இஸ்லாமாபாத்:கைபர் பக்தூன்க்வா மாகாணத்தில் சிறைச்சாலை மீது தாக்குதல் நடத்தி 384 கைதிகளை விடுவித்த தாலிபான்களின் தாக்குதல் அவர்களின் சக்தியை பிரகடனப்படுத்துவதாக பாகிஸ்தான் நாளிதழான நியூஸ் இண்டர்நேசனல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இத்தகைய தாக்குதல்கள் தொடர வாய்ப்புள்ளதாக அப்பத்திரிகையின் தலையங்கம் கூறுகிறது.
சிறையின் வாசல் அருகே குண்டுவெடிப்பை நிகழ்த்திய தாலிபான்கள் பெரும் ஆயுத பலத்தின் பின்னணியில் இரண்டு மணிநேரம் போலீசாருடன் மோதலில் ஈடுபட்ட பிறகு 384 கைதிகளை விடுவித்தனர். தாக்குதல் முடிந்து திரும்பும் வேளையில் சிறையின் ஒரு பகுதியை தீவைத்தனர். இத்தகையதொரு தாக்குதல் முன்பு நடந்தது இல்லை என்று கூறும் பத்திரிகை, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஆப்கானின் காந்தஹாரில் இதைப் போன்றதொரு சம்பவம் நடந்ததாக சுட்டிக்காட்டுகிறது. விடுவிக்கப்பட்ட தாலிபான் போராளிகள் தங்களது பணியை துவக்கும் வேளையில் தாலிபான் அமைப்பு மீண்டும் வலுப்பெறும் என்றும், இதன் மூலம்
நாட்டிற்கு அச்சுறுத்தல் அதிகரிக்கும் என்றும் அப்பத்திரிகை எச்சரிக்கை விடுக்கிறது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...