Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜனவரி 05, 2013

விமான டிக்கெட்டை செல்போனில் காண்பித்து பயணம் செய்யலாம்

ரெயில்களில் முன்பதிவுசெய்து பயணம் செய்யும் பயணிகள் டிக்கெட் பரிசோதகர் வரும்போது தங்கள் பயணச்சீட்டை காண்பிக்க வேண்டும். ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களும் இதேபோன்று ஆன்லைன் முன்பதிவு சீட்டை டிக்கெட் பரிசோதகரிடம் காட்ட வேண்டும். ஆன்லைனில் முன்பதிவு செய்யும்போது பி.என்.ஆர். எண்ணுடன் பயண சீட்டு விவரங்கள் செல்போன் எண்ணுக்கும் அனுப்பப்படும்.

 இந்த நிலையில், பயணச்சீட்டு தாள் வீணாவதை தடுக்கவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், பயணச்சீட்டு விவரங்களை டிக்கெட் பரிசோதகரிடம் செல்போனில் காண்பித்தே பயணம் செய்யும் வசதியை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. ரெயில் பயணிகள் மத்தியில் இந்த புதிய முறைக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. செல்போனிலேயே டிக்கெட் விவரங்களை காண்பித்துவிடுவதால், டிக்கெட்டை எடுத்து வந்திருக்கிறோமா? மறந்துவிட்டோமா? என்ற சந்தேகமோ, பரபரப்போ ஏற்படாததால் ஆன்லைனில் முன்பதிவுசெய்து பயணம் செய்யும் பயணிகள் தற்போது இந்த வசதியைத்தான் அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள். அடையாள அட்டையை மட்டும் காண்பித்தால் போதுமானது. இந்த நிலையில், பயணச்சீட்டு விவரங்களை செல்போனில் காண்பித்து பயணம் செய்யும் வசதி சென்னை உள்பட அனைத்து விமான நிலையங்களிலும் கடந்த 1-ந்தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 ரெயில்வே துறையை போன்று பயணச்சீட்டை பயன்படுத்துவதால் பேப்பர் வீணாவதை தடுக்கவும், மின்சேமிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் மத்திய விமான போக்குவரத்து பாதுகாப்புத்துறை இந்த புதிய முறையை கொண்டுவந்துள்ளது. பயணச்சீட்டு விவரங்கள் கொண்ட தகவலை செல்போனில் காண்பித்தோ, டேப்லெட் அல்லது லேப்டாப்-ல் காட்டியோ பயணிகள் விமான நிலையத்திற்குள் சென்றுவிடலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்பிறகு வழக்கமான முறையில், போர்டிங் பாஸ் பெற்றுக்கொண்டு, பாதுகாப்பு சோதனை முடிந்து விமானத்தில் பயணம் செய்யலாம். கர்நாடகா உள்பட ஒருசில மாநிலங்களில் அரசு போக்குவரத்துக்கழகங்களிலும் இத்தகைய வசதி
நடைமுறையில் உள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களிலும் முன்பதிவு பயணசீட்டு விவரங்களை செல்போனில் காண்பித்து பயணம் செய்யும் வசதியை கொண்டுவரவேண்டும் என்றும் பயணிகள் எதிர்பார்க்கிறார்கள்.
-SOURCE:Viduthalai

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...