Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 30, 2013

நாளைய சிந்தனை...!


எதிர்காலச் சிந்தனை எல்லா மனிதரிடத்தும் நிறைந்திருப்பதைப் பார்க்கிறோம். படித்தவனோ, பாமரனோ, பணக்காரனோ, ஏழையோ எல்லோருக்குள்ளும் ஓர் கனவு இருக்கிறது. அதை விரைந்து நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமென்ற உந்துதலும் மனிதர்களிடத்தில் காண்கிறோம்...

ஆனால் இந்த எதிர்காலச் சிந்தனை என்பது இவ்வுலக பலாபலன்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது அதற்குண்டான தயாரிப்புகளிலேயே பலர் மோகம் கொண்டிருப்பதையும், மூழ்கியிருப்பதையும் பார்க்கிறோம். 

முழுவீச்சுடன் செயல்திட்டங்களை வகுப்பதில் பலர் கொண்டிருக்கும் ஆர்வம் இயற்கையான மனித உணர்வு களுக்கும்  உறவுகளுக்கும் கூட முக்கியத்துவம் கொடுக்காமலிருப்பதை சமயங்களில் நாம் காணலாம். இது நாளடைவில் நம்முள் இறைவன் வைத்திருக்கும் மனித மாண்புகளை குழிதோண்டிப் புதைத்துவிடுமோ என்ற அச்சம் நம்முள் எழாமலில்லை.

உலக வாழ்வில் எதிர்காலச் சிந்தனை கூடாது என்று நாம் சொல்லவில்லை. அதுவும் வேண்டும். அதனூடே யாராலும் அழிக்க முடியாத உண்மைகளாய் இருக்கும் மரணம்,மண்ணறை வாழ்வு,மறுமை பற்றிய அந்த எதிர்காலச் சிந்தனை நம்முள் எத்தனை தூரம் ஆழமாய் வேரூன்றி யுள்ளது.அதற்கான தயாரிப்பில் நாம் எந்தளவு முனைப்புடன் முன்னேற்பாடுகளைச் செய்துள்ளோம் என்பதை நம்முள் ஒவ்வொருவரும் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். அப்படி இந்த உலகில் வாழ்வதற்காக, தன்னையே தியாகம் செய்து,அதற்காக சிந்தித்து, அதனடிப்படையில் செயல்பட்டு வரும் மனித சமூகம்,தான் மரணித்தவுடன் தனக்கு ஏற்படப் போகும் வாழ்விற்காக என்ன சம்பாதித்து வைத்துள்ளோம் என்பதை நாம் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். 

கண்ணியத்திற்குரிய இறைவன் கூறுகிறான்:
நம்பிக்கை கொண்டோரே! நாளைக்கு என தாம் செய்த வினையை ஒவ்வொருவரும் கவனிக்கட்டும். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன் (அல்குர்ஆன் : 59:18)

தாம் எதற்காக படைக்கப்பட்டோம், எதற்காக நமக்கு வாழ்வும் மரணமும் ஏற்படுகிறது என்பதைப் பற்றி மறந்து விட்ட நிலையில், நம்மை படைத்த எல்லாம் வல்ல இறைவன் தன் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான். 

உங்களில் அழகிய செயலுக்குரியவர் யார் என்பதைச் சோதிப்பதற்காக தான் மரணத்தையும் வாழ்வையும் அவன் படைத்தான் (அல்குர்ஆன்: 67:2)

இந்த உலகில் மனிதன், தன் தாயின் வயிற்றில் இருந்து பிறந்து, வளர்ந்து, திருமணம் புரிந்து வாழ்ந்து மரணிப்பது என்பது சம்பிரதாய வாழையடி வாழையாக வரக்கூடிய சுழற்சியாக அமைந்து விட்டது. 

ஆனால் இறைவன் இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் ஒரு மனிதன் எப்படி தன்னுடைய வாழ்வை அமைத்துக் கொள்கிறான், நன்மையான செயல்களை செய்கின்றான் என்பதை சோதித்துப் பார்க்கும் பரீட்சைத் தளமாக தான் ஆக்கியுள்ளான். அதாவது இறைவனின் கட்டளைக்கு கட்டுப்பட்டு, அடிபணிந்து, அவன் வழியில் நல்ல செயல்கள் செய்கின்றோமா? என்பதை சோதித்துப் பார்க்கும் களம்தான் இவ்வுலக வாழ்க்கை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

மேலும் நாளைய தினம் அதாவது மறுமை நாளில் அல்லாஹ்வை சந்திக்கும்போது, அவனின் கேள்விகளுக்கு என்ன பதில் தரப்போகிறோம் என்பதை சிந்திக்க வேண்டும். 

ஜின், மனித சமுதாயமே! உங்களுக்கு என் வசனங்களை எடுத்துக் கூறி இந்த நாளை நீங்கள் சந்திக்கவிருப்பதை உங்களுக்கு எச்சரிக்கை செய்யும் தூதர்கள் உங்களில் இருந்து உங்களிடம் வரவில்லையா? (என்று இறைவன் கேட்பான்).எங்களுக்கு எதிராக நாங்களே சாட்சி கூறுகிறோம் என்று அவர்கள் கூறுவார்கள். இவ்வுலக வாழ்வு அவர்களை மயக்கி விட்டது. (ஏக இறைவனை) மறுத்தோராக இருந்தோம் எனத் தங்களுக்கு எதிராக அவர்கள் சாட்சியமளிப்பார்கள்(அல்குர்ஆன்: 6:130)

மனிதர்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள். தந்தை மகனைக் காக்க முடியாத, மகன் தந்தையைச் சிறிதும் காப்பாற்ற இயலாத நாளை அஞ்சுங்கள்! அல்லாhஹ்வின் வாக்குறுதி உண்மையானது. இவ்வுலக வாழ்க்கை உங்களை ஏமாற்றி விட வேண்டாம். ஏமாற்றுபவனும் அல்லாஹ்வைப் பற்றி உங்களை ஏமாற்றி விட வேண்டாம். (அல்குர்ஆன்: 31:33)

ஏனெனில் ஏமாறுதல் என்பது மனிதர்களுக்குப் பல வகையிலும் நிகழக்கூடியது. மனம் மனிதனை ஏமாற்றும். வேண்டாத பல எண்ணங்களுக்கு

கடலூர் மாவட்டத்தில் புகையிலை பொருட்கள்?

கடலூர்:கடலூர் மாவட்டத்தில் புகையிலை மற்றும் புகையிலை பொருட்கள் தடை செய்வது குறித்து அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. புகையிலை உபயோகிப்பதால் புற்றுநோய், ஆஸ்துமா, நுரையீரல் உட்பட பல்வேறு நோய்கள் வர காரணமாக இருப்பதால் புகையிலையை அறவே தடை செய்ய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. அதில் முதல் கட்டமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களில் புகையிலை அறவே ஒழிப்பதற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றில் கடலூர் மாவட்டம் வரும் 2014க்குள் புகையிலை இல்லா மாவட்டமாக அங்கீகரிப்பு செய்யப்பட வேண்டும் என திட்டமிடப்பட்டு அதற்குரிய ஆயத்த பணிகள் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இச்சட்ட அமலாக்கம் மற்றும் விழிப்புணர்வு, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் போன்ற அம்சங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், கலெக்டருமான கிர்லோஷ்குமார் தலைமையில் பிற துறைகளுடன் கூடிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கலெக்டர் முகாம் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:

பொது இடங்களில் புகை பிடித்தால் 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். மேலும் அலுவலகம், ஓட்டல், கடைகள் மற்றும் பொது இடங்களில் புகைபிடித்தல் குற்றம் என்ற வாசகம் அமைக்கப்பட வேண்டும். புகையிலை பொருட்கள் சம்மந்தமான விளம்பரம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விளம்பரப்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, விளம்பரம் அமைத்தல் கூடாது. 18 வயதுகுட்பட்டவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது. அதேப்போன்று 18 வயதினருக்குட்பட்டவர்களைப் புகையிலை பொருட்களை விற்பனை செய்ய ஈடுபடுத்தக்கூடாது. கல்வி நிறுவனத்தைச் சுற்றி 100 மீட்டர் தொலைவிற்குள் புகையிலை பொருட்கள் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் கல்வி நிறுவனமும் மேற்கண்ட அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். புகையிலை பொருட்களின் மீது 40 சதவீதம் அளவு எச்சரிக்கை படம் இருக்க வேண்டும்.

கடைக்காரர்கள் கயிறு, நெருப்பு, தீப்பெட்டி போன்றவைகளை வெளியில் புகை பிடிப்பவர்களுக்குக் கொடுக்கக் கூடாது. மேற்கண்டவற்றில் விதிமீறல் இருந்தால் புகையிலை

ஏப்ரல் 22, 2013

சிதம்பரத்தில் கட்டுமானப் பொருள் கண்காட்சி!

சிதம்பரத்தில் நடைபெற்று வரும் கட்டுமானப் பொருள்கள் கண்காட்சியில் மக்களை கவரும் வகையில் வீடு கட்டுவதற்குத் தேவையான நவீனப் பொருள்கள் அடங்கிய அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. சிதம்பரம் கட்டடப் பொறியாளர்கள் சங்கம் சார்பில் ஜி.எம்.வாண்டையார் திருமண மண்டபத்தில் கட்டுமானப் பொருள்கள் கண்காட்சி, ஏப்ரல் 18-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது. கண்காட்சியில் மொத்தம் 69 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

கோரமெண்டல், ராம்கோ, பாரத் சிமென்ட் நிறுவனங்களின் அரங்குகள், குந்தன், ஐ.எஃப். உள்ளிட்ட நிறுவனங்களின் எலக்ட்டிரிக்கல் பொருள்கள் அரங்குகள், அக்னி, அம்மன் கம்பி நிறுவனங்களின் அரங்குகள், பசுமை வீடுகளை அமைக்கும் லிம்போ வெதர் புரூப் நிறுவனத்தின் அரங்கு, ஜான்சன், நிட்கோ, ராம்டெக், நீரஜ், கபூர் மார்பிள்ஸ் நிறுவனங்களின் அரங்குகள், சூரியஒளியால் இயங்கும் மின்விசிறி, இன்வெர்ட்டர் கொண்ட அரங்கு, ஹை-போக்கஸ் நிறுவனத்தின் சிசி கேமரா அரங்கு, ஆசீர்வாத் பைப்ஸ் நிறுவன அரங்கு, நாராயணா டிம்பர் டிப்போ, சீனுவாசா டிம்பர்ஸ், மீனா பைபர்ஸ், மீரா ஹார்டுவேர்ஸ் ஆகியவற்றின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அண்ணாமலைப் பல்கலைக்கழக கட்டடப் பொறியியல் துறை மாணவர்கள், கட்டடப் பொறியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கண்காட்சியைப் பார்வையிட்டனர்.

கண்காட்சிக்கான ஏற்பாடுகளை கட்டடப் பொறியாளர்

என்.ஐ.இ.எல்.ஐ.டி. நிறுவனத்தில் உதவியாளர் பணியிடங்கள்...

என்.ஐ.இ.எல்.ஐ.டி. நிறுவனத்தில் 183 டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்கள் : நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி நிறுவனத்தில் டெக்னிக்கல் உதவியாளர் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 பணி : டெக்னிக்கல்உதவியாளர்(ஏபிரிவு) - 183 கல்வித்தகுதி : கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி / எலெக்ட்ரானிக்ஸ் - கம்யூனிகேஷன், எலெக்ட்ரானிக்ஸ், கணிதம், இயற்பியல் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் எம்.எஸ்சி. பட்டம். வயது: 30க்குள் பணி: விஞ்ஞானி’பி’- 34 கல்வித்தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ்/ இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி/ எலெக்ட்ரானிக்ஸ் - கம்யூனிகேஷன் / எலெக்ட்ரானிக்ஸ் - டெலிகம்யூனிகேஷன் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் பி.இ./ பி.டெக். பட்டம். வயது: 30க்குள் விண்ணப்பிக்ககடைசிதேதி: 08.05.2013 மேலும்விவரங்களுக்கு: http://recruitment.nielit.in 

 நேஷனல் டெக்ஸ்டைல் கார்ப்பரேஷனில் டிரெய்னி பணியிடங்கள் நேஷனல் டெக்ஸ்டைல் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் மேனேஜ்மெண்ட் டிரெய்னி பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி : மேனேஜ்மெண்ட்டிரெய்னி கல்வித்தகுதி: எலெக்ட்ரிக்கல்/ எலெக்ட்ரானிக்ஸ்/ மெக்கானிக்கல்துறையில்பி.இ./ பி.டெக். பட்டம்அல்லதுசி.ஏ./ ஐ.சி.டபுள்யூ.ஏ./ எம்.பி.ஏ. (ஃபைனான்ஸ்) அல்லது டெக்ஸ்டைல் பிரிவில் இளைநிலைப்பட்டம். வயது: 30க்குள் விண்ணப்பிக்ககடைசிதேதி: 26.04.2013 மேலும்விவரங்களுக்கு: ww.eonlineapply.com/ntc/Screens/index.htm 

 டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தில் ஜூனியர் என்ஜினீயர் பணியிடங்கள் : டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தில் ஜூனியர் என்ஜினீயர் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி : ஜூனியர் என்ஜினீயர்- 58 கல்வித்தகுதி: 60 சதவிகிதத் தேர்ச்சியுடன் சிவில் துறையில் டிப்ளமோ சான்றிதழ்

பாஸ்டனில் குண்டு வைத்தவர்கள் ரஷ்யாவைச் சேர்ந்த சகோதரர்களாம்!

பாஸ்டன் நகரில் கடந்த திங்கட்கிழமை நடை பெற்ற மாரத்தான் போட் டியில் குண்டு வைத்தவர் கள் ரஷ்யாவைச் சேர்ந்த சகோதரர்கள் என அமெ ரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவர்களில் கருப்பு தொப்பி அணிந்திருந்த வனை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். வெள்ளை தொப்பி அணிந்திருந்த 2ஆவது நபரின் பெயர் ட்சோகர் ட்சர்னயேவ் (19) என்பது தற்போது தெரிய வந்து உள்ளது. இவர்கள் இருவரும் உடன் பிறந்த சகோதரர் கள் என்றும் ரஷ்யாவில் உள்ள செசன்யா மாகா ணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

 கடந்த ஓராண்டு காலமாக அமெரிக்கா வில் தங்கியுள்ள இவர் கள், யாருடைய தூண்டு தலின் பேரில் பாஸ்டன் நகரில் தாக்குதல் நடத் தினார்கள்? என காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். வாட்டர் டவுன் பகுதி யில் உள்ள வீடுகளில் வெள்ளை தொப்பி நபர் தங்கியிருக்கக்கூடும் என சந்தேகிக்கும் காவல் துறையினர் வீடுவீடாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ரஷ்யாவைச் சேர்ந்த இவர்களக்கு சர்வதேச தீவிரவாத இயக்கங்களு டன் நெருங்கியத் தொடர்பு உள்ளதாக காவல்துறை யினர் கருதுகின்றனர். சுட்டுக் கொல்லப் பட்ட கருப்பு தொப்பி ஆசாமியின் உடலில் வெடிகுண்டு கட்டப்பட் டிருந்ததாக பெயர் குறிப் பிட விரும்பாத காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 16, 2013

இந்தியா உள்பட அரபு நாடுகளில் நில நடுக்கம்!


 ஈரான்-பாகிஸ்தான் எல்லையில் இன்று மிக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 7.8 புள்ளிகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் டெல்லி, குர்காவ்ன் உள்ளிட்ட இந்தியாவின் வட பகுதிகளும், பாகிஸ்தானும், வளைகுடா நாடுகளும் குலுங்கின. 



இன்று மாலை 4.14 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் அளவு 8 ரிக்டர் புள்ளிகளாக இருந்ததாக அமெரிக்க நிலவியல் மையம் அறிவித்துள்ளது. அதே நேரத்தில் இது 7.6 முதல் 7.8 புள்ளிகளாக இருந்ததாக ஈரான் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஈரானில் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது. 40 பேர் வரை பலியாகிவிட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் பலி எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இந்தியாவில் இந்த நிலநடுக்கம் டெல்லி, குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா, ஜம்மு-காஷ்மீர், உத்தரப் பிரதேசம், சண்டீகர் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் உணரப்பட்டது. இங்கு வீடுகள், கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர். 

கராச்சி, ராவல்பிண்டி, குவெட்டா, இஸ்லாமாபாத்... அதே போல பாகிஸ்தானின் கராச்சி, ராவல்பிண்டி, குவெட்டா, இஸ்லாமாபாத், ஹைதராபாத் ஆகிய பகுதிகளிலும் நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. அதே போல ஆப்கானிஸ்தானின் காண்டஹார் பகுதியும் இந்த நிலநடுக்கத்தால் அதிர்ந்தது. 

இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் வளைகுடா நாடுகளிலும் உணரப்பட்டது. அபுதாபி, துபை, ஷார்ஜா, உள்ளிட்ட‌ அமீர‌க‌த்தின் ப‌ல்வேறு ப‌குதிக‌ளில் நில‌ந‌டுக்க‌ம் உண‌ர‌ப்ப‌ட்ட‌து. அமீர‌க‌த்தின் ப‌ல்வேறு ப‌குதிக‌ளில் வ‌சித்து வ‌ரும் ம‌க்க‌ள் த‌ங்க‌ள் க‌ட்டிட‌த்தை விட்டு தெருக்க‌ளில் காத்திருந்த‌ன‌ர். அரைம‌ணி நேர‌ம் க‌ழித்து த‌ங்க‌ள‌து

முஸ்லிம்களுக்கு ரிசர்வு தொகுதி வேண்டும் TNTJ மாநிலப் பொதுக்குழு

2013 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று குடந்தை மஹாமஹம் திருமண மஹாலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 14 வது மாநிலப் பொதுக்குழு நடைபெற்றது. இதில் மாநிலத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. மேலும் மார்க்க மற்றும் சமுதாயப் பணிகளில் சிறப்பாக செயலாற்றிய மாவட்ட கிளைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. பொதுக்குழு நிகழ்வுகள் பற்றிய விரிவான தகவல் அறிய புத்துணர்வூட்டிய டிஎன்டிஜே பொதுக்குழு!


பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
முஸ்லி ம்களின் ஜீவாதார கோரிக்கை
1.    கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது முஸ்லி ம்களுக்கு வழங்கப்பட்ட 3.5 தனி இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தித் தருவேன் என்று ஜெயலலி தா வாக்களித்தார். இரண்டாண்டுகள் கடந்த பின்னரும் இது குறித்து அவர் அசாத்திய மவுனம் சாதித்து வருகிறார். கொடுத்த வாக்கை நிறைவேற்றும் வகையில் முஸ்லி ம்களுக்கு 7 சதவிகித இட ஒதுக்கீட்டை அளிக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு வற்புறுத்துகிறது.
2.    அவ்வாறு அதிகப்படுத்தித் தந்தால் வரும் நாடாளுமன்றத் தேர்தலி ல் முஸ்லி ம்களின் வாக்குகளைச் சிந்தாமல் சிதறாமல் அதிமுகவுக்கு பெற்றுத் தர தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அயராது உழைக்கும் என்று இப்பொதுக்குழு உறுதியளிக்கின்றது.
3.    நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அவர்கள் முஸ்லி ம்களுக்கு பத்து சதவிகிதம் தனியாக இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று காரண காரியங்களுடன் பரிந்துரை செய்திருந்தார். மேலும் சென்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது முஸ்லி ம்களுக்கு தனி இட ஒதுக்கீடு தருவதாக காங்கிரஸ் வாக்களித்தது. ஆனால் வாக்குறுதியை நிறைவேற்றாமல் முஸ்லி ம்களின் கோரிக்கையை அலட்சியம் செய்யும் மத்திய அரசை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அவர்களின் பரிந்துரை அடிப்படையில் முஸ்லி ம்களுக்கு தனியாக பத்து சத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மத்திய அரசை இப்பொதுக்குழு வற்புறுத்துகிறது.
4.    முஸ்லி ம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்காமல் கிறித்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், முஸ்லி ம்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களுக்கு 4.5 சத இட ஒதுக்கீடு என்று கூறி வஞ்சகமாக ஏமாற்றும் மத்திய அரசின் துரோகத்தையும் இப்பொதுக்குழு கண்டிக்கிறது.,
5.    இந்த இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தால் முன்னேறிய சமுதாயங்களான பார்சிகள், சீக்கியர்கள், மற்றும் கிறித்துவர்கள் தான் பயனடைவார்கள். முஸ்லி ம்கள் இதனால் பயனடைய மட்டார்கள் என்று இப்பொதுக்குழு கருதுகிறது.
6.    முஸ்லி ம்களுக்கு 6 சதவிகிதம் தனி இட ஒதுக்கீடு அளிப்பதாக புதுவை சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தவ்ஹீத் ஜமாஅத் பல்வேறு போர்ராட்டங்கள் நட்த்திய பின் புதுவை மாநிலத்தில் ஒரு பகுதியில் மட்டும் இரண்டு சதவிகித இட ஒதுக்கீடு அளிப்பதாகவும் இன்னொரு பகுதியில் அறவே இட ஒதுக்கீடு இல்லை எனவும் அறிவித்தது. ஒட்டு மொத்த புதுவையில் ஒரு சதவிகிதம் ஆகிறது.  புதுவை அரசின் இந்த துரோகத்தை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. புதுவை சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் முஸ்லி ம்களுக்கு ஆறு சதவிகிதம் தனி இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என இப்பொதுக்குழு புதுவை அரசை வலி யுறுத்துகிறது.
மாபெரும் அறப் பேராட்டம்
7.    தமிழகத்தில் முஸ்லி ம்களின் இடஒதுக்கீட்டை 3.5 சதவிகிதத்திலி ருந்து ஏழு சதமாக உயர்த்த மாநில அரசை வலி யுறுத்தியும் இந்திய அளவில் முஸ்லி ம்களுக்கு தனியாக பத்து சதவிகிதம் இட ஒதுக்கீட்டை சட்டாமாக்க மத்திய அரசை வலி யுறுத்தியும் வரும் அக்டோபர் 8 ஆம் தேதி அன்று மாபெரும் அறப்போராட்டம் நடத்துவது என்று இப்பொதுக்குழு அறிவிக்கிறது.
அப்சல் குரு தூக்குக்குக் கண்டனம்
8.    நாடாளுமன்றத் தாக்குதலி ல் தொடர்பு இல்லாத அப்சல் குருவுக்கு தேசத்தின் கூட்டு மனசாட்சியை திருப்திப்படுத்துவதற்காக தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது நீதிபதிகள் சட்டப்படி இந்த வழக்கை அணுகவில்லை என்பதற்கு ஆதாரமாக உள்ளது. இந்தியாவின் நீதித்துறை மீது உலகமே காரித்துப்பும் வகையில் இதுபோல் சட்டத்துக்கு அப்பாற்பட்டு தங்கள் இஷ்டத்துக்கு நீதிபதிகள் தீர்ப்பளிப்பதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். அதற்கேற்ப தக்க சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று மத்திய அரசை இப்பொதுக்குழு வற்புறுத்துகிறது.
9.    அப்சல் குருவுக்கு முன்னால் தூக்குத் தண்டனை தீர்ப்புப் பெற்ற பலரது மனுக்கள் நிலுவையில் இருக்க வரிசைக்கு மாற்றமாக அப்சல் குருவின் மனுவை மட்டும் அவசரமாக நிராகரித்த குடியரசுத் தலைவரின் செயலையும், இதற்குக் காரணமான மத்திய அரசையும் இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
10.    கருணை மனு நிராகரிக்கப்பட்ட பலர் உடனே தூக்கில் போடப்படாமல் நீதிமன்றத்தில் மீண்டும் முறையிட்டு தண்டனையில் இருந்து தப்பிக்க மத்திய அரசு உதவி வருகிறது. ஆனால் அப்சல் குருவுக்கு மட்டும் கருணை மனு நிராகரிக்கப்பட்ட உடன் இரகசியமாக தூக்குத் தண்டனையை நிறைவேற்றிய மத்திய அரசின் அயோக்கியத்தனத்தையும்

ஏப்ரல் 12, 2013

பாதுகாக்கப்படும ஃபிர்அவ்னின் உடல்! சிந்திக்கும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி! ! ! !

பாதுகாக்கப்படும ஃபிர்அவ்னின் உடல்! சிந்திக்கும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி! !

இதனை முழுமையாக படிக்கவும். படித்த பின் இதனை மற்றவர்களுக்கும் அதிகம் தெரியப்படுத்தவும் முடிந்தால் ஷேர் பன்னவூம். . . . .

1898 ல் எகிப்தில் கண்டெடுக்கப்பட்ட அதிசய மம்மி 3000 ஆண்டு பழமை மிக்க அன்றைய எகிப்தை ஆண்டு வந்த இரண்டாம் ரம்சீஸ் என்ற ஃபிர்அவ்னின் உடல் என்று அடையாளம் காணப்பட்டது. தொல் பொருள் ஆராய்ச்சிக்கு தனி முக்கியத்துவம் அளித்து வந்த ஃப்ரான்சு நாடு அந்த உடலை ஆராய்ச்சி செய்வதற்காக எகிப்திடம் கேட்டு வாங்கியது. மருத்துவ அறிவியல் துறை ஆய்வாளரான டாக்டர் மோரிஸ் புகைல் தலைமையிலான குழு அவ்வுடலை ஆய்வுக்கு உட்படுத்தியது. உடலில் படிந்திருந்த உப்பின் துணிக்கைகளை வைத்து இது கடலில் மூழ்கி இறந்தது என்ற முடிவுக்கு வந்தனர். ஆய்வின் முடிவில் அவ்வுடல் மூவாயிரம் ஆண்டு பழமையான எகிப்தை ஆண்ட மன்னனின் உடல் என்று கண்டறியப்பட்டது ! அந்நேரம் பாதுகாக்கப்படுவதாக இறைவன் வாக்களித்திருக்கும் ஃபிர்அவ்னின் உடல் பற்றிய பேச்சு சிந்தனையாளர்கள் மத்தியில் எழ ஆரம்பித்தது. இது பற்றிய செய்தி மோரிஸ் புகையின் கவனத்துக்கும் வந்தது.

 1898 ல் கண்டெடுக்கப்பட்ட மம்மியைக் குறித்து 1400 வருடங்களுக்கு முன்பே கூறப்பட்டதா? இது எப்படி சாத்தியமாகும்? என்று சிந்தனை செய்தார் மோரிஸ் புகைல். சிந்தனையில் மோரிஸ் புகைல்! திருக்குர்ஆன் கடலில் மூழ்கி இறந்த பின்னர் ஃபிர்அவ்னின் உடல் பாதுகாக்கப்படும் என்று பிரகடனம் செய்கிறது. தோரா மற்றும் பைபிளின் பழய ஏற்பாடும் மோசேயின் காலத்தில் இஸ்ரவேலர்களைக் கொடுமைப் படுத்திய பர்வோன் மன்னனைப் பற்றியும் இறுதியில் அவன் கடலில் மூழ்கி இறந்தான் என்றும் கூறுகிறது. இதோ என் முன்னாலிருப்பது அக்காலத்தில் இறந்து விட்ட உடல் அல்லவா? என் ஆராய்ச்சியின் மூலம் நான் அறிந்திருக்கும் முடிவை 1400 ஆண்டுகளுக்கு முன் முஹம்மது (ஸல்) எவ்வாறு அறிந்து கொண்டார்கள்? பைபிளில் தேடினார்மோரிஸ் புகைல். பர்வோன் மன்னனின் முடிவைப் பற்றி யாத்திராகமம் இவ்வாறு கூறுகிறது. ஜலம் திரும்பிவந்து, இரதங்களையும் குதிரைவீரரையும் அவர்கள் பின்னாக சமுத்திரத்தில்பிரவேசித்திருந்த பார்வோனுடைய இராணுவம் அனைத்தையும் மூடிக்கொண்டது; அவர்களில் ஒருவனாகிலும் தப்பவில்லை. (யாத்திராகமம் 14 :28) இவ்வுடல் பாதுகாக்கப்படும் என்பதற்கான எந்தக் குறிப்பையும் பைபிள் வழங்கவில்லை. 

ஆய்வுக்குப் பின்னர் பர்வோன் மன்னனின் உடல் விலை உயர்ந்த கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டு தனி மரியாதையுடன் எகிப்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் மோரிஸ் புகைல் சிந்தனையில் ஆழந்தார்! இவ்வுடல் பாதுகாக்கப்படும  என்றகுர்ஆனின் செய்தி அவரை சிந்திக்கத் தூண்டியது. இதே வேளையில் தான் சவூதி அரேபியாவில் மருத்துவ அறிவியல் சம்மந்தமான ஒரு மாநாடு நடை பெற்றது. மோரிஸ் புகைல் அதில் கலந்து கொண்ட போது தான் கண்டு பிடித்த உண்மையையும் தண்ணீரில் மூழ்கி இறந்த பின்னர் பாதுகாக்கப்பட்ட உடலைக் குறித்தும் இஸ்லாமிய அறிஞர்களிடம் கலந்துரையாடினார .அப்போது அங்கிருந்த அறிஞர்களில்ஒருவர் திருக்குர்ஆனைத் திறந்துகடலைக் கடந்து செல்லும் இஸ்ரவேலர்களைப் பின் தொடர்ந்து விரட்டிச் சென்ற ஃபிர்அவ்ன் மன்னன் மூழ்கடிக்கப்பட் டதையும் அவனது உடல் பின்வரும் தலைமுறைக்கு ஓர் அத்தாட்சி என்ற நிலையில் பாதுகாக்கப்படும  என்றஇறைவனின் பிரகடனத்தை வாசித்துக்காட்டினார்.

 அவ்வசனம் எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உன் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள "(அல்-குர்ஆன் 10: 92) இவ்வசனம் மோரிஸ் புகைல் அவர்களிடம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அங்கு கூடியிருந்தவார் களுக்கு முன்னால் அவர் அறிக்கையிட்டார் ! அஷ்ஹது அன் லாஇலாஹ இல்லல்லாஹ்! வ அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்! கெய்ரோ அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்ட மம்மிகளில் ஃபிர்அவ்னின் உடல் மட்டும் வித்தியாசமானதாக உள்ளது. மற்றவை ரசாயன

ஏப்ரல் 11, 2013

சவூதியில் வேலைபுரிபவர்களின் கவனத்திற்கு!

சவூதி உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள விதிமுறை மீறல், அபராதங்களின் பட்டியல் (08.04.2013 திகதிப்படி) வெளியிட்டுள்ளது.

 1. இக்காமா காலாவதி ஆகும் திகதிக்கு (எக்ஸ்பைரி திகதி) 3 நாட்கள் முன்னதாக, இக்காமாவை புதுப்பிக்க (ரெனிவ் செய்ய) சமர்ப்பிக்க வேண்டும். மீறினால், இக்காமா கட்டணத்தின் இருமடங்கு செலுத்த வேண்டும்

 2. அரசு அதிகாரிகள் இக்காமா-வை காண்பிக்கச் சொல்லி கேட்கும்போது, தகுந்த காரணங்கள் அன்றியே அல்லாமல், காண்பிக்க வேண்டும். மீறினால், முதல் முறை – SR 1000 அபராதம்; இரண்டாம் முறை – SR 2000 அபராதம்; மூன்றாம் முறை – SR 3000 அபராதம்

 3. எக்ஸிட்-ரீஎன்ட்ரி விசாவையோ அல்லது ஃபைனல் எக்ஸிட் விசாவையோ பயன்படுத்தாமல் இருந்தால், முறையாக கேன்ஸல் செய்ய வேண்டும். மீறினால், முதல் முறை – SR 1000 அபராதம்; இரண்டாம் முறை – SR 2000 அபராதம்; மூன்றாம் முறை – SR 3000 அபராதம்

4. இக்காமா தொலைந்து விட்டால், தொலைந்த 24 மணி நேரத்திற்குள் புகார் செய்ய வேண்டும். மீறினால், முதல் முறை – SR 1000 அபராதம்; இரண்டாம் முறை – SR 2000 அபராதம்; மூன்றாம் முறை – SR 3000 அபராதம்

 5. ஃபேமிலி விசாவில் குடும்பத்தோடு வசிப்பவர்களின் மனைவியோ, பிள்ளைகளோ சவூதியில் பணி புரிய அனுமதி இல்லை. மீறினால், முதல் முறை – SR 1000 அபராதம்; இரண்டாம் முறை – SR 2000 அபராதம்; மூன்றாம் முறை – SR 3000 அபராதம் மற்றும் யார் இக்காமாவில் ஃபேமிலி விசா உள்ளதோ அவர் சவூதியில் இருந்து எக்ஸிட்டில் அனுப்பப்படுவார்.

 6. விசிட், பிஸினஸ் அல்லது உம்ரா/ஹஜ் விசாவில் வருபவர்கள், அவர்களது விசா தேதி காலாவதி ஆகும் முன், சவூதியை விட்டு வெளியேறி விட வேண்டும். மேலும், உம்ரா/ஹஜ் விசாவில் வந்தவர்கள், மக்கா, ஜெத்தா மற்றும் மதீனாவைத் தவிர வேறெந்த நகரங்களும் செல்லக்கூடாது. மீறினால், சிறை மற்றும் அபராதம். மேலும் சவூதியை விட்டு வெளியேற்றப்படுவார். மேலும், யார் இக்காமாவில் விசிட் விசா எடுக்கப்பட்டதோ அவரும் சவூதியில் இருந்து எக்ஸிட்டில்

கடலூர் மாவட்டத்தில் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிக்கலாம்!

கடலூர் மாவட்டத்தில் புதிய ரேஷன் கார்டு கேட்டு அந்தந்த தாலுக்கா அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் எனவும், தீவிர விசாரணைக்கு பின்னரே வழங்க வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது. ஒருவர் இந்திய நாட்டின் குடிமகன் என்பதற்கான பல்வேறு அடையாளங்களில் ஒன்றுதான் ரேஷன் கார்டு. இது தவிர அரசு நலத்திட்ட உதவிகள் பெறவும், பல்வேறு அத்தியாவசிய பயன்பாட்டுக்கும் ரேஷன் கார்டு முக்கிய காரணியாக இருக்கிறது. அதனால்தான் திருமணம் முடிந்ததும் புதுமண தம்பதிகள் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து விடுகிறார்கள்.

 ஆனால் விண்ணப்பித்த 45 நாட்களுக்குள் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தாலும், ஒரு ஆண்டு ஆகியும் ரேஷன் கார்டு கிடைக்காமல் தவிப்பவர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்கள் தினமும் வீடுகளில் இருந்து தாலுக்கா அலுவலகங்களுக்கு பொடி நடையாக நடந்து அலைக்கழிப்பதுதான் மிச்சம். ஊழியர்களும் நாளை வரும், அடுத்த மாதம் வந்துவிடும் என்று அவர்களை சமாதானம் செய்து அனுப்பி விடுகிறார்கள். இதுதான் தற்போது நடந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளை மேலும் ஓராண்டுக்கு (2013) அரசு கால நீட்டிப்பு செய்து, இதற்காக உள்தாள் இணைப்பு வழங்கும் பணியை ஜனவரி மாதம் தொடங்கி பிப்ரவரி மாத இறுதியில் முடிக்க உத்தரவிட்டது. இந்த பணியை கவனிக்க வேண்டி இருந்ததால் புதிய ரேஷன் கார்டுக்கான விண்ணப்பம் பெறுவது, பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையே உள்தாள் இணைப்பு வழங்கும் பணி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதால் புதிய ரேஷன் கார்டுக்கான விண்ணப்பங்களை பெற அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் புதிய ரேஷன் கார்டு கேட்டு பொதுமக்கள் அந்தந்த தாலுக்கா அலுவலகங்களில் உள்ள குடிமைப்பொருள் தாசில்தாரிடம் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது கடலூர் மாவட்டம் முழுவதிலும் மொத்தம் 6 லட்சத்து 75 ஆயிரத்து 950 ரேஷன் கார்டுகள் உள்ளன. இதில் அரிசி கார்டுகள் மட்டும் 6 லட்சத்து 57 ஆயிரம் ஆகும். இதில் போலி ரேஷன் கார்டுகளும் உள்ளன. அவற்றை வீடு தோறும் சென்று விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகிறோம். தற்போது புதிய ரேஷன் கார்டு கேட்பவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெறலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் போலி ரேஷன் கார்டுகள் புழக்கத்துக்கு வந்து விடக்கூடாது, அப்படி வந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே தீவிர விசாரணைக்கு பின்னரே புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும். அதன்படி விண்ணப்பித்த நபரின் வீட்டுக்கு நேரடியாக

ஏப்ரல் 07, 2013

சவூதியில் சட்டவிரோதமாக பணிபுரியும் வெளிநாட்டவருக்கு 3 மாத அவகாசம்!

ரியாத்: முரையான ஆவணங்கள் இன்றி சவூதியில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் உரிய ஆவணங்களைப் பெற 3 மாத கால அவகாசம் அளித்து சவூதி மன்னர் அப்துல்லா உத்தரவிட்டுள்ளார். சவூதியில் இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள் என வெளிநாட்டவர்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் சவூதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஏராளமானோர் வேலையின்றி உள்ளனர். இதையடுத்து அனைத்து நிறுவனங்களிலும் சவூதி மக்களுக்கு வேலையில் முன்னுரிமை வழங்கும் சட்டம் அமலுக்கு வருகிறது. இந்நிலையில் சவூதியில் விதிகளை மீறி தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் கண்டறியப்பட்டு நாடு கடத்தப்பட்டு வருகின்றனர்.

கடந்த சில மாதங்களில் மட்டும் முறையான ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த 2 லட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் சவூதியில் இருந்து நாடுகடத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தான் முறையான ஆவணங்கள் இன்றி சவூதியில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் 3 மாதத்திற்குள் உரிய ஆவணங்களைப் பெற கால அவகாசம் அளிக்கமாறு அந்நாட்டு மன்னர் அப்துல்லா உள்துறை அமைச்சகம் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் ஆகியவற்றுக்கு உத்தரவிட்டுள்ளார். சவூதி சட்டப்படி வெளிநாட்டவர்களுக்கு அவர்களின் முதலாளி தான் ஸ்பான்சராக இருக்க வேண்டும். பல வெளிநாட்டவர்கள் வேலையை மாற்றும்போது தங்கள் முகவரி குறித்த ஆவணங்களில் மாற்றம் செய்வதில்லை. தற்போது அரசின் கெடுபிடி அதிகரித்துள்ளதால்

ஏப்ரல் 04, 2013

காட்டுமன்னார்கோவிலில் தானிய சேமிப்பு கிடங்கு கட்டும் பணி தீவிரம்

காட்டுமன்னார்கோவிலில் பெரும்பாலானோர் விவசாயிகள். விவசாயத்திற்கே இங்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. விவசாயிகள் சாகுபடி செய்த பயிர்களை விற்பனை செய்வதற்காக கடந்த 1973ம் ஆண்டு கடலூர் மாவட்ட ஒழுங்குமுறை விற்பனை கூடம் தொடங்கப்பட்டது.

இதில் அறுவடை செய்யப்பட்ட தானிய மூட்டைகளை விவசாயிகள் அரசு நிர்ணயித்த விலையில் விற்பனை செய்வர். மேலும் தானிய மூட்டைகளை இங்குள்ள சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பாக வைத்து விலை அதிகரிக்கும் காலங்களில் விற்பனை செய்வர். இதற்கென விவசாயிகளிடமிருந்து குறைந்தளவு வாடகை பெறப்படும். மேலும் விவசாயிகள் அறுவடை செய்யப்பட்ட தானியங்களை பாதுகாப்பாக வைத்து அதில் தங்களுக்கு தேவையான தொகையை பெற்று கொள்வர். விற்பனை செய்யப்படும் காலங்களில் அரசால் கடன் அளிக்கப்பட்ட தொகைக்கு வட்டி செலுத்தி மீதம் உள்ள தொகையை பெற்று செல்வர். இவ்வாறு விவசாயிகளின் தானியங்களை பாதுகாக்கும் சேமிப்பு கிடங்குகள் சேதமடைந்து உள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு சுமார் ரூ. ஒரு கோடி நிதியில் புதிதாக சேமிப்பு கிடங்கு கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

-Dinakaran

மியான்மரில் முஸ்லிம் இனப்படுகொலை உலக முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்புஏப்ரல் 14-ல் கூடுகிறது !

மியான்மர் என்னும் பர்மா வில் முஸ்லிம்களுக்குஎதிரான இனப் படுகொலை தொடர்ந்து நடந்து வருவதுகுறித்து உலக முஸ்லிம் நாடுகளின் கூட்ட மைப்பு(ஓ.ஐ.சி.) மிகுந்த கவலை தெரிவித்திருக்கிறது.

 கடந்த பத்து நாட்களில் 43 முஸ்லிம்கள் படுகொலைசெய்யப்பட்டுள்ளனர் 1300 வீடுகளும், கட்டடங்களும் தீக்கிரையாகியுள்ளன. பல்லாயிரக்கணக்கில் முஸ்லிம்அகதிகளாகி பாதுகாப்புத்தேடி அலைந்துகொண்டிருக்கிறார்கள். புத்தமத வெறியர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக இனப் படுகொலையைத் தூண்டி விட்டு வன்முறையைபரப்பி வருகிறார்கள் என்றும், அவர்கள் எல்லோரும்வெளியூர்வாசிகளாக உள்ளனர் என்றும், சிறு நகரங்களிலும், கிராமங்களிலும் அண்ணன் -தம்பிகளாக வாழ்ந்து வரும் புத்தர்களையும்,முஸ்லிம்களையும் இனம் பிரித்து இந்த முஸ்லிம் விரோதவெறித்தனத்தை கட்டவிழ்த்து விடுகிறார்கள் என்றும்,உள்ளூர் புத்தர்கள் கூறி வேதனைப்படு கிறார்கள்.

 முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் இந்த இனப் படுகொலையை பற்றி ஆராயவும், இதுபற்றிய அனைத்து நடவடிக் கைகளையும்

பலாத்காரம் செய்தால் மரண தண்டனை அதிரடி சட்டம் அமலுக்கு வந்தது !

நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார். ஆசிட் வீச்சு குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை அளிக்க, புதிய சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவியை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது. தீவிர சிகிச்சை பலன் அளிக்காமல், 2 வாரத்தில் அந்த பெண் பரிதாபமாக இறந்தார். இந்த பலாத்கார சம்பவத்தால் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இந்த குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்கும் வகையில் சட்டத்தை திருத்தும்படி பல்வேறு அரசியல் கட்சிகளும், பெண்கள் அமைப்புகளும் போர்க்கொடி தூக்கின. இதைத் தொடர்ந்து, பாலியல் பலாத்கார குற்றத்துக்கான தண்டனையை கடுமையாக்கும் வகையில், ‘குற்றவியல் சட்ட (திருத்தம்) மசோதா , 2013ஐ நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது. இதற்கு கடந்த மார்ச் 19ம் தேதி மக்களவையும், மார்ச் 21ம் தேதி மாநிலங்களவையும் ஒப்புதல் அளித்தன. பின்னர், ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார்.

இதனால், இந்த மசோதா சட்டமானது. இனிமேல் இந்த புதிய சட்டம், ‘குற்றவியல் சட்டம் ( திருத்தம்) , 2013’ என்று அழைக்கப்படும். இதில், இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம், பாலியல் குற்றங்களில் இருந்து சிறுவர்களை காக்கும் சட்டம் ஆகியவை திருத்தம் செய்யப்பட்டுள்ளன. மேலும், சம்மத பாலியல் உறவுக்கான வயது வரம்பு 18 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, பாலியல் பலாத்காரத்துக்கு 20 ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறை தண்டனை அளிக்கப்படும். அல்லது குற்றத்தின் கொடுமைக்கு ஏற்ப சாகும் வரை சிறை தண்டனையும் வழங்கப்படும். மேலும், இச்சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பாக பாலியல் பலாத்கார குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களுக்கு மரண தண்டனையும் அளிக்கலாம். பெண்களின் மீது ஆசிட் வீசுவது கடுமையான குற்றமாக கருதப்பட்டு, குற்றவாளிகளுக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், எதிரிகளால் ஆபத்து ஏற்படும் பட்சத்தில், தற்காப்புக்காக கொலை செய்யும் உரிமையும் பாதிக்கப்படுபவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆசிட் வீச்சு அல்லது பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எல்லா மருத்துவமனைகளும் உடனடியாக முதலுதவி அல்லது சிகிச்சையை இலவசமாக அளிக்க வேண்டும். இதை செய்யத் தவறும் மருத்துவமனைகளுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்படும். பாலியல் பலாத்கார குற்றத்தில் ஈடுபட்டவர்கள் போலீஸ் அதிகாரி, அரசு ஊழியர், பாதுகாப்பு படை வீரர்கள், அலுவலக நிர்வாகிகள் அல்லது மருத்துவமனை ஊழியர்களாக இருந்தால், அவர்களுக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டுகளும், அதிகப்பட்சமாக சாகும் வரை சிறை தண்டனையும் கிடைக்கும். பலாத்காரத்தால் பாதிக்கப்படும் பெண்கள் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ மன அளவிலோ, உடல் அளவிலோ செயல் இழந்தால், மொழி பெயர்ப்பாளர்கள் அல்லது சிறப்பு நிபுணர்களின் உதவி மூலம் அவர்களின் வாக்குமூலத்தை நீதிபதி பதிவு செய்யும் வகையில், இந்திய சாட்சிகள் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதை வீடியோ மூலம் பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

 குற்றம் என்ன? தண்டனை எவ்வளவு 

ஆசிட் வீச்சு, குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் அதிகபட்சம் ஆயுள் சிறை மற்றும் அபராதம் பாலியல் தொல்லை, 3 ஆண்டு வரை கடுங்காவல்.

பெண்ணை நிர்வாணமாக்க முயற்சி , 3 ஆண்டு முதல் 7 ஆண்டு சிறை. * பெண்ணின் அந்தரங்கத்தை போட்டோ எடுத்து வெளியிடுதல் , முதல் முறை செய்த குற்றத்துக்கு குறைந்தது

ஏப்ரல் 02, 2013

என் குடும்ப அட்டைகளின் நிலை என்ன?

உள்தாள் இணைக்காத குடும்ப அட்டைகள் செல்லாது என்ற அரசின் அறிவிப்பால், நியாய விலைக் கடைகளில் பொருள்கள் வாங்காத என் குடும்ப அட்டை தாரர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். அரசு இது குறித்து முறையான அறிவிப்பு வெளியிட வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தினர். என் வகை குடும்ப அட்டைதாரர்களுக்கு எந்தப் பொருளும் வழங் கப்படமாட்டாது. இந்த அட்டை, ஓட்டுநர் உரி மம், பத்திரப்பதிவு உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை சார்ந்த பணி களுக்கு அடையாள அட்டையாக மட்டுமே பயன்பட்டு வந்தது. தமிழகம் முழுவதும் 98.5 சதவீதம் பேர் குடும்ப அட்டைகளை புதுப்பித்துள்ளனர்.

இன்னும் 1.5 சதவீதம் பேர் புதுப்பிக்கவில்லை. அதாவது, மாநிலம் முழுவதும் உள்ள ஒரு கோடியே 97 லட்சம் குடும்ப அட்டைதாரர் களில், 2 லட்சத்து 95 ஆயிரத்து 500 பேர் உள்தாள் இணைப்பு பெறவில்லை. கடந்த 15 ஆம் தேதி வரை உள் தாள் இணைக்காத அட் டைகளை போலிகள் என அறிவித்து, நீக்கம் செய்ய வழங்கல் துறை முடிவு செய்துள்ளது. இந்த அரசு அறிவிபபால், என் அட்டை தாரர்கள் குழப்பமடைந் துள்ளனர். நியாய விலைக் கடைகளின் என் குடும்ப அட்டைதாரர் கள் எந்தப் பொருள் களும் வாங்குவதில்லை என்பதால், இவர்கள் உள்தாள் இணைக்க வில்லை. இதனால் இவர்களது குடும்ப அட்டைகளும் செல்லாததாகி விடுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மானாமதுரையைச் சேர்ந்த முத்துமாடன் கூறுகையில், அரசுப் பணியில் இருந்து ஓய்வுபெற்ற எனக்கு என் வகை குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த குடும்ப அட்டைக்கு

பாபரி மஸ்ஜித் வழக்கு தாமதபடுத்தும் மத்திய அரசு-சுப்ரீம் கோர்ட் நோட்டிஸ்

பாபர் மசூதி இடிப்பு வழக்கு தொடர்பான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடந்தது. இந்த வழக்கில் அத்வானி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அப்பீல் செய்வதில் தாமதம் ஏன் ஏற்படுகிறது என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியது. பிரமாண பத்திரம் தாக்கல் செய்வதை தாமதப்படுத்துவது ஏன் என்பதை விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அத்வானிக்கு எதிராக அப்பீல் செய்ய காலதாமதம் ஏன் என்றும் சி.பி.ஐ.க்கு சுப்ரீம்கோர்ட்டு கேள்வி எழுப்பியது.