Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

செப்டம்பர் 07, 2013

உலகிலேயே மிகப்பெரிய எரிமலை கண்டுபிடிப்பு!

ஹூஸ்டன், செப். 7- உலகிலேயே மிகப் பெரிய எரிமலை ஜப்பான் நாட்டிற்குக் கிழக்கே 1,609 கி.மீ தூரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமு மசிஃப் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த எரிமலை சூரிய மண்டலத்தில் இரண்டாவது பெரிய எரிமலை யாகும். செவ்வாய்க்கிரகத்தில் இருக்கும் முதல் பெரிய எரிமலையாகக் கருதப்படும் ஒலிம்பஸ் மோன்ஸ் இதைவிட 25 சதவிகிதம் பெரியதாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.

130-145 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் உலகின் நீர்ப்பரப்புக்கடியில் அமைந்திருந்த ஷட்ஸ்கி ரைஸ் என்ற மலைத்தொடரில் இருந்த பல எரிமலைகள் வெடித்ததன் மூலம் இந்த எரிமலை உருவாகியிருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர் கள் கருதுகின்றனர். பரப்பளவில் இங்கிலாந்து தீவுகள் அல்லது நியூமெக்சிகோ மாநிலத்தை இது ஒத்துள்ளது. உருவாகிய சில மில்லியன் ஆண்டு களிலேயே செயலிழந்து போன இந்த எரிமலை 310,798 சதுர கி.மீ பரப்பளவு கொண்டதாக உள்ளது.

உலகில் உள்ள செயல்படும் எரிமலைகளிலேயே
பெரியதாகக் கருதப்படுகின்ற ஹவாய் தீவில் இருக் கும் மவுனா லோவா 5,179 சதுர கி.மீ பரப்பளவுதான் கொண்டது. இதனுடைய அளவு தமு மசிஃபைக் கணக்கிடும்போது 2 சதவிகிதம்தான் இருக்கும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...