Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 21, 2011

விமான கட்டணம் விரைவில் உயர்வு

விமான எரிபொருளின் விலை அதிகரித்துள் ளதை அடுத்து, அடுத்த மாத இறுதியில் விமா னக் கட்டணங்களை, 20 முதல் 25 சதவிகிதம் வரை அதிகரிக்க, விமான நிறு வனங்கள் முடிவு செய் துள்ளன. விமானப் போக்குவரத்து வட்டா ரங்கள் கூறியதாவது: கடந்தாண்டில், பன் னாட்டு சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்ததை அடுத்து, விமான எரிபொருளின் விலையும் 40 சதவிகிதம் வரை அதிகரித்தது. இத னால், ஏர்-இந்தியா, கிங் பிஷர் உள்ளிட்ட அய்ந்து விமான நிறு வனங்களுக்கு, கடந்த ஜூலை-செப்டம்பர் காலாண்டில், 2,500 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.

இந்த சுமையை, பயணிகள் மீது சுமத்த, விமான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதன்படி, அடுத்த மாத இறுதியில், விமானக் கட்டணத்தை 20 முதல் 25 சதவிகிதம் அதிகரிக்க, விமான நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. மும்பையிலிருந்து டில் லிக்குச் சென்று, பின்னர் மும்பை திரும்புவதற் காக, கிங் பிஷர் நிறு வனம், தற்போது 14 ஆயிரத்து 468 ரூபாய் கட்டணம் வசூலித்து வருகிறது. அடுத்த மாதம் இந்த கட்டணம், 17 ஆயி ரத்து 356 ரூபாயாக அதி கரிக்க வாய்ப்புள்ளது. அதேபோல், குறுகிய
தூரத்துக்கான கட்டண மும் அதிகரிக்கப்பட வுள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடு முறையை கொண்டாடு வதற்காக விமானத்தில் செல்லவுள்ள பயணிகள், இதனால் கடுமையாக பாதிக்கப்படுவர். - இவ் வாறு விமானப் போக்கு வரத்து வட்டாரங்கள் தெரிவித்தன.
-viduthalai 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...