அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்தியாவின் தேசிய பானமாக டீ அறிவிக்கப்படும் என திட்டக் குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா தெரிவித்துள்ளார்.
அசாம் மாநிலம் ஜோர்கத்தில் நடைபெற்ற தேயிலை உற்பத்தியாளர்களின் 75வது ஆண்டு விழாவில் கலந்துக் கொண்ட திட்டக் குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா கூறியதாவது:
அசாமின் முதல் தேயிலை உற்பத்தியாளரான மணிராம் திவானின் 212வது பிறந்த நாளை முன்னிட்டு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டீ இந்தியாவின் தேசிய பானமாக அறிவிக்கப்படும்.
தேயிலை உற்பத்தியில் ஈடுபடுவர்களில் பெரும்பான்மையானோர் பெண்கள் என்பதும், தேயிலை தேசிய பானமாக அறிவிக்கப்படுவதற்கு மற்றொரு முக்கிய காரணம். பிளாக் டீ உற்பத்தியில் இந்தியா உலகளவில் முதலிடத்தில் உள்ளது என்றும், 83 சதவிகித இந்திய குடும்பங்களில் டீ தான் அருந்தப்படுகிறது
என்றும் மான்டேக் சிங் அலுவாலியா தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...