Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 22, 2012

காட்டுமன்னார்கோவில் பகுதியில் காணாமல் போகும் சாலைகள்

காட்டுமன்னார்கோவில்: கடலூர் மாவட்டத்தில், காட்டுமன்னார்கோவில் கடைக்கோடியில் அமைந்துள்ளது. இப்பகுதியில் அதிகளவு கிராமங்களை உள்ளடக்கியது. இங்கு விவசாயிகள் அதிகம் உள்ளனர். மிகவும் பின் தங்கிய பகுதியாகும். இப்பகுதியில் உள்ள போக்குவரத்து சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இப்பகுதி வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்படும். இதனால் கிராமங்களில் உள்ள சாலைகள் மிகவும் பழுதாகி போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் மாறிவிடும். இச்சாலைகளை நெடுநாட்கள் சீரமைக்கப்படாமல் விட்டு விடுவதால், பயணிக்க லாயக்கற்று காணப்படுகிறது.

 இரவு நேரங்களில் பொதுமக்கள் மருத்துவமனைகளுக்கு கூட வரமுடியாத அளவுக்கு சாலைகள் சேதமாகி காட்சி அளிக்கிறது. காட்டுமன்னார்கோவில் பகுதியில் சுமார் 500 கி.மீ. கிராம சாலைகள் உள்ளது. இதில் சுமார் 29 கி.மீ. பேருராட்சி சாலைகளும், மாநில நெடுஞ்சாலையாக 237.6 கி.மீட்டரும் உள்ளது. இப்பகுதியில் மாவட்டத்தின் முக்கிய சாலையாக 75 கி.மீ. உள்ளது. தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, கிராம சாலை, பேருராட்சி சாலை என பல்வேறு வகையாக சாலைகள் பிரிக்கப்பட்டாலும் ஒரு சாலை கூட நல்ல நிலையில் இல்லை. சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்கோவில் வழியாக தேசிய நெடுஞ்சாலை திருச்சி வரை செல்கிறது. இதில் சிதம்பரத்தில் இருந்து 25 கி.மீ சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதுபோல் காட்டுமன்னார்கோவிலில் இருந்து திருச்சி செல்லும் வழியில் மீன்சுருட்டி வரை சாலையை காணவில்லை. இதுபற்றி பலமுறை பொதுமக்கள் மனு மற்றும் மறியல் செய்தும்
சாலைகளை சீரமைக்கும் அறிகுறியே இல்லை.

 இந்த சாலையில் வீரானந்தபுரம், வில்வகுளம் அருகே உள்ள பாலங்களில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு உடைந்து காணப்படுகிறது. காட்டுமன்னார்கோவில் இருந்து முட்டம், ஓமாம்புலியூர் வரை செல்லும் சாலையில் பள்ளங்கள் அதிகம். இதில் வாகனத்தை ஓட்டி செல்வதை விட தள்ளி கொண்டுதான செல்கிறார்கள். மக்கள் மறியலுக்கு பின் பள்ளங்களை மூடினார்களே தவிர சாலையை சீரமைக்கவில்லை. காட்டுமன்னார்கோவிலில் இருந்து கீழணைவரை செல்லும் வடவாற்றங்கரை சாலை மிகவும் மோசமாகி, தார்சாலை எங்குள்ளது என தேடும் நிலையில் உள்ளது. ஆபத்து காலங்களில் பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் ஆகியோர்களை அவசரமாக மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்ல முடியாத நிலை உள்ளது.

குணமங்கலம், எசனூர் சாலையில் பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். திருநாரையூ ரில் இருந்து நடுத்திட்டு வழியாக எடையார் செல்லும் சாலை யில் கருங்கல், ஜல்லி பரப்பி பல மாதங்கள் ஆகியும் சீர் செய்யப்படவில்லை. இதில் செல்லும் பஸ் அடிக்கடி பழுதாகி பாதியில் நின்று விடும். இதனால் பல நாட்கள் இச்சாலையில் பேருந்து நிறுத்தப்படுகிறது. காட்டுமன்னார்கோவிலில் இருந்து அணைக்கரை வரை செல்லும் சாலை, அறந்தாங்கியில் இருந்து சென்னை தேசிய நெடுஞ்சாலையை நோக்கி செல்லும் சாலை, மேலவன்னியூர், கீழவன்னியூர் பகுதி சாலை, நத்தமலையில் இருந்து மானியம் ஆடுர் செல்லும் சாலை, வீரானந்தபுரத்தில் இருந்து பெரியபுங்கநதி வழியாக துரப்பு வரை செல்லும் சாலை என காட்டுமன்னார்கோவில் பகுதியில் பல சாலைகளை தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும்.

 இப்பகுதியில் உள்ள சாலைகளில் பெரும் பகுதியை காணவில்லை என்பதே இப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாகும். எனவே சம்பந்தப்பட்ட துறையினர், காட்டுமன்னார்கோவில் பகுதி சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
source:Dinakaran

1 கருத்துகள்:

mohamedkamil சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் பக்கர்,
நான் உங்கள் ப்ளாக்கை தொடர்ந்து படித்துவருகிறேன். நீங்கள் தினமும் உங்கள் ப்ளாக்கை அப்டேட்ஸ் செய்வது மகிழ்ச்சியளிக்கிறது. நம்முடைய காட்டுமன்னார்கோயில் செய்திகள் உங்கள் ப்ளாக்கில் இருந்து நான் எடுத்து என்னுடைய ப்ளாக் kattumannarkoil.blogspot.com யில் போடுகிறேன். உங்கள் ப்ளாக் போஸ்ட் லிங்க் மற்றும் நன்றி வாசகத்தோடு போடுவதற்கு நீங்கள் அனுமதியளிப்பீர்கள் என நம்புகிறேன்.
தொடர்ந்து உங்கள் பங்களிப்பை நம்முடைய ஊருக்கு அளிக்கவேண்டும் என்று அன்போடு கேட்டுகொள்கிறேன்.

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...