சென்னை:தமிழகத்தின் 5 முக்கிய நகரங்களில் வெகுஜன மக்கள் இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைமையில் முஸ்லிம்கள் நடத்தும் இடஒதுக்கீட்டிற்கான போராட்டம் இன்று நடைபெற உள்ளது.
இதுகுறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு
தமிழகத்தின் சென்னை, நெல்லை,மதுரை, தஞ்சாவூர்,கோவை ஆகிய முக்கிய நகரங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தலைமையில் பிரம்மாண்டமான பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
முஸ்லிம்கள் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல், அதிகாரம் ஆகியவற்றில் வலுப்பெறுவதற்காக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடர்ந்து போராடி வருகிறது. இந்நிலையில் ரங்கநாத் மிஷ்ரா கமிஷனின் பரிந்துரையின்படி மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கவும், தமிழகத்தில் ஏற்கனவே திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் வழங்கப்பட்ட 3.5 சதவீத இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்திடக் கோரியும் இன்று(ஏப்ரல்22) தமிழகத்தின் 5 முக்கிய நகரங்களில் பெருவாரியான முஸ்லிம்கள் கலந்துகொள்ளும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளது. இப்போராட்டத்தில் 3 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இன்றைய
போராட்டத்தை நடத்துகிறது:

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...