Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 26, 2012

கொள்ளிட கரையை தார் சாலையாக மாற்றும் பணி தீவிரம்

காட்டுமன்னார்கோவிலில் கொள்ளிடக்கரையை அகலப்படுத்தி தார்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. கொள்ளிடக்கரையோரத்தில் 25 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. மழை காலங்களில் கொள்ளிடம் ஆற்றில் வரும் அதிக வெள்ள நீரால் கரைகள் உடையும் அபாயம் இருந்து வந்தது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் கொள்ளிடக் கரையை பலப்படுத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தினர்.

இதைத்தொடர்ந்து கடந்த திமுக ஆட்சியில் ரூ. 108 கோடியில் கொள்ளிடக்கரை அகலப்படுத்தும் பணி தொடங்கியது. இப்பணி தொடர்ந்து நடந்து வருகிறது. வீராணம் ஏரி, பொன்னேரி, பெருமாள் ஏரி, மேலும் பல்வேறு இடங்களிலிருந்து மண் எடுத்து வரப்பட்டு அகலப்படுத்தப்பட்டது. இரண்டு அடுக்கு கருங்கல் ஜல்லி நிரவப்பட்டு கரையின் சாலை சமப்படுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது போக்குவரத்திற்கு ஏதுவாக தார்சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தார்சாலை பணி நிறைவுற்றால் 25 கிராம மக்கள் போக்குவரத்து வசதி
பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...