Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 14, 2011

கடலூர் மாவட்டத்தில் குறைந்தபட்ச ஊதியமின்றி தவிக்கும் தனியார் பேருந்துப் பணியாளர்கள்

எரிபொருள் மற்றும் உதிரிபாகங்கள் விலையேற்றம் காரணமாக, தனியார் பஸ் தொழிலாளர்கள் அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஊதியத்தைக் கூட பெற முடியாமல் வஞ்சிக்கப்படுகிறார்கள்.

தனியார் நிறுவனங்களில் மூலப்பொருள்கள் விலையேற்றம், உற்பத்திச் செலவு அதிகரிப்பு, உற்பத்தியான பொருள்களை எதிர்பார்த்த விலைக்கு விற்க முடியாமல் போகும் நிலை உள்ளிட்ட பிரச்னைகள் எழும்போதெல்லாம் முதலில் கை வைப்பது, ஆள்குறைப்பு, ஊதியக் குறைப்பு மற்றும் வேலைப்பளுவை அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகள்தான் என்பது இயல்பான விஷயம்.அந்த வகையில் தற்போது தனியார் பஸ் தொழிலாளர்கள் மிகவும் பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்பட்டு வருகிறார்கள்.

தனியார் பஸ் கட்டணம் 2001-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது. அப்போது டீசல் விலை லிட்டருக்கு ரூ. 17.50. தற்போது டீசல் விலை லிட்டருக்கு ரூ. 44.85.அனைத்துப் பொருள்களின் விலைகளும் அதிகரித்து வரும் நிலையில், பஸ் கட்டணம் உயர்வு இல்லை என்பது, மக்களை திருப்திப்படுத்தவும், அவர்கள் அரசு மீது எரிச்சல் அடையாமல் இருப்பதற்கு மட்டுமே பயன்படுத்தும் உத்தியாகும். அரசு பஸ்களில் கட்டணத்தை உயர்த்தாவிடினும்
 அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட, மறைமுகமாக வழங்கப்படும் மானியம், மக்களின் வரிப்பணம்தான்.ஆனால் நஷ்டத்தை ஈடுகட்டும் நடவடிக்கைகளுக்கு, தனியார் பஸ் முதலாளிகள் மானியமாக, தனது ஊழியர்களின் ஊதியத்தைத்தான் உறிஞ்சுகிறார்கள் என்கின்றனர் தனியார் பஸ் தொழிலாளர்கள்.

கடலூர் மாவட்டத்தில் 450 தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. தனியார் பஸ்களில் ரூ. 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள்.டீசல் விலை, டயர்கள் மற்றும் உதிரிபாகங்கள் விலை உயர்ந்து வரும் நிலையில், பஸ் கட்டணம் உயர்த்தப்படாதபோது, தனியார் பஸ் தொழிலாளர்களுக்கு முதல் கட்டமாக வெட்டு விழுந்தது ஊக்கத்தொகையில்தான். நாளொன்றுக்கு ரூ. 500-க்கு மேல் வசூல் ஆகும் ஒவ்வொரு ரூ. 100-க்கும் ரூ. 1 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வந்தது.தற்போது ரூ. 5 ஆயிரத்துக்கு மேல் வசூல் ஆனால்தான் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று மாற்றிவிட்டனர்.

இதனால் மிகக் குறைந்த ஊக்கத்தொகைதான் கிடைக்கிறது என்கிறார்கள் தொழிலாளர்கள்.மாதம் 13 நாள்கள் வேலைக்கு, நாளொன்று பஸ் ஓட்டுநர்களுக்கு ரூ. 485-ம் நடத்துநர்களுக்கு ரூ. 475-ம் ஊதியமாக வழங்க வேண்டும் என்கிறது, தமிழக அரசின் குறைந்தபட்ச கூலிச்சட்டம்.ஆனால் தனியார் பஸ் முதலாளிகள் தற்போது ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு வழங்குவது ரூ. 350 முதல் ரூ. 375 வரைதான். அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் ஆனதும் குறைந்தபட்சம் ரூ. 10 ஆயிரம் ஊதியம் மற்றும் போனஸ் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன.பல தனியார் பஸ் முதலாளிகள் மிகக் குறைந்த தொகையையே போனசாக வழங்குகிறார்கள், சிலர் போனஸ் வழங்குவதில்லை என்றும் தொழிலாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

இது குறித்து கடலூர் மாவட்ட தனியார் பஸ் ஊழியர்கள் சங்க செயலர் பி.பண்டரிநாதன் கூறுகையில்,
"எரிபொருள் விலையேற்றம், டயர்கள் மற்றும் உதிரிபாகங்கள் விலையேற்றம் காரணமாக, தனியார் பஸ் தொழிலாளர்களின் ஊதியம் பெரிதும் பறிக்கப்பட்டு வருகிறது.இதற்கு தீர்வுக் காண, பஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டும் அல்லது டீசல், டயர் மற்றும் உதிரிபாகங்கள் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும்.ஊதியம் வெகுவாகக் குறைந்து விட்டதன் காரணமாக, தொழிலாளர்கள் பலர் வேறுவழியின்றியே இத்தொழிலில் நீடிக்கிறார்கள். புதிதாக தனியார் பஸ் தொழிலாளர்களாகப் பணிபுரிய பலர் முன்வருவது இல்லை.

தனியார் பஸ் ஊழியர்கள் ஊதிய உயர்வுப் பிரச்னையில் தொழிற்சங்கங்களும், தொழிலாளர் நலத்துறையும் தோற்றுப் போய்க் கொண்டு இருக்கின்றன. தமிழகம் முழுவதும் தனியார் பஸ் தொழிலாளர்களின் நிலை பெரும்பாலும் இதேதான்' என்றார்.
nanri:cuddalorenews

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...