காட்டுமன்னார்கோவில் பகுதியில் திருட்டு மணல் அள்ளும் கும்பலால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் கொள்ளிடம் ஆறு செல்கிறது. கீழணையிலிருந்து வல்லம்படுகை வரை சுமார் 50 கிராமங்களுக்கு மேல் உள்ளது. இப்பகுதி மக்கள் வடக்குராஜன் வாய்க்கால், வடவாறு ஆகியவற்றின் மூலம் பாசனம் பெற்று விவசாயம் செய்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணை திறப்பதற்கு முன் ஆழ்குழாய் கிணற்றின் மூலம் விதை விடும் பணியை செய்கின்றனர். இதன் காரணமாக மழை காலம் தொடங்குவதற்கு முன்னரே அறுவடை பணி நடைபெறும்.
கொள்ளிடம் ஆறு இப்பகுதியில் இருப்பதால் சுமார் 50 அடி ஆழத்திலிருந்து 100 அடி ஆழத்திற்குள் ஆழ்குழாய் கிணறு அமைத்து எளிதில் தண்ணீர் கிடைக்கப்பெற்று விவசாயிகள் விவசாய பணிகளை செய்து வருகின்றனர். நெல் பயிரோடு மட்டுமல்லாமல் கோடைகாலத்தில் வாழை, பருத்தி, கத்தரி, வெண்டை, மிளகாய், என பல் வேறு வாணிப பயிர்களையும் செய்து வருகின்றனர். இக்காலங்களில் நெல்பயிர் மட்டும் செய்தால் விவசாயத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு குடும்பம் நடத்த இயலாது என்பதால் கோடைக்காலத்திலும் தீவிரமாக வாணிப பயிர் களை செய்து லாபம் ஈட்டி வருகின்றனர். கொள்ளிடம் ஆறு இப்பகுதி விவசாயிகளுக்கு இயற்கை கொடுத்த மிக பெரிய வரபிரசாதமாகும். ஆதலால் கொள்ளிடம் ஆற்றையே தெய்வமாக நினைக்கும் அளவுக்கு விவசாயிகள் உள்ளனர். சில கிராமங்களில் கொள்ளிடம் ஆற்றில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்பட்டு வருவதையே விவசாயிகள் எதிர்க்கும் மனநிலையில் உள்ளனர்.
கொள்ளிடம் ஆறு விவசாயிகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறதோ அதே போன்று பொதுப்பணித்துறைக்கும் சில சமூக விரோதிகளுக்கும் முக்கியமானதாக கூறப்படுகிறது. பொதுப்பணித்துறை சார்பில் மணல் குவாரிகளை ஏற்படுத்தி மணலை விற்பனை செய்து அரசுக்கு லாபம் ஈட்டி
தருகின்றனர். இரவு நேரங்களில் திருட்டு மணல் அள்ளும் கும்பல் கொள்ளிடம் ஆற்றில் உள்ள இயற்கை அளித்த மணல் வளத்தை சுரண்டி செல்கின்றனர். இதை கண்காணிக்க வேண்டிய சம்மந்தப்பட்ட துறையினர் இடைதரகர்களாக செயல் பட்டு திருட்டு மணல் கும்பலிடம் பணத்தை பெற்றுக்கொண்டு கண்டு கொள்ளா மல் இருக்கின்றனர். கொள்ளிட கரையோர கிராமங்களில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிராக்டர்கள் உள்ளது. விவசாய பணிக்கென கண்டறியப்பட்ட டிராக்டரை திருட்டு மணல் கும்பல் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். தனியார் நிதி நிறுவனங்கள் சார்பில் எளி தில் கடனை பெற்று டிராக்டர்களை வாங்கி வருகின்றனர். கடன் தொகையை திருட்டு மணலை அள்ளி விற்பனை செய்தே நிவர்த்தி செய்கின்றனர். பல்வேறு டிராக்டர் கம்பெனிகள் இப்பகுதியில் முகாமிட்டு அதிக அளவு டிராக்டர்களை விற்பனை செய்துள்ளனர். காட்டுமன்னார்கோவில் பகுதியில் உள்ள இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கையை விட டிராக்டர்களின் எண்ணிக்கை அதிக அளவுஉள்ளது என்று கூறப்படுகிறது.
இரவு பகல் என்று பாராமல் திருட்டு மணலை அள்ளும் கும்பலால் எதிர்காலத்தில் மணல் இல்லாமல் போகும் நிலை ஏற்படுமோ என்று அச்சப்படுகின்றனர். விவசாயிகள் மணல் திருட்டு அதிகம் நடைபெறுவதால் வரும் காலங்களில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்காத சூழல் ஏற்படும் என்று அஞ்சுகின்றனர். எதிர்காலத்தில் விவ சாயமே இப்பகுதியில் செய்ய முடியாத சூழல் ஏற்படும் என்று கூறப்படுகிறது. ஆகவே மாவட்ட நிர்வாகம் திருட்டு மணல் கும்பலிடமிருந்து நீர்வள ஆதாரத்தை பெருக்கும் நோக்கில் நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் இருக்க கண்காணித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கை யாகும்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...