Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜனவரி 26, 2013

ஆர்.எஸ்.எஸ். அமைப்பைப் போல இந்தியாவில் மூன்று முறை தடை செய்யப்பட்ட அமைப்பு வேறு உண்டா? - கி.வீரமணி !!

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்துத்துவா அமைப்புகள் இந்து பயங்கரவாதத்தினை முன்னிறுத்தி நடத்துவதாகவும், அதற்காக பயிற்சிகள் அளிப்பதாகவும் உள்துறை மந்திரி சுசில்குமார் ஷிண்டே கூறியிருப்பதை எதிர்த்து பாரதீய ஜனதா, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் வானத்திற்கும் பூமிக்குமாக குதித்து ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். அதற்கு அவர் மன்னிப்புக் கோர வேண்டும், இல்லையேல் 24-ந் தேதி கிளர்ச்சி, கண்டன ஆர்ப்பாட்டம் செய்வோம் என்றும் ஆர்ப்பரித்துள்ளனர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பைப் போல இந்தியாவில் மூன்று முறை தடை செய்யப்பட்ட அமைப்பு வேறு உண்டா? ஷிண்டே உள்துறை மந்திரி. ஆதாரங்கள் இல்லாமலா அவர் பேசுவார்? ஷிண்டே தாழ்த்தப்பட்ட சமுதாயத்தவர் உள்துறை மந்திரியாக இருப்பது என்பது உயர் சாதிவர்க்கத்திற்கு உறுத்தலாகத் தானே இருக்கும். அதற்காகத்தான் இந்தப் பதவி விலகல் கூச்சல் போலும். சுசில்குமார் ஷிண்டே காவி தீவிரவாதம் குறித்து கூறியதில் தவறு என்ன? ஷிண்டேவின் கருத்துகண்டு இப்படிக் கூறுவது எதைக் காட்டுகிறது? நடுநிலையாளர்கள் ஆழ்ந்து சிந்திக்கட்டும்! இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...