Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

செப்டம்பர் 30, 2011

சுவிட்சர்லாந்திலும் பர்தாவுக்குத் தடை!

பெர்ன்:பிரான்ஸ்,பெல்ஜியம் நெதர்லாந்தை தொடர்ந்து சுவிட்சர்லாந்திலும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருப்பதாக காரணங்காட்டி பர்தாவுக்குத் தடை விதிக்கப்படுகிறது.

பொது இடங்கள், பொது போக்குவரத்தின் போது, முகத்தை மூடி அணியும் பர்தா அணிவதற்கு தடைவிதிக்கும் சட்ட மூலம் சுவிட்சர்லாந்தில் பர்தா தடை அமுலுக்கு வருகிறது.

இதற்கான அங்கீகாரத்தை சுவிஸ் பாராளுமன்றம் வழங்கியுள்ளது. சுவிட்சர்லாந்தின் வலதுசாரிக் கட்சியான எஸ்.வி.பி கட்சியினால், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இதற்கான வடிவம் முன் வைக்கப்பட்டது. அக்கட்சியின் உறுப்பினர் ஒஸ்கார் பிறேசிங்கர் இதனை தனது கட்சியின் சார்பில் சபையில் முன்மொழிந்திருந்தார்.

இச்சட்டத்திற்கு ஆதரவாக 101 வாக்ககளும், எதிராக 77 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டன. பெரும்பான்மை வாக்கின் அடிப்படையில் இச்சட்டம் அரசின் அங்கீகாரத்தைப் பெற்று நடைமுறைக்கு வருகிறது

செப்டம்பர் 29, 2011

அடுத்த ஆண்டு முதல் பள்ளிகளில் ”டிரெமஸ்டர் சிஸ்டம்” - அரசு உத்தரவு!

2012-13ம் கல்வியாண்டு முதல் 1-8 வகுப்புகளுக்கு கிரேடு முறை அமல்படுத்தப்படுகிறது. 2013-2014ம் கல்வியாண்டில் 9 மற்றும் 10ம் வகுப்புகளுக்கும் கிரேடு முறை அறிமுகப்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

பள்ளி்க் குழந்தைகள் தேவைக்கு அதிகமாக புத்தகச் சுமையை தூக்குவதால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளை குறைக்கும் நோக்கத்துடன், வரும் கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் முப்பருவ முறை (Trimester pattern) அறிமுகப்படுத்தப்படும். முழுக் கல்வியாண்டிற்குரிய பாடப் புத்தகங்கள் மூன்று பருவங்களுக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பருவ முடிவிலும் தொடர் மற்றும் கூட்டு மதிப்பீட்டுடன் கூடிய தேர்வுகள் நடத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார்.
இந்நிலையில் மாணவர்கள் மொட்டைப் மணப்பாடம் செய்து மதிப்பெண் வாங்குவதற்கு பதிலாக அவர்களின் சிந்திக்கும் திறனை ஊக்குவிக்கும் வகையில் கிரேடு முறையை அரசு அறிமுகப்படுத்தவிருக்கிறது...

இது குறித்து தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் டி. சபீதா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது,
பள்ளி மாணவர்கள் குருட்டு மனப்பாடம் செய்து தேர்வு எழுதி மதிப்பெண் பெறும் முறையை மாற்றி அவர்களின் சிந்திக்கும் திறனை ஊக்குவிக்கும் வகையில் தொடர் மற்றும் ஒட்டுமொத்த மதிப்பீட்டு முறையை (கிரேடு சிஸ்டம்) கொண்டு வருவது தொடர்பாக தமிழக அரசு,

கனவு காண்பதால் மூளை சுறுசுறுப்படையும்!

ஏதாவது தவறு செய்துவிட்டாலோ, அல்லது நினைவில்லாமல் மறந்துவிட்டாலோ பிறரிடம் இருந்து முதலில் வரும் கேள்வி என்ன புத்தி மழுங்கிப் போச்சா என்பதுதான். அந்தளவிற்கு மனிதர்களுக்கு தலைமைச் செயலகமான மூளையின் பங்கு முக்கியமானது.

மனிதர்களுக்கு வயசாக வயசாக, ஞாபக மறதி, தோல் சுருக்கம், நடை தளர்ச்சி, மூட்டுவலி இப்படி எத்தனையோ பிரச்சினைகள் வரத்தொடங்கும். அவற்றை தவிர்க்க முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் முதுமையினால் ஏற்படும் நோய்களை ஏற்றுக்கொள்ளும் மனமானது வயசு ஏற ஏற அறிவும் கூட வளறவேண்டும் என்றுதான் நினைக்கிறது.

எனவே வயது முதிர்ச்சியுடன் சேர்த்து, அறிவு முதிர்ச்சியும் இருக்க வேண்டும் என்பதற்காக விஞ்ஞானப்பூர்வமான ஆதாரங்களோட, பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில முத்தான 10 வழிகளை சமீபத்துல ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அவைகளை உங்களுக்காகக் கொடுத்துள்ளோம்.

இன்று[செப்-30] உலக இதய நாள் [World Heart Day] : ஐந்தில் ஒருவர் மாரடைப்பால் மரணிக்கிறார்

துபாய்:இன்று உலக இதய நாள்(World Heart Day), ஐந்தில் ஒருவர் மாரடைப்பால் மரணிப்பதாக அமீரக ஆரோக்கியத் துறை அறிவித்துள்ளது.

19% மக்கள் மட்டுமே உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான உடற்பயிற்சி செய்வதாகவும் அது கூறியுள்ளது.

இன்று உலகில் மாரடைப்பே ஆட்கொல்லி நோயாக மனிதர்களை பயமுறுத்தி வருகிறது, அதிகமான மக்கள் இருதய சம்பந்தமான நோய்களிலாயே மரணிப்பதாக உலக சுகாதார துறையும் அறிவித்துள்ளது.

உயர் இரத்த அழுத்தம், உடலில் உள்ள சிதையா கொழுப்பு, ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள்,போதிய உடற்பயிற்சி இல்லாமை போன்ற காரணங்களால்தான் இருதய சம்பந்தமான நோய்கள் தாக்குவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றது.

செப்டம்பர் 28, 2011

50,000 இந்தியர்களை விடுவித்தது சவூதி அரேபியா அரசு

சவூதி அரேபியாவில் விசா காலம் முடிந்த பின்னும் மறைமுகமாக வசித்து வந்த 50,000க்கும் மேற்பட்ட இந்தியர்களை அந்த நாடு விடுவித்தது. இதையடுத்து அவர்கள் நாடு திரும்பினர்.

எண்ணெய் வளமிக்க நாடான சவூதி அரேபியா-வுக்கு, இந்தியா உட்பட பல வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பலதரப்பட்ட வேலைகளுக்கு செல்கின்றனர். அவர்களுக்கு அங்கு வசிக்க குறிப்பிட்ட ஆண்டுகள், அரசு அனுமதித்து விசா வழங்குகிறது.

இதில் திறமையுள்ள மக்கள் தொடர்ந்து தங்கள் விசா காலத்தை நீட்டிக் கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் சிலருக்கு விசா காலம் நீட்டித்து கிடைக்காவிட்டாலும், தொடர்ந்து அங்கேயே வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அவ்வப்போது நடக்கும் ஆய்வுகளில் அந்நாட்டு அதிகாரிகளிடம் சிக்கி, சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

லால்பேட்டையில் குடும்பத்துடன் இஸ்லாத்தை ஏற்ற தம்பதியர்!

லால்பேட்டை: அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடல்லூர் மாவட்டம் லால்பேட்டை அருகிலுள்ள பெரியார் நகரைச் சேர்ந்த கோபி-நித்யா தம்பதியினர் கடந்த 17.09.2011 அன்று தமது இரு பெண் குழந்தைகளுடன் இயற்கை மார்க்கமான சத்திய இஸ்லாத்தை ஏற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!

தங்கள் பெயர்களை முறையே சாதிக், ஷம்சுன்னிசா, சுமையா மற்றும் ஆயிஷா என்று தேர்ந்தெடுத்துக் கொண்டனர்.
எல்லாம் வல்ல அல்லாஹ் இவர்களுக்கு அருள் செய்வனாக!

thanks:பரங்கிப்பேட்டை TNTJ

தொல்லை அழைப்புகள் இனிமேல் இல்லை

டிராய் உத்தரவு இன்று முத்த அமலுக்கு வந்தது. தொல்லை அழைப்புகள் இனிமேல் இல்லை. மீறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை.
source:Dinakaran

செப்டம்பர் 27, 2011

சௌதியில் வாக்களிக்கவும், தேர்தலில் நிற்கவும் பெண்களுக்கு உரிமை

சௌதியரேபியாவில் நகராட்சித் தேர்தல்களில் பெண்கள் வாக்களிக்கவும், போட்டியிடவும் உரிமை வழங்கப்படவிருப்பதாக அந்நாட்டின் மன்னர் அப்துல்லா அறிவித்துள்ளார்.
அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்குவதற்காகவுள்ள ஷூரா மன்றத்திற்கு நியமிக்கப்படுகின்ற உரிமையும் பெண்களுக்கு வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய ஷரியா சட்டத்தை மீறாத வகைகளில் பெண்களால் சமூகப் பங்களிப்பு செய்ய முடியும் என்றால், அதனை நாங்கள் தடுக்க மாட்டோம். அப்துல்லாமரபும் பழமைவாதமும் கடுமையாக பேணும் நாடான சௌதியரேபியாவில், பெண்களுக்கு கூடுதலான உரிமைகள் கொடுக்கப்பட வேண்டும் என நெடுங்காலமாக குரல்கொடுத்துவருகின்ற ஆர்வலர்கள் மன்னரின் இந்த அறிவிப்புகளைப் நிச்சயம் வரவேற்பார்கள்.

கோடிக்கணக்கில் பணம் கொடுத்து தீவிரவாதிகளை உருவாக்கியது அமெரிக்காதான்’ – ஹினாவின் பேச்சால் பாக்.அமெரிக்க உறவில் விரிசலா?

வாஷிங்டன்:’கோடிக்கணக்கில் பணம் கொடுத்து தீவிரவாதிகளை உருவாக்கியது அமெரிக்காதான்’ என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரப்பானி கர் கூறியுள்ளார்.

ஆஃப்கானிஸ்தானில் தலிபான் இயக்கத் தலைவர் ஹக்கானி நெட்வொர்க்குக்கு பாகிஸ்தான் உளவு நிறுவனம் ஐ.எஸ்.ஐ உதவி செய்கிறது. அதை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து எச்சரித்து வருகிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ஐ.நா. பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். அப்போது அவர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: “ஆப்கானிஸ்தான் காபூலில் கடந்த வாரம் அமெரிக்க தூதரகம் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்திய பிறகு பாகிஸ்தான் அமெரிக்க உறவு பாதிக்கப்பட்டுள்ளது உண்மை தான்.

ஆனால் அமெரிக்கர்கள் மீதான தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் காரணமல்ல. தீவிரவாதத்தால் பாகிஸ்தானின் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

செல்போன் நிறுவனங்களின் தேவையற்ற விளம்பர அழைப்புகளுக்குத் தடை

டெல்லி:செல்போன் இணைப்புச் சேவைகளில் ஈடுபட்டுள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் விளம்பரங்கள் சேவை விபரங்கள், அழைப்பு திட்டங்கள் என இடையிடையே அழைப்பு மற்றும் எஸ்.எம்.எஸ்.களை அனுப்புகின்றன. இதனால், சிலர் கட்டண சேவைகளில் சிக்கி பணத்தை இழப்பதும் உண்டு.

இந்த பிரச்சனையைத் தீர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. “தேவையற்ற அழைப்புகளின் பதிவு” (Registration of unwanted calls) என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி தேவையற்ற அழைப்புகளை விரும்பாத நுகர்வோர் இதில் பதிவு செய்யுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

இதில் பதிவு செய்ய 1909 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது www.nccptrai.gov.in என்ற இணையதளத்தில் சென்று உங்கள் செல்போன் எண்ணை பதிய வேண்டும். நீங்கள் பதிவு செய்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு விளம்பர அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ்-கள் வந்தால் நீங்கள் பயன்படுத்தும் செல்போன் நிறுவனத்திடம் புகார் கொடுக்கலாம். அவ்வாறு புகார் கொடுக்கையில் விளம்பர அழைப்பு வந்த நேரம், தேதி ஆகியவற்றையும் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் ஆன்லைனிலும் புகார் கொடுக்கலாம்.

தொல்லை செய்ய வேண்டாம் என்று பதிவு செய்தவர்களுக்கு விளம்பர அழைப்புகள் வந்தால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரூ.2.5 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.

பள்ளித் தேர்வு முறையில் மாற்றம் : பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு

சென்னை. செப்.27,

பள்ளித் தேர்வு முறையில் எழுத்துத் தேர்வு முறைக்குப் பதிலாக மதிப்பீட்டு முறை அமலுக்கு வருகிறது. அதாவது மதிப்பெண் போடும் முறைக்குப் பதிலாக ஏ, பி, சி, டி, இ என கிரேடு வழங்க முடிவு செய்துள்ளது.

அடுத்த கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டின் அனைத்துப் பள்ளிகளிலும் 1 முதல் 8-ஆம் வகுப்புகளுககு புதிய கல்விமுறையை நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்திருக்கிறது.

மேலும் 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளுக்கு 2013-14-ஆம் ஆண்டுகளில் இப்புதிய முறை விரிவுபடுத்தப்படும் எனவும் அறிவித்துள்ளது.

செப்டம்பர் 26, 2011

பெரியம்மைக்கு மருந்து உருவான வினோதம்

1800 வரை பெரியம்மை நோய் ஒரு கொடிய உயிர் கொல்லி நோயாகவும், விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் இருந்து வந்தது. முகம், கை, கால்களில் இந்நோய் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் அருவருப்பான தழும்புகளைப் பெற்றிருந்தனர். கண்களில் இந்நோய் வந்தால் பார்வை பறி போய்விடும் நிலையும் இருந்தது.

எட்வர்டு ஜென்னர் கி.பி. 1800 இறுதியில் பெரியம்மை நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை பெரும்பான்மை மக்கள் இந்நோய்க்கு ஆளாகி வந்தனர்.

எட்வர்டு ஜென்னர் 1749 – ஆம் ஆண்டு இங்கிலாந்திலுள்ள பெர்க்கிலி என்ற நகரில் பிறந்தார். மருத்துவப் பயிற்சி முடித்த இவர் தனது ஊரிலேயே தொழில் செய்து வந்தார்.

பெரியம்மை நோயைக் குணப்படுத்த ஜென்னர் இருபது ஆண்டுகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இதன் மூலம் ஏற்கனவே இந்நோய் ஏற்பட்டு பிழைத்தவர்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருப்பதையும், மீண்டும் இந்நோய் அவர்களைத் தாக்குவது இல்லை என்பதையும் கண்டறிந்தார்.

1796 – ஆம் ஆண்டு மே மாதத்தில் ஒரு நாள் ஜென்னர் அவர்களின் வீட்டிற்குப் பால் கொண்டு வரும் சாரா நீல்ஸ் என்கிற பெண்மணி

செப்டம்பர் 25, 2011

தீவிரவாதிகளை உருவாக்கியது யார்? ஹினா ரபானி பதிலடி!

கோடிக்கணக்கில் பணம் கொடுத்து தீவிரவாதிகளை உருவாக்கியது அமெரிக்காதான்என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரபானி கர் கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாத இயக்க தலைவர் ஹக்கானி நெட்வொர்க்குக்கு பாகிஸ்தான் உளவு நிறுவனம் ஐஎஸ்ஐ உதவி செய்கிறது. அதை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து எச்சரித்து வருகிறது. மேலும், பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் அஷ்பக் பர்வேஸ் கயானியை சந்தித்து பேச, அமெரிக்க ராணுவ தளபதி ஜெனரல் ஜேம்ஸ் மட்டிஸ் இஸ்லாமாபாத் வந்துள்ளார்.

இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரபானி நேற்று டிவிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

இன்டர்நெட்டில் புகார் தெரிவிக்கலாம்: மாவட்ட காவல்துறை!

கடலூர்:பொதுமக்கள் புகார் தெரிவிக்க கடலூர் மாவட்ட காவல் துறையில் இன்டர்நெட் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.எஸ்.பி., பகலவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பொதுமக்கள் தங்கள் புகார்களையும், தகவல்களையும் தெரிவிக்கும் வகையில் "இண்டர்நெட்' வசதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் ஏற்படுத்த வேண்டுமென டி.ஜி.பி., ராமானுஜம் உத்தரவிட்டார்.அதன் பேரில் கடலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களின் புகார்கள் மற்றும் சொல்ல வேண்டிய தகவல்களை தெரிவிக்க விரும்பினால் www.tnpolice.gov.in என்ற இன்டர்நெட் மூலமாக புகாரை அனுப்ப "Mail your complaints'' எனும் லிங்க்- ஐ கிளிக் செய்து அனுப்பலாம்.

அவ்வாறு பெறப்படும் புகார்கள், தகவல்கள் எஸ்.பி.,க்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

source:dinamalar

செப்டம்பர் 23, 2011

கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான மனுதாக்கல் இடம் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான மனு வழங்கப்படும் இடம் மற்றும் மனு தாக்கலுக்கான இடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அக்., 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்கும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையொட்டி மனுக்கள் நேற்று முதல் வரும் 29ம் தேதி காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வழங்கப்படுகிறது.

கடலூர் மாவட்ட ஊராட்சி உறுப்பினர், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர், ஊராட்சித் தலைவர் ஆகிய பதவிகளுக்கான மனு அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வழங்கப்படும். கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான மனு அந்தந்த கிராம ஊராட்சிகளில் உள்ள ஊராட்சி அலுவலகத்தில் வழங்கப்படும்.

நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான மனு அந்தந்த நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட மனுக்கள், மனு வழங்கப்பட்ட அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களால் பெற்றுக் கொள்ளப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

முஸ்லிம் என்பதற்காக பள்ளி மாணவனைத் தாக்கிய ஆஸி. இனவெறியர்கள்

சிட்னி: தான் ஒரு முஸ்லிம் என்பதற்காக உடன் பயிலும் சக மாணவர்கள் 20 பேர் தன்னை கெட்ட வார்த்தைகளால் திட்டி தாக்கினர் என்று சிட்னி பள்ளி மாணவன் ஹமித் மாமோசாய் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய தலைநகர் சிட்னியில் உள்ள அஸ்கித் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிப்பவர் ஹமித் மாமோசாய் (15). அவரை அதே பள்ளியில் படிக்கும் 20 மாணவர்கள் தாக்கியுள்ளனர்.

இது குறித்து அவர் கூறுகையில்,

20 பேர் என்னைத் தாக்கினர். அடி நன்றாக அடி. அவனுக்கு இது தேவை தான். ஏய், தீவிரவாதி எங்கிருந்து வந்தாயோ அங்கேயே சென்றுவிடு. அங்கு போய் எதையாவது வெடிக்கச் செய் என்று அந்த மாணவர்கள் கூறினார்கள் என்றார்.

இந்த தாக்குதலில் ஹமித் சுயநினைவை இழந்தார். உடனே சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு பெரிய காயம் ஏதும் இல்லை.

புதிய அலுவலகம் தொடங்கிய பிறகும் ஆன்- லைனில் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பதில் குளறுபடி: பொதுமக்கள் அவதி

வெளிநாடுகளுக்கு பயணம் செல்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வேலைக்காகவும், உயர் கல்விக்காகவும், சுற்றுலாக்களுக்கும் பல்வேறு நாடுகளுக்கு சென்று வருகிறார்கள். இதனால் சென்னை சாஸ்திரி பவனில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் எப்போதும் பரபரப்பாகவும், பிசியாகவும் காணப்படும்.

நீண்ட வரிசையில் காலையில் இருந்து காத்து நின்று பாஸ் போர்ட்டிற்கு விண்ணப்பிக்கும் நிலை இருந்தது. கூட்ட நெரிசலை குறைப்பதற்காக மத்திய வெளியுறவுத்துறை சென்னையில் 3 இடங்களில் புதிதாக பாஸ்போர்ட் அலுவலகங்களை திறக்க அனுமதி அளித்தது. பொதுமக்கள் சிரமம் இல்லாமல் பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பதற்காக மூன்று பகுதிகளாக பிரித்து கடந்த 16-ந்தேதி முதல் புதிய பாஸ்போர்ட் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

ஃபலஸ்தீன் தனி நாடு கோரிக்கை: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடிப்போம் – ஒபாமா

நியூயார்க் ஃபலஸ்தீனுக்கு சுதந்திர நாடு கிடைப்பதற்க்கான எல்லா முயற்சிகளையும் ஐநா சபையில் வீட்டோ அதிகாரம் மூலம் முறியடிப்போம் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா ஃபலஸ்தீன அதிபர் மஹமூத் அப்பாஸிடம் தெரிவித்தார்.

நியூரார்கில் இருவரும் நடத்திய பேச்சுவார்த்தையில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை மீண்டும் அவர் அறிவித்தார். (இதன் மூலம் அமெரிக்காவின் சுயரூபமும், குள்ளநரித்தனவும் மீண்டும் வெளிப்பட்டுள்ளது.)

ஆனால் தனி சுதந்திர நாடு என்ற இலட்சியத்தை கைவிடமாட்டோம், அதை அடையும் எல்லா முயற்சிகளோடு முன்னேறிச் செல்வோம் என்று அப்பாஸ் தெரிவித்தார்.

தடையை மீறி பர்தா அணிந்த முஸ்லிம் பெண்களுக்கு பிரான்ஸ் நீதிமன்றம் அபராதம்

பாரீஸ்:பிரான்ஸ் நாட்டில் முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி அணியும் பர்தா உடைக்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல் தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடையை மீறி பர்தா அணிந்து வந்த இரண்டு பெண்களுக்கு முதன்முதன்முறையாக பிரான்ஸ் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

இதுவரை தடையை மீறிய பெண்களுக்கு காவல்துறையினர் உடனடியாக அபராதம் விதித்திருந்தாலும் நீதிமன்றம் இவ்வாறான தடைக்கு அபராதம் விதிப்பது இதுவே முதல் முறையாகும்.

நஜாத் நயித் அலி(36), ஹிந்த் அமாஸ்(32) ஆகிய அந்த இரு பெண்களுக்கு முறையே 80 மற்றும் 120 யூரோக்கள் அபராதம் விதிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்தில் முறையிடப்போவதாக இரு பெண்களும் தெரிவித்துள்ளனர்.

செப்டம்பர் 22, 2011

சட்டமன்ற தேர்தலுடன் முறிந்துபோன கூட்டணி: தனித்து களம் காணும் அரசியல் கட்சிகள்

சென்னை, செப்.22-
தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த தேர்தலில் பெரிய கட்சிகள் முதல் சிறிய கட்சிகள் வரை தனித்தனியே தேர்தல் களம் காணும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளின் தலைமையில் கூட்டணிகள் அமைத்து மற்ற கட்சிகள் தேர்தலை சந்தித்தன. அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க., கம்யூனிஸ்டு கட்சிகள், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருந்தன.

இந்த கட்சிகள் எதனையும் எதிர்பாராமல் அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல்களை தொடர்ந்து வெளியிட்டது. இதனால் கூட்டணி கட்சியான தே.மு.தி.க. கடும் அதிர்ச்சியில் உள்ளது. கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தையில் இதுவரை பங்கேற்காத அக்கட்சி தனித்து தேர்தலை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் கிராம உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள பதவிகள் விவரம் ஒன்றியம் வாரியாக

கடலூர் மாவட்டத்தில் கிராம உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள பதவிகள் விவரம் ஒன்றியம் வாரியாக

ஒன்றியம் ஊராட்சிகள் ஒன்றியக்குழு மாவட்டக்குழு உறுப்பினர் உறுப்பினர்

1. கடலூர் 51, 33, 3
2. அண்ணாகிராமம் 42, 22, 2
3. பண்ருட்டி 42, 25, 3
4. குறிஞ்சிப்பாடி 49, 28, 3
5. கம்மாபுரம் 53, 24, 2
6. விருத்தாசலம் 51, 19, 2
7. நல்லூர் 64, 21, 2
8. மங்களூர் 66, 24, 2
9. காட்டுமன்னார்கோவில் 55, 18, 2
10. குமராட்சி 57, 20, 2
11. கீரப்பாளையம் 63, 20, 2
12. புவனகிரி 47, 15, 2
13. பரங்கிப்பேட்டை 41, 18 ,2

மொத்தம் 681, 287, 29

கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு

உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை கலெக்டர் திங்கட்கிழமை வெளியிட்டார்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்கள், 16 பேரூராட்சிகள் மற்றும் ஐந்து நகராட்சிகளில் தேர்தல் நடத்துவதற்கான ஆயத்த ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக மாவட்ட வாக்காளர் பட்டியலை திங்கட்கிழமை கலெக்டர் அமுதவல்லி வெளியிட்டார். பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் சடையப்பன் பெற்றுக் கொண்டார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்) சினேகலதா, கடலூர் நகராட்சி கமிஷனர் இளங்கோவன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

வாக்காளர் பட்டியலை வெளியிட்ட கலெக்டர் அமுதவல்லி கூறியது:
நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் அருகில் உள்ள தாசில்தார், ஆர்.டி.ஓ.,விடம் அதற்குரிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்து பெயர் சேர்த்துக் கொள்ளலாம்.

மாவட்டத்தில்

8,21,685 ஆண்கள்,
7,93,791 பெண்கள் மொத்தம் 16,15,476 வாக்காளர்கள் உள்ளனர்.அதில் ஐந்து நகராட்சிகளில் 1,31,524 ஆண் வாக்காளர்களும், 1,32,851 பெண் வாக்காளர்களும் மொத்தம் 2,64,375 வாக்காளர்கள் உள்ளனர்.

இதில்,

கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி மற்றும் சிதம்பரம் ஆகிய நகராட்சிகளில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகமாக உள்ளனர்.

விருத்தாசலம் நகராட்சியில் மட்டும் ஆண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.
அதேப்போன்று மாவட்டத்தில் உள்ள 16 பேரூட்சிகளில்

91,881 ஆண்கள்,
88,094 பெண்கள்
மொத்தம் 1,79,975 வாக்காளர்களும்,

முஸ்லிம் சகோதருக்கு ஒரு வாய்ப்பு-அக்டோபர் 17 ஆம் தேதி ராணுவத்திற்கான நேர்முகத்தேர்வு

அக்டோபர் 17ம் தேதி முதல் 22ம் தேதி வரை ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முகாம் ஈரோட்டில் நடைபெற உள்ளது. இதில் ஈரோடு, கோவை, திண்டுக்கல், தேனி, தர்மபுரி, நாமக்கல், நீலகிரி, கிருஷ்ணகிரி, மதுரை, சேலம், திருப்பூர் உட்பட 11 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொள்ளலாம்.பொதுப்பிரிவில் ராணுவத்தில் சேர ஈரோடு, கோவை, திண்டுக்கல், தேனி, தர்மபுரி, நாமக்கல், நீலகிரி, கிருஷ்ணகிரி, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய 11 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கான முகாம் அக்டோபர் 17 ல் நடைபெறும்.

ராணுவ தொழிற்நுட்ப பதவிக்கு, பிளஸ் 2 வில் இயற்பியல், வேதியியல், கணிதம், ஆங்கிலம் பயின்றவர்கள் விண்ணப்பிக்கலாம். உதவி செவிலியர் பதவிக்கு பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் ஆங்கில பாடங்களில் 50 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

அக்டோபர் 18ம் தேதி ஈரோடு, கோவை, மதுரை, சேலம், கிருஷ்ணகிரி, நீலகிரி மாவட்டங்களை சேர்ந்தவர்களும், 19ம் தேதி ராணுவ முகவர்கள் பதவியில் சேர விரும்புபவர்களும் கலந்து கொள்ளலாம். 20ம் தேதி ராணுவ அலுவலர் ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் பதவிக்கு தேர்வில் கலந்து கொள்ளலாம்.21 மற்றும் 22ம் தேதி மருத்துவ பரிசோதனை மற்றும் ஸ்கிரீன் டெஸ்ட் நடைபெறும்.

நேர்முகத்தேர்வில் கலந்து கொள்பவர்கள் தங்களது பள்ளி சான்று, மதிப்பெண் சான்று, இருப்பிடச்சான்று, சாதிச்சான்று போன்றவற்றை கட்டாயம் எடுத்து வர வேண்டும். 7 பாஸ்போர்ட் சைஸ் போட்டோவும், சான்றொப்பமிடப்பட்ட சான்றிதழ்களின் நகல்களை கொண்டு வர வேண்டும்.

உள்ளாட்சி தேர்தல்: வேட்பாளர்கள் எவ்வளவு செலவு செய்யலாம்?

வேட்பாளர்கள் தேர்தலில் எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்பதை தேர்தல் கமிஷன் நிர்ணயித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

ஊராட்சி வார்டு உறுப்பினர் - ரூ. 3,750

ஊராட்சி தலைவர் - ரூ. 15,000

ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் - ரூ. 37,500

மாவட்ட ஊராட்சி உறுப்பினர் - ரூ. 75,000

பேரூராட்சி, 3-ம் நிலை நகராட்சி தலைவர் - ரூ. 56,250

நகராட்சி மன்ற தலைவர்
(முதல் மற்றும் 2-ம் நிலை) - ரூ. 1,12,500

நகராட்சி தலைவர்:
(தேர்வுநிலை, சிறப்பு நிலை) - ரூ. 2,25,000

மாநகராட்சி மேயர் - ரூ. 5,62,500

சென்னை மாநகராட்சி மேயர் - ரூ.11,25,000

பேரூராட்சி 3-ம் நிலை நகராட்சி வார்டு உறுப்பினர் - ரூ. 11,250

நகராட்சி உறுப்பினர் (முதல் நிலை மற்றும் 2-ம் நிலை - ரூ. 22,500

நகராட்சி மன்ற உறுப்பினர் (தேர்வு நிலை, சிறப்பு நிலை) - ரூ. 56,250

மாநகராட்சி வார்டு உறுப்பினர் (சென்னை நீங்கலாக) - ரூ. 33,750

சென்னை மாநகராட்சி வார்டு உறுப்பினர் - ரூ. 56,250

அரசு கேபிள் "டிவி' நிறுவனத்தில் பணிபுரியவிருப்பம் தெரிவித்து ஏராளமானோர் பதிவு

கடலூர்:அரசு கேபிள் "டிவி' நிறுவனத்தில் தொழில்நுட்ப உதவியாளர்களாக பணிபுரிய விருப்பம் தெரிவித்து 100க்கும் மேற்பட்டோர் நேற்று வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய குவிந்தனர்.தமிழகத்தில் அரசு கேபிள் "டிவி' நிறுவனம் கடந்த 2ம் தேதி முதல் துவங்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைகளை நிர்வகிக்கும் வகையில், டெக்னிக்கல் உதவியாளர்கள், டெக்னீஷியன் உள்ளிட்ட பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளது.அரசு கேபிள் "டிவி' நிறுவனத்தில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் 22ம் தேதிக்குள் அந்தந்த மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தனர். கடந்த 8ம் தேதி முதல் ஏராளமானோர் பதிவு செய்து வருகின்றனர்.இந்நிலையில் கடலூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொழில்நுட்ப உதவியாளர்களாக பணிபுரிய விருப்பம் தெரிவித்து 100க்கும் மேற்பட்டோர் பதிவு செய்ய குவிந்தனர்.

தமிழகத்தில் 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல்: இன்று துவங்குகிறது வேட்புமனு தாக்கல்

சென்னை: தமிழகத்தில், உள்ளாட்சி தேர்தல் இருகட்டங்களாக நடக்கிறது. திருச்சி மாநகராட்சியை தவிர, ஒன்பது மாநகராட்சிகளுக்கு முதல் கட்டமாக அக்டோபர் 17ம் தேதியும், மற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 19ம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது. உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று துவங்குகிறது.

இதுகுறித்து, தமிழக தேர்தல் கமிஷனர் அய்யர், நிருபர்களிடம் நேற்றிரவு கூறியதாவது: தமிழகத்தில், ஒன்பது மேயர், 755 மாநகராட்சி வார்டுகள், 125 நகராட்சி தலைவர்கள், 3,697 நகராட்சி வார்டுகள், 529 பேரூராட்சி தலைவர்கள், 8,303 பேரூராட்சி வார்டுகள், 31 மாவட்ட ஊராட்சி தலைவர்கள், 655 மாவட்ட ஊராட்சி வார்டுகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள், 6,470 ஊராட்சி ஒன்றிய வார்டுகள், 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகள், 99 ஆயிரத்து 333 கிராம ஊராட்சி வார்டுகள் என, ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 983பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. நகர் பகுதிகளான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் தலைவர்களை மக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கின்றனர். எனவே, தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்களைத் தேர்வு செய்ய, வாக்காளர்கள் இரண்டு ஓட்டளிக்க வேண்டும். மாநிலம் முழுவதும் நகர்ப்புற வாக்காளர்களுக்காக முதல்முறையாக ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. கிராமப்புற வாக்காளர்கள், மாவட்ட வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என, நான்கு பேரை தேர்வு செய்யவேண்டும். இதற்கு, ஓட்டுச் சீட்டு முறை பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு தேர்தல் கமிஷனர் கூறினார்.

செப்டம்பர் 21, 2011

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ரப்பானி கொல்லப்பட்டார்

முன்னாள் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ரப்பானி செவ்வாய்க்கிழமையன்று காபூலில் உள்ள அவரது வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டார் என மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

ஆப்கானிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி ரப்பானி. ஆப்கனில் சமாதான பேச்சுவார்த்தைக்கு உருவாக்கப்பட்டுள்ள உயர் அமைதி குழுவின் தலைவராக இருந்து வருகிறார் .குண்டு வெடிப்பு நடந்த போது அவர் தலிபான் பிரதிநிதிகளுடன் பேசி கொண்டிருந்தார் என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன . "ரப்பானி தியாகிவிட்டார் ," என காபூலில் குற்ற புலனாய்வு துறை தலைவர் முகமது ஜாகிர் ஒரு செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அரசு தனது நண்பராக செயல்பட்டு வந்த ரப்பானி கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.ரப்பானி, தலிபான் ஆட்சி அமைப்பதற்கு முன்பாக ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதியாக இருந்தார்.

செப்டம்பர் 20, 2011

உள்ளாட்சித் தேர்தலில் முஸ்லிம் லீக் தனித்து போட்டி

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் தனித்து போட்டியிடப் போவதாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அறிவித்துள்ளது. அக்கட்சியின், உயர்நிலை அரசியல் ஆலோசனைக் குழுக் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. மாநிலத்தலைவர் காதர் மொய்தீன் தலைமையில் நடந்த ஆலோசனையில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவளிக்கப்படும். தமிழக உள்ளாட்சித் தேர்தலில், முஸ்லிம்கள் அதிகம் உள்ள வார்டுகளை, பெண்கள் வார்டாக மாற்றியுள்ளனர். காயல்பட்டினம், கீழக்கரை, கடையநல்லூர், தென்காசி, திருவண்ணாமலை, தேவகோட்டை, குடியாத்தம், ஆம்பூர், குன்னூர், பேர்ணாம்பட்டு, கூத்தாநல்லூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தான், சுழற்சிமுறையில் தனி தொகுதி மற்றும் வார்டுகள் மாற்றப்படும்.

ஆனால், தற்போது ஐந்து ஆண்டுகள் மட்டுமே முடிந்த நிலையில், வார்டு மாற்றம் செய்திருப்பது முஸ்லிம்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தமிழக அரசின் ஏழு, எட்டாம் வகுப்பு உருது பாடப் புத்தகத்தில், நபி மற்றும் கலிபாக்கள் உருவ சித்திரம் வரையப்பட்டுள்ளது. இதை உடனே திருத்துவதுடன், இதற்கு காரணமானோர் மீது, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கூட்டத்திற்கு பின், காதர்மொய்தீன், நிருபர்களிடம் கூறும்போது, "உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை தேர்ந்தெடுத்து, அவற்றில் தனித்து போட்டியிடுவோம்' என்றார்.

ஆண்டுக்கணக்கில் அரியர்ஸ் வைத்துள்ள தனித் தேர்வர்களுக்கு சிக்கல்-20-09-2011

சென்னை: ஆண்டுக்கணக்கில், அரியர்ஸ் வைத்துள்ள, 10ம் வகுப்பு தனித்தேர்வர்கள், பழைய பாடத்திட்டத்தின் கீழ் தேர்வெழுதி தேர்ச்சி பெற, அடுத்த ஆண்டு செப்டம்பர் தேர்வு வரை மட்டுமே கால அவகாசம் உள்ளது.

இந்த கால கட்டத்திற்குள் தேர்ச்சி பெறவில்லை எனில், தேர்ச்சி பெற்ற பாடங்கள் உட்பட அனைத்துப் பாடங்களுக்கும் சேர்த்து, சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ், புதிதாக தேர்வெழுத வேண்டிய நிலை ஏற்படும். பிளஸ் 1, பிளஸ் 2 தவிர, மற்ற அனைத்து வகுப்புகளுக்கும் நடப்பு கல்வியாண்டில், சமச்சீர் கல்வி திட்டம் அமலுக்கு வந்துள்ளன. பள்ளிகளில், 10ம் வகுப்பு பயிலும் மாணவர்கள், நேரடியாக சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ் பொதுத் தேர்வு எழுதுவர்.

20 ஆயிரம் மெகாவாட் திறன் கொதிகலன் தயாரிக்க பெல் முடிவு

புதுடில்லி: வரும் 2012 பிப்ரவரி மாதத்திற்குள் 20 ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட கொதிகலன் தயாரிக்கும் திறனை பெறும் என பெல் நிறுவன நிர்வாக இயக்குனர் பிரசாதா ராவ் கூறியுள்ளார் . பெல் நிறுவனத்தின் 47-வது ஆண்டு கூட்டத்தி் கலந்து கொண்டு பேசும் போது இதனை தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது: 2010-11-ம் ஆண்டுகளில் பெல் நிறுவனத்தின் லாபம் ரூ. 9 ஆயிரத்து 6 கோடியாகும். இந்நிறுவனத்தின் பங்குகளுக்கு அளி்க்கப்படும் வட்டியாக ரூ.ஆயிரத்து 525 கோடி வழங்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் தனியார் மற்றும் அரசு துறைகளுக்கு ஏழுபாய்லர்களும், ஒன்பது டர்போ‌ஜெனரேட்டர்களையும் தயாரித்து வழங்கியுள்ளது. ஆந்திர மாநிலம் ஐதாராபாத்தில் நானோ ‌தொழில்பநுட்படத்தை விரிவாக்கும் விதத்தில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிமையம் அமைக்கப்பட உள்ளது என தெரிவி்த்தார். ஆராய்ச்சி மற்றும்வளர்ச்சி பணிகளுக்காக ரூ.982 ‌‌கோடி முதலீடு செய்யப்பட உள்ளது. இது கடந்த ஆண்டைக்காட்டிலும் 18.5 சதவீதம் கூடுதலாகும் என தெரிவித்துள்ளார்.உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் இருந்து சுமார் 3 ஆயிரத்து 738 ‌கோடி ரூபாய் அளவிற்கு ஏற்றுமதி ஆர்டர் கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பொருளாதார வளர்ச்சி: இந்தியா ,ஜப்பானை முந்துகிறது

புதுடில்லி: வரும் 2013-2014-ம் ஆண்டில் உலகப்பொருளாதார வளர்ச்சியில் இந்தியா, ஜப்பானை மிஞ்சிவிடும் என ஆய்வறிக்கை ஒன்றில் வெளியிடப்பட்டுள்ள தகவலில் கூறப்பட்டு்ள்ளது. இந்தாண்டு மார்ச் நிலவரப்படி உலகப்‌பொருளாதாரத்தில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இதற்கு ‌மொத்த உள்நாட்டு உற்பத்தித்திறனில் பெருமளவு முன்னேற்றம் அடைந்துள்ளதே இதற்கு காரணம். இந்நிலையில் கிரிசில் என்ற பொருளாதார ஆய்வமைப்பின் தலைவரும் பொருளாதார நிபுணருமான சுனில்சின்ஹா கூறியதாவது: கடந்த நவம்பரில் ஜப்பான் , சீனா, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா உலகப்பொருளாதாரத்தில் நான்காவது இடத்தில் இருந்தது. தற்போது இந்திய பொருளாதாரம் 7 முதல் 8 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. முன்பு ஜப்பான் பொருளாதார ரீதியில் வளர்ச்சி அடைந்தது. எனினும் கடந்த மார்ச் மாதம் நிகழ்ந்த சுனாமி தாக்குதலால் அதன் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. இதன்மூலம் வரும் 2013-2014-ம் ஆண்டில் இந்தியா ஜப்பானை மிஞ்சிவிடும். இவ்வாறு அவர் கூறினார்,.

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு தரவேண்டும் – பிரதமருக்கு மாயாவதி கடிதம்

லக்னோ:உத்திர பிரதேச முதல்வர் மாயாவதி முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

அவர் தன் கடிதத்தில் கூறியுள்ளதாவது; ‘முஸ்லிம்கள் சமூகத்தில் மிகவும் பின்தங்கி இருப்பதால் அவர்களுக்கு இட ஒதுக்கீடு அவசியம் தரவேண்டும் என்றும் முஸ்லிம்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அவர்களை மேம்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். தேவைப்பட்டால் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு தர சில கூடுதல் சட்டங்களை அரசு இயற்ற வேண்டும் அதற்கு பஹுஜன் சமாஜ் கட்சி எல்லாவித ஒத்துழைப்பையும் தரும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் இட ஒதுக்கீடு குறித்த கடிதத்தில் மாயாவதி சச்சார் கமிட்டியின் பரிந்துரையை மேற்கோள் காட்டியுள்ளார். மேலும் சச்சார் கமிட்டியின் பரிந்துரைப் படி முஸ்லிம்களின் சமூக நிலையை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தியாவில் பெண் குழந்தைகளின் தத்தெடுப்பு அதிகரிப்பு

புதுடெல்லி:இந்தியாவின் பல பகுதிகளில், பல மதங்களில் பெண் பிள்ளைகளை வெறுக்க கூடிய சூழ்நிலையிலும், பெண் பிள்ளைகளுக்கு பாகுபாடு காட்டக் கூடிய இந்த சூழ்நிலையில் “இருண்ட கண்டத்தில் சூரியனின் வெளிச்சம் போல்” என்று பெண் பிள்ளைகளின் வாழ்வில் பல மாற்றங்கள்.

குழந்தை தத்தெடுப்பு நிறுவனத்தின் கணக்கெடுப்பின் படி, இந்தியாவில் கடந்த சில வருடங்களாக பெரும் அளவில் பெண் பிள்ளைகள் தத்தெடுப்பு அதிகரித்துள்ளது.

இன்று மக்கள் மனதில் பெரும் மற்றம் ஏற்ப்பட்டுள்ளது மகிழ்ச்சித் தரக்கூடிய விஷயம் என்றும், சமூக விளம்பரங்கள், திரைப்படங்கள் மற்றும் அவர்களின் வாழ்வியல் சம்பவங்களே இந்த மன மாற்றத்திற்கு காரணம் என்று ஊடகங்களுக்கு பேட்டி அளித்த மத்திய குழந்தை தத்தெடுப்பு நிறுவனத்தின் செயலாளர் அணு.ஜெ.சிங் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 29 முதல் ஹஜ் புனித ப‌ய‌ண‌ம் தொடக்கம்-தமிழ்நாடு ஹஜ் கமிட்டி

சென்னையிலிருந்து ஹஜ் செல்லும் முதல் விமானம் அக்டோபர் 17ஆம் தேதி புறப்பட உள்ளதாக இந்திய ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய ஹஜ் கமிட்டி துணைத்தலைவர் பிரசிடென்ட் ஏ.அபூபக்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

இந்திய ஹஜ் கமிட்டி மூலமாக ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேர் ஹஜ் பயணம் மேற்கொள்கிறார்கள். இதில் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி வழியாக 3,530 பேர் ஹஜ் செல்கின்றனர். தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 4 ஆயிரம் ஹஜ் பயணிகள் சென்னை வழியாக பயணம் மேற்கொள்கிறார்கள்.

இந்தியாவில் இருந்து ஹஜ் செல்லும் முதல் விமானம் 29ஆம் தேதி புறப்படும். கடைசி விமானம் அக்டோபர் 31ஆம் தேதி புறப்படும். இதேபோல், சவுதி அரேபியாவில் இருந்து இந்தியா திரும்பும் முதல் விமானம் நவம்பர் 11ஆம் தேதியும் கடைசி விமானம் டிசம்பர் 11ஆம் தேதியும் புறப்படும்.

செப்டம்பர் 19, 2011

கடலூர் மாவட்டத்தில் பாஸ்போர்ட்டுக்காக விண்ணப்பிப்போர் புதிய படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டும்


கடலூர்:

பாஸ்போர்ட் விண்ணப்பிப்பவர்கள் வரும் 19ம் தேதி முதல் புதியதாக வடிவமைக்கப்பட்ட மனுவை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:

கடலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் பாஸ்போர்ட் மையத்தில் 19ம் தேதி முதல் பாஸ்போர்ட் கோரி பெறப்படும் மனுக்கள் தொடர்பாக பின்பற்றப்படும் நடைமுறைகள் வருமாறு:

புதியதாக வடிவமைக்கப்பட்ட படிவத்தில் மட்டுமே விண்ணப்பங்கள் பெறப்படும். புதிய விண்ணப்பப்படிவம் வெளிவிவகாரத் துறை அமைச்சக இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மாவட்ட பாஸ்போர்ட் மையத்தில் 18 வயதுக்குட்பட்டவர் உட்பட அனைவருக்கும் புதிய பாஸ்போர்ட் கோரும் விண்ணப்பங்கள் மட்டும் பெறப்படும். விண்ணப்பத்தாரர்கள் புதிய படிவத்தில் பேனாவால் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். பழைய படிவத்தில் பூர்த்தி செய்து அளிக்கப்படும் மனுக்கள் பெறப்படமாட்டாது.விண்ணப்பக் கட்டணம் மண்டல கடவுச்சீட்டு அலுவலர், சென்னை என்ற முகவரியிட்டு சென்னையில் பெறத்தக்க வகையிலான வரைவு கேட்போலையாக மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும்.

பாஸ்போர்ட் மையத்தில் சமர்ப்பிக்கும் விண்ணப்பங்களின் நிலை குறித்து மண்டல பாஸ்போர்ட் அலுவலக கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும் புதிய 15 இலக்க கோப்பு எண் விவரம் இளையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.மாவட்ட பாஸ்போர்ட் மையங்களில் 15ம் தேதி வரை மட்டுமே பழைய முறையில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளப்படும். 

செப்டம்பர் 18, 2011

உள்ளாட்சி தேர்தலில் யாருக்கு ஆதரவு – TNTJ வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கை!


மோடியின் உண்ணாவிரதம் குற்றத்தை மறைத்து விடாது

குஜராத்தில் அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி உண்ணாவிரதம் தொடங்கியுள்ள நரேந்திர மோடியின் நடவடிக்கை மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

மோடியின் உண்ணாவிரதம் அவர் செய்த குற்றங்களைக் குறைத்து விடாது என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரஷித் ஆல்வி சனிக்கிழமை தெரிவித்தார்.

மோடி உண்ணாவிரதத்தின் தேவையை உணர்ந்துள்ளார். இது குஜராத்தில் அவர் செய்துள்ளக் குற்றங்களை அவரே உணர்ந்துள்ளதைக் காட்டுகிறது.
உண்ணாவிரதம் ஒருவரின் குணாதிசயங்களை மாற்றிவிடாது. அவரின் குற்றங்களையும் குறைத்துவிடாது என்று ஆல்வி தெரிவித்தார்.

சமாஜ்வாதி கட்சி: இது பா.ஜ.க.வுக்குள் நடக்கும் அதிகாரப் போட்டி என்று சமாஜ்வாதி கட்சியின் பொதுச் செயலாளர் மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

ஊர்க்காவல் படைக்கு புதிதாக 4,338 இளைஞர்கள் தேவை

காவல்துறையுடன் சேர்ந்து மக்கள் பணியில் ஈடுபட்டு வரும் ஊர்க்காவல் படையில், புதிதாக 4,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக, முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார்,
இந்த இளைஞர்கள் மக்களுக்கு சேவை புரிய உதவியாக இருப்பதுடன், குற்றங்களை குறைக்க காவல்துறையினருக்கு உதவியாகவும் இருப்பர். ஊர்க்காவல்படை' என்ற படைப்பிரிவு, தன்னார்வ அமைப்பாக தற்போது செயல்பட்டு வருகிறது.
காவலரைப் போன்று காக்கி உடையணிந்து கொண்டு, சட்டம்- ஒழுங்கை பராமரித்தல், விழாக்காலங்களில் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துதல், வெள்ளம், தீவிபத்து, புயல் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் மீட்புக் குழுவினருக்கு உதவுகின்றனர். இது தவிர, ஆன்மிக ஊர்வலங்களின் போது பாதுகாப்பு, மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், சுகாதார விழிப்புணர்வு, தேர்தல் பணி உட்பட பல பணிகளில் இவர்கள் தங்கள் பங்களிப்பை அளிக்கின்றனர்.

நரேந்திரமோடி மீது குற்றம் சாட்டியவாஜ்பாய் - 9 ஆண்டுகளுக்குப்பின் கடிதம் வெளியீடு

குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டில் மதக்கலவரம் நடைபெற்ற போது மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்றது.

கலவரத்தையும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற சம்பவங்களையும் நினைத்து மனம் வெதும்பிய பிரதமர் வாஜ்பாய், குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதினார். 9 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட அந்த கடிதம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி கோரப்பட்டு, சமூக ஆர்வலர் ஒருவரால் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் குஜராத்தில் நடைபெற்ற கலவரமும், அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களும் என்னை கடுமையான வேதனைக்கு ஆளாக்கியுள்ளது. கலவரத்தை தடுக்கவும், கலவரம் பாதித்த பகுதிகளை முறையாக பராமரிக்கவும், அங்குள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் மாநில அரசு ஆர்வம் காட்டவில்லையோ என்ற சந்தேகம் ஏற்படுவதாக வாஜ்பாய் குற்றம் சாட்டியுள்ளார்.

நரேந்திர மோடி உண்ணாவிரதம் இருக்கும் நிலையில் இந்த கடிதம் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக உள்ளாட்சித் தேர்தல் தேதி நாளை அறிவிப்பு?

சென்னை: தமிழக உள்ளாட்சித் தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 19 அல்லது 21ம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் அக்டோபரில் முடிவடைகிறது. அக்டோபர் மாதம் 24ம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனவே உள்ளாட்சித் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தொடங்கி விட்டன. மாநில தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலுடன் தேர்தலை நடத்த தயாராக உள்ளது.

அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான ஏற்பாடுகளில் இறங்கி விட்டன. கட்சியினரிடமிருந்து விருப்ப மனுக்களைப் பெற்றுள்ள அரசியல் கட்சிகள் தற்போது வேட்பாளர்களை அறிவிக்க ஆரம்பித்துள்ளன.

இந்த நிலையில் தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக அக்டோபர் 19 அல்லது 21ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தெரிகிறது. திருச்சி மேற்கு இடைத் தேர்தல் அக்டோபர் 13ம் தேதி நடைபெறுவதால் அதற்குப் பின்னர் தேர்தல் நடத்தப்படும்.

செப்டம்பர் 17, 2011

சிதம்பரம் நகர மன்றத்தை கைப்பற்ற மனைவிகளை களமிறக்கும் நிர்வாகிகள் புது வியூகம்

சிதம்பரம்:சிதம்பரம் நகர மன்ற தலைவர் பதவியை கைப்பற்றாமல் விடமாட்டோம் என்ற முடிவுடன் அனைத்து கட்சிகளும் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் தங்களது மனைவிகளுக்கு சீட் கேட்டு கட்சித் தலைமையில் மனு கொடுத்து வருவது சிதம்பரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிதம்பரம் நகராட்சி 100 ஆண்டுகள் கடந்த பாரம்பரியமிக்கது.நகராட்சி துவங்கியதில் இருந்து ராமசாமி செட்டியார், மார்கண்டேயன் பிள்ளை, சுப்ராய பிள்ளை, வி.வி.சாமிநாதன், துரை கலியமூர்த்தி, வி.எம்.எஸ்., சந்திரபாண்டியன் உள்ளிட்டோர் தலைவர்களாக இருந்து வந்த நிலையில் கடந்த தேர்தல் முதல் (2006ம் ஆண்டு) தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது.சிதம்பரம் நகராட்சி தலைவர் பதவி முதல் முறையாக சுழற்சி முறையில் பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டதால் ஏற்கனவே தலைவராக இருந்தவர்கள், தலைவராகும் எண்ணத்தில் இருந்தவர்கள்.கவுன்சிலர்களாக இருந்தவர்கள், கவுன்சிலர்களாகும் எண்ணத்தில் இருந்தவர்கள் என அனைவருமே அதிருப்தியடைந்தனர்.

இந்நிலையில் பெரும்பாலான அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள், தான் போட்டியிட முடியவில்லை என்றாலும் தங்களின் மனைவிகளையாவது களத்தில் இறக்க முடிவு செய்தனர்.

2 சூரியன்களை சுற்றும் கோள்


"ஸ்டார் வார்ஸ்' ஆங்கில படத்தில் வருவது போல் இரட்டை சூரியன்களை, ஒரே கோள் சுற்றி வருவதை, அமெரிக்காவின் நாசா ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.


கெப்லர் தொலைநோக்கி: புவியைப் போன்று விண்ணில் இருக்கும் கோள்களை ஆராய்ச்சி செய்ய, நாசா ஆராய்ச்சி மையத்தால் கெப்லர் என்ற விண்வெளித் தொலைநோக்கி விண்கலம் 2009ஆம் ஆண்டு மார்ச் 6ம் தேதி அனுப்பப்பட்டது. ஜெர்மனியின் புகழ்பெற்ற வானியலாளர் ஜொகான்ஸ் கெப்லர் நினைவாக இப்பெயர் வைக்கப்பட்டது.


"டாட்டூயின்': ஒரு கிரகம் இரட்டை நட்சத்திரங்களை சுற்றி வருகிறது என வானியல் ஆய்வாளர்கள் எழுதிய கடந்த கால குறிப்புகள் உள்ளன. இவர்கள் "டாட்டூயின்' என இக்கிரகத்திற்கு பெயரிட்டிருந்தனர். இந்த பெயர், ஸ்டார் வார்ஸ் சினிமாவிலும் பயன்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது தான் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆராய்ச்சியாளர்கள் புதிய கிரகத்திற்கு "கெப்லர் 16பி' என பெயரிட்டுள்ளனர். இந்த கிரகம், இரண்டு சூரியன்களை சுற்றி வருவதால், ஒரு நாளில் இரண்டு சூரிய மறைவை கொண்டது. சனியைப் போல், இங்கும் மனிதர்கள் உயிர் வாழ முடியாது. இந்த கிரகம் பூமியிலிருந்து 200 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இங்குள்ள சூரியன்கள், நமது சூரியனை விட அளவில் சிறியவை. இந்த கிரகத்திற்கு மேற்பரப்பு வெப்பநிலை 100 முதல் 150 பாரன்ஹீட் (-73 முதல் - 101 செல்சியஸ்).

யு.ஏ.இ-யில் வாழும் வெளிநாட்டவர்களுக்கான எமிரேட்ஸ் ஐடி எடுப்பது பற்றிய அறிவிப்பு

அபுதாபி:ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு(15 வயது மேற்பட்டவர்களுக்கு) எமிரேட்ஸ் அடையாள அட்டை எடுப்பது பற்றி 4 விதங்களில் காலக்கெடு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வடக்கு அமீரக பகுதிகளான புஜைரா, ராஸ் அல் கைமா, உம்மு அல் க்வைன், மற்றும் அஜ்மான் ஆகியவற்றில் வாழும் வெளிநாட்டவர்கள் 2011 டிசம்பர் மாதம் முதல் தேதிக்கு முன்னதாகவும்

சார்ஜா-வில் வாழும் வெளிநாட்டவர்கள் 2012 பிப்ரவரி மாதம் முதல் தேதிக்கு முன்னதாகவும்

அபுதாபியில் வாழும் வெளிநாட்டவர்கள் 2012 ஏப்ரல் மாதம் முதல் தேதிக்கு முன்னதாகவும்

துபாயில் வாழும் வெளிநாட்டவர்கள் 2012 ஜூன் 1 -ஆம் தேதிக்கு முன்பும் எமிரேட்ஸ் அடையாள அட்டை எடுக்க வேண்டும் என்றும் யு .ஏ.ஈ. அரசு அறிவித்துள்ளது .

செப்டம்பர் 15, 2011

குழந்தைகளின் நுண்ணறிவுத்திறனை அதிகரிக்கும் தாய்ப்பால்

பிறந்த குழந்தையின் முதல் உணவு தாய்ப்பால். அதற்கு இணையாக எந்த உணவும் இதுவரை கண்டறியப்படவில்லை. தாய்ப்பாலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியே குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு காரணம் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. இந்த நிலையில் குழந்தைகளின் நுண்ணறிவுத்திறனை அதிகரிப்பதில் தாய்ப்பால் முக்கிய பங்கு வகிப்பதாக ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது.

புட்டிப்பால் குடித்த வளர்ந்த குழந்தைகளை விட தாய்ப்பால் குடித்து வளர்ந்த குழந்தைகளின் நுண்ணறிவித்திறன் பல மடங்கு அதிகரித்திருப்பதாக கனடிய பல்கலைக்கழக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டது.

14,000 குழந்தைகள் இந்த ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். முதல் 3 மாதங்கள் தொடங்கி 12 மாதங்கள் வரை தாய்ப்பால் ஊட்டி வளர்க்கப்பட்ட பிள்ளைகளில் 5.9% அதிக நுண்ணறிவுத்திறன் வெளிப்பட்டிருக்கிறது கண்டறியப்பட்டது. தாய்ப்பால் ஊட்டி வளர்க்கப்பட்ட குழந்தைகள் ஆறு வயதை அடையும் நிலையிலேயே தமது நுண்ணறிவுத்திறனைக் காண்பிக்க ஆரம்பித்து விடுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்குக் காரணம் தாய்ப்பாலின் கட்டமைப்பில் மூளை வளர்ச்சிக்கு அவசியமான கொழுப்பமிலங்கள்தான் என்கின்றனர். அவற்றின் பங்களிப்பே குழந்தைகளின் நுண்ணறிவுத்திறன் வளர்ச்சிக்கு உதவிபுரிகின்றன என்கின்றனர் ஆய்வாளர்கள்.

ஆஸ்திரேலிய ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளுக்கு உணவு பரிமாறும் “ரோபோ”க்கள்

மெல்போர்ன், செப். 15-

ஆஸ்திரேலிய ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளுக்கு “ரோபோ”க்கள் உணவு பரிமாற உள்ளன.

ஆஸ்திரேலியாவில் ஆஸ்பத்திரிகளில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் தரமற்றதாக இருப்பதாக கடத்த 2008-ம் ஆண்டு கார்லிங் கமிஷன் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதை தொடர்ந்து நோயாளிகளுக்கு தேவையான சத்தான உணவு வகைகளை வழங்க ஆஸ்பத்திரி நிர்வாகங்கள் முடிவு செய்துள்ளன.

அதை தொடர்ந்த சிட்னியில் உள்ள ராயல் நார்த் ஷோர் என்ற ஒரு தனியார் ஆஸ்பத்திரி சத்தான உணவுகளை எந்திர மனிதன் என்றழைக்கப்படும் “ரோபோ”க்கள் மூலம் வழங்க முடிவு செய்துள்ளது. அதற்கான ரோபோக்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இவை முற்றிலும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு அதில் அவற்றின் செயல் பாடுகள் பதிவு செய்யப்பட் டிருக்கும்.

இந்த ரோபோக்கள் கம்ப்யூட்டர் டிராலியின் மூலம் ஆஸ்பத்திரி முழுவதும் வலம் வரும். நோயாளிகளுக்கு தேவையான உணவு வகைகள், துணி மணிகள் மற்ற பொருட்களை வழங்கும். இவை நடமாடும் வழித்தடங்களும் கம்ப் யூட்டரில் பதிவு செய்யப் படும். அதன்படி அவை செயல்படும்.

நோயாளிகளுக்கு ரோபோக்கள் உணவு வழங்கும் செயல்பாடு அடுத்த ஆண்டு இறுதியில் நடை முறைக்கு வரும் என ராயல் நார்த் ஷோர் ஆஸ்பத்திரி அறிவித்துள்ளது.

இரு காவி வாதிகளின் போலி நாடகம் !!!

ஊழலுக்கு எதிராக அத்வானி நடத்தவுள்ள ரத(ரத்த) யாத்திரை போலித்தனமானது என்று விமர்சித்துள்ளார் அண்ணா ஹசாரே.

ஜனலோக்பால் மசோதாவுக்கு மத்தியில் ஆதரவு தெரிவித்துவிட்டு, குஜராத் மாநிலத்தில் லோக் ஆயுக்தவை செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டுள்ளது பாஜகவின் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது.

ஊழலுக்கு எதிராக பாஜக மூத்த தலைவர் அத்வானி அறிவித்துள்ள யாத்திரை போலித்தனமானது. மற்றவர்களை ஏமாற்றுவதற்காக நடத்தப்படுவது என்று விமர்சித்துள்ளார் அண்ணா ஹசாரே.

*இருவரும் சண்டையிடுவதுபோல் மக்களுக்கு காண்பிப்பதற்கு போடும் நாடகம்தான்.


வாகனத்துக்கு எரிபொருள் முக்கியமோ அதேபோல் மனிதனுக்கு ....

மூச்சை இழுத்து விடுங்கள் என்றுதான் இந்த டாக்டரும் கூறுகிறார். அடுத்த நிமிடம் இவரது சிகிச்சையால் புத்துணர்வு அடைகிறார்கள் அனைவரும். சுத்தமான காற்றுதான் நம்மை நலமாக வைக்கும் முதல் இயற்கை மருத்துவர். காற்று உடலுக்குத் தரும் நன்மைகள் பல. காற்றுதான் உடலின் எரிபொருள். நாம் உண்ணும் உணவுகள் செரிமானம் ஆகவும், செல்கள் வளர்சிதை மாற்றம் அடையவும் காற்று தேவை.

1. ரத்த ஓட்டம் ஆரோக்கியமாக இருக்க தூய காற்று அவசியம். நல்ல காற்றை சுவாசிக்கும் போதுதான் நரம்புகள் ஆரோக்கியம் பெறும். ஒரு நாளைக்கு சுமார் 7 ஆயிரத்து 50 லிட்டர் காற்று உள்ளிழுக்கப்படுகிறது. ஒவ்வொரு சுவாசத்திலும் நம் நலவாழ்வு இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள். காற்றை மாசுபடுத்தாமல் வாழ்வதே நாம் செய்யும் முதல் அறப்பணி.

அமெரிக்காவில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நியூயார்க்:அமெரிக்காவில் உள்ள மொத்த மக்கள் தொகையில் ஆறில் ஒருவர் வறுமை கோட்டிற்கு கீ்ழ் வசித்து வருவதாக அந்நாட்டு மக்கள் தொகை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.

2009ம் ஆண்டு 43.6 மில்லியன் மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் வசித்து வந்தனர். இது 2010-ம் ஆண்டு 46.2 மில்லியனாக உயர்ந்துள்ளது. இது 14.3 சதவீதத்திலிருந்து 15.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.

பொருளாதார நெருக்கடி, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட காரணங்களால் மொத்த மக்கள் தொகையில் ஆறில் ஒருவர் வறுமை கோட்டிற்கு கீழ் தள்ளப்பட்டுள்ளதாக அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை: திமுக தனித்துப் போட்டி!-கருணாநிதி அறிவிப்பு

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி இல்லை. தி.மு.க. தனித்துப் போட்டியிடும் என்று கருணாநிதி அறிவித்தார்.

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி மன்ற தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், தி.மு.கவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தார். இது குறித்து அவரது அறிக்கை:

நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதென்பது இந்திய நாட்டில் மதச்சார்பற்ற அரசு அமைய வேண்டும் என்ற அக்கறையின் அடிப்படையில், தி.மு.க.வும் உறுதுணையாக நின்றோ- ஒத்துழைப்பு நல்கியோ அத்தகைய கூட்டணியின் வெற்றிக்காகப் பாடுபட்டுள்ளது.

செப்டம்பர் 14, 2011

பூமியை போன்ற, புதிய கிரகம் கண்டுபிடிப்பு!

ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த விண்வெளி விஞ்ஞானிகள் கிரகங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதிநவீன டெலஸ் கோப் மூலம் விண் வெளியில் ஆய்வு நடத்திய போது பூமியை போன்று மற்றொரு புதிய கிரகம் இருப்பதை கண்டு பிடித்தனர். இது பூமியை விட 3.6 மடங்கு பெரியது. இதை சுற்றி விண்மீன் (நட்சத்திரங்கள்) கூட்டம் உள்ளது.

அதற்கு எச்.டி.85512 பி என பெயரிட்டுள்ளனர். இந்த கிரகம் பூமியில் இருந்து 36 வெளிச்ச ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. இதன் வலது புறம் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. எனவே, இங்கு உயிர்கள் வாழ முடியும் என கருதப்படுகிறது. மேலும் இந்த புதிய கிரகத்தின் வெளிப்புற தோற்றம் பாறை போன்று காட்சி அளிக்கிறது.

மேகக் கூட்டங்களும் காணப்படுகிறது. ஆகவே இங்கு உயிர் வாழ முடியும் என கருதப்பட்டாலும் கூட தீவிர ஆய்வுக்கு பிறகே இறுதியான முடிவுக்கு வரமுடியும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்

வலி நிவாரண மாத்திரை சாப்பிட்டால் சிறுநீரக புற்று நோய் ஏற்படும்


வலி நிவாரண மாத்திரை சாப்பிட்டால் சிறுநீரக புற்று நோய் ஏற்படும் ஆபத்து உள்ளது.  

மூட்டு வலி உள்ளிட்ட உடலில் ஏற்படும் பல்வேறு வலிகளை போக்க மாத்திரைகளை சாப்பிடுகின்றனர். அந்த மாத்திரைகள் பல ஆண்டுகள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக புற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
 
 இதுகுறித்து பாஸ்டனில் உள்ள ஹார்வர்டு மருத்துவ கல்லூரி பேராசிரியர் டாக்டர் இங்யங் ஷோ தலைமையிலான குழுவினர் 1 லட்சத்து 25 ஆயிரம் பேரிடம் ஆய்வு மேற்கொண்டனர்.
 
 அவர்களில் வலி நிவாரணத்துக்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாக மருந்து மாத்திரைகள் சாப்பிடுபவர்களில் 51 சதவீதம் பேர் சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

செப்டம்பர் 13, 2011

தினமும் ஒரு முட்டை, டாக்டருக்கு 'குட்பை'!

தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் நோய் நொடி எதுவும் அண்டாது என்று கூறப்படுகிறது.

தாய்பாலுக்கு அடுத்தபடியாக இயற்கையான முறையில் புரோட்டீன் கிடைக்கிறது என்றால் அது முட்டையில் தான். இதில் எக்கசக்க ஊட்டச்சத்துகள் உள்ளன. புரோட்டீன் தவிர்த்து முட்டையில் வைட்டமின்கள், மினரல்களும் உள்ளன. ஒரு முட்டையில் 70 முதல் 100 கலோரி வரை உள்ளது. மனித உடல் வளர்ச்சிக்குத் தேவையான 9 அமினோ அமிலங்கள் உள்ளது.

ஒரு முட்டையில் 6.3 கிராம் புரோட்டீன் உள்ளது. இதில் வெள்ளைக்கருவில் 3.5 கிராம் புரோட்டீனும், மஞ்சள் கருவில் 2.8 கிராமும் உள்ளது.

இது மட்டுமா முட்டையின் வெள்ளைக்கருவில் குளோரின், மெக்னீஷியம், பொட்டாஷியம், சோடியம், சல்பர், ஜிங்க் உள்ளிட்ட 11 மினரல்கள் உள்ளன.

மஞ்சள் கருவில் வைட்டமின் டி, பி 12, ஏ, இ, கே, பி 6 உள்ளது.

பாகிஸ்தானில் முதல் பெண் ராணுவ துணை தளபதி நியமனம்

இஸ்லாமாபாத், செப். 13-

பாகிஸ்தானில் வருகிற அக்டோபர் மாதம் 5 துணை தளபதிகள் ஓய்வு பெற உளளனர். அவர்களில் ஒரு துணை தளபதி பதவிக்கு பெண் நியமிக்கப்பட உள்ளார். அவரது பெயர் ஷாகிதா பத்ஷா. தற்போது இவர் ராணுவ மருத்துவ கல்லூரியில் உதவி ராணுவ தளபதியாக உள்ளார்.

இவர் தவிர மேஜர் ஜெனரல் ஜுனாய்ட் ரெமாத், ஜாவைத் ஜியா, ஷுஜாத் ஷமீர்தர், மோஷின் கமால் உள்ளிட்டோர் பட்டியலில் உள்ளனர். ஷாகிதா பத்ஷா நியமிக்கப்படும் பட்சத்தில் பாகிஸ்தான் ராணுவத்தில் துணை தளபதி வகிக்கும் முதல் பெண் என்ற பெரு மையை பெறுவார்.

ரெயில்வே பணியாளர்களுக்கு 78 நாள் போனஸ்: மத்திய அரசு அறிவிக்கிறது

இந்திய ரெயில்வேயில் மொத்தம் 13 லட்சத்து 26 ஆயிரம் பணியாளர்கள் உள்ளனர். இவர்களில் சுமார் 12 லட்சம் பேர் ரெயில்வேயின் உற்பத்தி பிரிவுகளுடன் தொடர்புடைய பணியாளர்கள் ஆவார்கள். ரெயில்வேயின் உற்பத்தி உயர்வுக்கு ஏற்ப, ஒவ்வொரு ஆண்டும் இந்த பணியாளர்களுக்கு பண்டிகை கால போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 77 நாள் போனஸ் வழங்கப்பட்டது. நடப்பாண்டில் இந்திய ரெயில்வே கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது.

எனவே ஊழியர்களுக்கு எந்த அடிப்படையில் போனஸ் வழங்கப்படும் என்பதில் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் நடப்பாண்டு 78 நாள் போனஸ் வழங்க அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். மத்திய மந்திரி சபையின் ஒப்புதலுக்காக இந்த பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது.

மந்திரி சபை ஒப்புதல் கிடைத்ததும் ரெயில்வே பணியாளர்களுக்கு இந்த போனஸ் விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். 78 நாள் போனஸ் கணக்கிட்டு வழங்கப்பட்டால் ரெயில்வே ஊழியர்கள் குறைந்தபட்சம் ரூ. 8975 பெறுவார்கள்.

செப்டம்பர் 12, 2011

தமிழகம் முழுவதும் 6 நாட்கள் நடக்கிறது ஆசிரியர் இடமாறுதல் “கவுன்சிலிங்”: தொடக்கப்பள்ளி-16-20-ந்தேதி; உயர்நிலைப்பள்ளி-19, 20-ந்தேதி

சென்னை, செப். 12-

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்-ஆசிரியைகளுக்கு இடமாறுதல் கலந்தாய்வு மூலம் வழங்கப்படுகிறது. வழக்கமாக மே மாதம் இறுதிக்குள் ஆசிரியர் கவுன்சிலிங் நடத்தி முடிக்கப்பட்டு விடும்.

இந்த ஆண்டு பொதுத்தேர்தல், புதிய அரசு பதவி ஏற்பு போன்ற நிகழ்வுகள் மே மாதம் நடைபெற்றதால் ஆசிரியர் கவுன்சிலிங் தள்ளிப்போனது. கலந்தாய்வு நடைபெறுமா? சந்தேகமும் ஆசிரியர்கள் மத்தியில் ஏற்பட்டது. புதிய அரசில் பள்ளிக்கல்வி அமைச்சராக சி.வி. சண்முகம் பொறுப்பேற்றபின் ஆசிரியர் கவுன்சிலிங் தற்போது நடத்தப்படுகிறது.

சமச்சீர் கல்வி, பாடப்புத்தகம் போன்ற பிரச்சினையாலும் ஆசிரியர் கலந்தாய்வு தாமதமானது. காலாண்டு தேர்வு இந்த மாத இறுதியில் தொடங்குகிறது. அதற்குள் கலந்தாய்வு நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. 1 முதல் 8 வரை உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

பாகிஸ்தானில் 10 ஆண்டுகளில் நடந்த தற்கொலை தாக்குதலில் 4808 பேர் பலி

லாகூர், செப். 12-
அமெரிக்காவில் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந்தேதி இரட்டை கோபுரங்கள் மீது அல்கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதை தொடர்ந்து அந்த இயக்கத்தின் தலைவர் பின்லேடனை அமெரிக்கா வேட்டையாடியது. அதைத் தொடர்ந்து அவர் தலிபான் தீவிரவாதிகளின் ஆதரவுடன் பாகிஸ்தான் மற்றும், ஆப்கானிஸ்தானில் தலைமறைவானார். எனவே, அமெரிக்க படைகள் இங்கும் அவரை தேடிவந்தனர்.

அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் அரசு ஆதரவு அளித்தது. இதனால் ஆத்திரம் அடைந்த தலிபான் தீவிரவாதிகள் அங்கு வெடி குண்டு வைத்தம், தற்கொலை தாக்குதல்கள் நடத்தியும் ஆயிரக்கணக்கான மனித உயிர்களை பலி வாங்கி வருகின்றனர். 2001 முதல் 2011-ம் ஆண்டு வரை அதாவது 10 ஆண்டுகளில் பாகிஸ்தானில் 303 தற்கொலை தாக்குதல்கள் மூலம் தலிபான் தீவிரவாதிகள் மனித குண்டுகளை வெடிக்க செய்துள்ளனர். அதில் 4,808 பேர் உயிரிழந்துள்ளனர். 10 ஆயிரத்து 149 பேர் படுகாயம் அடைந்து தங்களது உடல் உறுப்புகளை இழந்துள்ளனர்.

இவர்களில் கடந்த ஆண்டு மட்டும் 41 தற்கொலை தாக்குதல்களில் 857 பேர் பலியாகி உள்ளனர். இந்த ஆண்டில் 36 தாக்குதல்களில் 601 பேர் இறந்துள்ளனர். இந்த தகவல் உள்துறை அமைச்சக குற்ற ஆவணங்களில் பதிவாகி உள்ளது.

முஸ்லீம்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கோரிக்கை

கும்பகோணம்: முஸ்லீம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 3.5 சதவீத இடஒதுக்கீடை உயர்த்தி வழங்குமாறு, தமிழக அரசுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வலியுறுத்தியுள்ளது.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் கும்பகோணம் திருமங்கலக்குடியில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் காதர்மொய்தீன் தலைமை வகித்தார். தேசிய செயலாளளர் குரம் அனிஸ்உமர் முன்னிலை வகித்தார்.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்களாவது, கட்சியின் மாநில தலைவராக பேராசிரியர் கே.எம். காதர்மொய்தீன், பொதுச் செயலாளராக முகமதுஅபுபக்கர், பொருளாளராக ராமநாதபுரம் ஷாஜகான் மற்றும் செயலர்கள், துணை தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளுக்கும் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டது ஏற்று கொள்ளப்பட்டுள்ளது.

ஒரிசா பேய் மழையில் 2600 கிராமங்கள் மிதக்கிறது; வீடு இடிந்து 8 பேர் பலி

ஒரிசா மாநிலத்தில் கடந்த சில தினங்களாக வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இதனால் அந்த மாநிலத்தில் உள்ள மகாநதி உள்பட எல்லா நதிகளிலும் வெள்ளம் கரை புரண்டோடுகிறது. ஒரிசாவில் உள்ள 19 மாவட்டங்களில் எங்கு பார்த்தாலும் தண்ணீர் மயமாக உள்ளது. சுமார் 2600 கிராமங்கள் மழை தண்ணீரால் சூழப்பட்டு மிதக்கிறது.

அந்த கிராமங்களில் வசித்து வரும் சுமார் 11 லட்சம் பேருக்கு நிவாரண உதவிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. சுமார் 61 ஆயிரம் பேர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பலத்த மழை காரணமாக ஒரிசாவில் பல்லாயிரக் கணக்கான வீடுகள் இடிந்து நாசமாகி விட்டன. அவற்றில் சிக்கி 8 பேர் பலியாகி விட்டனர். வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 3 பேர் கதி என்ன? என்று தெரிய வில்லை. மீட்பு பணிகளில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சந்திரனை முழுமையாக ஆராய செயற்கை கோள்கள்:நாசா அனுப்பியது

சந்திரனுக்கு அமெரிக்கா முதன் முதலாக மனிதனை அனுப்பியது. தற்போது அங்கு முழுமையாக ஆராய்ச்சி நடத்த நாசா மையம் திட்டமிட்டுள்ளது. சந்திரனின், புவிஈர்ப்பு தன்மை மற்றும் அதன் அமைப்பு குறித்த முழு தகவல்களும் திரட்டப்பட உள்ளது. அதற்காக அதி நவீன திறன் கொண்ட 2 செயற்கை கோள்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இதற்காக ரூ.22 ஆயிரத்து 500 கோடி செலவில் வாஷிங் மெஷின் போன்ற 2 செயற்கை கோள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த செயற்கை கோளை கேப் கானவரலில் உள்ள விமான படை தளத்தில் இருந்து நேற்று விண்ணில் செலுத்தப்பட்டது. அவற்றை டெல்பா-2 என்ற ராக்கெட் மூலம் விஞ்ஞானிகள் செலுத்தினர். இந்த ராக்கெட் 3 மாத பயணத்துக்கு பிறகு சந்திரனை சென்றடையும்.

செப்டம்பர் 11, 2011

“தினமும் 15 நிமிடம் சிரித்தால் உடல் நலத்துக்கு நல்லது”

“வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்” என்பது பழமொழி, மன அழுத்தமே பெரும்பாலான நோய்களுக்கு காரணமாக உள்ளது. அதாவது, மன அழுத்தம் உடையவர்கள் ஆல்கஹால், போதை மருந்து மற்றும் சிகரெட் புகைத்தல் போன்ற கெட்ட பழக்கவழக்கத்துக்கு ஆளாகின்றனர். அதுவே அவர்களுக்கு மிக கொடிய நோய்களை ஏற்படுத்துகிறது.

எனவே, மன அழுத்தம் உள்ளவர்கள் அதுபோன்ற கெட்ட பழக்கத்தை விட்டு தினமும் 15 நிமிடம் சிரித்தாலே போதும். உடல் நலம் மேம்படும். அவர்களை நோய் அண்டாது என இருதய நோய் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

வாய்விட்டு சிரிப்பது தான், நல்லது. வாய்க்குள்ளேயே சிரிக்கும் நமட்டு சிரிப்பும், மூச்சு வாங்க சிரிக்கும் சிரிப்பும் உடல் நலத்துக்கு கேடானது என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

நாள் ஒன்றுக்கு ஒரு குழந்தை 300 முதல் 400 தடவை சிரிக்கிறது. பெரியவர்கள் 15 தடவை சிரிக்கின்றனர் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு ஆப்ரிக்காவில் ஏழு லட்சத்திற்கும் மேலானோர் மரணம் அடைய வாய்ப்பு: ஐ.நா அதிர்ச்சி தகவல்

லண்டன்:கிழக்கு ஆப்ரிக்காவில் அடுத்த நான்கு மாதங்களுக்குள் ஏழு லட்சத்திற்கும் மேலானோர் மரணம் அடைய வாய்ப்பு உள்ளதாக அதிர்ச்சி தகவலை ஐ.நா அறிவித்துள்ளது.

கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள பஞ்சத்தின் காரணமாக அவர்களுக்கு தகுந்த முதலுதவி கிடைக்கவில்லையென்றால் அடுத்த நான்கு மாதங்களுக்குள் லட்சக்கணக்கானோர் இறக்கக் கூடும் என்று எச்சரிக்கை விடுத்ததோடு, இந்த பகுதியில் 12 மில்லியனுக்கும் மேற்ப்பட்டோர் உணவு தேவை உள்ளதாகவும், அதில் நான்கு மில்லியனுக்கும் மேலானோர் சோமாலியாவை சேர்ந்த மக்களே என்று பிரபல பத்திரிக்கை டெய்லி மெயில் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை மாதத்தை விட 66% அதிகரித்து உள்ளதாகவும், சோமாலியாவில் தினந்தோறும் நூற்றுக்கும் மேற்ப்பட்டோர் இறக்கின்றனர், அதில் பாதிக்கும் மேற்ப்பட்டோர் குழந்தைகளே என்றும் இவ்வறிக்கை தெரிவிக்கிறது.

மத கலவர தடுப்பு மசோதாவுக்கு : 10 மாநில முதல்வர்கள் எதிர்ப்பு

புதுடெல்லி: மத்திய அரசு கொண்டு வரவுள்ள மத கலவர தடுப்பு மசோதாவுக்கு 10 மாநில முதல்வர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, மசோதா மீதான மாற்று கருத்துகளை பரிசீலிப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் உறுதி அளித்துள்ளார். 
டெல்லியில், தேசிய ஒருமைபாட்டு கவுன்சில் கூட்டம், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று நடந்தது. இதில், எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் மற்றும் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கி வைத்து பேசுகையில், தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கு மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை சுட்டிக்காட்டினார். 
மத்திய அரசு புதிதாக கொண்டு வரவுள்ள மத கலவர தடுப்பு மசோதா பற்றியும் குறிப்பிட்டார். இந்த மசோதாவுக்கு முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், தமிழகம், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், கர்நாடகா, இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், பீகார், பஞ்சாப், ஒரிசா, மேற்கு வங்காளம் ஆகிய 10 மாநிலங்களின் முதல்வர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் பேசுகையில், ‘மத கலவர தடுப்பு மசோதா, பெரும்பான்மையினர் மற்றும் சிறுபான்மையினருக்கு இடையே உள்ள பிரிவினையை தடுப்பதற்கு பதிலாக, அதை ஊக்குவிக்கக் கூடியதாக உள்ளது. இது மிகவும் ஆபத்தானது. இதை தேசிய ஜனநாயக கூட்டணி கடுமையாக எதிர்க்கிறது’ என்றார்.

செப்டம்பர் 10, 2011

எகிப்தில் இஸ்ரேலிய தூதரகம் தகர்ப்பு

கெய்ரோ: எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தை, கிளர்ச்சியாளர்கள் முற்றுகையிட்டு சுற்றுச் சுவரைத் தகர்த்தனர். இந்தக் கலவரத்தில், மூன்று பேர் பலியாகியுள்ளனர். 500 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த மாதம் 18ம் தேதி, இஸ்ரேல்- எகிப்து எல்லையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், எகிப்து போலீசார் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். இதனால், கோபமடைந்த எகிப்து நாட்டின் கிளர்ச்சியாளர்கள், நேற்று முன்தினம், கெய்ரோவில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தை முற்றுகையிட்டனர். தூதரக அதிகாரிகளை, நாட்டை விட்டு ஓடும்படி வற்புறுத்தினர். தூதரகத்தின் சுற்றுச் சுவரை உடைத்து, உள்ளே நுழைந்த கிளர்ச்சியாளர்கள், தூதரகத்தின் உள்ளே இருந்த ஆவணங்களை எரித்தும், கிழித்து எறிந்தும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். எகிப்து ராணுவத்தினரும், போலீசாரும் கவச வாகனங்களுடன் வந்து, கிளர்ச்சியாளர்களை அடித்து விரட்டினர். இந்தச் சம்பவத்தில், மூன்று பேர் கொல்லப்பட்டனர். 500 பேர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேல் நாட்டின் விமானப்படை விமானம் மூலம், தூதரக அதிகாரிகளும், அவர்களது குடும்பத்தினரும் இஸ்ரேலுக்கு பாதுகாப்பாக அனுப்பப்பட்டனர்.

60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ. 1000 மாத பென்ஷன் வழங்க தமிழக அரசு முடிவு

சென்னை: விவசாயிகள் மற்றும் விவசாய குடும்ப உறுப்பினர்களுக்கு பல்வேறு சமூக பாதுகாப்புத் திட்டங்களை, முதல்வர் ஜெயலலிதா, நேற்று சட்டசபையில் அறிவித்தார். "60 வயதிற்கு மேற்பட்ட ஆதரவற்ற விவசாயிகள், தொழிலாளர்களுக்கு, மாதம் 1,000 ரூபாய் ஓய்வூதியம், விவசாயிகளின் பிள்ளைகள் கல்லூரிப் படிப்பு முதல் உயர்கல்வி வரை படிக்க ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை' என்பது உட்பட, பல்வேறு திட்டங்களை முதல்வர் அறிவித்தார்.

சட்டசபையில், முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை: விவசாய தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு, வாழ்நாள் முழுவதும் உறுதுணையாக இருக்கும் வகையில், புதிய விரிவுபடுத்தப்பட்ட, சமூக பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டம், "முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்' என்று அழைக்கப்படும். திட்டத்தின் கீழ், 2.5 ஏக்கருக்கு மேற்படாத நன்செய் நிலம் அல்லது 5 ஏக்கருக்கு மேற்படாத புன்செய் நிலம் ஆகியவற்றை உடைமையாகக் கொண்டு, அந்த நிலத்தில் நேரடியாக பயிர் செய்யும் 18 வயது முதல் 65 வயதிற்கு உட்பட்ட குறு, சிறு விவசாயிகள், விவசாயம் சார்ந்த தொழிலில் ஊதியத்திற்காகவோ அல்லது குத்தகை அடிப்படையிலோ ஈடுபட்டுள்ள 18 வயது முதல் 65 வயதிற்கு உட்பட்ட அனைத்து விவசாய குத்தகைதாரர்கள், தொழிலாளர்கள் மற்றும் இவர்களைச் சார்ந்து வாழும் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் பயனடைவர்.

இஸ்ரேலால் மஸ்ஜித் அல்-அக்ஸாவிற்கு ஆபத்து!!

ஜெருசலம்:லெபனானின் போராளி இயக்கமான ஹிஸ்புல்லா அமைப்பு மஸ்ஜித் அல் அக்ஸாவிற்கு அடியில் இஸ்ரேல் பூமியைத் தோண்டுவதால் அல் அக்ஸாவிற்கு ஆபத்து என அல்-ஊதில் பத்திரிக்கையிடம் தெரிவித்துள்ளது.

கடந்த புதன் அன்று வெளியிடப்பட்டுள்ள ஹிஸ்புல்லாவின் அறிக்கையை சுட்டி காட்டி பிரஸ் டிவி நிரூபர் கூறியுள்ளதாவது தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த அகழ்வானது முஸ்லிம்களின் முதல் கிப்லாவும் முஸ்லிம் உலகத்தின் தனித்துவமிக்க சின்னமான மஸ்ஜித் அல் அக்ஸாவிற்கு பெரிய ஆபத்தாக அமையும் எனக் கூறியுள்ளது.

1967 ஆம் ஆண்டு நடைபெற்ற அரேபிய யுத்தத்தில் பழமை வாய்ந்த அல் ஊத் நகரம் இஸ்ரேலால் கைப்பற்றப் பட்டதிலிருந்து இவ்வகழ்வு பணிகள் நடைபெற்றுக் கொண்டுவருவதும் இதற்கு முஸ்லிம் உலகம் ஆட்சேபித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் 09, 2011

யு எஸ் சில் சந்தி சிரிக்கும் இந்திய மருத்துவத்துறை !!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மருத்துவ காப்பீட்டில் நிகழ்ந்த ஊழல் தொடர்பாக 9 இந்திய மருத்துவத் துறையினர் உள்பட 90 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மொத்தம் 1,320 கோடிக்கு மேலாக மருத்துவ காப்பீட்டு ஊழல் புரிந்துள்ளதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தவறான சான்றிதழ் மூலம் மருத்துவ காப்பீட்டை இவர்கள் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவின் 8 நகரங்களில் இது தொடர்பான விசாரணை நடத்தப்பட்டதில் இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக அமெரிக்க நீதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வரி செலுத்தும் மக்களின் பணத்தை இவர்கள் அனைவரும் தங்கள் சொந்த உபயோகத்துக்குப் பயன்படுத்தியதாக நீதிபதிகள் தெரிவித்தனர்., சிகாகோவில் கிளினிக் நடத்தி வந்த நீலேஷ் படேல் மீதும் டெட்ராய்ட் நகரில் ரெஹான், தெüசிப் மான், ஜானகி செட்டியார், ஜிகார் படேல், ஹேதல் பரோட், சீனிவாஸ் ரெட்டி , ராம் சந்த் ராம்ரூப் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ரத்த அழுத்தம் பெரியவர்களுக்கு மட்டும்தானா ? பணக்கார நோயா?

குழந்தைகளையும் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற வியாதிகள் தாக்குகின்றன, சென்னையைச் சேர்ந்த ஒரு மருத்துவமனை, புள்ளி விவரங்களுடன் வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கை திகைக்க வைக்கிறது.

30, 40 ஆண்டுகளுக்கு முன்பு… ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் இதெல்லாம் ‘பணக்கார நோய்கள்’. ஆனால், கால மாற்றத்தில்… ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடுகளைக் கடந்து, எல்லோரையும் அவை வருத்திக் கொண்டிருக்கின்றன சமீப வருடங்களாக. அதன் அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சியாக, இப்போது டீன் ஏஜ் மற்றும் சிறுவயது குழந்தைகளையும் அந்த நோய்கள் ஆட்டிப் படைக்க ஆரம்பித்திருப்பது… கொடுமையிலும் கொடுமை!

இதுகுறித்து குழந்தைகள் நல மருத்துவர்டம் கேட்டபோது, “குழந்தைகளுக்குக்கூட இம்மாதிரியான பெரும் பிரச்னைகள் வருவதற்கு காரணம் அவர்கள் சாப்பிடும் உணவு, வாழ்க்கை முறை மற்றும் மரபியல் காரணி…” என்று முக்கியமானவற்றை பட்டியலிட்டார்.

சரியான நேரத்தில் உணவு, உறக்கம், காற்றோட்டமான சூழ்நிலை மாலையில் விளையாட்டு போன்ற சூழ்நிலைகளை பெரியோர்களான நாம்தான் உருக்குவாக்கி கொடுக்கவேண்டும்., என்ன இதன்படி செய்வோமா.

பகலில் குண்டுவெடிப்பு இரவில் நிலநடுக்கம் கலங்கிய டெல்லி


டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தால் அதிர்ந்து போயிருந்த டெல்லி மக்களுக்கு இரவில் தாக்கிய நிலநடுக்கம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நேற்று நள்ளிரவையொட்டி டெல்லியின் பல பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 4.2 ஆக பதிவாகியது. டெல்லி மட்டுமல்லாமல் அதன் துணை நகரங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி ரோடுகளுக்கும், தெருக்களுக்கும் வந்து நின்றனர்.
ஹரியானா மாநிலம் சோனீபட்டில் இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்தது. டெல்லி தவிர காஜியாபாத், நோய்டா, கர்கான் ஆகிய நகரங்களிலும் மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்தனர். இரவு சரியாக 11.28 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பத்து விநாடிகளுக்கு இது நீடித்தது.

நரேந்திர மோடியின் 1 லட்சம் கோடி ரூபாய் ஊழல் – டீஸ்டா

புதுடெல்லி:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடியும் அவரது அமைச்சரவை சகாக்களும் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை ஊழல் புரிந்துள்ளதாக சமூக ஆர்வலர் டீஸ்டா ஸெடல்வாட் புகார் அளித்துள்ளார்.

குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு அளித்துள்ள மனுவில் டீஸ்டா குறிப்பிட்டுள்ளதாவது: அரசு பொது கருவூலத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி அரசு நிலங்களை பெரும் தொழில் அதிபர்களுக்கு பங்கீடு செய்து சொந்த லாபத்தை முதல்வர் மோடி உள்ளிட்டவர்கள் சம்பாதித்துள்ளனர்.

குஜராத்தில் நடைபெற்றுவரும் இந்த பெரும் ஊழலை சி.பி.ஐயோ அல்லது தேசிய புலனாய்வு ஏஜன்சியோ(என்.ஐ.ஏ) விசாரிக்க வேண்டும்.

செப்டம்பர் 08, 2011

ஊழலில் சிக்கி கைது: திகார் ஜெயிலில் 5 எம்.பி.க்கள் 15க்கு 10க்குள் தவிப்பு

டெல்லி திகார் ஜெயிலுக்கு வரும் வி.ஐ.பி.க்கள் எண்ணிக்கை அதிகரித்தப்படி உள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழல், ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல், காமன்வெல்த் போட்டி ஊழலில் சிக்கிய பலர் தற்போது சிறையில் உள்ளனர். அரசியல் வாதிகள் மீது கடந்த காலங்களில் பல புகார்கள் கூறப்பட்டாலும் பெரிய திமிங்கலங்கள் வலையை அறுத்துக் கொண்டு தப்பி விடும் என்பதற்கு ஏற்ப, ஆட்சிப் பொறுப்புகளில் இருப்பவர்கள் தப்பி வந்தனர்.

ஆனால் சமீப காலமாக ஆதாரங்களுடன் குற்றச் சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதால், வி.ஐ.பி.க்கள் அடுத்தடுத்து கைதாகிறார்கள். அந்த வகையில் தற்போது டெல்லி திகார் ஜெயிலில் 5 எம்.பி.க்கள் உள்ளனர். ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக ஆ.ராசா, கனிமொழி ஆகியோரும், காமன்வெல்த் போட்டி ஊழலில் சிக்கிய சுரேஷ் கல்மாடி, ஊழல் செய்து சொத்து குவித்த ஜார்க்கண்ட்டை சேர்ந்த மதுகோடா ஆகிய 4 எம்.பி.க் கள் உள்ளனர்.

தற்போது ஓட்டுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் சிக்கிய அமர்சிங் எம்.பி. 5-வது எம்.பி. யாக திகார் ஜெயிலுக்கு சென்றுள்ளார். இந்திய அரசியல் வரலாற்றில் இதற்கு முன்பு ஊழலில் சிக்கி இவ்வளவு எம்.பி.க்கள் சிறையில் அடைக்கப்பட்டதில்லை.

அமர்சிங் எம்.பி. நேற்று போலீஸ் பஸ்சில் திகார் ஜெயிலுக்கு அழைத்து செல்லப்பட்டார். மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு மூன்றாம் எண் சிறை பகுதியில் அவர் தனி அறையில் அடைக்கப்பட்டார். 15க்கு 10 அடி அகலம் கொண்ட தனி அறைக்குள் அவர் உள்ளார். கோடீசுவரரான அவர் நேற்று இரவு எந்த வசதியும் இல்லாமல் தூங்க மிகவும் அவதிப்பட்டார். அவருக்கு ஒரே ஒரு சிறிய தொலைக்காட்சி மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளின் வயிற்றுப் பிரச்சினைகளுக்கு இதம் தரும் சடை குப்பி

நம் வீட்டருகிலேயே வளரும் தாவரங்கள் பலவும் ஆயுர்வேத மருத்துவத்தில் மூலிகைகளாக பயன்படுத்தப்படுகின்றன. சடைகுப்பி எனப்படும் மணமுள்ள தாவரம் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பயிரிடப்படுகிறது. தெற்கு ஆசியா, மத்திய ஆசியா, ஐரோப்பா, ஆகிய நிலப்பரப்பில் இது அதிக அளவில் காணப்படுகிறது. இத்தாவரம் மஞ்சள் வண்ண மலர்களைக் கொண்டவை. கனிகள் கிளர்ச்சியூட்டும் மணம் நிறைந்தவை.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்

விதை மற்றும் கனிகளில் எளிதில் ஆவியாகக்கூடிய எண்ணெய்களான கரோவோவன், ஏபியால், தில்-ஏபியால், ஆரியவையும், பிளோவோனாய்டுகள், கௌமெரின்கள், ஸான்தோன்கள் மற்றும் டிரைடெர்பின்களும் காணப்படுகின்றன.

ஆயுர்வேத மருந்து

இந்தியாவின் ஆயுர்வேதத்தில் ‘ஸடபுஷ்பா’ என்று அழைக்கப்பட்டு காய்ச்சல், வயிற்றுவலி, குடல்புண் போன்றவற்றினை குணப்படுத்த மருந்தாக பயன்படுத்தப்பட்டது.

என்னைக் கைது செய்யுங்கள்-அத்வானி ஆவேசப் பேச்சு: யாத்திரை போகப் போவதாக அறிவிப்பு

டெல்லி: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, எம்.பிக்களுக்கு லஞ்சம் கொடுத்தது அம்பலமாகியுள்ளது, நிரூபணமாகியுள்ளது. இதுதொடர்பான பாஜகவின் ஸ்டிங் ஆபரேஷனுக்கு உத்தரவிட்டதே நான்தான். எனவே அரசு தைரியமிருந்தால் என்னைக் கைது செய்யட்டும் என்று ஆவேசமாக கூறியுள்ளார் பாஜக மூத்த தலைவர் அத்வானி.

மேலும் ஊழலுக்கு எதிராக யாத்திரை போகப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று எம்.பிக்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரம் காரணமாக ஸ்தம்பித்தது. இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

இந்தியாவில் கம்ப்யூட்டர் விற்பனை 16% அதிகரிப்பு

புதுடில்லி : பணவீக்க அழுத்தம் இருந்த போதிலும் நாட்டின் கம்ப்யூட்டர் விற்பனை 16 சதவீதம் அதிகரித்துள்ளது. 2011ம் ஆண்டில் இதுவரை 93.1 லட்சம் கம்ப்யூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 80.3 லட்சம் கம்ப்யூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப தொழில் சார்ந்த தயாரிப்பு கழகம் வெளியிட்டுள்ள தகவலின்படி நாட்டின் கம்ப்யூட்டர் விற்பனை ஆண்டுதோறும் 2 சதவீதம் வரை அதிகரித்து வருகிறது. இதே போன்று 60.3 லட்சம் டெஸ்க்டாப்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் வளர்ச்சி 9 சதவீதமாக உள்ளது. நெட்புக் விற்பனை 31 சதவீதம் அதிகரித்து 33 லட்சமாக உள்ளது.

ஏற்றுமதி கட்டுப்பாட்டால் மொத்த விற்பனை சந்தையில் வெங்காய விலை சரிவு

நாசிக் : பொருட்களுக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை அரசு உயர்த்தியதன் காரணமாக வெங்காய விலை 11 சதவீதம் சரிந்துள்ளது. ஒரு குவிண்டால் வெங்காயத்தின் விலை ரூ.1000க்கு விற்பனையாகிறது. இதன் காரணமாக மொத்த விற்பனை சந்தையில் கொள்முதல் செய்யும் ஏற்றுமதியாளர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இதனால் உள்ளூர் தேவைகளுக்கு மட்டுமே வெங்காயம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஆசியாவின் மிகப் பெரிய சந்தையான மகாராஷ்டிர சந்தையில் பெருமளவில் வெங்காயம் தேங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மொத்த விற்பனை வெங்காய சந்தையில் நேற்று குவிண்டாலுக்கு ஒன்றி்ற்கு ரூ.1125 ஆக விற்பனையான வெங்காயம் இன்று ரூ.1000 ஆக குறைந்துள்ளது.

சென்னை அருகே ரூ. 2160 கோடியில் சாட்டிலைட் டவுன்ஷிப்: முதல்வர் ஜெ., அறிவிப்பு

சென்னை அருகே ரூ. 2160 கோடியில் திருமழிசை துணைக்கோள் நகரம்", அதாவது திருமழிசை சாடிலைட் டவுன்ஷிப் அமைப்பது, டாஸ்மாக் ஊழியர்களின் சம்பளம் உயர்வு, கூடுதலாக மூன்று நாள் விடுமுறை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தமிழக சட்டசபைக் கூட்டம் நடந்து வருகிறது. இதில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் முதல்வர் ஜெயலலிதா அறிக்கை வாசித்தார். இதில் அவர் பேசியதாவது:-

‌சென்னையில் வீட்டு மனை மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளின் விலை பெருமளவில் உயர்ந்து உள்ளது. எனவே, ஏழை, எளிய, நடுத்தர வர்க்கத்தினர் சொந்தமாக வீடு வாங்குவது என்பது கடினமாக உள்ளது.

இதனை கருத்தில் கொண்டு, அனைத்து தரப்பு மக்களுக்கும் வீடுகள் கிடைக்கும் வகையில் பல்வேறு வீட்டு வசதித் திட்டங்கள் குறித்து இந்த மாமன்றத்தில் எடுத்துரைக்க விரும்புகிறேன்.

செப்டம்பர் 06, 2011

விவசாயிகளை கவரும் சலுகைகள் கொண்ட மசோதா.,117 ஆண்டுக்கு பின் நில கையகப்படுத்தும் சட்ட திருத்தம்


புதுடில்லி : நாட்டில் எப்போதும் பிரச்னையை ஏற்படுத்தும் நில கையகப்படுத்தும் விவகாரத்தில் மத்திய அரசு மக்களை குளிர்விக்கும் வகையில் கவர்ச்சி சலுகைகளை அளிக்கவும், மேலும் நில மதிப்பில் பல மடங்குகள் தொகையை உயர்த்தி கொடுக்கவும் , கையகப்படுத்தும் நிலம் எதனை பொறுத்து அமைகிறதோ அதற்கு ஏற்ப சலுகைகளும், மேலும் பல்வேறு சாரம்சங்கள் கொண்ட நில கையகப்படுத்துதல் மற்றும் நிவாரணம் அடங்கிய மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி விட்டது. இம்மசோதா பார்லி.,யில் நாளை தாக்கல் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 117 ஆண்டுகள் மாற்றம் இல்லாமல் பழமையான சட்டம் இப்போது புது ஒளி பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீப காலமாக நிலம் கையகப்படுத்தும் போது எதிர்ப்புகள் கிளம்புவதும் , பின்னர் விவசாயிகள் தற்கொலை செய்வதும், மேலும் எதிர் போராட்ட வன்முறைகளினால் விவசாயிகள் உயிர் இழப்பதுமான பல்வேறு சம்பவங்கள் நடந்திருக்கின்றன. குறிப்பாக உத்திரபிரேதசம் , மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாய போராட்டம் எடுத்துக்காட்டாக உள்ளன. இதனால் மக்களை கவரும் விதத்தில் நில கையகப்படுத்தும் மசோதா உருவாக்க காங்கிரஸ் அரசு முனைந்திருக்கிறது.
ராகுல் கருத்துக்களுக்கு முன்னுரிமை: இதன் முன்னோட்டமாக காங்.,பொதுசெயலர் ராகுல் உத்திரபிரதேச விவசாயிகளை சந்தித்து அவர்களின் குறைகளை நேரில் கேட்டறிந்தார். இவர் அளித்த கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகள் இந்த மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளதாக டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது. 

பொருளாதார வளர்ச்சியைத் தடையாக மாறி வரும் இந்தியர்களின் தங்க மோகம்

டெல்லி: மின்னும் பொன்னைப் பார்ப்பதற்கு பளிச்சென சந்தோஷமாக இருக்கலாம். ஆனால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை இது கடுமையாக பாதிக்கும் அளவுக்குப் போய்க் கொண்டிருக்கிறது என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்- இதுதான் அதிர்ச்சியாக உள்ளது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைத் தடுக்கக்கூடிய வகையில் இந்தியர்களின் தங்க மோகம் இருப்பதாக உலக தங்க கவுன்சில் கூறியுள்ளது. 2011 ஏப்ரல் - ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் தங்க இறக்குமதி அளவு 60 சதவீதமாக அதிகரித்துள்ளதாம். பணவீக்கம் படு மோசமாக உள்ள நிலையிலும் கூட மக்கள் அதைப் பொருட்படுத்தாமல் தங்கத்தின் மீது பெருமளவில் செலவித்து வருகின்றனராம்.

இந்தியாவின் இறக்குமதி பொருட்களில், கச்சா எண்ணெய்க்கு அடுத்த இடத்தில், அதாவது 2வது இடத்தில் தங்கம் உள்ளது. இது 2007-08 காலகட்டத்தில் 5வது இடத்தில் இருந்தது.

பொடுகுத் தொல்லை நீங்க

செண்பக மரப்பட்டையும் வேப்ப மரப்பட்டையும் சம அளவு எடுத்து இடித்து, 4 மடங்கு நீர்விட்டு, காய்ச்சி, பாதியாக வற்றியதும் வடிகட்டி காலை, மாலை இரண்டுவேளை குடித்துவர குளிர் சுரம் தீரும்.

செண்பக மரப்பட்டையை ஒன்றிரண்டாக இடித்து 20 பங்கு நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி தினமும் இருவேளை குடித்துவர நாட்பட்ட குன்மம் (வயிற்றுப்புண்) குணமாகும்.

செண்பக பூவில் இருந்து நறுமண எண்ணெய், அத்தர் போன்றவை எடுக்கப்படுகின்றன. இந்த பூவில் நறுமண எண்ணெய் இருப்பதால் பூ உலர்ந்த பின்னரும் இதனை பூச்சிகள் அரிக்காது.

இந்தியாவில் 180 மில்லியன் முஸ்லிம்கள்– யு.எஸ். கணிப்பு

டெல்லி:இந்தியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை சுமார் 180 மில்லியனிற்கு மேலுள்ளதாக யு.எஸ். நம்புவதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

பத்து வருடத்திற்கு ஒரு முறை இந்திய அரசு மேற்கொள்ளும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைத்து காட்டப்படுவதாகவும், இந்தியாவில் முஸ்லிம்களின் இருப்பு பல காரணிகளை அசைக்கும் தன்மை வாய்ந்ததாக உள்ளதாவும், விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள அந்த கேபிள் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2001-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்டுள்ள அந்த கேபிளில், முஸ்லிம்களின் எண்ணிக்கை சுமார் 138 மில்லியன் என்று குறைத்து காட்டப்பட்டுள்ளதாகும், யு.எஸ்.ஸின் கணக்குப்படி அது 180 மில்லியனை தாண்டும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக வங்கி எச்சரிக்கை உலக பொருளாதாரத்துக்கு காத்திருக்கிறது ஆபத்து

பெய்ஜிங் : உலக பொருளாதாரம் ஆபத்தை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. அதை தவிர்க்க ஏற்றுமதி மீதான கவனத்தை சீனா கைவிட்டு, உள்நாட்டு நுகர்வு அடிப்படையிலான வளர்ச்சியில் அக்கறை காட்ட வேண்டும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கியின் தலைவர் ராபர்ட் ஜோலிக் இப்போது சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். தலைநகர் பெய்ஜிங்கில் அவர் தெரிவித்ததாக சீனா டெய்லி நாளேடு வெளியிட்ட செய்தியில் கூறியதாவது:

அடுத்த சில மாதங்களுக்கு சர்வதேச பொருளாதாரம் ஆபத்தான கட்டத்தை எதிர்நோக்கி யுள்ளது. அது சீனாவுக்கும் பொருந்தும். அதிக உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை நோக்கியே சீன பொருளாதாரம் இப்போது செயல்படுகிறது. அதை உள்நாட்டு நுகர்வை அதிகரிக்கும் வகையில் அடிப்படை கட்டமைப்பில் சீர்திருத்தங்களை சீன அரசு செய்ய வேண்டும்.

அப்போதுதான் சர்வதேச பொருளாதார சமனற்ற நிலையை உலக நாடுகளும், சீனாவும் சமாளிக்க முடியும். 2010ம் ஆண்டு மே மாதத்துக்கு பிறகு மிகக் குறைந்த அளவை ஐரோப்பிய மண்டலத்தில் நுகர்வோர் நம்பிக்கை மற்றும் வர்த்தக புள்ளிகள் அடைந்துள்ளன. அமெரிக்க உள்நாட்டு உற்பத்தி 1.7 முதல் 2.1 சதவீதமாக இருக்கும் என்று வெள்ளை மாளிகை அறிக்கை தெரிவிக்கிறது. இவை மந்தமான பொருளாதார நிலையை வெளிப்படுத்துகின்றன. இவ்வாறு ராபர்ட் ஜோலிக் தெரிவித்தார்.

தொல்லை அழைப்புக்கு 27ம் தேதி முதல் விடிவு

புதுடெல்லி : செல்போனில் தொல்லை அழைப்புகள், எஸ்எம்எஸ்களை சமாளிப்பதில் ஒரு வழியாக இந்த மாதம் 27ம் தேதி முதல் விடிவு காலம் பிறக்கிறது. ‘140’ என்று தொடங்கும் டெலிமார்க்கெட்டிங் அழைப்புகள், எஸ்எம்எஸ்களை அன்று முதல் அடையாளம் கண்டு தவிர்க்கலாம் என்று தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) அறிவித்துள்ளது. செல்போனில் டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களின் தொல்லை அழைப்புகள், எஸ்எம்எஸ்களால் வாடிக்கையாளர்கள் அவதிப்படுகின்றனர்.

அவற்றை தடுக்க டிராய் இதுவரை எடுத்த நடவடிக்கைகளுக்கு வெற்றி கிடைக்கவில்லை. ஆனால், டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு ஒரே லேண்ட்லைன் நம்பரையும், செல்போனில் ‘140‘ என்று தொடங்கும் எண்ணையும் அது ஒதுக்கியுள்ளது. எனவே, அழைப்பு வரும்போது அந்த நம்பரை அடையாளம் கண்டு தொல்லை அழைப்பை தவிர்த்து நிம்மதி அடையலாம். இந்த எண்ணை நடைமுறைப்படுத்தும் நிர்வாக பணிகள் அனைத்தும் முடியும் தருவாயில் உள்ளன. எனவே, 27ம் தேதி முதல் இது அமலுக்கு வரும் என்று டிராய் தெரிவித்துள்ளது. செல்போன் வாடிக்கையாளர் எண்ணிக்கை நம்நாட்டில் 80 கோடியை தொட்டுள்ளது.

செப்டம்பர் 04, 2011

ஓர் வஃபாத் செய்தி!!


நமதூர் காயிதெமில்ல‌த் தெருவில் வ‌சிக்கும் ஹ‌லிலுல்லாஹ்(த‌லைவ‌ர்) அவர்களின் ம‌னைவி ம‌ஹ்‌மூதா‌ பீவி அவர்கள் இன்று மாலை தாருல் பணாவை விட்டும் தாருல் பகாவை அடைந்து விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் கொள்ளுமேடுXpress இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.

வருகிறது உள்ளாட்சித் தேர்தல் திருவிழா-பணிகள் தொடங்கின-10 நாளில் தேதி தெரியும்

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் திருவிழாவைத் தொடர்ந்து அடுத்து உள்ளாட்சித் தேர்தல் பெருவிழா வரவுள்ளது. தேர்தல் தேதி இன்னும் 10 நாட்களில் அறிவிக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஈரோடு, திருப்பூர், வேலூர், தூத்துக்குடி ஆகிய பத்து மாநகராட்சிகள், 98 நகராட்சிகள், 50 மூன்றாம் நிலை நகராட்சிகள், 561 டவுன் பஞ்சாயத்துக்கள் ஆகியவற்றுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.

இவற்றில், மேயர்கள், நகராட்சி தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் என மொத்தம் 14,379 பேரைத் தேர்வு செய்ய வேண்டியுள்ளது.

இவை தவிர 29 மாவட்ட பஞ்சாயத்துக்கள், 385 பஞ்சாயத்து யூனியன், 12,618 கிராம பஞ்சாயத்துக்களும் உள்ளன. இவற்றில் உள்ளன. இவற்றில் தலைவர், துணைத் தலைவர், கவுன்சிலர்கள் என 1,17,716 பேர் தேர்வு செய்யப்பட வேண்டும்.

மத்திய அமைச்சர்கள் சொத்துப் பட்டியல் மூச்சு முட்டுது:மதுரையில் "கோடி' கட்டும் அழகிரி

மத்திய அமைச்சர்களின் சொத்துப் பட்டியல் நேற்று, பிரதமர் அலுவலக இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதிலுள்ள, அமைச்சர்களின் சொத்துக்களை பார்த்தால், மூச்சு மூட்டுகிறது.தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அழகிரிக்கு, மதுரையிலும், மதுரையை சுற்றியுள்ள பகுதிகளிலும் சொத்துக்கள், "கோடி' கட்டுகின்றன. உள்துறை அமைச்சர் சிதம்பரமோ, காபி எஸ்டேட் முதல், சைக்கிள் வரை உள்ளதாக ரூ.11 கோடிக்கு கணக்கு காட்டியுள்ளார்.மத்திய அமைச்சர்கள் தங்களது சொத்துக்கணக்கை வெளியிட வேண்டுமென்று பிரதமர் மன்மோகன் சிங் மூன்றுமுறை வலியுறுத்திக் கேட்டதன் அடிப்படையில் நேற்று முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ளது.

பிரதமர் அலுவலக அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ள சொத்து விவரத்தில், தமிழக அமைச்சர்களில் அழகிரியின் சொத்துக்கள் மலைக்க வைப்பதாக உள்ளன.மதுரை இந்தியன் வங்கி கிளையில் ரூ.5.39 கோடி ரொக்கம். ஹோண்டா சிட்டி, லேண்ட் ரோவர், டொயட்டா இன்னவோ, ஸ்கோடா கார்கள். அழகிரியின் பெயரில் மட்டும் 85 கிராமும், மனைவி காந்தியின் பெயரில் 700 கிராமும், மகன் பெயரில் 50 கிராம் தங்கமும் உள்ளதாம்.விவசாய நிலங்கள்:உத்தங்குடியில் 2.56 ஏக்கர்- மதிப்பு ரூ.50 லட்சம்.கள்ளந்திரியில் 7.5 ஏக்கர்- மதிப்பு ரூ. 20 லட்சம்.சின்னாம்பட்டி 1.5 ஏக்கர்- மதிப்பு ரூ.5 லட்சம்.சிந்தாமணி பகுதியைச் சுற்றிலும்தான் நிறைய விவசாய நிலங்கள், கணக்கு காட்டப்பட்டுள்ளன. அங்கு 57 சென்ட் நிலம்- மதிப்பு ரூ.1 லட்சத்து 15 ஆயிரம். இன்னொரு 38 சென்ட் நிலம்-மதிப்பு ரூ.2 லட்சத்து 76 ஆயிரம். மற்றொரு 1 ஏக்கர் 32 சென்ட் நிலம்- மதிப்பு 2 லட்சத்து 64 ஆயிரம்.இதேபோல, இன்னொரு 1 ஏக்கர் 46 சென்ட்-மதிப்பு ரூ.2 லட்சத்து 92 ஆயிரம். இன்னொரு 2 ஏக்கர் 27 சென்ட்- மதிப்பு ரூ.4 லட்சத்து 64 ஆயிரம்.