Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 26, 2012

போட்டி நிறைந்த எய்ம்ஸ் நுழைவுத் தேர்வு

கடந்த 1952ம் ஆண்டு, இந்திய நாடாளுமன்ற சட்டத்தின் மூலம், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக எய்ம்ஸ் ஏற்படுத்தப்பட்டது. இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவில் சிறந்த மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனமாக இது திகழ்கிறது. இங்கேயிருக்கும் வெறும் 50 MBBS இடங்களுக்காக, வருடந்தோறும், 80,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பிக்கின்றனர். எனவே, நுழைவுத்தேர்வானது, எப்படி போட்டி நிறைந்ததாக இருக்குமென்று நீங்கள் எண்ணிப்பார்த்துக் கொள்ளுங்கள்.

எய்ம்ஸ் விண்ணப்ப கட்டணம் ரூ.1000. இதை ஆன்லைனிலோ அல்லது சாதாரண முறையிலோ பூர்த்திசெய்து அனுப்பலாம். தகுதி 12ம் வகுப்பில், இயற்பியல், வேதியயில், உயிரியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் மொத்தமாக சேர்த்து, 60% மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். நுழைவுத்தேர்வு நடைபெறும் நாள் 1 ஜுன், 2012. தேர்வுமுறை சுமார் 3.5 மணி நேரங்கள் நடைபெறக்கூடிய, பேப்பரில் எழுதும் தேர்வு இது. இத்தேர்வில், சுமார் 200 multiple choice மற்றும் reason-assertion வகையிலான கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். தலா 60 கேள்விகள், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களிலிருந்து கேட்கப்படும். 20 கேள்விகள், பொது அறிவுக் கேள்விகளாக கேட்கப்படும். அதேசமயம், தவறான விடைகளுக்கு Negative marking உண்டு. எய்ம்ஸ் நுழைவுத்தேர்வு பற்றி விரிவான தகவல்களை அறிந்துகொள்ள www.aiims.edu என்ற
இணையதளம் செல்லவும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...