டெல்லி: இந்தியாவை சுனாமி அலைகள் தாக்கும் வாய்ப்பு இல்லை என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆணையத்தின் துணைத் தலைவர் சசிதர ரெட்டி கூறுகையில், இந்தியாவை சுனாமி அலைகள் தாக்குவதாக இருந்தால் அந்தமான் நிக்கோபார் பகுதியில்தான் முதலில் தாக்கும். இந்தநிமிடம் வரை அதற்கான அறிகுறியே அங்கு இல்லை. மேலும் இந்தியப் பெருங்கடலில் சுனாமி அலைகள் எழுவதற்கான சாத்தியக்கூறும் தற்போது இல்லை.எனவே சுனாமி அலைகள் தாக்குவதற்கான வாய்ப்பு கிட்டத்தட்ட நிராகரிக்கப்படுகிறது என்றார்.
மேலும் அவர் கூறுகையில்,
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கமானது பக்கவாட்டில் ஏற்பட்டுள்ளது. எனவே சுனாமி அலைகள் எழ வாய்ப்பி்ல்லை. இந்த வகையான நிலநடுக்கம் சுனாமி அலைகளை ஏற்படுத்தாது. இதுவே மேலிருந்து கீழாக
ஏற்பட்டிருந்தால் மட்டுமே சுனாமி அலைகளை எதிர்பார்க்க முடியும். இந்த நிமிடத்தில் இந்தியப் பெருங்கடலில் எங்குமே சுனாமி அலைகள் ஏற்படவில்லை என்பதே இப்போதைய நிலவரம் என்றார் அவர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...