Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 30, 2011

முல்லைப் பெரியாறு அணை !!!

மலையாள திரைப்பட இயக்குநர் ஷோகன் ராய் என்பவர் அணை 999 (DAM-999) என்று ஆங்கிலத்தில் ஒரு திரைப்படம் எடுத்துள்ளார். அதை தமிழிலும் மொழி மாற்றம் செய்துள்ளனர். அப்படத்தை வெளிநாடுகளில் வாழும் மலையாளிகளும், கேரள அரசும் பெரும் நிதியுதவி அளித்து எடுத்துள்ளார்கள்.

முல்லைப்பெரியாறு அணை 999 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டிற்கு உரியது என்று போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தைக் குறிக்கும் வகையில் அணை 999(டேம் 999) என்ற தலைப்பில் அப்படம் எடுக்கப்பட்டுளளது. முல்லைப் பெரியாறு அணை உடைந்து மக்களெல்லாம் இலட்சக்கணக்கில் மிதந்து அழிந்து, உடைமைகளும், விலங்குகளும் மனிதக் கூட்டமும, ஊர்களும் அழிவதைப் போல சித்தரித்து படமெடுத்துள்ளார்கள் என்று செய்திகள் வெளிவந்துள்ளன.

முல்லைப்பெரியாறு அணை உடைந்து மக்கள் அடித்துச் செல்வதை போல சில ஆண்டுகளுக்கு முன் கேரள சி.பி.எம். முதல்வர் அச்சுதானந்தன் ஒரு பரப்புரை படம் எடுத்து கேரள மக்களிடையே பீதியைப் பரப்பி முல்லைப்பெரியாறு அணைக்கும் தமிழ் இனத்திற்கும் எதிரான இனப்பகையை தூண்டிவிட்டார். உச்ச நீதிமன்றம் 2006ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அளித்த தீர்ப்பில், வல்லுநர் குழு பார்வையிட்டு அளித்த அறிக்கையின்படி அணை வலுவாக உள்ளது எனக் கூறியுள்ளது. முதல் கட்டமாக 142 அடி தண்ணீர் தேக்கலாம் என்றும், சிற்றணையில் சிறு செப்பனிடும் பணிகள் செய்த பின் முழு அளவான 152 அடி தேக்கலாம் என்றும் அத்தீர்ப்பில் கூறியுள்ளது.

ஆனால் இத்தீர்ப்புக்கு எதிராக இப்பொழுதுள்ள அணையை உடைக்க வேண்டும் என்பது தான் அங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரசு கட்சி உள்ளிட்ட மலையாள இனவெறிக் கட்சிகளின் திட்டம். அந்த நோக்கத்தை சாதிக்கும் வகையில் இப்பொழுது இந்த அணை 999 என்ற படம் எடுக்கப்பட்டுள்ளது.

முல்லைப்பெரியாறு அணை குறித்த வழக்கு உச்ச நீதிமன்ற விசாரணையில் உள்ளது. உச்ச நீதிமன்ற விசாரணையில் உள்ள ஒரு சிக்கல் பற்றி ஒருபக்கச் சார்பாக திரைப்படம் எடுத்து வெளியிடுவது நீதிமன்ற அவமதிப்பாகும். இதற்கு தணிக்கைச் சான்று கொடுத்தது மிகப்பெரிய தவறும், உள்நோக்கம் கொண்டதும் ஆகும். இரண்டாவதாக இனங்களுக்கிடையே பகைமையை மூட்டி விடும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள ஒரு படத்திற்கு தணிக்கைச் சான்று வழங்கியது சட்டவிரோதமாகும்
 பிரதமருக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா, மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.
    இரண்டு மாநில நலன்களை உள்ளடக்கிய முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், பதற்றத்தைத் தூண்டும் வகையில்
நடந்து கொள்ள வேண்டாம் என, கேரள அரசுக்கு அறிவுறுத்துமாறு, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.
முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அணை பாதுகாப்பாக இல்லை என்றும் புதிய அணை கட்டுவதைத் தவிர வேறு தீர்வு இல்லை என்றும், கேரள அரசு ஊடகங்களில் தவறான பிரச்சாரம் மேற்கொண்டு வருவதை அந்தக் கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளார்.
மாநில எல்லையில், தமிழக அரசு பேருந்துகள் தாக்கப்படுவதோடு, வன்முறை தூண்டி விடப்பட்டு, பதற்றத்தை அதிகரிக்கும் செயல்கள்

நடந்து வருவது, தமது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். தமிழகம் மிகுந்த கட்டுப்பாட்டோடு இருந்து வரும் நிலையில், பொது அமைதிக்கும், இயல்பு வாழ்க்கைக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் செயலில், சமூக விரோதிகள் ஈடுபடுவதைத் தடுத்து நிறுத்துமாறு கேரள அரசுக்கு அறிவுறுத்துமாறு பிரதமரை, முதலமைச்சர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார். முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது என்றும் புதிய அணைபோல் அது இயங்குவதையும் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தி கூறிக் கொள்வதாகப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். முல்லைப் பெரியாறு வழக்கு, உச்சநீதிமன்றம் மற்றும் அதிகாரம் அளிக்கப்பட்ட குழு முன்பு நிலுவையில் உள்ள நிலையில், புதிய அணை கட்ட வேண்டும் என்று கோருவதையும், இந்த விவகாரத்தை பெரிதாக்குவதையும் கைவிடுமாறு, கேரளா அரசுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, கடந்த 23 ஆம் தேதி கடிதம் எழுதி இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமரின் உடனடி பதிலுக்கு காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கேரளாவின் முயற்சிகளைக் தடுக்க பிரதமரிடம் நேரில் ஜெ. முறையிட வைகோ கோரிக்கை
கேரளாவில் புதிய அணை கட்டும் கேரளாவின் முயற்சிகளை முதல்வர் ஜெயலலிதா தடுத்து நிறுத்த வேண்டும். இதற்காக அவர் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து முறையிட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

நெல்லை வந்த வைகோ அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து அவர் பேசுகையில், கேரள அரசும், அங்குள்ள கட்சிகளும், படு தீவிரமாக புதிய அணைக்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் ஆதரவு திரட்டி வருகின்றனர்.

அணை விவகாரத்தில் முன்னாள் மற்றும் இன்னாள் கேரள முதல்வர்கள் இணைந்து செயல்படுகின்றனர். அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து குரல் கொடுக்கின்றன. அதேபோல இங்கும் நடக்க வேண்டும். புதிய அணை கட்டுவதில் அவர்கள் தீவிரமாக உள்ளனர்.கேரளா புதிய அணை கட்டவும் விடக் கூடாது, தற்போதையை அணையை இடிக்கவும் விடக் கூடாது என்றார் வைகோ.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...