Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 16, 2012

கடலூர் மாவட்டத்தில் 2.5 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்பட்டது

கடலூர்: இரண்டாம் கட்ட போலியோ முகாமில் கடலூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்பட்டது. தமிழகம் முழுவதும் நேற்று இரண்டாம் கட்ட போலியோ தடுப்புச் சொட்டு மருந்து முகாம் நடந்தது. 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு இரண்டாவது தவணையாக நேற்று சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

கடலூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போடப்பட்டது. இதற்காக மாவட்டம் முழுவதும் ஆயிரத்து 613 சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 6 ஆயிரத்து 452 பணியாளர்கள் இந்த பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். விடுபட்ட குழந்தைகள் இருந்தால் அவர்களை கண்டறிந்து அவர்களுக்கும் சொட்டு மருந்து
போடப்பட்டு வருவதாக ஆட்சியர்(பொறுப்பு) ராஜேந்திரன் தெரிவித்தார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...