Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மார்ச் 01, 2011

SONY உருவான கதை - அக்யோ மொரிட்டா

மாணவன் என்ற தளத்தில் படித்த கட்டுரை உங்கள் பார்வைக்கு..
இரண்டாம் உலகப்போரினால் உருத்தெரியாமல் சிதைந்துபோன ஒரு தேசம் ஜப்பான். உலகநாடுகளில் அது புரிந்த அட்டூழியங்களுக்கு அமெரிக்கா அணுகுண்டுகள் மூலம் பதிலடி கொடுத்தபோது இனி பல தலைமுறைகளுக்கு அந்த தேசம் தலையெடுக்க முடியாது என்றுதான் உலகம் எண்ணியது. ஆனால் போரில் தோற்றாலும் பொருளாதாரத்தில் தோற்க விரும்பாத ஜப்பானியர்கள் தன்னம்பிக்கையையும் உழைப்பையும் உரமாக விதைத்தனர் ஜப்பானிய மண்ணில் ஒருசில தலைவர்கள் மட்டுமல்ல ஒரு தேசமே தன்னம்பிக்கையோடு எழுந்து நின்று போர் முனையில் காட்டிய வேகத்தை நாட்டை மறுசீரமைப்பதிலும் காட்டினார்கள் விளைவு 30 ஆண்டுகளுக்குள் அமெரிக்காவுக்கு நிகரான பொருளியல் வல்லரசாக உருவெடுத்தது ஜப்பான்.

அந்த அதியசத்துக்கு வித்திட்டவர்கள் பலர் இருந்தாலும் ஒருவரின் பெயரை ஜப்பானிய வரலாறு மட்டுமல்ல உலக வரலாறும் என்றென்றும் போற்றும். Made in japan என்ற வாசகத்தை தாங்கி வரும் எந்த பொருளையும் கண்ணை மூடிக்கொண்டு வாங்கும் அளவுக்கு உலக மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என்றால் அதற்கு முழுமுதற் காரணம் அந்த தொழில் பிரம்மா. அவர்தான் தரக்கட்டுப்பாடு என்ற தாரகமந்திரத்தையும் SONY என்ற புகழ்பெற்ற நிறுவனத்தையும் உலகுக்கு தந்த ஜப்பானிய தொழில் முனைவர் அக்யோ மொரிட்டா.

சிதைந்துபோன ஜப்பானை சீர்தூக்கிவிட உதவிய அந்த தொழில்பிதாமகனின் தன்முனைப்பூட்டும் கதையை தெரிந்துகொள்வோம்.

விமானக் கட்டணம் உயர்வு வெளிநாடு வாழ் இந்தியர்கள் பேரவை கண்டனம்

 வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு சலுகைகளை அறிவிப்பதற்கு பதிலாக விமானக் கட்டணத்தை உயர்த்தியுள்ள மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை நியாயப்படுத்த முடியாது என வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பேரவையின் தலைவர் பி.அஹ்மத் ஷெரீஃப் கண்டனம் தெரிவித்துள்ளார்.

லட்சக்கணக்கான வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் சமூகத்தை மறந்துவிட்டு நிதிநிலை அறிக்கையை மத்திய நிதித்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தயாரித்துள்ளார்.

வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான போதுமான நலத்திட்டங்கள் நிதிநிலை அறிக்கையில் ஒன்றுமில்லை. சொந்த தேசத்திற்காக வெளிநாட்டு நாணயத்தை அள்ளித் தரும் சமூகத்தை மறந்துபோன நிதிநிலை அறிக்கை என பி.அஹ்மத் ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 28, 2011

சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பழைய பாலத்தில் சீரமைப்புப் பணி

சிதம்பரம் அருகே உள்ள சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பழைய பாலத்தில் சீரமைப்புப் பணி நடைபெறுவதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் எஸ்.செல்வராஜ் தெரிவித்தார்.

இது குறித்து பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் எஸ்.செல்வராஜ் தெரிவித்தது:

சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பழைய பாலம் பலவீனமடைந்ததால் அருகில் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது.இருப்பினும் பழைய பாலத்தில் போக்குவரத்து நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் பழைய பாலத்தின் கைப்பிடிச் சுவர், அடித்தளம் பாதித்துள்ளதால் உடையும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் இந்த பாலத்தை பயன்படுத்த வேண்டாம்.அருகில் உள்ள புதிய பாலத்தை பயன்படுத்த வேண்டும். தற்போது ரூ.30 லட்சம் செலவில் பழைய பாலத்தின் கைப்பிடிச் சுவர், கான்கிரீட் தளம், ஷட்டர் உள்ளிட்டவை சீரமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.எனவே பொதுமக்கள் இப்பாலத்தில் பயணத்தை தவிர்த்து புதிய பாலத்தை பயன்படுத்த வேண்டும் என்றார் செல்வராஜ்

பிப்ரவரி 25, 2011

கடலூர் செல்போன் சேவையை அதிகரிக்க மேலும் 128 டவர்கள்

கடலூர் தொலைத்தொடர்பு மாவட்டத்தில் (விழுப்பரம், கடலூர் வருவாய் மாவட்டங்கள்) பி.எஸ்.என்.எல். செல்போன் சேவையை மேம்படுத்த, மேலும் 128 செல்போன் டவர்கள் அமைக்கப்படும் என்று பி.எஸ்.என்.எல். மாவட்டப் பொது மேலாளர் மார்ஷல் ஆன்டனி லியோ தெரிவித்தார்.
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் ஆதரவுடன், சென்னை சி.ஏ.ஐ. நுகர்வோர் அமைப்பு மற்றும் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு இணைந்து செல்போன் பயன்படுத்துவோருக்கான ஆலோசனைக் கருத்தரங்கை கடலூரில் வியாழக்கிழமை நடத்தின.
கருத்தரங்க தொடக்க விழாவில் பொதுமேலாளர் மார்ஷல் ஆன்டனி லியோ கூறியது:

கடலூர் தொலைத்தொடர்பு மாவட்டத்தில் தற்போது 1 லட்சம் தரைவழி தொலைபேசி இணைப்புகள் உள்ளன.166 தொலைபேசி இணைப்பகங்கள் உள்ளன. செல்போன் சேவைக்காக 360 டவர்கள் உள்ளன. செல்போன் சேவையை மேம்படுத்த மேலும் 60 டவர்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. மேற்கொண்டு 68 டவர்கள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.கிராமப்புறங்களில் 30 ஆயிரம் வில் தொலைபேசி இணைப்புகளும், 55 வில் தொலைபேசி நிலையங்களும் உள்ளன.

தமிழகத்தில் மகப்பேறு நிதியுதவியால் 25 லட்சம் பேர் பயன்: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

தமிழகத்தில் மகப்பேறு நிதியுதவி திட்டத்தால் 25 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார். கடலூர் அடுத்த வெள்ளக்கரை, புவனகிரி அடுத்த ஆயிபுரம் ஆகிய கிராமங்களில் தலா 21.79 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா நடந்தது. டி.ஆர்.ஓ., ராஜேந்திரன் தலைமை தாங்கினார். துணை இயக்குனர் மீரா வரவேற்றார். மருத்துவ பணிகள் இணை இயக்குனர் கமலக் கண்ணன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மனோகரன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் சண்முகம், கல்விக்குழுத் தலைவர் ஜெயபால், ஊராட்சித் தலைவர் ஜெயபால் வாழ்த்திப் பேசினர்.

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் புதிய கட்டடங்களை திறந்து வைத்து பேசியதது:

ஓர் வஃபாத் செய்தி!

நமதூர் பள்ளிவாசல் தெருவில் மர்ஹூம் மொவ்ளவி இனாயத்துல்லாஹ் அவர்களின் மகள் ராபியத்துல் பஷிரியா அவர்கள் இன்று காலை தாருல் பணாவை விட்டும் தாருல் பகாவை அடைந்து விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் கொள்ளுமேடுXpress இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.

பிப்ரவரி 24, 2011

இஸ்லாமிய சட்டத்தோடு இணங்கிய புதிய பங்கு சந்தை​ குறியீடு

நாட்டில் எண்ணிக்கையில் அதிகமிருக்கும் முஸ்லிம்களுக்கு பங்கு வர்த்தகத்தை திறந்துவிடும் முயற்சியாக டாசிஸ் ஷரியா 50 எனும் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது ஆசியாவின் பழமைவாய்ந்த பங்குசந்தையான மும்பை பங்குசந்தை.

இந்திய பங்குசந்தையில் பாரம்பரியமாக ஹிந்து முதலீட்டாளர்களே பெரும் அதிகாரம் செலுத்தி வருகின்றனர் ஆனால் இஸ்லாமிய சட்டத்தோடு இணங்கிய புதிய குறியீடு கொண்ட நிதி உள்ளடக்கத்தை நோக்கி பங்குசந்தை நடவடிக்கையை எடுத்து வருகிறது.

"இந்திய பங்கு வர்த்தக உரிமையில், வரலாற்றில் குறைந்த அளவே ஈடுபட்ட முஸ்லிம் சமுதாயத்தை இப்புதிய குறியீடு அடையவேண்டும் என்பதே இதன் நோக்கம்" என்று மும்பை பங்குசந்தையின் சந்தை மேம்பாட்டுத்துறை தலைவர் ஜேம்ஸ் ஷாபிரோ கூறியுள்ளார்.

சவுதி அரேபிய மன்னரின் சலுகைகள்!

உடல் நலம் குன்றியிருந்து மன்னர் அப்துல்லா மொராக்கோவில் சிகிச்சை பெற்ற பின்னர் நேற்று (23.02.2011) சவுதி திரும்பினார்.

நாடு திரும்பியதும் அவர் அரசு ஊழியர்களுக்குச் சம்பளத்தில் 15 சதவிகிதம் உயர்வு வழங்குவதாக அறிவித்தார். இது தவிர வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்களுக்கான கல்விக் கட்டண உதவி, வேலையில்லாமல் இருக்கும் சவுதி பிரஜைகளுக்கு உதவித் தொகை, கடன் வாங்கி செலுத்த முடியாமல் சிறையில் இருப்பவர்களின் கடனை அரசு வழங்கும் என பல சலுகைகளை அளித்துள்ளார். இவ்வாறு ஏறத்தாழ 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள உதவித் திட்டங்களை அப்துல்லா அறிவித்துள்ளார்.


மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் மக்கள் பொருளாதார நெருக்கடியால் ஆளுகின்ற அரசுக்கெதிராக கிளர்ந்தெழுவது தொடர்ந்து நடைபெற்று வருகையில் சவுதி மன்னரின் இந்த அறிவிப்பு மக்களை அமைதிப்படுத்தும் முயற்சியாக தெரிகிறது.

கடலூர் அணைக்கரை பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம்

சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அணைக்கரை பாலத்தில் திங்கள்கிழமை முதல் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் பஸ் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தஞ்சை மாவட்டம் அணைக்கரையில் உள்ளது கீழணை. இந்த அணைக்கு கல்லணையிலிருந்து கொள்ளிடம் வழியாக நீர் வருகிறது. கீழணை பாசனம் மூலம் கடலூர், தஞ்சை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் 1.50 லட்சம் ஏக்கர் வேளாண் பாசனம் நடைபெறுகிறது.கீழணையில் அரியலூர், கடலூர், தஞ்சாவூர் மாவட்டங்களை இணைக்கும் வகையில் பிரதான பாலம் உள்ளது. இந்த பாலம் வலுவிழந்ததால் பாலத்தில் சில ஆண்டுகளாக கனரக வாகனங்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டு கார், வேன் மட்டும் இயக்கப்பட்டு வந்தது.

பிப்ரவரி 23, 2011

முதல்முறையாக 150 ரூபாய் நாணயம் வெளியாகிறது

டெல்லி: இந்தியாவின் நாணய வரலாற்றில் முதல்முறையாக, 150 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிடுகிறது.

வருமான வரித்துறை தொடங்கப்பட்டு, 150 ஆண்டுகள் ஆவதை குறிக்கும் வகையில், இந்த சிறப்பு நாணயம் வெளியிடப்படுகிறது.

வருகிற 28-ந் தேதி, பாராளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி பொது பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு இந்த நாணயத்தை வெளியிடுகிறார்.

ஓசோன் ஓட்டையால் அடுத்த 10 ஆண்டுகளில் கடல் மட்டம் அதிகரிக்கும்

ஓசோன் எனப்படும் பாதுகாப்பு வளையம் பூமியை நேரடியாக சூரியக் கதிர்கள் தாக்காமல் பார்த்துக் கொள்கிறது. இந்த படலத்தில் ஓட்டை விழுவது மனிதர்களுக்கு தோல் நோய் உள்பட பல நோய்களை உண்டாக்குகிறது.

மேலும் பூமி வெப்பத்தை அதிகரிக்கிறது. இதனால் ஆர்ட்டிக், அன்டார்டிக் துருவ பகுதிகளில் பனி மலைகள் உருகி கடல் மட்டம் உயரும் அபாயம், தட்பவெப்ப நிலை மாற்றம், நீர் மாசுபாடு என பல பாதிப்புகள் ஏற்படுகின்றன.

இவ்வாறு ஏற்படும் நீர் மாசுபாடு பல்வேறு நோய்களையும் ஏற்படுத்தும் என்று எச்சரிக்கிறது. அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் சுற்றுச் சூழல் ஆராய்ச்சி நிறுவனம் உலக வெப்பமயமாதல் குறித்து சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தியது.