தானே புயல் நிவாரண ஊழலை கண்டித்து காட்டுமன்னார்கோவிலில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
காட்டுமன்னார்கோவில் பஸ் நிலையத்தில் சிபிஐ (எம்எல்) அனைத்திந்திய விவசாய தொழிலா ளர் சங்கம், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் ஆகியவை சார்பில் தானே புயல் நிவாரண தொகையில் செய்யப்பட்ட ஊழலை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
இதில் ராமாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட தண்டகாரன்குப்பம், வாலிஸ்பேட்டை, பக்கிரிமானியம், கொளத்தங்குறிச்சி ஆகிய கிராமங்களில் உள்ள விடுபட்ட 167 நபர்களுக்கு நிவாரண தொகை வழங்கப்படவில்லை. பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டு படிவம் 20 தயார் செய்தும் நிவாரண தொகை வழங்கப்படாததை கண்டிப் பதாகவும், இதில் நடைபெறும் ஊழலை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களில் தகுதியான நபர்களுக்கு 35 கிலோ அரிசி வழங்க வேண்டும். அரசு பொது மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவரை பணியில் இருக்க செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு
கோரிக்கைகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
source:Dinakaran

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...