ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கும் முயற்சியி்ல் ஈடுபடுவதாகக் குற்றம்சாட்டப்படும் நிலையில், Bavar 373 என்னும் அதிநவீன ஏவுகணையை தயாரித்துள்ளதாக, அந்நாடு தெரிவித்துள்ளது. 22-11-2011 அன்று வெளியிட்டது
இந்தத் தகவல், ஈரானிய அரசுத் தொலைக்காட்சியில் அறிவிக்கப்பட்டது. ஈரானுக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கொண்டு வந்த தீர்மானம் காரணமாக, அந்நாட்டுக்கு ஏவுகணைகள் விற்பதற்கான ஒப்பந்தத்தை, ரஷ்யா, ரத்து செய்தது. இதையடுத்து, ஈரானிய விஞ்ஞானிகள், ரஷ்யாவின்
S 300 ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட ரகத்தை உள்நாட்டிலேயே உருவாக்கியுள்ளனர். இந்த ஏவுகணை, இஸ்ரேல் மற்றும், வளைகுடாவில் உள்ள அமெரிக்க கடற்படைத் தளங்களை தாக்கும் அளவுக்கு திறன் கொண்டது என, தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் அணுகுண்டுகளை தயாரிப்பதாக, அமெரிக்காவும் இஸ்ரேலும் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு, மின்சாரம் உள்ளிட்ட ஆக்கப்பூர்வத் தேவைகளுக்காக மட்டுமே யுரேனியம் செறியூட்டப்படுவதாக, ஈரான் கூறி வருகிறது.
ஈரான், ஏவுகணை சோதனை நடத்தியதைத் தொடர்ந்து, அந்நாட்டுடன் நிதி பரிவர்த்தனை செய்து கொள்ள, அமெரிக்கா
தடைவிதித்துள்ளது.வாஷிங்டனில் பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலரி கிளிண்டன், ஈரான் அணுஆயுதங்களை தயாரிக்க முயற்சி செய்வதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை என்று கூறினார். இதன்படி, ஈரானிய வங்கிகளுடன் நிதிப் பரிவர்த்தனை செய்யும் பிற நாட்டு வங்கிகளுக்கும் நிதி நிறுவனங்களுக்கும், அமெரிக்காவில் உள்ள சொத்துகள் முடக்கப்படும் என்றார் ஹிலரி..
ஈரானில் எண்ணெய் மற்றும் எண்ணெய்சார் தொழில்துறையில் முதலீடு செய்யும் பிற நாட்டு நிறுவனங்களுக்கும், இந்த நிபந்தனை பொருந்தும் என்று ஹிலரி கிளிண்டன் தெரிவித்தார்.
நன்றி:புதிய தலைமுறை

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...