Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 30, 2011

உலகிலேயே மிக அதிகமான ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடு இந்தியா தான்!

வாஷிங்டன்: உலகிலேயே இந்தியா தான் மிக அதிகமான ஆயுதங்களை இறக்குமதி செய்து வருவதாக பிரபல வெளிநாட்டுக் கொள்கைகள் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடும் பத்திரிக்கையான, Foreign Policy magazine தெரிவித்துள்ளது.

அமெரிக்காவிலிருந்து வெளியாகும் இந்தப் பத்திரிக்கை கடந்த ஆண்டில் நடந்து, வெளியில் தகவல் தெரியவராத சில முக்கிய உலக நிகழ்வுகள் குறித்து செய்தி வெளியிடவுள்ளது. இந்தக் கட்டுரையில் அடங்கியுள்ள முக்கிய அம்சங்கள்:

ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்ட மாபெரும் விமானம் தாங்கிக் கப்பலை பல்லாயிரம் கோடி செலவில் நவீனப்படுத்தியுள்ள சீனா, அதன் சோதனை ஓட்டத்தையும் ஆரம்பித்துவிட்டது. இது தவிர தானே புதிதாக விமானம் தாங்கிக் கப்பலைக் கட்டும் வேலைகளையும் சீனா ஆரம்பித்துள்ளது. கிழக்கு ஆசியா, சீனக் கடல் பகுதிகளில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த சீனா தீவிரமாக களமிறங்கியுள்ளது.
சீனா மட்டுமல்ல, இந்தியாவும் தனது ஆயுத பலத்தை பல மடங்கு அதிகரித்து வருகிறது. குறிப்பாக சீன எல்லைப் பகுதியில் இந்தியாவின் படை பலம் இதுவரை இல்லாத அளவுக்கு பலப்படுத்தப்பட்டுள்ளது. எல்லையின் சில இடங்களில், சீனாவைவிட இந்தியாவின் படை-ஆயுத பலம் அதிகமாக உள்ளது.

2011ம் ஆண்டில் உலகிலேயே மிக அதிகமாக ஆயுதங்களை இறக்குமதி செய்த நாடும் இந்தியா தான். 2006-2010 ஆண்டுகளில் உலகின் மொத்த ஆயுத கொள்முதலில் 9 சதவீதத்தை இந்தியா தான் மேற்கொண்டது. அதில் பெரும்பாலான ஆயுதங்கள் ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்டன.

2015ம் ஆண்டுக்குள் தனது படை, ஆயுத பலத்தை நவீனப்படுத்த இந்தியா 4 லட்சம் கோடி ரூபாயை ($80 billion) செலவிட உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...