Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

செப்டம்பர் 06, 2011

உலக வங்கி எச்சரிக்கை உலக பொருளாதாரத்துக்கு காத்திருக்கிறது ஆபத்து

பெய்ஜிங் : உலக பொருளாதாரம் ஆபத்தை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. அதை தவிர்க்க ஏற்றுமதி மீதான கவனத்தை சீனா கைவிட்டு, உள்நாட்டு நுகர்வு அடிப்படையிலான வளர்ச்சியில் அக்கறை காட்ட வேண்டும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கியின் தலைவர் ராபர்ட் ஜோலிக் இப்போது சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். தலைநகர் பெய்ஜிங்கில் அவர் தெரிவித்ததாக சீனா டெய்லி நாளேடு வெளியிட்ட செய்தியில் கூறியதாவது:

அடுத்த சில மாதங்களுக்கு சர்வதேச பொருளாதாரம் ஆபத்தான கட்டத்தை எதிர்நோக்கி யுள்ளது. அது சீனாவுக்கும் பொருந்தும். அதிக உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை நோக்கியே சீன பொருளாதாரம் இப்போது செயல்படுகிறது. அதை உள்நாட்டு நுகர்வை அதிகரிக்கும் வகையில் அடிப்படை கட்டமைப்பில் சீர்திருத்தங்களை சீன அரசு செய்ய வேண்டும்.

அப்போதுதான் சர்வதேச பொருளாதார சமனற்ற நிலையை உலக நாடுகளும், சீனாவும் சமாளிக்க முடியும். 2010ம் ஆண்டு மே மாதத்துக்கு பிறகு மிகக் குறைந்த அளவை ஐரோப்பிய மண்டலத்தில் நுகர்வோர் நம்பிக்கை மற்றும் வர்த்தக புள்ளிகள் அடைந்துள்ளன. அமெரிக்க உள்நாட்டு உற்பத்தி 1.7 முதல் 2.1 சதவீதமாக இருக்கும் என்று வெள்ளை மாளிகை அறிக்கை தெரிவிக்கிறது. இவை மந்தமான பொருளாதார நிலையை வெளிப்படுத்துகின்றன. இவ்வாறு ராபர்ட் ஜோலிக் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...