Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 23, 2011

மீண்டும் "ஸ்கூட்டர்' சகாப்தம்

இந்தியாவில், 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஸ்கூட்டர்கள் ஆதிக்கம் காணப்பட்டது. மோட்டார் சைக்கிள் புரட்சி ஏற்பட்ட பிறகு, ஸ்கூட்டர் விற்பனையில் கொடி கட்டி பறந்த பஜாஜ் மற்றும் கைனடிக் போன்ற நிறுவனங்களும், மோட்டார் சைக்கிள் விற்பனையில் கவனம் செலுத்தின. ஆனால், ஜப்பானின் ஹோண்டா நிறுவனம் மட்டும் இந்த விஷயத்தில் விதிவிலக்காக இருந்தது. 

இந்த நிறுவனம் அறிமுகப்படுத்திய ஆக்டிவா ஸ்கூட்டர் மக்களிடம் அமோக வரவேற்பு பெற்றுள்ளது. இந்தியாவில் மீண்டும் ஸ்கூட்டர் சகாப்தம் துவங்குவதற்கான அறிகுறி என்பதை மற்ற நிறுவனங்களும் தற்போது உணர தொடங்கியுள்ளன. அந்த வகையில், யமஹா நிறுவனமும், இந்தியாவில் ஸ்கூட்டர் விற்பனையை துவக்க உள்ளது. இந்த நிறுவனம் உலகளவில் 500 சிசி திறன் கொண்ட ஜுமா முதல் 500 சிசி திறன் கொண்ட டி-மாக்ஸ் ஸ்கூட்டர் வரை பல ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. எனினும், இந்தியாவை பொறுத்தவரை 100- 125 சிசி திறன் கொண்ட ஸ்கூட்டர்கள் தான் தேவை என்பதை புரிந்து கொண்டு அந்த வகையில், புதிய ஸ்கூட்டரை, அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்க உள்ள வாகன கண்காட்சியில் அறிமுகப்படுத்த உள்ளது. அதன் விற்பனையும் உடனே துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதே போல,இத்தாலி நாட்டை சேர்ந்த பியாஜியோ ஸ்கூட்டர் நிறுவனமும், வெஸ்பா எல்எக்ஸ் 125 ஸ்கூட்டரை, அடுத்த ஆண்டு தான் அறிமுகப்படுத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...