Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அக்டோபர் 27, 2013

இந்திய மக்களிடையே விரோதத்தை விதைக்கும் மோடி! -நியூயார்க் டைம்ஸ்

பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியால் இந்தியாவை சிறப்பாக வழி நடத்த முடியாது என்று நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பாஜகவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி குறித்து நியூயார்க் டைம்ஸ் ஆசிரியர் குழு நேற்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மோடி பற்றி கூறியிருப்பதாவது..

மோடி எதிர்கட்சிகளுடன் சேர்ந்து பணியாற்றவோ பிறரின் அபிப்ராயங்களை சகித்துக் கொள்ளவோ எந்தவித அறிகுறியும் காட்டவில்லை. அவர் ஏற்கனவே பாஜகவின் கூட்டணி கட்சிகளை வேற்று கட்சிகளாக ஆக்கிவிட்டார். 17 ஆண்டுகளாக பாஜகவுடன் இருந்த ஐக்கிய ஜனதாதளம் மோடியை ஏற்றுக் கொள்ள முடியாமல் கூட்டணியில் இருந்து வெளியேறியது. இந்தியாவில் பல மதங்கள் உள்ளது. பெரும்பாலான இந்திய மக்களிடம் பயம் மற்றும் விரோதத்தை விதைத்தால் மோடியால் நாட்டை சிறப்பாக வழி நடத்த முடியாது.

குஜராத்தில் பொருளாதார நிலைமையும் முழுதாக பாராட்டும்படி இல்லை. எடுத்துக்காட்டாக இந்தியாவில் உள்ள முஸ்லிம்களில் குஜராத்தில் உள்ள முஸ்லிம்கள் ஏழைகளாக உள்ளனர். இத்தனைக்கும் நாட்டிலேயே குஜராத்தில் ஏழ்மை சதவீதம் குறைவு. அவர் அதிகாரத்திற்கு வருவது பல இந்தியர்களுக்கு கவலை அளித்துள்ளது. அதிலும் குறிப்பாக
138 மில்லியன் முஸ்லிம்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு கவலை அளித்துள்ளது. என்று 19 உறுப்பினர்கள் கொண்ட ஆசிரியர் குழு தெரிவித்துள்ளது.
-தட்ஸ்தமிழ் 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...