Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 15, 2011

4,000 ரூபாயில் 4G டேப்லெட் கம்ப்யூட்டர். - ரிலையன்ஸ் திட்டம்

      கனடாவைச் சேர்ந்த டேட்டாவிண்ட் நிறுவனம், உலகிலேயே மிக மலிவான, 'ஆகாஷ்' டேப்லெட் கம்ப்யூட்டரை அண்மையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. ஜி.பி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்திலான இந்த டேப்லெட் கம்ப்யூட்டரை, 2,999 ரூபாய் என்ற விலையில் வரும் டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

       இந்நிலையில் ரிலையன்ஸ் சார்பாக மலிவு விலை 4G டேப்லெட் கம்ப்யூட்டர்களை அறிமுகப்படுத்தி, இந்தியாவின் அகலப்பாட்டை - பிராட்பேண்ட் சந்தையைக் கைப்பற்ற பிரபல தொழிலதிபர் ரிலையன்ஸ் முகேஷ் அம்பானி திட்டமிட்டுள்ளார். இதற்காக, ரிலையன்ஸ் -டேட்டாவிண்ட் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

உலகில் 4ஜி தொழில்நுட்பத்தில் வெகு சில நிறுவனங்கள் மட்டுமே டேப்லெட் கம்ப்யூட்டர்களை விற்பனை செய்து வருகின்றன. இவற்றுள் மோட்டரோலா நிறுவனத்தின் 'ஜூம்' டேப்லெட் கம்ப்யூட்டர் 599 டாலருக்கும், எச்.டி.சி-யின் 'இவோ வியூ' 399 டாலருக்கும், டெல் நிறுவனத்தின் 'ஸ்டீரிக்' 355 டாலருக்கும் விற்பனையாகின்றன. இதில் நான்கில் ஒரு பங்கு விலையில் (4,000-5,000 ரூபாய்) ரிலையன்ஸ், 4Gடேப்லெட் கம்ப்யூட்டரை அறிமுகப்படுத்த
உள்ளது

ரிலையன்ஸின் இந்த 4G சேவைக்கு, மாதம் ஒன்றுக்கு 49 ரூபாய் கட்டணம் என்ற மிகக் குறைந்த தொகை வசூலிக்கப்படும் என்பதும் போட்டியாளர்களிடையே வியப்பதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
-inneram.com

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...