ஒசாமா குடும்பத்தின் 16 உறுப்பினர்களும் இன்று இரவிற்கு மேல் எந்த நேரத்திலும் நாட்டைவிட்டு வெளியேற்றப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த 2001-ம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த குண்டு வெடிப்புக்குப் பின் அல் கொய்தா தீவிரவாத தலைவர் ஒசாமா பின் லேடன் தன் குடும்பத்துடன் பாகிஸ்தானில் சட்ட விரோதமாக தங்கி இருந்தார். இந்நிலையில் கடந்த 11 மாதங்களுக்கு முன் அவர் பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் போதே அமெரிக்க ராணுவத்தினரால் கொல்லப்பட்டார்.
ஒசாமாவின் மூன்று மனைவிகளும் மற்றும் அவர்களது குழந்தைகளும் பாகிஸ்தானில் சட்ட விரோதமாக தங்கியிருந்தனர்.
இதனால் பாகிஸ்தான் நீதி மன்றம் அவர்களை 45 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டிருந்தது. மேலும் இத்தண்டனை காலம் முடிவடைந்த பின் உடனடியாக அவர்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டும் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஒசாமா குடும்பத்தின் 16 உறுப்பினர்களும் இன்று இரவிற்கு மேல் எந்த நேரத்திலும் நாட்டைவிட்டு வெளியேற்றப்படலாம் என ஒசாமா குடும்பத்தின் ஆலோசகர் அமீர் காலில் டான் பத்திரிகைக்கு தகவல் தந்ததாக தெரிய வந்துள்ளது. மேலும் பாகிஸ்தானில் உள்துறை அமைச்சகம் நேற்று இரவு கூடி இது குறித்து விவாதித்ததாகவும், ஒசாமா குடும்பத்தினர் சவுதி அரேபியா அல்லது ஏமன் நாட்டிற்கு அனுப்பப்படலாம் என
அப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் இன்று இரவு அல்லது நாளை காலையில் சவுதி அரேபியா செல்லக்கூடும் எனவும் ஒசாமாவின் இளைய மனைவி அமல் அப்துபாத்தா ஏமன் நாட்டைச் சேர்ந்தவர் என்றும், அவர் சவுதி அரேபியாவிலிருந்து ஏமனுக்கு அனுப்பப்படலாம் எனவும் அப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...