Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 02, 2012

ஈரான் மீது பொருளாதாரத் தடை!ஒபாமாவின் மிரட்டலுக்கு சீனா எதிர்ப்பு

தலைப்பைச் சேருங்கள்
பெய்ஜிங்: ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய்யை தொடர்ந்து இறக்குமதி செய்யும் நாடுகள் மீது பொருளாதாரத் தடை விதிக்க நேரிடும் என்ற அமெரிக்க அதிபர் ஒபாமாவின் முடிவுக்கு சீனா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. ஈரானுக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதற்காக அந்த நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது என்றும், தற்போது இறக்குமதி செய்யும் நாடுகள் அதை படிப்படியாக குறைக்க வேண்டும் என்றும் அமெரிக்கா கூறி வருகிறது.

இதை வருகிற ஜுன் மாதத்திற்குள் கடைபிடிக்காத நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்று கெடு விதித்து இருக்கிறது. இதை அமெரிக்க அதிபர் ஒபாமா உறுதிபடுத்தி சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டார். ஈரானில் இருந்து இந்தியா, சீனா, துருக்கி, தென்கொரியா உள்பட 12 நாடுகள் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கின்றன. ஒபாமாவின் இந்த பொருளாதார தடை திட்டத்திற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீன அதிகாரிகள் கூறுகையில், `இந்த விவகாரத்தில் மற்ற நாடுகள் மீது ஒருதலைப்பட்சமான முடிவுகளை எடுக்க அமெரிக்காவுக்கு எந்த அதிகாரமும்
கிடையாது' என்று கூறினர். இதே நேரத்தில் தென்கொரியா தனது தோழமை நாடான அமெரிக்காவின் முடிவை அனுசரித்து நடக்கும் என தெரிகிறது.

source:http://tamil.oneindia.in

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...