Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 13, 2011

'கேபிள் டிவி கட்டணம் ரூ.70க்கு மேல் வசூலிக்கக் கூடாது' - தமிழக அரசு

கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் அரசு நிர்ணயித்த தொகையான ரூ.70-க்கு மேல் சந்தாதாரர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கக் கூடாது. கூடுதலாக வசூலிப்பது தெரிய வந்தால், அத்தகைய ஆபரேட்டர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசின் கேபிள் டிவி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது

இது குறித்து தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் தலைவர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் பதிவு செய்து அரசு கேபிள் டி.வி. ஆபரேட்டர்களாகப் பலரும் தொழில் செய்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் தங்களுடைய சந்தாதாரர்களிடம் இருந்து வசூலித்த
 மூன்று மாத முன்பணமும் மற்றும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கான சந்தா தொகையையும் விரைவில் செலுத்த வேண்டும்.

சந்தாதாரர்களிடம் இருந்து வசூலித்த தொகையை தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்குச் செலுத்தாமல் தாமதம் செய்துவரும் ஆபரேட்டர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சந்தாத தொகையைச் செலுத்தாத ஆபரேட்டர்களின் பதிவு ரத்து செய்யப்படுவதுடன் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். பதிவு ரத்து செய்யப்படும் நேரத்தில் அவர்களுக்குப் பதிலாக அந்தப் பகுதியில் புதிய ஆபரேட்டர்கள் நியமனம் செய்யப்படுவர்.என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...