Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 18, 2012

காட்டுமன்னார்கோவிலில் உதவித்தொகை பெற தள்ளுமுள்ளு- பரபரப்பு

காட்டுமன்னார்கோவிலில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதால் கூட்டம் அலைமோதியது. இதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுக அரசு கல்வி உதவித்தொகையை அந்தந்த சமூக நல வட்டாட்சியர் பிரிவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்தது. இதன்படி காட்டுமன்னார்கோவிலில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் உதவி தொகை பெறுவதற்கு விண்ணப்பம் செய்தனர். இதில் ஆயிரத்து ஐநூறு மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட உள்ளதாக காட்டுமன்னார்கோவில் சமூகநல தாசில் தார் பிரிவில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த தகவல் அறிந்து மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் நேற்று காட்டுமன்னார்கோவில் வட்டாட்சி யர் அலுவலகத்திற்கு கூட்ட மாக வந்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விண்ணப்பம் செய்த அனைவருக் கும் உதவித் தொகை வழங்கப்படும் என அறிவித்தா லும் பெற்றோர்கள், மாணவர்கள் அமைதி அடையவில்லை. சமூக நல வட்டாட்சியர், இப்பிரிவில் அலு வலரை சூழ்ந்து கொண்டு தங்களுடைய விண் ணப்பத்தை பெற வேண்டும் என்று கூறினர். ஏற்கனவே இப்பிரிவில் பணியாற்றிய அலுவலரும் மாற்றலாகி சென்று விட்டதால் ஒரு அலுவலரை வைத்து கொண்டு பல்வேறு பணி கள் நடைபெறுகிறது. தற்போது உதவி தொகை பெறுவதற்கு ஆயிரக்கணக்கில் பெற்றோர் கூடியதால் பணி செய்ய முடியாமல் அதிகாரி மற்றும் அலு வலர் சிரமப்பட்டனர். ஒருவரை ஒருவர்
முண்டியடித்துக் கொண்டு காசோ லையை பெறுவதற்கு முற்பட்டனர். இத னால் தள்ளுமுள்ளு ஏற் பட்டது. இதனால் வட்டாட்சியர் அலுவலகம் பர பரப்பாக காணப்பட்டது.
source:Dinakaran

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...