Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 10, 2012

சிரியாவில் கலவரம் நீடிப்பு: மேலும் 50 பேர் பலி

சிரியாவில் அதிபர் பஷர் அல்-ஆசாத்துக்கு எதிராக ஒரு வருடமாக மக்கள் போராடி வருகிறார்கள். இதில் சுமார் 10 ஆயிரம் பேர் ராணுவத்தால் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். எனவே இந்த கலவரத்தை முடிவுக்கு கொண்டு வர ஐ.நா. சபையும், அரபு கூட்டமைப்பு நாடுகளும் தீவிர முயற்சி கொண்டுள்ளன. கோபி அன்னனை சமாதான தூதுவராக சிரியாவுக்கு அனுப்பி வைத்தது. அவர் அந்த நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதை தொடர்ந்து கலவரம் நடைபெறும் நகரங்களில் இருந்து ராணுவத்தை இன்றைக்குள் வாபஸ் பெறுவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஹோம்ஸ் உள்ளிட்ட சில நகரங்களின் புறநகர் பகுதிகளில் இருந்து ராணுவம் வாபஸ் பெறப்பட்டது.

   அதை தொடர்ந்து சிரியாவில் கலவரம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படை வாபஸ் பெறும் கெடு முடியும் நேரத்தில் நேற்று மீண்டும் கலவரம் வெடித்தது. சிரியாவின் அண்டை நாடான துருக்கி எல்லையில் ஜியோபார்டன் நகரம் உள்ளது. அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியது. அதில் சிலர் காயம் அடைந்தனர். இதனால் ஹமா மாகாணத்தில் கலவரம் பரவியது. அங்குள்ள லடாம்னா என்ற கிராமத்தில் கூடிய மக்கள் மீது ராணுவம் குண்டு வீசியும், துப்பாக்கி சூடும் நடத்தியது. பதிலுக்கு போராட்டக்காரர்களும் தாக்குதல் நடத்தினர். அதில் 35 பொதுமக்களும், 15 ராணுவ வீரர்களும் பலியாகினர். இச்சம்பவம் துருக்கி அகதி முகாமில் கோபிஅனன் பார்வையிட வந்தபோது நடந்தது.

  சிரியாவில் தொடர்ந்து கலவரம் நடைபெறுவதால் ஏராளமான மக்கள் துருக்கியில் உள்ள அகதிகள் முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதுவரை சுமார் 25 ஆயிரம் பேர் அங்கு அகதிகளாக உள்ளனர். தற்போது கலவரம் நீடித்து இருப்பதால் மேலும் பலர் அங்கு தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றனர். அதை தடுக்க
மக்கள் மீது சிரியா ராணுவம் தாக்குதலை நிறுத்த வேண்டும் என துருக்கி கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையே சிரியாவின் ராணுவ நடவடிக்கைக்கு அதன் நட்பு நாடுகளான சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. எனவே சிரியா வெளியுறவு மந்திரி வாலிட் முல்லெம், அந்நாடுகளின் மந்திரிகளிடம் விளக்கம் அளித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...