Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 30, 2012

நரேந்திர மோடி இங்கிலாந்து வர தடை விதிக்கப்படுகிறது?

புதுதில்லி, ஏப்.30: மனித உரிமைகளை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் பிரிட்டனுக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில் புதிய சட்டம் இயற்றப்பட உள்ளது. இந்த சட்டத்தைப் பயன்படுத்தி குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை இங்கிலாந்துக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்க உள்ளதாக மனித உரிமை பிரசாரகர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து இங்கிலாந்தைச் சேர்ந்த தெற்குஆசிய ஒருமைப்பாட்டுக் குழுவின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், இதர நாடுகளில் மனித உரிமைகளை மீறியதாக குற்றம்சாட்டப்படுபவர்களை பிரிட்டன் கண்காணிப்பதை நாங்கள் ஆதரிக்கவில்லை. ஆனால் இதுபோன்ற சட்டம் இயற்றப்பட்டால் அதைப் பயன்படுத்தி நரேந்திர மோடி வருவதைத் தடுக்க வேண்டும். ஏனெனிஸ் குஜராத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டதில் நரேந்திர மோடிக்கு பங்கு உள்ளதாக பல்வேறு மனித உரிமைக் குழுக்களும், ஆம்னஸ்டி உள்ளிட்ட சுயேச்சை அமைப்புகளும் தெரிவித்துள்ளன எனக் குறிப்பிட்டார்.

2005-ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் நுழைய மோடிக்கு தடை விதிக்கப்பட்டுவரும் நிலையில் இங்கிலாந்திலும் அவர் நுழைய
தடைவிதிக்கப்படும் என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி தினமணி 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...