Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 20, 2012

புதுமண தம்பதிகளுக்கு ரேஷன் கார்டு கிடையாது

புதிதாக திருமணம் செய்து கொண்ட தம்பதிக்கு ரேஷன் கார்டு வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் 1.97 கோடி ரேஷன் கார்டு புழக்கத்தில் உள்ளது. போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்க, தமிழக அரசு பயோமெட்ரிக் தொழில் நுட்பத் துடன் கூடிய புதிய கார்டுகள் வழங்க முடிவு செய்துள்ளது. இதற்காக கார்டுதாரர்களின் கண் கருவிழிப்படலம், விரல் ரேகை பதிவு செய்ய வேண்டும். இதற்கு இப்போதைக்கு போதிய அவகாசம் இல்லை என்பதால், தற்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளின் ஆயுள் காலத்தை நடப்பு ஆண்டு முழுவதற்கும் நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

 கார்டு புதுப்பிக்கும் பணி கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் முடிய நடந்தது. இந்நிலையில், புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கார்டு வழங்குவதற்கு ஏதுவாக, இப்போதைக்கு புதுமண தம்பதிகளுக்கு மட்டும் புதிய ரேஷன் கார்டுகளை வழங்க வேண்டாம் என கூட்டுறவு மற்றும் வழங்கல் துறை அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. ரேஷன் கார்டு தரமறுக்கும் அரசு உத்தரவால் புதுமண தம்பதிகள் பாஸ்போர்ட் பெறுவது முதல் டிரைவிங் லைசென்ஸ் பெறுவது, புதிய காஸ் இணைப்பு பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கூட்டுறவு மற்றும் வழங்கல் துறை அதிகாரிகள் கூறியதாவது: புதுமண தம்பதிகள் புதிதாக ரேஷன் கார்டு பெற வேண்டுமானால், ஏற்கனவே பெற்றோரது ரேஷன் கார்டில் உள்ள தங்கள் பெயர்களை நீக்கம் செய்யப்பட்டதற்கான சான்றிதழ் பெற்று, விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தில் உள்ள விவரங்கள் சரிதானா என்பதை அதிகாரிகள் சரிபார்க்க போதிய
அவகாசம் இல்லை.

பயோமெட்ரிக் ரேஷன் கார்டுகள் இந்தாண்டு இறுதிக் குள் வழங்குவதற்காக, வீடு வீடாக கார்டுதாரர்களின் விரல் ரேகைகளை பதிவு செய்யும் பணி வரும் மே மாதத்தில் துவங்க உள்ளது. அதனால் புதுமண தம்பதிகளுக்கு புதிய கார்டுகள் வழங்குவதை நிறுத்தி வைக்கும்படியும் வழங்கல் துறை வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...