Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 25, 2010

டெல்லியில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மாட்டிறைச்சிக்குத் தடை

புதுடெல்லியில் நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி காலப்பகுதியில் மாட்டிறைச்சி உணவுப்பரி்மாறலை தடைசெய்ய போட்டி ஏற்பாட்டுக் குழுவினர் எடுத்துள்ள முடிவு விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
தினசரி உணவில் பெரும்பாலும் மாட்டிறைச்சியை சேர்த்துக்கொள்ளும் வழமையுள்ள ஆஃப்பிரிக்க மற்றும் மேலை நாடுகளைச் சேர்ந்த பல விளையாட்டு வீரர்கள் காமன்வெல்த் போட்டிகளில் கலந்துகொள்வார்கள் என்பதால், இந்த அறிவிப்பினால் அவர்கள் சிரமப்படுவார்கள் என விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மாட்டிறைச்சியிலிருந்து பெறப்படுகின்ற சக்தியை விளையாட்டு வீரர்களுக்கு மாற்றுவழிகளில் வழங்க போட்டி ஏற்பாட்டுக் குழுவினர் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் தலைவரும், ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவருமான வி.பாஸ்கரன் தெரிவித்தார்.இவ்வாறான முடிவுகள் எதிர்காலத்தில் சர்வதேச விளையாட்டுக்களை நடத்த எதிர்பார்த்துள்ள இந்தியாவுக்கு பெரும் சவால்களை ஏற்படுத்தக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மத மற்றும் கலாசார வழக்கங்களின்படி மாட்டிறைச்சி உணவு தவிர்க்கப்படுவது சரியானது தான் என்கின்ற வாதம் இந்தியாவில் உள்ள போதிலும் வெளிநாடுகள் பல பங்குகொள்ளும் காமன்வெல்த் போட்டிகளில் இந்த தடை தேவையற்றது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

1 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...