புதுடில்லி : விமானம் மூலம் டில்லியிலிருந்து செல்பவர்கள் மற்றும் டில்லிக்கு வருபவர்களிடம் மே 15ம் தேதிக்கு பிறகு ரூ.1400 கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளதாக விமான நிலைய பொருளாதார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் விமான தரையிறக்கம், பார்க்கிங் உள்ளிட்ட பிற வசதிகளுக்கான கட்டணத்தை 346 சதவீதம் உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டில்லியில் இருந்து 2000 முதல் 5000 கி.மீ., வரையிலான தூரத்தில் உள்ள பிற பகுதிகளுக்கு செல்லும் பயணிகளிடம் ரூ.845.50 ம், டில்லிக்கு வரும் பயணிகளிடம் ரூ.699.17ம் கூடுதலாக வசூலிக்கப்பட உள்ளது. 5000 கி.மீ., க்கு மேல் உள்ள தூரம் பயணம் செல்லும் பயணிகளிடம் டில்லி வருவதற்கு ரூ.881.10ம், டில்லியிலிருந்து செல்வதற்கு ரூ.1068ம் கூடுதலாக வசூலிக்கப்பட உள்ளது. உள்நாட்டு விமான போக்குவரத்தை பொறுத்தமட்டில் டில்லியிலிருந்து பிற பகுதிகளுக்கு அதாவது 500கி.மீ.க்குள் பயணிப்பவர்களுக்கு விமான கட்டணமாக ரூ.231.40ஆகவும், டில்லிக்கு வருபவர்களிடம் ரூ.195.80 கூடுதலாக வசூலிக்கப்பட இருக்கிறது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...