் உடனடியாக அமலுக்கு வருவதாக டிராய் தெரிவித்துள்ளது
source:thatstamil

இந்தியாவில் மலேரியாவினால் ஆண்டுதோறும் 2 இலட்சம் பேர் உயிரிழப்பு

உலகில் மலேரிய நோயினால் பாதிக்கப்படுகின்றவர்களில் அல்லது உயிரிழக்கின்றவர்களில் 90 விழுக்காட்டினர் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களில் 86 விழுக்காட்டினர் மருத்துவ சிகிச்சை இல்லாமலேயே பலியாகிவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் இரண்டு இலட்சம் பேர்வரையில் இந்த நோயின் தாக்கத்திற்கு உட்பட்டு உயிரிழக்கின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மலேரிய நோயினை குணப்படுத்துவதற்குரிய மருத்துவ பொருட்கள் இருக்கின்ற போதிலும், நோயினை அடையாளம் காணுதல் மற்றும் வேண்டிய சிகிச்சை பெறுவதிலுள்ள சிக்கல்கள் காரணமாகவே உயிரிழப்புகள் ஏற்படுகின்றது.
source:meenakam

அமெரிக்க வான் தாக்குதலில் மகனை இழந்த பாகிஸ்தானியர் 500 மில்லியன் நட்ட ஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்யவுள்ளார்.

அமெரிக்க வான் தாக்குதலில் மகனை இழந்த பாகிஸ்தானியர் ஒருவர் 500 மில்லியன் அமெரிக்க டாலர் நட்ட ஈடு கோரி நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யத் தீர்மானித்துள்ளார்.


அமெரிக்காவின் சீ.ஐ.ஏ உளவுப் பிரிவினரின் தாக்குதலினால் தமது மகன் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்து குறித்த பாகிஸ்தானிய பிரஜை வழக்குத் தாக்கல் செய்யவுள்ளார்.

வடக்கு வரிகிஸ்தான் பகுதியைச் சேர்ந்த காரீம் கான் என்பவரே இவ்வாறு வழக்குத் தாக்கல செய்யத் தீர்மானித்துள்ளார்.

வழக்குத் தாக்கல் செய்யப்பட உள்ளதாக குறித்த நபரின் சட்டத்தரணி பாகிஸ்தானில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு அறிவித்துள்ளார்.

2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ம் தேதி அமெரிக்க படையினர் தமது வீட்டின் மீது வான் தாக்குதல் நடத்தியதாகவும், இந்த சந்தர்ப்பத்தில் எந்தவொரு தீவிரவாதியும் தமது வீட்டில் இருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் பிரஜை ஒருவர் முதல் தடவையாக அமெரிக்கப் படையினரிடம் நட்ட ஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கப் படையினர் நடத்திய வான் தாக்குதல்களில் நூற்றுக் கணக்கான பொதுமக்களும், தீவிரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.

சுதந்திர ஊடகவியலாளரான காரீம் கான் என்பவரே இவ்வாறு வழக்குத் தாக்கல் செய்யத் தீர்மானித்துள்ளார்.

தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் தமது வீட்டில் தீவிரவாதிகளோ வெளிநாட்டுப் பிரஜைகளோ இருக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Source:globaltamil

விக்கிலீக்ஸ்: குவாண்டனாமோ சிறைக் கைதிகளை ஏற்றுக்கொள்ளுங்கள் - உலக நாடுகளிடம் அமெரிக்கா கெஞ்சல்

வாஷிங்டன்,டிச.1:குவாண்டனாமோ சிறைக் கொட்டடியை இழுத்து மூடுவதாக அறிவித்த அமெரிக்கா, அதேவேளையில் அங்கு அடைக்கப்பட்டிருந்த சிறைக் கைதிகளை என்னச் செய்வது? என்று தெரியாமல் குழம்பிப் போயுள்ளதாகவும், இவர்களை ஏற்றுக்கொள்ளுமாறு உலகின் பல்வேறு நாடுகளை கெஞ்சிக் கேட்டதாகவும் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ரகசிய ஆவணங்கள் கூறுகின்றன.

குவாண்டனாமோ சிறைக் கைதிகளை ஏற்றுக்கொண்டால் பெருந்தொகை தருவதாக ஆசைவார்த்தையூட்டியும், அதிபர் ஒபாமாவுடன் நேரடி சந்திப்புக்கு ஏற்பாடுச் செய்வதாகக் கூறியும் அமெரிக்கா பல்வேறு நாடுகளிடம் பேரம் பேசியுள்ளது.

குவாண்டனாமோ சிறைக் கைதிகளின் பிரச்சனையை தீர்ப்பதற்கு சவூதி ஆட்சியாளர் ஒரு விசித்திரமான ஆலோசனையை தெரிவித்துள்ளார். அதாவது, சிறைக்கைதிகளை யெமன் போன்ற நாடுகளுக்கு அனுப்பிவிட்டு அவர்களின் உடம்பில் குதிரை மற்றும் ஃபால்கன் பறவைகளுக்கு பொருத்துவதுபோல் ஒரு சிப்பை பொருத்தி கண்காணிக்க வேண்டும் என்பதே அந்த ஆலோசனை.

இந்த ஆலோசனை வெள்ளைமாளிகை செயலாளர் ஜான் ஓ.ப்ரன்னன் முன்னிலையில் வந்தபொழுது, ப்ரன்னன் அளித்த பதில் என்னவெனில், குதிரைகளுக்கு நல்லதொரு வழக்கறிஞர் இல்லை என்பதாகும்.

குவாண்டானாமோ சிறையை பூட்டுவதன் ஒரு பகுதியாக சிறைக் கைதிகளை குறைப்பதுத் தொடர்பாக நடந்த பல்வேறு பேச்சுவார்த்தைகளை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. சிறைக்கைதிகளை ஏற்றுக்கொண்டு அவர்களை நிரந்தரமாக கண்காணிக்கும் நாடுகளைக் குறித்துதான் அமெரிக்கா தேடுதல் வேட்டையை நடத்தியது.

சிறைக் கைதிகளை ஏற்றுக்கொள்ள ஒபாமாவுடன் 20 நிமிட சந்திப்பு நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை ஸ்லாவானியா நாடு முன்வைத்தது. ஆனால், அது நடக்கவில்லை. ஐ.எம்.எஃபின் உதவி கிடைக்க அமெரிக்கா உதவவேண்டும் என மாலத்தீவு கோரிக்கை வைத்துள்ளது. அதேவேளையில் 17 உய்கூர் முஸ்லிம்களை ஏற்றுக்கொண்டால் 30 லட்சம் டாலர் தருவதாக கிரிபாத்திக்கு ஆசை காட்டியுள்ளது அமெரிக்கா.

குவாண்டானாமோவில் அடைக்கப்பட்டிருக்கும் தங்களது நாட்டு சிறைக்கைதிகளை ஏற்றுக்கொண்டால் என்ன தருவீர்கள்? என தொடர்ந்து யெமன் நாடு அமெரிக்காவை நச்சரித்துள்ளது.

குவாண்டனாமோ சிறையை இழுத்து மூடப்போவதாக அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்த பொழுது அதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. அயல்லாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளின் உதவியோடு குவாண்டனாமோ சிறைக் கைதிகள் எண்ணிக்கையை 240-லிருந்து 174 ஆக குறைக்க மட்டுமே அமெரிக்காவால் முடிந்துள்ளது.

உய்கூர் முஸ்லிம்களை ஏற்றுக்கொள்வதற்கு இதர நாடுகளை சீனா தடுத்திருந்தது. உய்கூர் முஸ்லிம் கைதிகளுக்கு எதிராக கூடுதல் நடவடிக்கையை மேற்கொண்டால் ஆப்கானிற்கு சரக்குகளைக் கொண்டுச்செல்ல கூடுதல் வசதிகளை செய்துதருவதாக சீனா வாக்குறுதியளித்தது என விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்கள் கூறுகின்றன.

ஆப்கானிஸ்தானிற்கு அனுப்பப்பட்ட கைதிகள் 41 பேரில் 29 பேரை நீதிமன்றம் விசாரணையில்லாமல் விடுதலைச் செய்தது. அவர்கள் தற்பொழுது எங்குள்ளார்கள்? என்பதுக் குறித்து தகவல் இல்லை.

2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஒபாமாவின் தீவிரவாத எதிர்ப்பு ஆலோசகரான ப்ரன்னனிடம், பெருந்தொகையை தந்தால் குவாண்டனாமோவின் மீதமுள்ள அனைத்துக் கைதிகளையும் ஏற்றுக்கொள்ள தயார் என யெமன் நாட்டு அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் அனுமதி அளித்துள்ளார்.

ஆனால், பொதுமக்களின் நிர்பந்தத்திற்கு முன்னால் ஸாலிஹால் அதிககாலம் நிலைத்து நிற்கமுடியாது என யெமன் நாட்டு அமெரிக்க தூதரகம் தகவல் அனுப்பியுள்ளது. இதனால் அமெரிக்கா குவாண்டனாமோ சிறைக் கைதிகளை யெமனிற்கு அனுப்ப தயங்கியது.

சிறைக் கைதிகளுக்கு மனோரீதியான சிகிட்சை வழங்க 110 லட்சம் டாலர் தேவை என ஸாலிஹ் கோரியுள்ளார். ஆனால், அத்தகையதொரு திட்டத்திற்கு நீண்டகாலம் தேவைப்படும் எனக்கூறி ப்ரன்னன் நழுவியுள்ளார். ஆறு மாதத்திற்கு பிறகு மீண்டும் ஸாலிஹ் எவ்வளவு தொகை கிடைக்கும்? என அமெரிக்காவை கேட்டுள்ளார். முதல்கட்டமாக ஐந்து லட்சம் டாலர் தரலாம் என அமெரிக்கா கூறியதால் பேச்சுவார்த்தை முறிந்தது.

குவாண்டனாமோ சிறைக் கைதிகளை ஆப்கானில் கொண்டுவிட்டு பின்னர் அவர்களை கொலைச் செய்யவேண்டும் என்பது குவைத் நாட்டின் கொடூர யோசனையாகும்.

செய்தி:தேஜஸ்&பாலைவனத் தூது