Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 27, 2011

பலவீனமாகும் பழைய கொள்ளிடம் பாலம் நான்கு மாவட்டங்கள் துண்டிக்கும் அபாயம்

சிதம்பரம்:சிதம்பரம் - சீர்காழி சாலையில் மழையால் பழைய கொள்ளிடம் பாலம் பவீனமடைந்து வருவதால் நாகை, திருவாரூர், தஞ்சை, காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் துண்டிக்கும் அபாயம் உள்ளது.நாகை, தஞ்சை, திருவாரூர், காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களுக்குச் செல்லும் முக்கிய சாலையாக கடலூர் மாவட்டம் சிதம்பரம் - சீர்காழி சாலை உள்ளது. இச்சாலையில் சிதம்பரம் அடுத்த வேளக்குடியில் பழைய கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே பழமையான பாலம் உள்ளது.குறுகலான இப்பாலத்தின் வழியாக சாதாரண நாட்களில் கூட வாகனங்கள் செல்வதற்கு கடுமையான சிரமம் ஏற்படுகிறது.

பாலத்தில் பல இடங்களில் உடைப்பு, மழைக் காலங்களில் பாலத்தில் மேல் தண்ணீர் தேங்குவது, பக்கவாட்டு சுவர்கள் உடைப்பு என பாலம் படிப்படியாக வலுவிழந்து வருகிறது.ஒவ்வொரு மழையின் போதும் பாலத்தில் பெரிய அளவில் குண்டும், குழியுமாக மாறி வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்குமோசமான நிலை காணப்படுகிறது. நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஒவ்வொரு முறையும் தற்காலிமாக ஜல்லி கொட்டி சரி செய்கின்றனர். ஆனால் நிரந்தர தீர்வாக இதுவரை மாற்று ஏற்பாடுகள் செய்யவில்லை. 
தற்போது பெய்துவரும் மழையால் பாலம் மீண்டும் குண்டும், குழியுமாக அவல நிலைக்கு மாறியுள்ளது. இந்த பாலத்திற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் நாகை, தஞ்சை, காரைக்கால், திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் துண்டிக்கப்படும்.எனவே முக்கிய பாலமாக விளங்கும் பழைய கொள்ளிடம் பாலம் மேலும் வலுவிழுந்து ஆபத்து ஏற்படும் முன்பே தடுத்து நிறுத்த நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுப்பதுடன், நிரந்தர தீர்வாக புதிய பாலம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...