Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

செப்டம்பர் 05, 2013

பாரத ரிசர்வ் வங்கி கவர்னராக ரகுராம் ராஜன் பொறுப்பேற்பு!

பாரத ரிசர்வ் வங்கியின் (ஆர்.பீ.ஐ) கவர்னர் டீ.சுப்பாராவின் 5 ஆண்டு பதவிக் காலம் நேற்று நிறைவடைந்தது. இதனையடுத்து புதிய கவர்னராக ரகுராம் ராஜன் பொறுப்பேற்றார்.

பொருளாதார வல்லுனர் ரகுராம் ராஜன் பன்னாட்டு நிதியத்தில் தலைமை பொருளாதார வல்லுனராக இருந்தவர். ரிசர்வ் வங்கியின் 23–வது கவர்னராக பொறுப்பேற்றுள்ள ரகுராம் ராஜனுக்கு வயது 50. இவ்வளவு இளவயதில் ஆர்.பீ.ஐ.யின் மிக உயர்ந்த பதவியில் அமர்ந்த மிகச் சிலரில் இவரும் ஒருவர். நேற்று டீ.சுப்பாராவிடமிருந்து சம்பிரதாயப்படி பொறுப்பை பெற்று, அதற்கான ஆவணங்களில் கையொப்பமிட்டார். பின்னர் இருவரும் மகிழ்ச்சியுடன் கைகுலுக்கி, கட்டித் தழுவிக் கொண்டனர்.

ரிசர்வ் வங்கி தலைமை அலுவலகத்தை விட்டு வெளியே வந்த சுப்பாராவ், ‘‘பத்து நிமிடங்களுக்கு முன்னால் ரகுராம் ராஜனிடம் பொறுப்பை ஒப்படைத்தேன். தற்போதைய கடினமான சூழ்நிலையில் ரிசர்வ் வங்கியை வழிநடத்திச் செல்வதற்கு இவரை விட பொருத்தமான ஒருவரை நாம் பெற்றிருக்க முடியாது’’ என்று தெரிவித்தார். வர்த்தக பற்றாக்குறை அதிகரிப்பால், நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்துள்ளது. மேலும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு
கடுமையாக வீழ்ச்சி கண்டுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் குறைந்துள்ளது. இதுபோன்ற சவால்களுக்கு மத்தியில் ரிசர்வ் வங்கியின் கவர்னராக ரகுராம் ராஜன் பொறுப்பு ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...