Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 23, 2011

விலைவாசி உயர்வு – முஸ்லிம் லீக் கண்டன ஆர்ப்பாட்டம்

       வரலாறு காணாத வகை யில் பால் விலை - பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள தற்கும், மின் கட்டணம் உயர்த்தப்பட இருப்பதற்கும்     கண்டனம் தெரிவித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆர்ப்பாட்டம் நடத்துகி றது. தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் நவம்பர் 23-ம் தேதி புதன் கிழமை காலை 10.30 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறு கிறது.

தமிழ்நாட்டில் பால் விலை மற்றும் பேருந்து கட்டணம் மிகக் கடுமை யான அளவில் உயர்த்தப் பட்டுள்ளது. அட்டைதா ரர்களுக்கு வழங்கப்படும் பால் ரூ.17.75 லிருந்து ரூ.24 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சில்லறை வணிகர்கள் எத்தகைய முன்னறிவிப்பும் இன்றி மனம் போன போக்கில் விலை நிர்ணயம் செய்து விற்கத் தொடங்கி விட்டனர். பால் விலை உயர்வையடுத்து உணவு விடுதிகளிலும், தெருவோர தேநீர் விடுதிகளிலும் டீயின் விலை கணிசமாக உயர்த் தப்பட்டுள்ளது.

பேருந்து கட்டணம் 80 சதவீதம் வரை உயர்த் தப்பட்டுள்ளதால் ஏழை எளிய நடுத்தர மக்கள் மிகப் பெரும் பாதிப்பை அடைந்துள்ளனர். சில இடங்களில் இந்த உயர்வு 100 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. அறிவிப்பு வெளியிடப் பட்ட அன்றைய தினம் இரவு முதல் முன்னறிவிப் பின்றி விலை உயர்வு அமல்படுத் தப்படுத்தப் பட்டதால் வேலைவாய்ப் புகளுக்காக சென்றிருந்த ஏழை கூலித் தொழிலாளர் கள் பணமின்றி தவித்தது மிகப் பெரும் விமர்சனத்திற் குள்ளானது.

மக்களை நேரடியாக பாதிக்கும்
இந்த விலை உயர்வு போதாது என்று மின் கட்டணத்தையும் 50 சதவீதம் வரை உயர்த்த மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்துக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள் ளது.

அரசியல் கட்சிகள் கண்டனம்

இந்த விலை உயர்வை அனைத்து அரசியல் கட்சிகளும் கடுமையாக கண்டித்துள்ளன. விலை உயர்வு குறித்து இந்திய யூனியன் முஸ்லிம்லீக் தமிழ் நாடு மாநிலத் தலைவர் விடுத்துள்ள அறிக்கையில், இந்த கட்டண உயர்வு மக்கள் தலையில் சுமத்தப் படும் பெரும் சுமை என்ப தோடு ஏழை எளிய மக்க ளுக்கு செய்யும் மாபெரும் துரோகம் என்றும், ஒரு புறம் இலவசத் திட்டங் களை அறிவித்து விட்டு இன்னொரு புறம் கட்டண சுமையை அவர்கள் மீது திணிப்பதை மக்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று குறிப் பிட்டார்.

இந்த கட்டண உயர்வு களை திரும்பப் பெறக் கோரி தமிழகம் முழுவதும் பொது மக்கள் போராட் டம் நடத்தி வருகின்றனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் உயர்த் தப்பட்டுள்ள பால்விலை மற்றும் பேருந்து கட்டண உயர்வு திரும்பப் பெறக் கோரியும், மின் கட்ட ணத்தை உயர்த்தக் கூடாது என வலியுறுத்தியும் வரும் 23-ம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிமுதல் 11.30 மணி வரை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் அருகில் ஆர்ப்பாட் டம் நடைபெறுகிறது.

இந்திய யூனியன் முஸ்லிம்லீக் தமிழ்நாடு மாநில தலைவர் பேராசி ரியர் கே.எம். காதர் மொகி தீன் தலைமையில் நடை பெறும் இந்த ஆர்ப்பாட் டத்தில் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜஹான் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

வடசென்னை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைலர் எம். ஜெய் னுல் ஆபிதீன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் ஏற்பாடு செய்யும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட சென்னை, தென்சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களைச் சார்ந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயல் வீரர்கள், முஸ்லிம் மாணவர் பேரவை, இளைஞர் அணி, சுதந்திர தொழிலாளர் யூனியன் உள்ளிட்ட அமைப்புகளைச்சார்ந்த தொண்டர்கள் அனைவ ரும் பச்சிளம் பிறைக் கொடி ஏந்தி குறிப்பிட்ட நேரத்துக்குள் வருகை தருமாறு இந்திய யூனியன் முஸ்லிம்லீக் தலைமை நிலையம் கேட்டுக் கொண் டுள்ள

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...