Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 20, 2011

எகிப்தில் இராணுவத்திற்கு எதிராக திரண்ட மக்கள்!!

இராணுவ ஆட்சியாளர்கள் சிவிலியன் அரசாங்கத்திடம் அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும் எனக் கோரும் பாரிய மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று எகிப்தின் பிரபல்யமான தஹ்ரீர் சதுக்கத்தில் இன்று நடைபெறுகிறது.

இதற்கான அழைப்பை இஸ்லாமியர்களும்  சில மதச்சார்பற்றோரும் விடுத்துள்ளனர். ‘ஒரே கோரிக்கைக்கான வெள்ளிக்கிழமை‘ என அவர்கள் இதற்குப் பெயரிட்டுள்ளனர்.

இராணுவ ஆட்சியாளர்கள் எகிப்தில் பிரதான கொள்கை விவகாரங்களில் இறுதித் தீர்மானம் எடுக்கும் வகையில் புதிய நகர்வுகளை முன்னெடுத்துள்ளனர்.

இதனைக் கண்டிக்கும் வகையிலேயே பாரிய தொகை மக்கள் தஹ்ரீர் சதுக்கத்தில் திரண்டுள்ளனர். இராணுவம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள ஆவணம் சர்வதிகாரத்தை பலப்படுத்த முனைகிறது என இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கம் கண்டித்துள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கான அழைப்பில் பலர் ஈடுபட்டாலும் இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கமும் அதன் அரசியல் கட்சியான சுதந்திரம் மற்றும் நீதிக்குமான கட்சியுமே இதற்குத் தலைமை
வகிக்கிறது என அல்-ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போதைய மாறும் சூழலில் இராணுவம் ஒருதலைப்பட்சமாக தலையிட்டு எல்லாவற்றையும் கட்டுப்படுத்த நினைக்கிறது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது இஸ்லாமியர்களின்  முன்னேற்றத்தைத் தடுப்பதற்கான சதிமுயற்சியாகவும் நோக்கப்படுகிறது.

source மீள்பார்வை 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...